(Reading time: 19 - 38 minutes)

"ராம் என்ன இது", அதிர்ந்து விட்டாள் துளசி.... "என்ன காரியம் செய்து விட்டீர்கள்"

"ஆம் துளசி... என் சொத்தே நீ தான்.... எனக்கு நீ மட்டும் போதும்... இந்த குழந்தையின் அப்பாவை நீ ஏற்றுக் கொள்வாயா.... ஐ லவ் யூ துளசி" என்று கைகளை விரித்தான்.

"ராம்" .... அவன் விரித்த கைகளில் புகுந்தவள், " ராம், என்னை மன்னித்து விடுங்கள்... இந்த சொத்து, சுகம், எதுவும் எனக்கு வேண்டாம்... நீங்கள் மட்டும் போதும்... ப்ளீஸ் என்னை மன்னித்து விடுங்கள்" என்று அவன் கால்களை பற்றப் போனவளை, தடுத்து நிறுத்தியவன்,

"என்ன செய்கிறாய், பதறி அவளை தடுத்தவன், துளசியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "துளசி, என் கண்மணி... என்னை ஏற்றுக் கொள்வாயா.... முதலில் நீ தான் என்னை மன்னிக்க வேண்டும்... உன்னிடம் எவ்வளவோ விஷயங்களை மறத்து விட்டேன்... அன்று உன்னை மிருகத்தனமாக அடித்து கூட விட்டேன்... இந்த பாவியை மன்னித்து விடு"

அவன் வாயை மூடியவள், முகம் கன்ற, , "ராம் நீங்கள் தான் என்னை முதலில் மன்னிக்க வேண்டும்... நானும் அது மாதிரி பேசியிருக்கக் கூடாது... ஏதோ, என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் கோபத்தில் அப்படி பேசி விட்டேன்".

குழந்தை இவர்கள் பேச்சு சத்தத்தில் சிணுங்கியது... துளசி, அவன் பற்றியிருந்த கைகளை விடுவித்திக் கொண்டு கையில் குழந்தையை எடுத்து, தொட்டிலில் போட்டு ஆட்டினாள்.

குழந்தையின் பிஞ்சுக் கால்களை வருடியவன், "துளசி உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.... என்னை நம்புவாயா...." தயக்கத்துடன் கேட்டவனை,

'ராம்... ப்ளீஸ், எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். நீங்கள் இது வரை எனக்கு சொல்லாமல் இருந்தது சொல்லாதாகவே இருக்கட்டும்... நான் உங்களை முழுமையாக நம்புகிறேன்... நீங்கள் என்ன செய்திருந்தாலும், அதில் ஏதோ ஒரு காரண்ம் இருக்கும்" என்றாள்.

"துளசி... நான் சொல்ல வருவது உனக்கு புரியவில்லையா... நமது மகனைப் பார்" என்று குழந்தையின் காதுகளை தடவினான்.

அவனைப் பார்த்து புன்னகைத்த துளசி, ராம் , பெற்ற தாய்க்கு தன் மகன் யாருடையது என்று தெரியாதா.... நான் அன்றே உங்கள் அண்ணன் கரணது ரிப்போர்ட்ஸ் படித்தவுடனேயே கொஞ்சம் சந்தேகப் பட்டேன்... முதலில் யாருடைய குழந்தையாய் இருக்கும் என்று குழம்பினேன்... பின்னர், ஒரு வேளை குழந்தையின் தகப்பன்."... என்று கூறி நிறுத்தியவள் அவன் முகத்தை பார்த்து விட்டு,

குழந்தையின் காதருகே துளை போடும் இடத்தில் அலகு மாதிரி, பெரிய சைஸ் மச்சத்தை தொட்டு தடவியவள், அவனை குறும்புடன் பார்த்துப் புன்னகைத்தாள்.

"என் துளசி" என்று அவளை அணைத்துக் கொண்ட சரண், "கண்ணம்மா... நீ ஊகித்தது சரியே... ஆம் இவன் எனது மகன் தான். என்னிடம் இருந்து உதித்தவன்... என் இரத்தம்... நமது மகன் துளசி" கண்களில் கண்ணிர் துளிர்க்க சொன்னவனை'

"ராம்" என்று கையைப் பிடித்து கொண்டாள்.

"துளசி, இனி உன்னிடம் உண்மையை மறைக்கக் கூடாது... அன்று கரணின் விந்தணுக்கள் அவன் தந்தையாகும் தகுதியை நோயின் தாக்கத்தில் இழந்து விட்டான் என்று மருத்துவ அறிக்கை கூறியவுடன், என்ன செய்வது என்று தெரியாமல் நானும், டாக்டர் தம்பதிகளும் திகைத்தோம்... சாகும் தருவாயில், இருந்த என் அண்ணனுக்கு, நிம்மதியை கொடுக்க எண்ணினேன். எனது விந்தணுக்களும், அன்று தான் டாக்டர் சுபா கேட்டு கொண்டபடி, டெஸ்ட்டுக்கு அனுப்பி இருந்தது.. டாக்டர் என்னவோ, எனக்கும் ஏதாவது நோயின் பாதிப்பு நாங்கள் இரட்டையர்கள் ஆனதால் இருக்கலாமோ, என்று ரொட்டீன் செக்கப்புக்காக அனுப்பி இருந்தார். அதில், என் ரிப்போர்ட் என்னால் ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும்" என்று சொல்லியிருந்தது...

"என்ன செய்யலாம், கரணின் வாரிசு ஆசைக்கு இதை சொன்னால் அவன் தாங்குவானா, அந்த அதிர்ச்சியில் அது அவன் மரணத்தை அப்பொழுதே வரவழித்து விடுமோ என்ற அச்சத்தினால், நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்... என்னை பெற்றவர்களோ, கரணுக்கு வந்த நோயினால் மனம் தளர்ந்து இருந்தார்கள்... யாருக்கு பார்ப்பது..... அதனால் ஒரு முடிவுக்கு வந்து நான் டாக்டர் சுபாவிடம் எனது விந்தணுக்களை தானம் செய்ய முடிவு செய்திருப்பதை சொன்னேன்...

எப்படியும் என் அண்ணன் கரண் ஆயுள் கம்மி.. நாட்கள் அவனுக்கு குறிக்கப்பட்டு விட்டன. அதனால் அவன் சாகும் முன்பாவது தான் ஒரு வாரிசை விட்டுச் செல்கிறோம் என்ற சந்தோஷத்துடன் செல்லட்டுமே என்றே அவ்வாறு செய்தேன்.... எப்படியிருந்தாலும், நீயும் பாட்டியின் பணத் தேவைக்காக வாடகைத் தாயாக இருக்க சம்மதித்து இருந்தாய்.... அதனால் டாக்டரிடம், என் யோசனையை சொல்லி என் விந்தணுக்களை உபயோகித்து உன்னை கரு தரிக்க வைக்குமாறு வேண்டிக் கொண்டேன்.. ... டாக்டர் பாலாஜியும், டாக்டர் சுபாவும், அதற்கு முதலில் தொழில் தர்மம், கரணுக்கும், உனக்கும் தெரியாமல், அப்படி செய்வது குற்றம் என்று ஆட்சேப்பித்தார்.... யதேச்சயாக அவன் கையெழுத்து இருந்த பேப்பர்களை பார்த்து விட்டு, கரண் தன்னையறியாமல், தனக்கு பதில் வேறு ஒருவது உயிரணுக்களை உபயோக்கித்தாலும் தனக்கு சம்மதமே என்று இருந்த அந்த பார்மில் சைன் செய்து இருந்தான். அதை பார்த்த நான், டாக்டரிடம் காண்பித்து, இது நமக்கு சாதகமாகவே இருக்கும், என வலியுறுத்தி உனக்கு டீரிட்மெண்ட் தொடங்க சொன்னேன்... டாக்டரும், எங்கள் குடும்ப பாசத்தால் அப்படி செய்தார்" என்று சற்று நிறுத்தியவன்,

துளசியின் முகத்தை பார்க்க சங்கடப் பட்டு, மெல்ல மீண்டும் சொல்ல தொடங்கினான்...

"சாரி துளசி.... எனக்குத் தெரியும்.... இதை கேட்டு, உன் மனம் என்ன பாடு படும் என்று... உன்னை எமாற்ற நினைக்க வில்லை... அன்று என் சூழ்நிலை அப்படி...எப்படியும் நீ கரணது குழந்தையை சுமக்க சம்மதித்து இருந்தாய்... கண்டிஷன் வேறு போட்டு விட்டாய்... கழுத்தில் தாலி இல்லாமல் குழந்தை பெற மாட்டேன், என்று சொல்லி விட்டாய்.. குழந்தை பிறந்தவுடன் எங்களிடம் ஒப்படைத்து விடுவதாக சொல்லி விட்டாய்..... காண்ட்ராக்ட்டில் சைனும் செய்து விட்டாய்.... என் அண்ணன் இறந்த பிறகு, நீ குழந்தையை எங்களிடம் தானே கொடுக்கப் போகிறாய்.... எப்படியும் நான் தான் தகப்பன் என்று குழந்தையை வளர்க்க கரண் ஆசைப்படி தீர்மானித்து இருந்தேன்..... யார் குழந்தை என்றாலும் அவன் எங்கள் வீட்டு வாரிசு தானே..... கரணது குழந்தை என்றே என் பெற்றோருக்கும் சொல்ல முடிவு செய்தேன்....

ஆனால் நானே எதிர் பாராத விதமாக எனது அண்ணன் உன் டீரிட்மெண்ட் துவங்கியவுடனேயே இறந்து விட்டான்... திகைத்துப் போனேன்... நான் ஒன்று நினைக்க கடவுள் வேறு முடிச்சு போட்டு விட்டார்...உனக்கோ கருவை உள்ளே செலுத்தி விட்டார் டாக்டர் சுபா. அப்பொழுது போய் என்ன செய்வது?... எப்படி தடுக்க முடியும்... நடப்பது நடக்கட்டும்.... என்றே உனக்கு கரணது மரணச் செய்தியை சொல்லவில்லை....

உன் பாட்டிக்கு ஆபரேஷன் செய்து முடித்தவுடன் எல்லாம் சொல்லலாம்,,,, முதலிலேயே உனக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டாம் என்று நான் டாக்டரிடம் சொல்லி விட்டேன்.... அதற்குள் திடீர் திருப்பமாக உன் பாட்டி, உடல் நிலை மோசமடைய, கரண் இறந்த சில நாட்களில் நான் உன்னை பாட்டியின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது"...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.