06. சதி என்று சரணடைந்தேன் - சகி
காரிருள் இன்னும் முழுதும் விலகவில்லை.கதிரவன் இப்போது தான் கண்விழிக்க தொடங்குகிறான்!!
தென்றலோ குளிர்ச்சியை உயிர்வரை ஊற வைத்தது.மலர்கள் லேசாக காற்றோடு காதல் பேசின!!
மெல்ல துயில் கலைந்தாள் தீக்ஷா!
இன்றைய பொழுது விடிந்தாகிவிட்டது!!
இன்றுமுதல் வேறு இடத்தில் வேலை!!!
திறமை வாய்ந்த பத்திரியாளர் தேவைப்பட்டார்களாம்!!உடனே,இவளை சிபாரிசு செய்துவிட்டார் இவளது எம்.டி.!
புது இடம் எப்படி இருக்க போகிறதோ!யாரெல்லாம் எப்படி பழகுவார்களோ!!இந்த எண்ணம் சற்றே அவளுக்கு கலக்கத்தை தந்தது!!!கலைந்த கேசத்தை சீர்படுத்தி சிறிது நேரம் இயற்கை காற்றை சுவாசித்தாள்!!!
மனம் வெற்று தாளானது!!
சம்பந்தமே இல்லாமல் நேற்றைய கனவு நினைவில் உதித்தது!!!
மண கோலத்தில் கையில் மாலையுடன் ஸ்ரீ லட்சுமி தேவி நிற்கிறாள்!!!சூரிய உதய நேரத்தில்...ஊரே விழாக் கோலம் பூண,மலர்கள் தூவ,திருமண வேதங்கள் ஓத,அனைவரும் வாழ்த்த அவள் ஸ்ரீ நாராயணரின் கழுத்தில் தலை குனிந்தப்படி மாலையிடுகிறாள்!!
(நம்ம பயலும் தூக்கத்துல எப்போவே சதின்னு உளர்னானே!)
திடீரென சிந்தனையை கலைத்துக் கொண்டாள்.தலையில் ஒருமுறை அடித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
மணி ஏழானது!!!
பத்தாவது முறையாக ரவிக்குமாரை எழுப்பினாள் தீக்ஷா!அவர் எழுந்திரிப்பதாய் தோன்றவில்லை.
"ரவி!டைம் ஆகுது!"
"ஒரு 5 நிமிஷம் செல்லம்!"
பொறுமை இழந்தவள்,
"தாத்தாக்கிட்ட இருந்து போன் வந்திருக்கு!"-என்று கூறவும்,பதறியபடி எழுந்தார் ரவி.
"எங்கே?"
"நான் சும்மா சொன்னேன்!"
"ஏம்மா?"
"போம்மா!டைம் ஆகுது பார்!"
"ஐயோ!"-தலையில் அடித்துக் கொண்டு அவர் எழந்து போனார்.
"அடுத்து இவர் ஜெராக்ஸை எழுப்பணும்!எனக்கு இதே பொழப்பா போச்சு!"-என்று சித்தார்த்தின் அறைக்குள் சென்றாள்.ம்ஹீம்...அவன் இடியே விழுந்தாலும் எழுந்திரிப்பதாய் தோன்றவில்லை.
அவன் தூக்கத்திலே,
"ஐ லவ் யூ செல்லம்!"-என்று புலம்பினான்.
"ஐ லவ் யூவா?இவன் யார் கூட பேசுறான்?ஓ...கனவுல ரொமான்ஸா!"-என்று எண்ணியவள்.
அவன் காதருகே சென்று,
"ரவி!உன் பையன் என்ன பண்றான்னு வந்து பாரேன்!"-என்று கத்த,
"நான் ஒண்ணும் பண்ணலைப்பா!"-என்று அவனும் பதறியப்படி எழுந்தான்.சுற்றும் முற்றும் பார்த்தவன்,அவள் விளையாட்டாய் தான் கூறினாள் என்றதும் அசடு வழிந்தான்!
"ஓய்!என்ன காலையிலே ரொமான்ஸா?"-அவன் மெல்ல சிரித்தான்.
"இதெல்லாம் பார்க்கணும்னு எனக்கு விதிச்சிருக்கு!ஏன்டா...உன் லவ்வை சொல்லி தொலைக்க வேண்டியது தானே!"
"அம்மூ!இப்படியா பயமுறுத்துவ!"
"பார்டா!கனவுல யாரையோ செல்லம்னு கொஞ்சிட்டு மாட்டிக்கிட்ட உடனே என்னை அம்மூன்னு கொஞ்சறான்!எந்த ஊர் நியாயம்டா இது?"
"நீ இன்னும் ஆபிஸ் போகலை?"
"நான் என்ன வாட்ச்மேன் வேலையா பார்க்கிறேன்!ஏழு மணிக்கே போய் உட்கார?"
"இப்போ எதுக்கு என்னை எழுப்புன?"
"ஏன்?இன்னும் கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ண போறீயா?"-அவன் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என்று தலையசைத்தான்!!!
(ஊர்ல உலகத்துல இந்த அண்ணன்கள் எல்லாம் ரொம்ப பாவம்)
"சரி..பொழச்சு போ! சித்து.."
"ம்.."
"என்னை வேற இடத்துக்கு மற்றிட்டாங்க சித்து..."
"எங்கே?"
"வேற பிரஸ்க்கு!"
"ஐயோ பாவம்!"
"தேங்க்ஸ்டா!நீயாவது எனக்காக கவலைப்படுறீயே!"
"மன்னிக்கணும்!நான் உனக்காக வருத்தப்படலை..உன் வருங்கால எம்.டிக்காக கவலைப்படுறேன்!பாவம்...யார் பெத்த புள்ளையோ!இப்படி சிக்கிட்டானே!"
"நீ எல்லாம் ஒரு அண்ணனாடா!உன்னை என்ன பண்றேன் பாரு!"-அவள் அடிக்க அவன் எழுந்து ஓட ஆரம்பித்தான்.
ஓடியவன்,எதிரில் வந்த சம்யுக்தாவை கவனிக்காமல் அவள் மீது மோத,இருவரும் கீழே விழுந்தனர்.
பின்னால் வந்தவள் இக்காட்சியை பார்த்ததும்,கண்ணை மூடியபடி ஓடிவிட்டாள்.
நடந்த இந்த நிகழ்வால் தடுமாறி போயினர் இருவரும்!!சம்யுக்தா சுதாரித்தப்படி சித்தார்த்தை தள்ள அவன் சுயநினைவு வந்தவனாய் எழுந்தான்!!!
சம்யுக்தா தலைகுனிந்தப்படி அங்கிருந்து ஓடிவிட்டாள்.
மணி எட்டானது என்பவதை அலாரம் கூவி ராகுலுக்கு உணர்த்தியது!!!அவன் அதன் தலையில் அடித்துவிட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.
டேஜா அவன் மீது தாவி அவனை எழுப்ப முற்பட்டான்.
"டேய்!போடா!தூக்கம் வருது!"-அவன் குலைத்தும் பார்த்தான்.அவன் எழுந்திரிப்பதாய் தோன்றவில்லை.
அச்சமயம் அங்கு வந்த அனு ராகுலை பார்த்துவிட்டு,
"அண்ணா!உன்னை தேடி யாரோ வந்திருக்காங்க!"என்றாள்.
"யாரு?"
"யாரோ சதியாம்!"-அப்பெயரை கேட்டதும் அவன் பதறியப்படி எழுந்தான்.
"யாரு?"
"யாரு?"
"இப்போ என்ன பெயர் சொன்ன?"
"சதி!ஏன் அந்த பெயரை கேட்டதும் இப்படி பதறுகிற?"
"உனக்கு எப்படி அந்த பெயர் தெரியும்?"
"ஆர்யா சொன்னான்!"
"யார்ணா அது?ராத்திரி தூக்கத்துல புலம்புனியாமே!"
"அது யாருன்னே தெரியலை அனு!"
"அப்பறம் எப்படி உன் கனவுல...எங்கேயோ இடிக்குதே!"
"என்ன இடிக்குதே!போ!தூங்குற புள்ளையை எழுப்பிட்டு!"
"ஒருவேளை நீ அந்த சதியை லவ் பண்றீயா?"