(Reading time: 5 - 10 minutes)

16. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

ன்னங்க… எங்க இருக்கீங்க?...” என துணாவைத் தேடிக்கொண்டிருந்தாள் பாலா…

“இதோ இங்க இருக்குறேன்….” என சத்தம் கொடுத்தான் துணாவும்…

“இங்கேயா இருக்கீங்க?... உங்களை எங்க எல்லாம் தேடுறது?...” என்றபடி அவனிடம் காஃபியை நீட்டினாள் அவள்..

Piriyatha varam vendum

அதை வாங்கி பருகியவனின் முகத்தில் யோசனை இருப்பதைக் கண்டவள்,

“என்னங்க?... என்ன யோசனை?...” எனக் கேட்டாள்…

சற்று நேரம் அவளைப் பார்த்தவன், பின் தெளிவான மனதோடு, அவளிடம்

“அம்மா கிட்ட நேரா ஊருக்கே வந்துடுவோம்னு சொன்னோம் தானே…” என அவன் கேட்க

அவள் “ஆம்..” என்றாள்…

“ஹ்ம்ம்… ஆனா நாம நேரா ஊருக்கு போகப் போறதில்லை…”

“என்ன சொல்லுறீங்க?... அப்போ நாம எங்க போறோம்?...” என்ற அவளின் கேள்விக்கு அவன் பதில் சொல்ல, அவள் அப்படியே ஊமையாகி போனாள்…

அப்போது,

“ஏங்க இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?... எதாவது பதில் சொன்னாதான எனக்கும் தெரியும்…. இப்படியே பேசாம இருந்தீங்கன்னா நான் என்ன நினைக்கிறது?...” என கணவனை உலுக்கிக் கொண்டிருந்தாள் மஞ்சரி...

“மைனா… யோசிட்டிருக்கேண்டி….” என்றான் மைவிழியன்….

“அந்த கொடுமைதான் எனக்கு தெரியுதே… எதோ கொள்ளைக் கூட்டத் தலைவன் மாதிரில்ல யோசிச்சிட்டிருக்கீங்க…”

“அடிப்பாவி… அதென்னடி இப்படி சொல்லிட்ட?...”

“வேற எப்படி சொல்லுவாங்க?... சும்மா பில்ட் அப் கொடுக்காம விஷயத்துக்கு வாங்க….”

“அது சரி… எல்லாம் என் நேரம்…” என அவன் மெதுவாக முணுமுணுக்க

“என்னது?.... என்ன சொன்னீங்க?...” என அவள் கோபத்துடன் அவனை முறைத்தாள்…

“அய்யோ… மைனா… நான் சும்மா சொன்னேண்டி… நீ வேற சீரியசா எடுத்துக்காத….” என்றவன் அவளை சமாதானப்படுத்தும் நோக்கோடு, அவளை நெருங்க முற்பட,

“ஹலோ… ஃபர்ஸ்ட் நான் கேட்டதுக்கு பதில்… என்ன யோசனை பண்ணிட்டிருந்தீங்க அத சொல்லுங்க?...” என அவளும் அவனை தள்ளி நிற்க வைக்க…

“ஹ்ம்ம்… விடமாட்டியே…” என்றபடி அவளிடம்,

“அம்மா நம்மளை ஊருக்கு வர சொன்னாங்கல்ல…”

“ஆமாம்… சொன்னாங்க… நாமளும் ஊருக்கு வரோம்னு சொல்லிட்டோமே… அப்புறம் என்ன யோசனை உங்களுக்கு???”

“பொறு மைனா… சொல்லுறதை முழுசா கேளு…” என்றவன், “ஹ்ம்ம்… அப்புறம் துணா போன் பண்ணினான்….”

“சரி… என்ன சொன்னார்?...”

“அது வந்து…” என ஆரம்பித்து விழியன் அனைத்தையும் மஞ்சுவிடத்தில் சொல்ல, அவள் சந்தோஷத்தில் குதித்தாள்…

“அய்யோ… நிஜமாவா?...” என்றபடி ஆர்ப்பரித்தவளை பார்த்துக்கொண்டு இருந்தவன்,

“ஹ்ம்ம் இவ்வளவு சந்தோஷமான நியூஸ் சொல்லியிருக்கேன்… எனக்கெதும் கிடையாதா?...” எனக் கேட்க…

“உண்டே…” என்றபடி அவனை ஆசையோடு கட்டிக்கொண்டாள் அவள்…. அவனும் சிரிப்போடு அவளை அணைத்துக்கொண்டான்…

தே நேரம்,

வேலனின் வீட்டில்,

“வள்ளி… நான் ரெடி… நீ ரெடி ஆகிட்டியா?...” என்றபடி அவர்களது அறைவாசலில் நின்று குரல் கொடுத்தான் யுவி…

அவன் குரல் கேட்டதும், சட்டென்று கதவைத் திறந்தாள் அவள்…

“என்ன வள்ளி போகலாமா?....” என்று அவன் தன் சட்டையை சரி செய்தபடி கேட்க…

அவள் அவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள்….

இளஞ்சிவப்பு நிற சட்டையில் அழகாக, கம்பீரமாக இருந்தவனை இமைக்காது பார்த்தாள் அவள்…

“ஒகே… வா போகலாம்…” என்றவன் அப்போதும் நிமிராமல் நகர, இரண்டு அடி எடுத்து வைத்தவன், என்ன நினைத்தானோ, சட்டென்று திரும்பினான்….

யுவியின் கண்கள் அவள் புடவை நிறத்திலே மையம் கொண்டது… அவனால் பார்வையை சற்றும் அகற்ற முடியவில்லை… மனம் தாறுமாறாக அடிக்க, செய்வதறியாது அவன் அவளைப் பார்த்தான்…..

அவன் உயிர், உடல் என மொத்தமாய் அவள் பக்கம் சாய்ந்து விட்டதை போல் உணர்ந்தவனின் விழிகள் பல நாள் ஏக்கம் தீர்ந்தது போலவும், மீண்டும் அது பல மடங்கு பெருகியதையும் பிரதிபலிக்க, அவன் தன்னிலை மறந்தான்…

அவன் பார்வையில் தெரிந்த ஒவ்வொன்றையும் தனக்குள் உள்வாங்கியவள், மெல்ல மெல்ல கரையத் துவங்கினாள்….

விழி தாழ்த்தி வெட்கத்தை மறைத்தவளின் கைகள் சட்டென தலை முடியை சரி செய்ய மேலே எழும்ப,

அவள் கைகளில் அணிந்திருந்த ஒன்றிரண்டு கண்ணாடி வளையல்களை அப்போது தான் கவனித்த யுவிக்கு அதற்கு மேலும் நிற்க முடியவில்லை அங்கே…

அது எழுப்பிய சப்தமும், அது குலுங்கிய விதமும், அவனை அவன் உணர்வுகளை மொத்தமாய் வசமிழக்க செய்ய,

அருகிலிருந்த மாடிப்படி கைப்பிடி வளைவில் தன்னை சாய்த்து கண்களை இறுக மூடிக்கொண்டான் அவன்….

அவனது தடுமாற்றத்தைக் கண்டவளின் இதழ்களில் சற்றே புன்னகையும் மலர, மெல்ல அவனை நெருங்கினாள்…

“த்வனி….” என அவன் இதழ்கள் முணுமுணுக்க,

அவள் கால்கள் சட்டென நின்றது.

“த்வனி….” என அவன் மேலும் உருகி, தனது நெஞ்சில் சட்டைப் பையின் மேல் கை வைக்க, அவள் மேலும் முன்னேறினாள்…

மூடியிருந்த விழிகளுக்குள் போராடிக்கொண்டிருந்தவனை, “என்னங்க….” என்றழைத்து விழி திறக்க வைக்க முயற்சித்தாள் அவள்….

“என்னாச்சுங்க?.... என்னைப் பாருங்க…..” என அவள் மேலும் அழுத்தி சொல்ல…..

பட்டென விழி திறந்தவனது கண்களில் நீர் சூழ்ந்து கலங்கியிருக்க,

கணவனின் கண்களில் இருந்த மாற்றத்தைக் கண்டவள்,

“என்னாச்சுங்க?...” என்றபடி அவன் கண்களைத் துடைக்க முயல,

சட்டென அவள் கரத்தினைப் பிடித்து, தன் நெஞ்சின் மேல் வைத்துக்கொண்டவன்,

“ஏண்டி என்னை கொல்லுற?... நான் என்னடி பாவம் செஞ்சேன் உனக்கு?... எதுக்குடி இப்படி என்னை பைத்தியமாக்கி பார்க்குற?... வலிக்குதுடி… நிஜமா…. வலிக்குது….” என்றான் அவன்….

அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தும் புரியாதவாறு அவள் மௌனமாய் நின்றிருக்க, அவன் அவளது இன்னொரு கரத்தையும் பற்றினான்…

அவன் தொடுகையில், தன்னை மறந்தவள், மெல்ல அவன் விழிகளுக்குள் பார்க்க, “ப்ளீஸ்டீ… புரிஞ்சிக்கோ…. ப்ளீஸ்… என்னால முடியலை...” என கூறிவிட்டு அவன் விருட்டென்று அகல,

அவள் தன் கன்னங்களைத்தொட்டு வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, உதட்டில் பூத்த புன்னகையோடு அவன் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

ஹாய் ப்ரெண்ட்ஸ்… லாஸ்ட் வீக் எபிசோட் தராததுக்கு ரொம்ப சாரி… இந்த வீக்-ம் நிறைய பேஜஸ் கொடுக்க முடியலை… அதுக்கும் ஒரு பெரிய சாரி…

நெக்ஸ்ட் வீக்… கண்டிப்பா நிறைய பேஜஸ் கொடுக்குறேன்… எல்லாத்துக்கும் சேர்த்து…

துணா என்ன சொன்னான்?... எல்லாரும் எப்போ திருவிழாக்கு வருவாங்க?... பாலா வள்ளிக்கு இடையில பிரச்சினை மறுபடியும் வெடிக்குமா?... யுவி த்வனியைப் பார்ப்பானா?... ஹ்ம்ம்… யோசிச்சிட்டே இருங்க…

நான் மறுபடியும் உங்களை அடுத்த வாரம் மீட் பண்ணுறேன்… டாட்டா…

வரம் தொடரும்…

Episode # 15

Table of Contents

Episode # 17

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.