Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (8 Votes)
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11 - 5.0 out of 5 based on 8 votes
Pin It

11. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

11. ஒரே ஞாபகம்...

ஸ்-ஸின் பார்வை தங்கையையும், அவளின் கணவனையும் சின்ன எதிர்பார்ப்புடன் அளந்தது. ஆனால் ஷ்யாம் அனாமிகாவை பார்ப்பதையும், அவள் புரியாமல் விழிப்பதையும் பார்த்து ஏமாற்றத்துடன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

ப்படி இல்லை ஆன்ட்டி நான் போய் பேசனும்னு எல்லாம் இல்லை பொண்ணுங்களே என் கிட்ட வந்து பேசுவாங்க...”

“சும்மா கதை விடாதே சதீஷ்”

Kanavugal mattum enathe enathu

“நிஜம் ஆன்ட்டி. ஆனால் முதல்ல என்னை இப்படி யாரோ மாதிரி சதீஷ்ன்னு கூப்பிடாதிங்க. உங்களை மாதிரி அழகானவங்களுக்கு எல்லாம் நான் எஸ்”

“ஹலோ ஹலோ எனக்கு இருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு இவ மட்டும் தான்.... விட்ருப்பா!”

என்ற கணவனை பார்த்து பாமினி முறைக்க,

“என்ன அங்கிள் நீங்க ஆன்ட்டி அழகா இருக்காங்கன்னு உண்மையை சொன்னால் இப்படி கோபப் படுறீங்க?” என்றான் எஸ்.

“எல்லாம் பொறாமை வேறென்ன... நீ சொன்ன மாதிரி நீ எனக்கு இனிமேல் எஸ் தான். ஆமாம் இதென்ன எஸ் நோன்னு எல்லாம் பேர் வச்சுட்டு சுத்துற?”

“அது ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி ஆன்ட்டி. ஒரு தடவை க்ரூஸ் (cruize) போனப்போ ஷிப்ல இரண்டு பொண்ணுங்க பிரெண்ட் ஆனாங்க. பர்ஸ்ட் ஃப்ளோர்ல ஒருத்தி செகண்ட் ஃப்ளோர்ல இன்னொருத்தி. இரண்டு பேர் கூடவும் ஷிப்ட் வச்சு பேசிட்டு இருந்தேன். யார் எதை பேசினாங்கன்னு ஒரே கன்ப்யுஷன். சரி எனக்கு ஞாபகம் வச்சுக்க ஈசியா இருக்கட்டுமுன்னு எஸ்.கேன்னு ஒரு பொண்ணு கிட்டேயும், எஸ்ன்னு இன்னொருத்தி கிட்டேயும் சொல்லி வச்சேன். இதுல எஸ் தான் பக்காவா வொர்க் அவுட் ஆச்சு. அன்னைக்கு முதல் ஸ்பெஷல் பீப்புளுக்கு எல்லாம் நான் எஸ் தான்”

“ஓ! அப்போ நான் உனக்கு ஸ்பெஷலா எஸ்???” என பாமினி நக்கலாக கணவனை பார்த்து அவரை வெறுப்பேற்ற என கேட்க, அவரோ, அவனை பார்த்து,

“இந்த கதை எல்லாம் உன் வைப்க்கு தெரியுமா?” என அவனுக்கு செக்மேட் வைத்தார்.

“என்ன அங்கிள், நீங்க இது போல விஷயத்தை எல்லாம் ஆன்ட்டிக்கு சொல்லிட்டா செய்றீங்க???” என அவனும் அவருக்கு சளைக்காமல் பதில் கொடுத்தான்.

மூவரும் உணவு மேஜையில் இருந்து சாப்பிட்ட படி பேசிக் கொண்டிருந்தனர். அங்கே அவர்களை தவிர ஷ்யாமும், அனாமிகாவும் கூட இருந்தார்கள்.

ஷ்யாம் சிந்தனையுடன் எஸ்-சை பார்த்தபடி இருந்தான்.

அனாமிகா கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை மறந்தவள் போல அமர்ந்திருந்தாள்.

நந்தினிக்கும் – எஸ்-சுக்கும் இடையேயான பிரிவை பற்றி ஷ்யாமின் பெற்றோருக்கு தெரிந்திருக்கவில்லை. நந்தினிக்கும் அனாமிகாவிற்கும் இடையே ஏதோ ‘கச்சா-முச்சா’ என்பது புரிந்திருந்ததால், பாமினியும் நந்தினியை வராததை பற்றி தோண்டி துருவி விசாரிக்கவில்லை.

எனவே எஸ் எதையும் விலாவரியாக விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

னு”

மனைவியை அழைத்தபடி அறைக்குள் வந்த ஷ்யாம், அவள் வேறு ஏதோ உலகத்தில் இருப்பதை புரிந்துக் கொண்டு அவளருகில் சென்று அமர்ந்தான்.

“அனு”

மனைவியை தோளோடு அணைத்தபடி மீண்டும் அழைத்தான் ஷ்யாம்.

“ம்ம்ம்ம்...”

“அனு, நீ சந்தோஷமா தானே இருக்க?”

அனாமிகா அவனை குழப்பத்துடன் பார்த்தாள்.

“ஏன் ஷ்யாம் திரும்ப திரும்ப இதையே கேட்குறீங்க? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களுக்கு தெரியாதா என்ன?”

“தெரியும்.... ஆனாலும்....”

“ஆனாலும் என்ன சொல்லுங்க. உங்க மனசுல அப்படி என்ன தான் இருக்குன்னு எனக்கும் தெரிஞ்சாகனும்”

“இல்லை..... நந்தினிக்கும் உனக்கும் எதுக்காக சண்டை? அவங்க உன்னை என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கம்பல் செய்தாங்க அது தானே? பட் இந்த கல்யாணத்துனால உனக்கு சந்தோஷம்னா அப்புறம் ஏன் அவங்க மேல உனக்கு இவ்வளவு கோபம்? அதுவும் அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி அப்படி கத்துற அளவுக்கு........ எனக்கு புரியலை அனு...”

“எனக்கும் கூட தெரியலை ஷ்யாம்”

குழந்தை போல விழித்தபடி அவள் சொல்ல, அவன் அவளை அவனுடன் இறுக்கிக் கொண்டான்.

“இதோ பாருடா, பாவம்ல நந்தினி”

“ஆமாம் ஷ்யாம். நான் ஏன் இப்படி இருக்கேன்னே எனக்கு தெரியலை. என் மேல அன்பா இருக்கவங்களை ஹர்ட் செய்றதே எனக்கு வேலையா போச்சு. முதல்ல நீங்க, இப்போ நந்தினி. சாந்தியை கூட ஹர்ட் செய்ற மாதிரி பேசி இருக்கேன் ஆனால் அவ உடனேயே பதிலுக்கு திட்டிடுவா.... நீங்க இரண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்டேன்குறீங்களா....”

“அட இபப்டி வேற இருக்கா?”

“ஷ்யாம்...”

“அனு கண்ணா, நீ என்னை திட்டினாலும் சரி அடிச்சாலும் சரி நான் எப்போதும் உன்னோடவே தான் இருப்பேன். ஆனால் நந்தினி விஷயம் வேற... நமக்கு ஹெல்ப் செய்தவங்க கஷ்டப் பட நாம விட கூடாது. அதுவும் நம்மால அவங்களுக்கு கஷ்டம் வரவே கூடாது...”

“என்ன சொல்றீங்க ஷ்யாம்? அண்ணாவும் நந்தினியும் பிரிஞ்சதுக்கு நான் தான் காரணமா??? ஆனால் பேசி பிரிஞ்ஜோம்னு தானே அவன் சொன்னான்...”

“ஸீ, நம்ம கல்யாணம் முடிஞ்ச உடனே பிரிஞ்சிருந்தா அதை நம்பலாம்... இப்போ திடீர்னு ஏன் பேசினாங்க ஏன் பிரிஞ்சாங்க?”

“ஓ.... இது மாதிரி யோசிக்காமல் பேசி மத்தவங்களை ஹர்ட் செய்றதே எனக்கு வேலையா போச்சு...”

“அதை இனிமேல் மாத்திக்கோ அனு... நமக்கும் குழந்தை வர போகுது அந்த பாப்பா நம்மளை பார்த்து தானே எல்லாத்தையும் கத்துக்கும்?”

“ம்ம்ம்... சரி ஷ்யாம்.. இப்போ என்ன செய்றது?”

“ஏதாவது செய்யனும்... நந்தினியையும் சதீஷையும் சேர்த்து  வைக்க முடியுமான்னு பார்க்கனும் அப்கோர்ஸ் அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தா மட்டும் தான்.”

“நந்தினிக்கு அவனை பிடிக்கும் எனக்கு தெரியும். கல்யாணம் செய்து கிட்டு உடனேயே அவன் பாட்டுக்கு ஜமைக்கா கிளம்பி போயிட்டான், அப்பவும் சரி அதுக்கு அப்புறமும் சரி வேற யாராவதா இருந்தா திட்டி தீர்த்திருப்பாங்க...அதுலே இருந்தே நந்தினியை பத்தி தெரியுது... ஆனால் அண்ணாக்கு பிடிக்குமான்னு தெரியலையே....”

“சந்தேகமே இல்லை ரொம்ப பிடிக்கும்..”

“எப்படி சொல்றீங்க?”

“உனக்கு எப்படி நந்தினி மனசு புரியுதோ அதே போல எனக்கு சதீஷ் மனசு புரியுது. பெண்கள் தான் வெட்கப்படுவாங்கன்னு இல்லை அனு, ஆண்களுக்கும் ஒரு விதமான ஷைனஸ் உண்டு. உங்க அண்ணா நந்தினியை பத்தி சொல்லிட்டு நம்ம பக்கம் ஒரு லுக் விட்டாரே அது எதுக்குன்னு நினைக்குற? நந்தினியை பத்தி நமக்கு ஏதாவது தெரியுமான்னு தெரிஞ்சுக்க... நேரா கேட்க அவருக்கு மனசில்லை ஆனால் தெரிஞ்சுக்காமல் இருக்கவும் மனசில்லை... நந்தினி எங்கே இருக்காங்கன்னு தெரியாமல் குழம்பிட்டு இருக்கார்...”

“ஆமாம் ஏதும் தெரிஞ்சுக்க முடியாத துக்கத்துல தான் அத்தை மாமா கூட அப்படி கதை அடிச்சுட்டு இருந்தான்”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Keerthana Selvadurai 2015-09-14 09:45
Interesting update binds (y)

Shyam ku purintha mari S-nands kaadhalai avargal unarvathu eppozhuthu :Q:

S Ly sight seeing mattum thana :Q: no action ah :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:41
Thanks Keerths :)

unga ques'kana pathilgal viraivil :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Shanthi s 2015-09-12 14:57
Please next episode immediate
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:40
Thanks for your interest Shanthi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Sharon 2015-09-11 14:11
Interesting episode Vino mam.. :clap: ..
S in poraamai thee rasikavaikudhu.. Ungalku inimae Dan irukku sir ;-) ..
Oru aanoda manasu oru aanuku Dan puriyumpola :D ..
Shakthi solapora news ennava irukum?? Waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:40
Thank you very much Sharon :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Anusha Chillzee 2015-09-10 17:58
Nice epi Binds

Shyam's way of handling Anamika is nice.
Men psychology is interesting :)

What's the surprise news??? Howz SK going to tackle it from here??? as Silent admirer or direct attack???
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:32
Thanks Anu.

Unga ques'kana replies epi 12 la irukku :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Divyaa 2015-09-10 16:16
Nice update ma'am :clap: :clap: ...S partha pavoma irukk :eek: Wat was the conversation b/w Bill and Nand's? Shakti yena solla poraru? Oru vazhiya Anam's realized her mistake good! S rombha tha show off ponrar. :dance: what next? waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:31
Thank you Divyaa.
S parthal pavama irukaa, nijamavaa?? ninga romba nalavanga Divyaa :)

Bill Nands conversation pathi next ilia athuku adutha epi'la terinjidum...
Shakthi enna solrarnu latest epi padicha ungaluke therinjirum :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Devi 2015-09-10 09:44
Nice update mam!!
S Kku bulb yeria aarabichurucchu!!
So inime S nandhiniya follow pannuvara?
Eagerly waiting to know!! (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:29
Thanks for your comment Devi.

Seivar seivar :-)
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Thenmozhi 2015-09-10 09:35
shyness athuvum yaruku intha bad heroku :roll: romba over Shyam sir :)

Hero - heroine 2 perukkume dimple-aa, sari thaan, ithileyavathu othu porangale :)

Nanthini madam apadi smile seira mathiri Bill ena sonarnu enakum teriyanume :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:28
:-)
2 manam ore mathiri xerox'aga iruka mudiyathu ;-)
Athu RC madam sonnathu...
Enna Thens ithu ungaluku theriyatha :P

Nanthini - BIll enna pesinanga enbathu seekirame teriyum madamji :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Jansi 2015-09-10 08:56
Very interesting epi Vinodha
Ellorum mutalla site adipaanga piragu kalyaanam seythupanga,namma hero appadiye talai Keele....

S & Nanthini orvarukku teriyaamal matravarai toorathiliruntu paartuk kollkinra scene miga piditatu. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:26
Thank you very much Jansi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11kurinji 2015-09-10 08:52
aanini manathu anukku than teiyumo ..........pil nee nanbanin poaamaiyai thunditte..............
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11Bindu Vinod 2015-09-24 01:21
:-) Pennin manam pennukku theriyumnu solrangale, antha style'a ithunu ninaichukonga Kurinji :)

Thanks a lot for your comment :)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top