(Reading time: 19 - 38 minutes)

வாங்க மகத்எப்படி இருக்கீங்க?...” என அவனின் கைகுலுக்கி முதுகில் தட்டி கொடுத்து வரவேற்றார் குருமூர்த்தி….

நல்லா இருக்கேன் சார்நீங்க எப்படி இருக்கீங்க?....”

கம் ஆன்…. மகத்இந்த சார் விடவே மாட்டீங்களா நீங்க?...” என அவர் கேட்டதும், பதிலுக்கு புன்னகையை மட்டும் பரிசளித்தான் மகத்

இது ஒன்னு எப்பவும் செஞ்சிடுறீங்கஎதாவது கேள்வி கேட்டா உடனே இப்படி அழகா சிரிச்சி வைச்சிடுங்கஅப்புறம் எப்படி மேற்கொண்டு கேள்வி கேட்க தோணும்உங்க சிரிப்புல மறைஞ்சி தான் போகணும்…. அழகான சிரிப்பு மகத் உங்களுடையதுசிரிக்கும்போது ரொம்பவே அழகா தெரியுறீங்க மகத்….”

ஹ்ம்ம் அப்புறம் சார்இந்த இந்தியா ட்ரிப் ஆச்சும் கொஞ்ச நாள் எக்ஸ்டெண்ட் ஆகுமா?... இல்ல வழக்கம் போல ஷார்ட் தானா?....”

அவரின் பாராட்டுதலை கண்டுகொள்ளாது, அவன் அவரிடம் பேசிய விதம் அவரின் புன்னகையையும், அவன் மேல் அவருக்கு இருந்த மதிப்பையும் பெரிதாக்க,

வெல்இந்த தடவை இங்க தான் மகத்குறைஞ்சது மூணு மாசமாவது தங்குவேன்…” என்றார் குருமூர்த்தி

ரொம்ப சந்தோஷம் சார்ஒரு நிமிஷம்…” என்றவன், வெளியே சென்று சில பைல்களை எடுத்துவந்து, அவரிடம் கொடுத்தான்

இதெல்லாம் என்ன மகத்?...”

இந்த ஃபைலில் எல்லா டீடெயில்ஸ்-ம் இருக்கு சார்வாங்கி பாருங்க….” என்றான் அவன்

சரிகொடுங்க…” என்று அதை வாங்கி பார்த்தவர், பார்த்த வேகத்தில் மூட,

அவன் புரியாமல் அவரைப் பார்த்தான்….

சார் இதெல்லாம்….” என அவன் சொல்லும் முன்னமே,

இங்க பாருங்க மகத்என்னைக்கு நீங்க கே.என் ஹாஸ்பிட்டலில் டாக்டரா ஜாயின் பண்ணீங்களோ, அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்நான் இங்க நிலையா இருக்க முடியலைஅடிக்கடி என் பிசினெஸ் விஷயமா நான் வெளியூர் போக வேண்டியிருக்குஎன் வீட்டிலயும் யார்கிட்டயும் பொறுப்பை கொடுக்க எனக்கு விருப்பமில்லைஆனா உங்க மேல எனக்கு மதிப்பு, மரியாதை, நம்பிக்கை, எல்லாமே இருக்குஅதனால தான் இந்த ஹாஸ்பிட்டல் பொறுப்பை முழுசா உங்களிடம் ஒப்படைச்சிட்டு நான் ஃப்ரீயா இருக்கேன்நான் உங்ககிட்ட இந்த பொறுப்பை ஒப்படைச்ச இந்த மூணு வருசத்துல எவ்வளவு நிம்மதியா நான் இருக்கேன் தெரியுமா மகத்?... நீங்க பொறுப்பை கையில எடுத்துக்கிட்டதிலிருந்து இப்போவர ஹாஸ்பிட்டலில் நீங்க செய்யுற எல்லா விஷயத்தையும் எனக்கு போனில் தகவல் சொல்லிடுறீங்க நான் வேண்டான்னு மறுத்தாலும்இதுவே போதும் மகத்…. இந்த ஒரு விஷயம் சொல்லாததையா இந்த ஃபைல்ஸ் எல்லாம் சொல்லிட போகுது?... நீங்க மெயின்டெயின் பண்ணுற இந்த பொறுப்புல எந்த பிரச்சினையும், சிக்கலும் வரவே வராது…. அதை நீங்க நம்புறீங்களோ இல்லையோ நான் நம்புறேன்…” என்று அவர் முடித்ததும்,

நம்பிக்கை இருக்க வேண்டியது தான் சார்ஆனா, அளவுக்கு மீறின நம்பிக்கையும் நல்லதுக்கு இல்லஅத நிச்சயமா என்னால சொல்ல முடியும்….” என்றவன், அவர் திகைத்துப் பார்க்கும்போதே,

இந்த பைல்ஸ் எல்லாம் இங்க வச்சிட்டு போறேன் சார்இதுல ஹாஸ்பிட்டல் கணக்கு வழக்கு, எல்லாமே இருக்குநீங்க பார்த்து முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணுங்க சார்நான் வரேன்…” என்றவன் அடுத்த நிமிடம் அங்கே நிற்கவில்லை….

றுநாள்,

ஆச்சிஎப்படி இருக்கீங்க?... இப்போ?... காய்ச்சல் எல்லாம் ஓடி போயிட்டா இல்லையான்னு பார்க்கலாமா?....” என ஆச்சியிடம் பேசிக்கொண்டே அவரை பரிசோதித்தான் மகத்

என்ன தம்பி காய்ச்சல் ஓடி போயிட்டாஇல்ல இன்னும் இங்க தான் இருப்பேன்னு அடம்பிடிக்குதா?...”

அது அடமே பிடிச்சாலும் இனி ஆச்சிகிட்ட வர முடியாதே…..” என அவனும் உற்சாகத்துடன் சொல்ல,

நல்ல புள்ளைப்பா நீஇன்னும் நீ எத்தனை உதவிதான்…” என பேசிக்கொண்டே சென்ற ஆச்சியை தடுத்தவன்,

ஆச்சிசொல்ல மறந்துட்டேன்நீங்களும் பெரியவரும் இனி இங்க தனியா கஷ்டப்பட வேண்டாம்…” என்றவன், அவர்கள் மறுத்தும், அவன் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு சதாசிவம் தாத்தாவைப் பார்க்கச் சென்றான்

அதே நேரம்,

அருள் இல்லத்தில்,

என்னம்மா?... சாருக்கு போன் பண்ணுறீங்களா?... ஹ்ம்ம்நடக்கட்டும்நானும் கேட்டேன்னு சொல்லுங்க…. சரியா?....” என்றபடி பவித்ரா காவேரி அம்மாவை கிண்டல் செய்து கொண்டிருக்க,

போடிபோய் வேலையைப் பாரு….” என்றவர் எதிர்முனை எப்போது எடுக்கப்படும் என்ற ஆவலுடன் காத்திருந்தார்

மதர்…” என்ற குரல் அழைத்ததுமே அவர் முகத்தில் பரவசமும், சந்தோஷமும் ஒட்டிக்கொள்ள, பவித்ரா அவரையே விழி அகற்றாமல் பார்த்தாள்….

ராஜாஎப்படி இருக்குறப்பா?...”

நல்லா இருக்கேன் மதர்நீங்க எப்படி இருக்கீங்க?... அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?... எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க….”

எங்களுக்கென்னப்பா?... எல்லாரும் நல்லா இருக்கோம்கண்டிப்பா எல்லார்கிட்டயும் சொல்லுறேன்…..நீ விசாரிச்சதா….”

சரி மதர்…”

ஹ்ம்ம் ராஜா….”

சொல்லுங்க மதர்எதும் சொல்லணுமா?....”

ஆமாப்பா, இங்க ஒரு பொண்ணை வேலைக்கு சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன்நீ என்னப்பா சொல்லுற?...”

இதுல நான் சொல்ல என்ன இருக்கு மதர்?... உங்க விருப்பம் தான் என் விருப்பமும்….”

இல்ல ராஜாவந்துநான் என்ன சொல்லுறேன்னா….”

நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு எனக்கு தெரியும் மதர்அருள் இல்லம் முழுக்க உங்க பொறுப்புநீங்க எது செஞ்சாலும் அது அருள் இல்லத்தோட நன்மைக்குத்தான்…” என அவன் சொன்னதும், காவேரி அம்மாவின் இமைகள் ஒரு கணம் மூடித்திறக்க,

எதிரே இருந்த பவித்ரா, “என்னம்மா, சார் நீங்க எது செஞ்சாலும் அது அருள் இல்லத்தோட நன்மைக்குத்தான்னு சொன்னாரா?...” எனக் கேட்க,

அவர் அமைதியாய் இருந்தார்

ஆனால் பவித்ராவின் குரல் எதிர்முனையில் இருந்த அவனுக்கு கேட்க,

யாரு மதர் பக்கத்துல?... பவித்ராவா?...” எனக் கேட்க

ஆமா ராஜா….” என்றார் அவர்

ஹ்ம்ம்மதர்வருத்தமா?...”

அப்படி எல்லாம் இல்லஆனா, முடிவு உன்னோடதா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்அதான்…”

சரி மதர்அந்த பொண்ணை வேலைக்கு சேர்த்துடுங்க மதர்உங்க முடிவே போதும்னு நான் சொன்னா நீங்க கேட்க போறதில்லைஅதனால, நான் அங்க வரும்போது அந்த பொண்ணைப் பத்தி சொல்லுங்க எவ்வளவு வேணும்னாலும் கேட்குறேன்…. இன்னும் இரண்டு நாளில் நான் அங்க இருப்பேன்சரியா?...” என அவர் கேட்க

ரொம்ப சந்தோஷம் ராஜா….” என்றவர், “அவ பேரு கூட நீ கேட்கலையே…???...” என இழுக்க

சொல்லுங்க மதர்…” என அவனும் இலகுவாக சிரித்துக்கொண்டே சொல்ல

ருணதி….” என்றார் அவர்

ருணதி…. ஹ்ம்வித்தியாசமா இருக்குல்ல மதர் பெயர்….”

அடடாமறந்துட்டேன் பாரு ராஜாஅவ பேரோட சுருக்கம் தான் ருணதிஅவ பேரு…” என சொல்ல ஆரம்பித்தவரிடம்,

மதர், “ஒரு முக்கியமான வேலைநான் அப்புறம் பேசுறேன்…” என்றவாறு அழைப்பை துண்டித்தான் ராஜா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.