(Reading time: 18 - 36 minutes)

வ்யாவின் அறையில் அவள் உடைமைகளை குடைந்து தேடி அவள் குழந்தை பற்றிய தகவலை கண்டுபிடித்தாள். நவ்யாவின் மகனை தாயற்றவனாக்கியது இவளது தந்தையல்லவா? குழந்தையை ஒரு குழந்தைகள் ஆசிரமத்தில் சேர்த்து வைத்திருந்தாள் நவ்யா.

அங்கு விசாரித்த போதுதான் விஷயம் உறுதியானது. பலாத்காரத்தின் பின் விளைவாய் பிறந்த குழந்தை அது என்று நவ்யா தானே எழுதிக் கொடுந்திருந்தாள் அங்கு. அவிவ் இவள் வாழ்வில் வந்தது அப்படித்தான்.

அவனை தத்தெடுப்பதில் பல சட்ட சிக்கல்கள் இருந்தன. ஆனாலும் ஆண்டவரே குழந்தை இவளிடம் வளர வேண்டும் என்று விரும்பினார் போலும் அடாப்ஷன் சம்பந்தப்பட்ட அனைவரும் அவளுக்கு உதவ குழந்தை கைக்கு வந்துவிட்டான்.

அப்பொழுது அவிவிற்கு மூன்று வயது. இவள் பழக்கிய வகையில் முதலில் அம்மா என அழைத்தாலும் வளர வளர அவனுக்கு சிறு வயது ஞாபகங்கள் கலைய இவள்தான் அவனது அம்மா இப்பொழுது.

நல்லிசைக்கோ சர்வமும் அவன்.

புனே, திருச்சி, ஜபல்பூர் என சம்பந்தமில்லாத இடங்களாய் சுத்தி அலைந்து இறுதியாக சென்னையில் வந்து சேர்ந்துவிட்டாள். அப்பா இவள் இடம் கண்டுவிடக் கூடாது என்பதற்கு இவள் செய்த முயற்சிகள் அவை.

நவ்யாவின் நகைகள் அதற்கு உதவின. அவளது மகனிற்காகத் தானே. தனக்கென ஒரு வேலை தேடிக் கொண்டு இதோ இத்தனை வருடம் கழித்தாயிற்று. இப்பொழுது வந்து  நிற்கிறான் மதுரன் இவள் யாரோ என்பது போல். சதி செய்தது அப்பாதானா என்ற சந்தேகம் வருகிறது இப்போது.

ஒருவேளை குற்றம் இவள் தந்தையுடையதாகவே இருந்து, அதை மதுரனும் அறிந்து, இவள் தந்தை மேல் கோபமாய் இருக்கிறானோ? இருக்கலாம்தான். இவளுக்கே இவ்வளவு கோபமும் வலியும் இருக்கும் போது……ஆனால் அதற்கு இவள் என்ன செய்வாள்?

ஒருவேளை குழந்தையுடன் பார்த்தவுடன் இவள் வேறு திருமணம் செய்துவிட்டாள் என நினைத்துவிட்டானோ? அல்லது அப்பாவை எண்ணி பயப்படுகிறானா?

ஒன்றும் புரிபடவில்லை. ஆனால் இன்றைய நிலையில் மதுரன் இவளை வெறுக்கிறான். மறுக்கிறான். நடிக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக இன்று அவன் இன்னொருவளின் உரிமை.

கண்ணீர் கண் நிறைக்க சமாளித்தபடி அவிவ் வின் பள்ளியைவிட்டு வெளிநோக்கி ஸ்கூட்டியை ஓட்டினாள்.

விழி மறைத்த நீரின் விளைவாக எதிரில் வந்த ஆட்டோவில் டொம்.

கீழே விழும்போதே மனம் மகனிற்காக பரிதவிக்கிறது. மீண்டும் விழித்தபோது மருத்துவமனை படுக்கையில் இவள் பார்வை படும் இடத்தில் அமர்ந்திருந்தது நிக்கி. அவன் மடியில் மகன் அவிவ்.

தொடரும்

Episode # 05

Table of Contents

Episode # 07

{kunena_discuss:878}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.