(Reading time: 19 - 38 minutes)

வள் கையை அழுத்தியவன், "துளசி, நான் அப்பொழுதே முடிவு செய்து விட்டேன்.... தாலி கட்டியாகி விட்டது... இனி எந்த நிலையிலும், உன்னை விடக் கூடாது என்று... கடவுளே இது எனக்கு கொடுத்த ஒரு சந்தர்ப்பம் என்றே நம்பினேன்.... டாக்டருக்கும் இதில் மகிழ்ச்சியே.... முறைப்படி தாலி கட்டி, என் குழந்தைக்கு நீ அம்மாவாகி விட்டாய் என்றே சொன்னவர்கள், நான் கேட்டுக் கொண்டபடி உன்னிடம் இதுவரை எதுவும் சொல்லவில்லை.... அன்று நீ திருமணம் முடிந்து நம் வீட்டுக்கு வந்த முதல் நாள் கரண் இறந்த அதிர்ச்சியில், என்னை திட்டி விட்டு, குழந்தையை அபார்ஷன் செய்து விடுவதாக சொன்ன பொழுது, காண்ட்ராக்ட், அது, இது, என்று சொல்லி உன்னை கட்டாயமாக குழந்தை பெற்று கட்டாயம் தர வேண்டும் என்று பயமுறுத்தி கம்பெல் செய்தேன்...

மெல்ல என் மனமும் உன் மேல் சாயத் தொடங்கியது.... ஆனால் நீ அவ்வப்போது, சொல்லும், அண்ணன் கருவை தாங்கிக் கொண்டு தம்பியின் கையில் தாலியை வாங்கிக் கொள்வது பிடிக்கவில்லை, விவாகரத்து வேண்டும் என்று பேசும் பொழுது என் மனம் என்ன பாடு படும் தெரியுமா... ஆனாலும், நான் செய்த செயலை எண்ணி பொறுத்துக் கொண்டேன்... மெதுவாக உன் மனமும் நாம் வாக்கிங் செல்லும் பொழுது தெரிய ஆரம்பித்தது.... அன்றே பீச்சில் நீ என்னை விரும்ப ஆரம்பித்து விட்டாய் என்று எனக்கு சர்வ நிச்சயம்... அதுவும் அன்று காருண்யா வளைகாப்பிற்கு வந்து உன்னை பற்றி வேண்டாததை சொல்லி என்னை வம்பிழுக்க, அன்று எனக்கும் உன் மேல் உள்ள காதல் புரிந்து விட, அப்பொழுதே உனக்கு சொல்லி விடலாம் என்று இருந்தேன்..... ஆனால் உன் மனனிலை முழுவதும் தெரியாமல் உனக்கு சொல்ல பயமாக இருந்தது...

மெல்ல குழந்தை பிறந்த பின் சொல்லிக் கொள்ளலாம் என்றே இருந்தேன்.... ஆனால் அதற்குள் ஏதெதோ நடந்து நீ என்னை தவறாகவே நினைத்து விட்டாய்..... எவன் குழந்தையோ என்னை சுமக்க வைத்து விட்டாயா என்று குற்றம் சாட்டிய போது, என்னை மீறி அன்று உன்னை அடித்து விட்டேன்.. சாரி துளசி....

ஐந்து நாட்களுக்கு முன்பு கூட, நீ அன்று லேபர் ரூமில் என்னை இப்பொழுது கூட உண்மையை சொல்லக் கூடாதா, என்ற பொழுது, எப்படி துடி துடித்தேன் தெரியுமா... என் நெஞ்சம் கதறியது.... தமையனா.... தாரமா.... தேவையில்லாமல், உன்னையும் குழப்பி, என் பெற்றோருக்கும் மீண்டும் இன்னொரு துக்கத்தை கொடுக்க வேண்டாமே என்றே உன்னிடம் அன்று சொல்ல வில்லை. என்னுடன் புதைய வேண்டிய ரகசியம் என்று தீர்மானித்தேன்"..... என்று நிறுத்தியவன்,

"வேண்டாம் ராம்... உங்களை இப்படி வருத்தி கொள்ளாதீர்கள்.... எனக்கு கஷ்டமாக இருக்கிறது.... இது வரை தெரிந்தது போதும்" என்று தடுத்த துளசியை,

"இல்லைம்மா.... இன்று ஒரு நாள் என்னை பேச விடு... அதற்கு பிறகு நீ பேச சொன்னால் மட்டுமே பேசுவேன்", என்றவன், "இப்பொழுது கூட உன்னிடம் ஏன் சொன்னேன் என்றால், நம் வாழ்க்கை பொய்யின் அடிப்ப்டையில் தொடங்குவது எனக்கு பிடிக்கவில்லை... துளசி, உனக்கு என்னை பிடிக்காமல் போனால், நீ இந்த பந்தத்தில் இருந்து விடுபட நினைத்தால், என்று எண்ணியே இந்த உயிலை தயாரித்தேன்.... விடுதலை பத்திரம் கொடுக்கவும் ரெடியாக இருந்தேன்", என்றான்.

இப்பொழுது சொல்.... நான் செய்தது தவறா?" அவளிடமே முடிவை எடுக்க விட்டு விட்டான்.

"ராம் .... நான் என்ன சொல்வது..... நீங்கள் உன் உடன் பிறப்புக்காக எப்படி ஒரு தியாகம் செய்திருக்கிறேன்..... நீங்கள் நிஜமாகவே உயர்ந்த மனிதர்...... உங்களை அடைய நான் கொடுத்து வைத்திருக்கிறேன்.... இந்த விஷயம்... அத்தை, மாமா என்று இழுத்தவளை,

"துளசி.... இது நமக்குண்டான் ரகசியம்..... இதை யாரிடம் சொல்ல வேண்டாம்... வேண்டாத சிக்கல்கள் தான்வரும்.... பாவம் அவர்கள் தன் மகன் கரண் வந்து தன்னிடம் திரும்பி வந்து விட்டான் என்று மகிழ்சியில் இருப்பவர்களை நாம் கெடுக்க வேண்டாம்... எப்படி இருந்தாலும் இவன் நம் மகன் தான் என்றான் " தீர்மானமாக.

"சரி" என்று ஒப்பியவளை, "துளசி," என்று கை நீட்டி அழைத்தான்.

அவன் அழைப்பினை புரிந்து அவன் கைக்குள் அடங்கினாள் துளசி... மெல்ல அவள் முகம் நோக்கி குனிந்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவள் இதழ் நோக்கி தாபத்துடன் குனிந்தான்.

குழந்தையின் வீறிட்டு அலறிய அழு குரலில் விலகியவர்கள்,

"டேய்... இப்பதான்டா.. உன் அம்மாவை முதன் முதலில் தொடுகிறேன்..... நீ கூட பிறந்து விட்டாய்.... அதற்குள் போட்டியா?..... கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி... இப்ப என் நிலை குழந்தை பெற்றும் பிரம்மச்சாரிதானா?.... எப்பொழுது நான் சம்சாரியாவது?" என்று சொல்லியபடி குழந்தையை கையில் எடுத்தவனை எட்டி உதைத்தான் செல்வன்...

"சார்.. அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் நீங்க காத்திருக்க வேண்டும்னு சொல்லறான் உங்க பையன்! அதோட, உங்கள் மகன் அப்பா நீங்க ஆல்ரெடி சம்சாரி ஆகி விட்டீர்கள் என சொல்லி உங்களை உதைக்கிறான்" என்ற துளசி கலகல வென்று நகைத்தாள் .

சிர்த்த அவளை ஆசையுடன் பார்த்தான் அந்த தகப்பன்.

வாடகைத் தாயாக வந்தவள், இன்று, வீட்டு மஹாலஷ்மியாக, வீட்டரசியாக மாறி விட்டாள்...... நிழல் நிஜமானது....

இனி அவர்கள் வாழ்வில் வசந்தமே.......

சுபம்.

Episode # 12

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.