(Reading time: 14 - 28 minutes)

டல் மொத்தமும் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது கோதைக்கு. 'என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்பா?'

'அப்... அப்பா.... அவா என்னப்பா சொன்னா?'

'நாங்க கல்யாண விஷயம் பேச வரோம். உங்க பெரிய பொண்ணையும் ஆத்திலே இருக்க சொல்லுங்கோன்னு சொன்னா. அப்படின்னா அவளை பொண்ணு பார்க்க வரான்னு தானேமா அர்த்தம்?

கோதைக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அதற்குள் வேதாவை கைப்பேசியில் அழைத்திருந்தார் அப்பா. அன்று வேதா கோபமாக பேசிய பிறகு அவளிடம் அதிகம் பேசாமல் இருந்தவர், இன்று சந்தோஷம் பொங்க அழைத்தார் அவளை.

அப்பாவின் எண்ணை பார்த்ததும் சட்டென அழைப்பை ஏற்றாள் வேதா. 'அப்பா சொல்லுங்கோ...'

'வேதா, நோக்கு வாசுதேவன் மாமாவை தெரியுமா மா?'

'தெரியாது பா யாரு?'

'அவா... அவா... மாம்பலத்திலே இருக்கா மா. பெரிய பணக்காரா. அவா பையனுக்கு உன்னை கேட்கலாம்னு முடிவு பண்ணி இருக்கா போலிருக்கு. இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு உன்னை பார்க்க வரேன்னு சொல்லி இருக்கா. நீ சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுமா' பேசிக்கொண்டே போனார் அவர்..

'ம்???... ஆங்... சரிப்பா...' அழைப்பை துண்டித்தாள் வேதா.

பேசி முடித்து விட்டு மலர்ந்த முகத்துடன் கோதையை பார்த்தார் அப்பா. 'இது நல்ல படியா முடிஞ்சிடுத்துன்னா அப்பா ரொம்ப சந்தோஷமா இருப்பேம்மா. ரொம்ப நல்ல இடம். நம்ம தகுதிக்கு மீறின இடம்னாலும் அவாத்திலே எல்லாருமே ரொம்ப நல்ல மனுஷா. எப்படியாவது கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை முடிச்சிடணும்'

பட பட படவென பேசினார் அப்பா. அவரையே பார்த்துக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் கோதை. 'என்ன சொல்வதாம் அப்பாவிடம்.? கோகுலுக்கு என்னைதான்  பிடித்திருக்கிறது என்று எப்படி சொல்வதாம் அவரிடம்??' இன்னொன்றும் புரியவில்லை அவளுக்கு. அவர்கள் ஏன் அக்காவையும் வீட்டில் இருக்க சொன்னார்கள்? அங்கே ஏதாவது குழப்பம் நடந்திருக்குமா என்ன????

'சரியாகிவிடும். கோகுல் வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும்.' தனக்குள்ளே சொல்லிக்கொண்டு தன்னை சமாதான படுத்திக்கொண்டாள் கோதை.

தே நேரத்தில் தனது அலுவலகத்தில் இருந்த வேதாவை கைப்பேசியில் அழைத்தான் சரவணன். இரண்டு மூன்று நாட்களாக அவனை தவிர்த்துக்கொண்டே இருக்கிறாள் அவள். அவளை சரியாக்குவது எப்படி? அவளை நம்ப வைப்பது எப்படி? என்று யோசித்துக்கொண்ட இருந்தவனுக்கு, இன்று காலையில் கல்லூரியில் இருந்த போது சட்டென ஒரு திட்டம் உதயமானது. விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டிருந்தான் அவன்.

அழைப்பை ஏற்று 'ஹலோ....' என்றாள் வேதா பல நூறு யோசனைகளுடன்.

'கீழே உனக்காக  காரிலே வெயிட் பண்றேன் வா. உன்கிட்டே கொஞ்சம் பேசணும்'

'இல்லை... கொஞ்சம் வேலை....'

'ஹேய்.... நான் உன்னை பைத்தியமா லவ் பண்றேன்டி' உயர்ந்து ஒலித்தது அவன். குரல்.' புரிஞ்சுக்க மாட்டியா. ஏன் என்னை விட்டு விலகி விலகி போறே தயவு செய்து கீழே வா.!!!!

அதற்கு மேல் மறுக்க முடியவில்லை அவளால். கீழே வந்து அவன் காரில் ஏறி அமர்ந்தாள் வேதா.

அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்தே அவள் அமர்ந்திருக்க அவள் முகத்தை நிமிர்த்தினான் அவன். 'என் மேலே திடீர்னு என்ன கோபம் உனக்கு??? அவன் ஆள் காட்டி விரல் அவள் நெற்றி தொடங்கி இதழ்கள் வரை கோடிட்டது. 'அழகா இருக்கிறவங்க கோபமே படக்கூடாது தெரியுமா?'

அவன் கையை தட்டி விட்டு திரும்பிக்கொண்டாள் வேதா.

'வேதா.... நீ நிஜமா எவ்வளவு அழகு தெரியுமா? சும்மா சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கே. கோடம்பாக்கம் போனா உன்னை அப்படியே அள்ளிப்பாங்க. நீ எனக்கு கிடைச்சேனா நான் ரொம்ப லக்கி '

அவளிடம் வெட்க சிரிப்பு. மறுபடியும் ஜெயிக்க ஆரம்பித்தான் அவன்.

'என்ன வேணும் நோக்கு?' என்றான் மெலிதான குரலில். அவன் பேசும் விதம் மாற மெல்ல விழி நிமிர்த்தினாள் வேதா. எல்லாம் விக்கி கற்றுக்கொடுத்த வித்தை.

'உன்னை இன்னைக்கு சாயங்காலம் எங்காத்துக்கு கூட்டிண்டு போகட்டுமா. அப்போ சந்தோஷமா இருக்குமா நோக்கு'? கேட்டான் சரவணன்.

வியப்புடன் பார்த்தாள் வேதா 'ஆத்துக்கா? 'இல்லை...இன்னைக்கு சாயங்காலம்...'

'ஏன் வரமாட்டியா?' ஆராயும் பார்வை பார்த்தான் அவன் 'இன்னைக்கு நாள் நன்னா இருக்காமே??? கேள்விப்பட்டேன். அதான் நீ வாழப்போற ஆத்துக்கு உன்னை கூட்டிண்டு போலாம்னு நினைச்சேன். நீதான்டி நேக்கு எல்லாம். என்னை விட்டு விலகி போகாதே வேதா. என்னாலே தாங்கிக்க முடியாது. நீ இல்லைனா நான் செத்து போயிடுவேன். ப்ளீஸ்...' வலை வீசுவதை நிறுத்தவில்லை அவன்.

'அய்யோ... ஏன் இப்படி எல்லாம் பேசறேள்???' விழுந்தாள் அவள்.

'அப்போ நீ வரேன்னு சொல்லு...'

'சரி வரேன்...' என்றாள் வேதா. வீட்டுக்கு கூட்டி செல்கிறேன் என்கிறானே!!!!! அதில் பொய் இருக்குமா என்ன???? நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.

கீதம் தொடரும்.....

Episode # 04

Episode # 06

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.