(Reading time: 19 - 38 minutes)

நிஜமாவா?...” என சந்தோஷத்துடன் கேட்ட சதாசிவத்திடம்,

நிஜமா தாங்ககாலையில நான் சாப்பாடு கட்டித்தரேன்நீங்க அவன் ஹாஸ்பிட்டல் வந்ததும் சாப்பிட வைங்க அது உங்க பொறுப்புமதியம் இரண்டு பேரும் இங்க வந்துடுவீங்க சாப்பிடபிரச்சினை இல்லஅப்புறம் நைட் உங்களை விட வரும்போது அவனை இழுத்து சாப்பிட வைக்குறது என் பொறுப்பு…” என பார்வதி சொன்னதும்,

ரொம்ப சந்தோஷம் பார்வதி….” என மன நிறைவோடு சொல்லியபடி மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டார் சதாசிவம்

பங்களா போன்றிருந்த அந்த பெரிய வீட்டிற்குள், காரை செலுத்திய மகத், சாவி கொண்டு கதவைத்திறந்து உள்ளே சென்றான்

அவனது பெட்ரூமைத்தேடி சென்றவன், அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தையேப் பார்த்தான்

உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேண்டாநீ எப்போ எங்கிட்ட வருவ?... உன்னைப் பார்க்கத்தான் நான் காத்திட்டிருக்கேன்ஐ லவ் யூ சோ மச்….” என்றபடி தனது பர்ஸில் வைத்திருந்த அவளின் புகைப்படத்தை கையில் எடுத்து அணைத்துக்கொண்டான் நெஞ்சோடு சேர்த்து வைத்தபடி

அப்போது திருச்சியில்,

அய்யோ கோகி…. விடுபோதும்மூச்சு முட்டுதுவிடு…. விடுன்னு சொல்லுறேன்ல….” என்றபடி ருணதி, தனது பாட்டியை விலக்கினாள் தன்னிடமிருந்து

ஏண்டி உனக்கு கொஞ்சமாச்சும் பாசம் இருக்கா?... எத்தனை நாள் கழிச்சுப் பார்க்குறேன்அந்த பாசத்துல உன்னைக் கட்டிப்பிடிச்சா, நீ என்னடான்னா ரொம்ப தான் முறுக்கிக்கிற?...”

யாரு நான் முறுக்கிக்கிறேனா?... நீ தான் பாசங்கிற பேர்ல இப்போ என்னை முறுக்கு பிழியிற மாதிரி பிழிஞ்சு எடுத்துட்ட….” என்றாள் வலியோடு ருணதி

அடிப்பாவிகிராதகிஉன்னை என்னப்பண்ணுறேன் பாருஇருடி…” என அவளை அடிக்க கோகிலவாணி கை ஓங்கிய வேளையில்,

ருணதியின் செல்போன் சிணுங்கியது… “யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே….” என்ற பாடலோடு

ஏண்டி நீ இன்னும் இந்த டோனை மாத்தவே இல்லையா?.... எப்பதாண்டீ திருந்தப்போற?...” என கேள்வி கேட்ட கோகியிடம்,

நீ எப்போ இப்படி கேள்வி கேட்குறதை நிறுத்துறீயோ, அப்ப நானும் திருந்திப்பேன்…” என்றாள் அவளும் விடாமல்

கிராதகிபோனை எடு முதலில்அப்புறம் உன்னை பேசிக்கிறேன்….”

ஏன் இப்போவே தான் பேசேன்உன்னை யாரு வேண்டாம்னு சொன்னா?...” என்றபடி ருணதி தனது செல்போனை கையில் எடுத்தாள்

புது எண்ணாக இருந்தது….

அழைப்பது யாராக இருக்கும் என்ற எண்ணத்தோடு, “ஹலோ…” சொன்னாள் அவள்

ஹலோருணதி…. நான் காவேரி பேசுறேன் அருள் இல்லத்திலிருந்து….” என்ற குரல் கேட்டதும், ருணதியின் முகத்தில் பளீரென்ற வெளிச்சம் வந்தது

அவளது மாற்றம் கண்ட கோகிலவாணி, அவளிடம் யார் என்று சைகையில் கேட்க, அவள் தான் சிறிது நேரம் கழித்து சொல்வதாக கூறினாள்

சொல்லுங்க மேடம்…” என்றவளிடம்,

நீ நாளைக்கே இங்க ஜாயின் பண்ணிடு ருணதி உனக்கு ஆட்சேபனை இல்லன்னா…” என காவேரி சொல்ல

ரொம்ப தேங்க்ஸ் மேடம்கண்டிப்பா நாளைக்கே வந்துடுவேன் மேடம்…”

சரிம்மாவரும்போது, உன் பயோடேட்டா மட்டும் எடுத்துட்டு வாமறக்காம…”

சரி மேடம்மறக்க மாட்டேன்…” என அவளும் சொல்ல, மறுமுனையில் காவேரி, “அப்போ நாளைக்கு அருள் இல்லத்துல உன்னை சந்திக்கலாம் ருணதி….” என்றபடி அழைப்பை துண்டித்து விட,

இங்கே கோகிலவாணி அவளை பிய்த்து எடுத்தார்

யாருடீ போனில்நாளைக்கே வரேன்னு சொல்லுற?... என்ன விஷயம்??...”

நல்ல வேளை என்ன விஷயம்னு கேட்டியே தவிர, எங்க போறன்னு உன் திருவாயால கேட்கமா விட்டியேஅதுவரை திருப்தி….” என்றவளின் தலையில் செல்லமாக கொட்டி,

அடியேஎங்க போறன்னு கேட்ககூடாதுன்னு எனக்கும் தெரியும்டீ அறிவாளிஅதான் நான் என்ன விஷயம்னு நாசுக்கா கேட்டேன்லூசு….” என சொல்ல

யாரு நான் லூசா?... சரிதான் என் நேரம்…. இப்போ எனக்கு போன் பண்ணினது வேற யாருமில்லைஅருள் இல்லத்திலிருந்து காவேரி மேடம் தான் பேசினாங்கநாளைக்கே ஜாயின் பண்ண சொல்லிட்டாங்கவரும்போது ஒரு பயோடேட்டாவும் எடுத்துட்டு வர சொன்னாங்கபோதுமா?... எல்லாம் சொல்லிட்டேன்…. இப்போ எனக்கு தூக்கம் வருதுநான் தூங்கணும்….”

எவ்வளவு பெரிய நல்ல விஷயம் சொல்லியிருக்கஅப்பாடி இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு…. ஹ்ம்ம்கும்பகர்ணி…. போடீபோய் தூங்கி தொலை….”

ஹ்ம்ம்போறேன்போறேன்….” என்றவள் மெதுவாக அங்கிருந்து அகல,

நீ எங்க போறேன்னு எனக்கும் தெரியும்டீ நதிபோ போ உன் கண்ணனிடம் தான போற?... போடீநிம்மதியா இந்த நேரம் தூங்கிட்டு இருக்குற அவரை தொந்தரவு பண்ணி எழுப்புஅத தானே இப்போ நீ செய்யப்போற?...” என சொல்லிக்கொண்டே கோகி சொல்ல

அவளும் கோகி சொன்னதற்கேற்றவாறு தான் பூஜையறையில் கண்ணனின் முன் நின்று கொண்டிருந்தாள்

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.