(Reading time: 20 - 40 minutes)

வள் உடல் இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. அதை, அவள் நிலையை உணர்ந்தவனாய் தன் மறுகையால் அவள் இடையை சுற்றி அவள் வயிற்றோடு  இழுத்து இன்னுமாய் தன் அரவணைப்பிற்குள் கொண்டு வருகிறான். அவன் கை சூட்டிற்குள் தாய் இறக்கை புதையுண்ட சிறு குஞ்சாய் இவள்…

தன்னோடு இவளை சற்றே இழுத்தபடி அங்குமிங்குமாய் அசைகிறான். அவர்களை நோட்டமிடுகிறான் என புரிகின்றது.

ஆம்னி இவள் இத் தெருவில் நுழைந்த முனைக்கு எதிர் முனையிலிருந்து இப்பொழுது தெருவுக்குள் நுழைகிறது. அதாவது தெருவின் இரு புறமிருந்தும் அந்த கூட்டம்…...

அடுத்த நொடி கார் டோர் திறக்கும் வெளிச்சம் மற்றும் சிக்னல் சவ்ண்ட். அதே நேரம் இவள் புறமிருந்த காரின் கதவு திறக்கப்பட இவள் காரினுள்ளே தள்ளப்படுகிறாள். கையிலிருந்த ஷாப்பிங் பேக்குகளுடன் போய் தொப்பென ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்தாள். இந்த பைகளை விடாமல் கையில் வைத்திருப்பதே இப்பொழுதுதான் உறைக்கிறது.

நொடிக்கும் குறைவான நேரத்தில் இத்தனையும் நடந்து முடிந்துவிட, அப்பொழுதுதான் அவள் ஒழிந்திருந்தது ஆதிக்கின் கார் என்பதே புரிய, அவசர அவசரமாக ஓட்டுநர் இருக்கையை அவனுக்கென விட்டு நகர்ந்து அடுத்த இருக்கைக்கு தாவுகிறாள்.

இதற்குள் இவர்கள் கார் கதவு திறந்த சத்தத்தில் அந்த ஆம்னி கூட்டமும் அலர்ட் ஆகி இவர்களது காரை நோக்கி வர தொடங்குகிறது.

ஆனால் ஆதிக் உடனடியாக உள்ளே ஏறவில்லை. ரேயாவிற்கு ஆம்னி வெளிச்சத்தில் வெளியே நடப்பது ரியர்வியூவில் நன்றாகவே தெரிகிறது.

டயர் வெடிக்கும் சத்தத்துடன் வெடித்து பஞ்சராகிறது ஆம்னியின் ஒரு டயர். அது இப்போது சட்டென நிற்கிறது. அதோடு இறங்கி ஓடி வந்து கொண்டிருந்த அந்த தடிமாடுகள் இப்பொழுது ஆம்னி நோக்கி ஓடினார்கள். அடுத்த டயரும் வெடி சத்தத்துடன் பஞ்சர். இப்பொழுது அந்த குண்டர்கள் ஆம்னிக்குப் பின் போய் பதுங்குகிறார்கள்.

டுத்த நொடி ஓட்டுனர் இருக்கையில் துள்ளி அமர்ந்தான் ஆதிக். வேகமாக கதவை அவன் மூடிய நொடியே கார் சீறிக் கிளம்புகிறது.  இப்பொழுது இவர்கள் காரின் ஃப்ரெண்ட் லைட் வெளிச்சம் மட்டுமே.

 அவன் வலக்கையிலிருந்த பொருளை டேஷ்போர்டில் வைத்துவிட்டு ஃஸ்டியரிங்கை பிடித்த ஆதிக் இடக்கையால் வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்து இவளிடம் நீட்டுகிறான்.

அவன் கையை பின்பற்றி டேஷ் போர்டிற்கு போகிறது இவளது பார்வை. டேஷ்போர்டில் அவன் வைத்த பொருள் ஒரு ஸ்லீக் பிஸ்டல்.

ஆக இவன்தான் ஆம்னி டயரை சுட்டிருக்கிறான். அவன் கையில் பிஸ்டலை கண்டதும்தான் ஓடி ஒழிந்திருக்கிறார்கள் அந்த பொறுக்கிகள். இரண்டு டயரும் பஞ்சர் என்பதால் இவர்களை தொடரவும் முடியாது. புத்தி சாதுர்யம் தான் ஆனால் பிஸ்டலோடு இந்த பெங்களூரில் இவன் ஏன் சுத்திக் கொண்டிருக்கிறான்? அதுவும் இந்த இருட்டில்?

அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். அவன் சட்டையின் முன் பக்கம் ஒரு புறம் ரத்த விஸ்தீரணம்.

“ஐயோ……”அவனுக்கு காயம்பட்டிருக்கிறதா? அல்லது யாரையும் சுட்டுவிட்டு வந்தானா? அலறிவிட்டாள் ரேயா. நொடி நேரம் அவள் பார்வையை பின்பற்றினாலும் தன் கவனத்தை அவன் சாலையில் தான் வைத்துக் கொண்டான்.

“எனக்கொன்னும் இல்லமா… உனக்கு அடிபட்டுருக்குதா ரேயு….? முதல்ல நீ கொஞ்சம் தண்ணி குடி….”

இதற்குள் இவர்கள் கார் மக்கள் அடர்த்தியான சாலைக்குள் நுழைந்திருந்தது. தங்களை யாரும் பின் தொடர்கிறார்களா என அவன் கவனிப்பது புரிகின்றது.

“எங்க அடிபட்டிருக்குது ரேயு.…எங்க வலிக்குது…? தலை சுத்துதா…? மயக்கம் வர மாதிரி இருந்தா உடனே சொல்லு ரேயு……” அவன் கரிசனை குரல் மெல்ல மங்கிக்கொண்டு போனது அவள் காதுக்கு.

குனிந்து தன்னைப் பார்த்தாள். அவள் உடை முழுவதுமே ரத்த அபிஷேகம். ஆனால் எங்கு அடிபட்டிருக்கிறது? தெரியவில்லை.

“தெ…ரியலையே!!!”

அவள் வலக்கையை மெல்ல தட்டினான்….”எல்லாம் சரி ஆகிடும் ரேயுமா”

அவன் சொன்ன விதத்தில் அப்படித்தான் பட்டது அவளுக்கும். அதற்கு மேல் எதையும் சிந்திக்க முடியவில்லை அவளால். கண்கள் தானாக மூடின. என்னதிது மயக்கமா?

அவன் தோளில் சாயக் கூடாது….. நினைக்கத்தான் முடிந்தது அவளால். ஆதிக் தோளில் மயங்கி சரிந்தாள் ரேயா.

டுத்து அவளுக்கு சுய உணர்வு வந்த நேரம் அவள் எதோ ஒரு வீட்டின் படுக்கையறையில் இருக்கிறாள் என்பது புரிந்தது. முதல் பார்வையில் கண்ணில் பட்டது. ஆதிக்கின் தங்கை சிமி என்றழைக்கப் படும் ஸ்மிர்னா. அடுத்து நின்றது ஆதிக் தான்.

ஓ இவளை தன் தங்கை வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறான் போலும். அவள் ஓடும் போது எதிலோ இடித்திருக்கிறாள். தோளில் காயம். ரத்தப்போக்கு அதனோடு சேர்ந்த மன போராட்டம், மயங்கி இருக்கிறாள்.

இருந்த சூழலில் அவளை வீட்டிற்கு கொண்டு வந்து தெரிந்த மருத்துவர் ஒருவரையும் வரவழைத்து ஒருவழியாய் இப்பொழுதுதான் இவளும் சூழலும் சுமூகப் படுகிறது. அதன்பின்பே இவளுக்கு ஞாபகம் வருகிறது இவளது பள்ளி குழு இவளைத் தேடிக் கொண்டிருக்குமென. இவள் காணவில்லை என்ற விஷயம் அப்பாவிற்கு போயிருக்குமோ?

விஷயம் அறிந்தவுடன் ஆதிக் தான் சூழ்நிலையை கையாண்டான். முதலில் சுற்றுலாவிற்கு பொறுப்பான ஆசிரியையை தொடர்பு கொண்டான். இவர்களை ரயில் நிலையம் அழைத்து செல்ல வேண்டிய பேருந்து ப்ரேக் டவ்ண். அவசரத்திற்கு அந்த நேரத்தில் வேறு பேருந்து ஏற்பாடு செய்ய முடியாமல் கிடைத்த ஸ்வராஜ் மஸ்தா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஒரே ட்ரிப்பில் அனைவரையும் அழைத்து செல்ல முடியவில்லை என்பதால் மாணவிகளுக்கு மொபைல் மூலம் தகவல் கொடுத்துவிட்டு இரு ட்ரிப் ஆக கூட்டி போய் இருக்கிறார்கள். இவள் மொபைல்க்கு அழைத்த போது ஃஸ்விட்ச்ட் ஆஃப்….இன்னும் ஒரு குழு கமர்ஷியல் ஃஸ்ட்ரீட்டில் இவளை தேடிக் கொண்டிருக்கிறது.

ரேயா விஷயம் எதையும் விளக்கமாக சொல்லாமல் அவள் பேருந்தை தவறவிட்டதையும், மொபைல் பழுதாகி யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை மாத்திரம் சொல்லி, இப்பொழுது அவள் தன் உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டாள் அவளுக்காக காத்திருக்க வேண்டாம் நீங்கள் திட்டப்படி கோவா கிளம்புங்கள், முடிந்தால் ரேயா கோவாவில் வந்து சேர்ந்து கொள்வாள் அல்லது தன் ஊருக்கு போய்விடுவாள் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பு என்றும் சொல்லி பள்ளி ப்ரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தவன்,

ரேயா சிம்மை எடுத்து தன் மொபைலில் போட்டு அவளை அவளது ஆசிரியரிடம் பேச வைத்தான். அடுத்து அவளது தந்தையை அழைத்து அவரிடமும் இந்த குடிகார கும்பல் துரத்தல் கதை எதையும் சொல்லாமல் மற்றவற்றை சொல்லி வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தவள் எதிலோ இடித்துக் கொண்டதால் சிறு காயம். ஆக அவளை தான் தன் தங்கை வீட்டிற்கு கூட்டி வந்திருப்பதாகவும் சொன்னான். சிமியையும் அவரிடம் பேச வைத்தான்.

மேலும் அவர் விரும்பிகிறபடி ரேயாவை சென்னைக்கோ அல்லது தென்கோட்டைக்கோ  அல்லது கோவாவிற்கோ அனுப்பிவிட தேவையான எல்லாவற்றையும்  தானே பொறுப்பெடுத்து கொள்வதாகவும் தெரிவித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.