(Reading time: 9 - 18 minutes)

"மா...லவ் பண்றேன்!இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறேன்!"

"சொல்லவே இல்லை.."

"அதான் இப்போ சொல்லிட்டேன்ல!போ!பைத்தியம் மாதிரி உளரிட்டு!"

"நான் என்ன உளர்னேன்?"

"யாராவது கனவுல வரவங்களை காதலிப்பாங்களா?"

"ஒருவேளை நேர்ல வந்துட்டா?"

"தேங்க் காட்..நான் அவ முகத்தை கூட பார்த்து இல்லை!அதனால என்னால கண்டுப்பிடிக்க முடியாது!"

"கண்டுப்பிடிச்சிட்டா!"

"தாயத்து வாங்கி கட்டிக்கிறேன்!"

"தாயத்தா?"

"ஆமா...எனக்கு பேய்,பிசாசுன்னா பயம்!"

"ஓஹோ!அப்போ என் அண்ணி உனக்கு பேயா?"

"அண்ணியா?"

"உனக்கு மனைவி எனக்கு அண்ணி தானே!"

"ஐயோ!போடி!நான் ஆபிஸ்ல போய் தூங்கிக்கிறேன்!"-அவன் எழுந்து குளிக்க சென்றான்.

ழுந்து சென்று குளித்துவிட்டு,கொட்டாவி விட்டப்படி,கீழறங்கி வந்தான்.

"என்னடா உன் தங்கச்சி எழுப்பிவிட்டாளா?"

"ஆமாம்மா!"

"சரி...சாப்பிட வா!"அவன் டேபிளில் அமர்ந்தான்.

"மா...நீ இன்னிக்கு என்கூட ஆபிஸ் வரீயா?"

"எது?நான் வந்து என்ன பண்ண போறேன்?"

"வா!ஜாலியா போயிட்டு வரலாம்!"

"வீட்டில வேலை எல்லாம் யார் பார்க்கறது?"

"எத்தனை பேர் இருக்காங்க?அவங்க பார்த்துப்பாங்க.."

"ராகுல்!"

"ம்மா!"-ஆதித்யா அனைத்தையும் சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னங்க...நீங்களாவது சொல்லுங்களேன்!"

"அப்பா!நீயாவது சொல்லேன்பா!"

"குட்டிம்மா!டாக்டருக்கு கால் பண்ணு!எனக்கு கொஞ்ச நாளா காதே கேட்க மாட்டிங்குது!"

"ம்மா!உனக்கு ரியான்னு யாரையாவது தெரியுமா?"-ஆதித்யாவை பார்த்தப்படி அவன் கேட்டான்!!

"யார் இந்த வீட்டு வருங்கால மருமகளா?"

"ஆமாமா!அப்படியும் சொல்லலாம்!ஆனா,எனக்கு சித்தி முறை வரும்னு நினைக்கிறேன்!"-சரண் குடித்து கொண்டிருந்த தண்ணீரை துப்பிவிட்டான்.

"டேய்!என்னடா சொல்ற?"

"அப்பாவையே கேளு!"

"ஐயோ!அம்மூ!சத்தியமா அது யாருன்னே எனக்கு தெரியாது!நான் உன்னை தவிர வேற யாரையாவது பார்த்திருக்கேனா?"-மது முறைத்தாள்.

"டேய் யார்டா அந்த ரியா?"

"அப்பா!நேத்து தானே என் கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு அவங்கக்கிட்ட கேட்ட!அதுக்குள்ள மறந்துட்ட?"

"என்னது?"

"சத்தியமாம்மா..அந்தப் பொண்ணு கூட அப்பாக்கு ஒரு கிஸ் கொடுத்துட்டு போச்சு!"-அவ்வளவு தான் மது கோபத்தின் உச்சிக்கே போனாள்.

அப்போது...

"ராகுல்!"-என்றப்படி ஒரு சிறுமி உள்ளே வந்தாள்.

அவளை பார்த்ததும்,

"ரியா டார்லிங்!"-என்று அவளை தூக்கி அவளது கன்னத்தில் முத்தமிட்டான் ராகுல்!!

"நான் சொல்லலை...இவங்க தான் ரியா!"-அவள்,

"ஹலோ!"என்று கையசைத்தாள்.

மதுவின் முகம் இயல்பானது.சரண் பெருமூச்சுவிட்டான்.

"ரியா செல்லம்!அந்த அங்கிள் உன்கிட்ட நேற்று அவரை கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு கேட்டார்ல!"

"ம்..ஆனா,அவருக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சுல்ல!"

"அதனால,என்ன என் வைப்பை டிவோர்ஸ் பண்ணிடுறேன்!"

"டிவோர்ஸ்?"-மது முறைக்க,

"வேணாம்!நான் வளர்ந்ததும் ராகுலை தான் கல்யாணம் பண்ணிப்பேன்!"-என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ரியா.

"அப்போ சரி!!!நான் வெயிட் பண்றேன் டார்லிங்!"

"பார்த்தியா அம்மூ!இந்த ரோமியோக்காக எத்தனை ஜூலியட் வெயிடிங் பார்!"

"நீங்க உள்ளே வாங்க!உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"இல்லை...எனக்கு பசிக்குது!சாப்பாடு எடுத்து வை!"-சரண் சமாளித்தான்.

"என்ன செல்லம்?எதுக்கு கூப்பிட்ட?"

"நாளைக்கு ஊருக்கு போறோம்!நீ என் பொம்மையை பத்திரமா பார்த்துப்பியா?"

"பொம்மையா?"

"ம்...அங்கே அதை எடுத்துட்டு போக கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க ராகுல்!"

"ம்..சரி!நான் ஆபிஸ் போறேன்!நீ செர்ரியை என் அம்மாக்கிட்ட கொடுத்துட்டு போயிடு சரியா?"

"தேங்க் யூ!"-மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவள் ஓடிவிட்டாள்.

"பொம்மைக்கு பாடிகாடா?"

"ம்.."

"இது உனக்கே ஓவரா தெரியலை?"

"அவ சந்தோஷத்துக்காக தான்பா!உனக்கே தெரியும்ல ரியா ஹார்ட் பேஷண்ட்னு!"

"என்னடா சொல்ற?"

"ஆமாம்மா!அவளுக்கு இதயத்துல ஓட்டை இருக்கு!அதுக்கு டிரீட்மண்ட் பண்ண தான் போறாங்க!அவளால,ஏமாற்றம் தருகிற விஷயம் ரொம்ப சின்ன விஷயமா இருந்தாலும் தாங்கிக்க முடியாது!"

"கடவுள் எவ்வளவு இரக்கமில்லாம இருக்கார் பார்!தப்பு பண்ணவங்க எல்லாம் குற்ற உணர்ச்சிக் கூட இல்லாம வாழுற உலகத்துல,கபடமே இல்லாத குழந்தையை தண்டிக்கிறார்!என்ன விதியோ!"-ராகுல் கூறியதின் விளக்கம்,மதுவிற்கு மட்டுமே வெளிச்சமானது!!

புதியாக பணியமர்த்தப்பட்ட பணியிடத்திற்குள் நுழைந்தாள் தீக்ஷா!!

"எக்ஸ்யூஸ்மீ!"

"எஸ்!"

"ஐ ஆம் நியூலி அபாயிண்டட்!"

"யு ஆர் மிஸ் தீக்ஷா ரவிக்குமார்!"

"எஸ்!"

"சொன்னாங்க!நீங்க அந்த ரூம்க்கு போய் பாருங்க!"

"தேங்க்யூ!"-விசித்ரம் தான்!அங்கு வேலை செய்யும் வரவேற்பாளருக்கும் அவளது வருகை தெரிந்துள்ளது.

சற்றே தயக்கத்தோடு தீக்ஷா கணவை தட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.