தேவி அவளை ஆச்சரியத்துடன் பார்க்க, “ப்ரத்யுஷ் வேலன்… இதுதான அத்தை என் கணவரோட முழுப்பெயர்???…” என அவள் கேட்டதும்,
“வள்ளி இது உனக்கு எ….ப்….ப....டி…..த்…. தெ…ரி….யு….ம்???....” என தேவி அவளிடம் திக்கித் திணறி கேட்க,
“தெரியும் அத்தை… அவரைப் பத்தின எல்லாத்தையும் சொன்ன நீங்க இதை மட்டும் சொல்லலை…” என்றதும்,
அவர் அவளிடம் எதுவோ பேச முயல,
அவள் “ஒரு நிமிஷம் அத்தை…” என்றவாறு கணவனின் அருகில் சென்றாள்…
“அந்த த்வனி என்ன செஞ்சான்னு அத்தை கேட்டாங்க உங்ககிட்ட… நீங்க பதில் சொல்லலை… இப்போ அதே கேள்வியை நானும் கேட்குறேன்… சொல்லுங்க… ” என்றதும்,
“என்னை நம்பினா… யாருன்னே தெரியாதப்ப கூட என்னை நம்பினா… என்னை முன்ன பின்ன பார்த்தது கூட இல்ல… ஆனா என்னை நம்பினா… அந்த இருளில் அந்த நேரத்தில் என்னை நம்பி என் நிழலில் தஞ்சம் புகுந்தா…. பிரியுற நேரம் வந்ததும் நான் போற திசையையே இமைக்காமல் நின்னு, என்னைத் தடுக்க முயற்சி பண்ணி உயர்த்தின கையை கூட கீழே போடாம நின்னு பார்த்துட்டிருந்தா… தூரத்துல நிழல் உருவமா அவ தெரிஞ்சப்ப கூட அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்கு புரிஞ்சது, தெரிஞ்சது… அது என் அடி மனசில ஆழமா பதிஞ்சிட்டு… பத்து பதினைந்து நிமிடம் கழிச்சு நான் மறுபடியும் அவளை சந்திச்ச இடத்துக்கு வந்தப்போ என் பெயரை எழுதி வைச்சிருந்தா மணலில்…. பக்கத்தில் லேசாக காயத்துடித்துக்கொண்டிருந்த ஈரமும் இருந்தது… அந்த ஈரம் என் த்வனியோட கண்ணீர்த்துளிகள் தான்… எனக்காக அவ அழுதிருக்கா… அவ அந்த இடத்தை விட்டு அப்பதான் போயிருக்கா…. பத்து நிமிடம் கூட எங்களோட சந்திப்பு இருக்காது… ஆனாலும் எனக்காக அவ விலை மதிப்பில்லாத கண்ணீரை சிந்தியிருக்கான்னா, அவ மனதை நான் பாதிச்சிருக்கேன்னு என்னால உணர முடிஞ்சது… அவ என் த்வனி தான்… அதுபோல நான் அவளோட ப்ரத்யுஷ் தான்…” என அவன் பல உணர்வுகளோடு போராடியவாறு சொல்ல….
“அப்போ த்வனியை மறக்க மாட்டீங்க அப்படித்தானே?...” என அவள் அவன் விழி பார்த்து கேட்டாள்…
“ஆமா…” என்றான் அவன் திடமாக…
கண்களில் உருவான நீருடன் அவனை ஏறிட்டவள், “அப்போ வள்ளி?...” எனக் கேட்க
“என்னைக் கைப்பிடித்தவள்…. என்னை நம்பி தன் வாழ்வை எங்கிட்ட ஒப்படைத்தவள்… எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சவள்… என் மௌனத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளை அறிய முற்பட்டு தோற்றுக்கொண்டிருப்பவள், தாய்க்குப் பின் தாரம் என்ற பழமொழிக்கேற்றவள், என்னை மனதிற்குள் நேசிக்கிறவள்.. ஆனா வெளியே என்னிடம் சொல்ல மறுப்பவள்… என்னோட சந்தோஷத்திற்காக இன்னமும் பலரின் முன் நாடகம் நடத்துபவள்…. கணவனிடம் தனக்கான அடையாளத்தை தேடிக்கொண்டிருப்பவள்… என் மனைவி… என் வள்ளி….” என அவன் அழுத்தம் திருத்தமாக சொல்ல…
“வேலா… நீ… அப்போ உனக்கு புரியுது தான?... வள்ளி உன் மனைவின்னு… அவளுக்கு நீ கணவன்... அந்த எண்ணம் உன் மனசுக்குள்ள இருக்குன்னு நினைக்குறப்போ சந்தோஷமா இருக்குப்பா….” என தேவி சற்றே முகம் தெளிய சொல்ல….
“வள்ளி என் மனைவி தான்… நான் இல்லன்னு சொல்லலை தேவிம்மா… ஆனா த்வனி என்னோட காதலி… அதையும் என்னால மறுக்க முடியாது… த்வனி ப்ரத்யுஷ்க்கு சொந்தம் என்றால் வள்ளி வேலனுக்கு சொந்தம்… இரண்டு பேரையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது தேவிம்மா… இரண்டு பேரும் எனக்கு முக்கியம்… நான் தொலைச்ச வரத்தையும், என்னைத் தேடி வந்த வரத்தையும் இனியும் என்னால பிரிய முடியாது… ஹ்ம்ம்… த்வனி என் மூச்சுன்னா, வள்ளி என்னோட உயிர்…. மூச்சு நின்னா உயிரும் நின்னுடும்….” என அவன் சொன்னது தான் தாமதம் என்பது போல்
வள்ளியின் கால்கள் தடுமாறி அவள் உடல் சரியத் துவங்கியது நிலம் நோக்கி….
ஹாய்… ப்ரெண்ட்ஸ்….
பிரியாத வரம் வேண்டும் தொடர் அடுத்த அத்தியாத்துடன் நிறைவு பெரும்….
ஹ்ம்ம்… மறுபடியும் உங்களை அடுத்த வாரம் பிரியாத வரம் வேண்டும் இறுதி அத்தியாயத்துடன் சந்திக்கிறேன்… டாட்டா…
அடுத்த அத்தியாத்துடன் நிறைவு பெரும்…
{kunena_discuss:866}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.