(Reading time: 15 - 29 minutes)

ன்ன தீடீரென்று லவ் ? “ என்றாள்.

அதற்கு சூர்யா “அது என்ன வாட்ஸ் அப் லேயும், வி சட்லேயும் மெசேஜ் விட்டு சொல்லிட்டா வரும்?”

வாணி உடனே “ஜோக்கு?.. நான் நாளைக்கு சிரிச்சுக்கிறேன்” என .. சூர்யா சத்தமாக சிரித்தான்.

“உன்கிட்ட பிடிச்சதே இந்த கவுன்ட்டர் தான் செல்லம். “

வாணி  சட்டேன்று சீரியஸ் ஆகி ..”இது எல்லாம் ஒத்து வராது சூர்யா. நான் யாரையும் லவ் பண்ராதா இல்ல. எங்க அப்பா அம்மா இஷ்டப்படிதான் கல்யாணம்” என்றாள்.

“அவங்க சம்மதிச்சுட்டா என்னை கல்யாணம் பண்ணிப்பியா”

“அப்பவும் கஷ்டம்தான். “

“ஏன்”

“மதி அக்கா” என்றாள்.

அண்ணிக்கு என்ன. சம்மதிக்க மாட்டங்கன்னு நினைக்கிறியா?

இல்ல .. ஆதி மாமாவுக்கும் அக்காவுக்கும் நடந்த கல்யாணம் பத்தி உங்களுக்கே தெரியும். இன்னும் கூட அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவும சரியாகல இப்போ நம்ம கல்யாணம் நடந்தா என்னால சந்தோஷப்பட முடியாது.” என்றாள்

இதுதான் உன்னோட பிரச்சினையா? சரி நான் உனக்கு சில விஷயங்கள் சொல்றேன். அதுக்கு அப்புறம் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பியா?

நீங்க சொல்லுங்க பார்க்கலாம் ..

ஆதி அண்ணா கல்யாணம் நடந்த சூழ்நிலை கொஞ்சம் விரும்பாததுதான். அப்போ நான் கூட அப்பா மேல கோபப்பட்டேன். ஆனா அண்ணா ஆக்சிடென்ட்க்கு அப்புறம் எல்லோருமே மாறி விட்டோம். எல்லோருமே என்றது அண்ணனையும் சேர்த்துதான். அதோடு ஆக்சிடென்ட் நடந்து கண் முழிச்ச உடன் அண்ணன் கண்கள் அண்ணியை தேடியது. இதை நான் மட்டும் தான் கவனித்தேன். அதற்கு பிறகு அண்ணனின் நடவடிக்கைகளும் நிறைய மாறியிருக்கிறது. கூடிய சீக்கிரம் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதை தவிர என்னை நீ மறுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறதா?

சாரி சூர்யா. நான் உங்களை மறுக்கவில்லை. இத்தனை பிரச்சினைகளுக்கிடையே நம் திருமணம் நடந்தால் அதில் சந்தோசம் இருக்காது. அதனால்தான் சொன்னேன். மற்றபடி வீட்டில் பேச சொல்லுங்கள்.

நீ முதலில் என்னுடைய ஐ லவ் யு விற்கு  பதில் சொல். 

அதுதான் வீட்டில் பேச சொன்னேனே.

அது கல்யாணத்திற்கு. இப்போ என் காதலுக்கு பதில் சொல்

அவள் வெட்கத்தோடு “ஐ டூ லவ் யு” என்று முடிக்கும் முன் அவள் இதழ்களை சிறை செய்தான் சூர்யா. சற்று நேரம் உலகம் மறந்தவர்கள் சுதாரித்து விலகினர் இருவரும்.

சூர்யா “வனி, நம் இருவர் வீட்டிலும் சம்மதித்து விட்டார்கள். அண்ணா ஏற்கனவே பேசி முடித்து விட்டான். உன்னிடம் நான் நேராக கேட்க வேண்டும் என்றுதான் இப்போ பேசினேன்.

அதற்கு வாணி , “அக்கா, மாமாவிற்கு சம்மதமா? ஆதி மாமாவே பேசினாரா?” என்று சந்தோஷப்பட்டாள். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பும் போது ஆதியிடமிருந்து போன் வந்தது.

சூர்யா “கரெக்டா பண்ணிட்டானே.. ஆதி..” என்று திட்டிக் கொண்டே. போன் அட்டென்ட் செய்து “அண்ணா, கிளம்பிட்டேன்.. “ எனவும் அவன் அந்த பக்கம் ஏதோ சொல்ல “சரி அண்ணா” என்று வைத்தான்.

இப்போது கார் நேராக சூர்யா வீட்டிற்கு செல்ல, வாணி அவனை கேள்வியாக ஏறிட்டாள்.

“அண்ணா நேராக வீட்டிற்கு வர சொன்னான் வனிம்ம்மா.. “ எனவும் சரி என்று தலையசைத்தாள்.

வீட்டில் உள்ளே நுழையும் போது மதியும், அதியும்

“மணமகளே மருமகளே வா வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா ..”

என்று பாட .. எல்லோரும் கைதட்டினர். அங்கே வாணி மற்றும் சூர்யாவின்  குடும்பத்தாரோடு பிரகாஷின் குடும்பமும் இருக்க, வாணி எல்லோர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

அதி “வாணி பார்த்தியா .. நான் சொன்ன மாதிரி நீயும் எங்கள் ஜோதிலே ஐக்கியமாயிட்ட.. “ என்று மதியோடு ஹாய் பை கொடுத்தாள்.

அப்போது ஆதி எல்லோரிடமும், “சூர்யாவின் கல்யாணத்தையும் அதிதி கல்யாணத்தோடு நடத்தலாமா .. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அங்கிள் ? “என்று பிரகாஷ் தந்தையிடம் வினவினான்.

“எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை தம்பி “ என்றார்.

இதை யாரும் எதிர் பார்க்காததால், எல்லோரும் ஆதியை பார்க்க “எப்படியும் அதிதி கல்யாணத்திற்கு எல்லோரையும் கூப்பிடுகிறோம். இதற்கு பிறகு ஒரு ஆறு மதம் கழித்து சூர்யா திருமணத்தை வைப்பதை விட, இவர்களை அதிகம் காக்க வைக்காமல் இப்போதே முடித்து விடலாம்” என்றான்.

வாணியின் பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆதி அவர்களை பார்த்து, “மாமா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.

“நாங்கள் வாணியின் திருமணத்தை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை. ஏற்பாடுகள் செய்ய வேண்டுமில்ல்யா. அதுதான் தயக்கமாக இருக்கிறது”

அப்போது ராகவன் “சுந்தரம், ஆதி சொல்வது போல் செய்யலாம். மண்டபம் பிரச்சினையில்லை. மற்றபடி இப்போ நாம் அதிதிக்கு வாங்குவது போல் வாணிக்கும் வாங்கி விடலாம். சமையல் மற்ற ஏற்பாடுகள் எல்லாம் எண்ணிக்கை மட்டும் தானே கூடும். அதை சொல்லி விடலாம். நாளைக்கே இவர்கள் பத்திரிகையும் அடித்து வாங்கி விட்டால் பர்சேஸ் முடித்தவுடன் அந்த வேலையை பார்த்து விடலாம். அதனால் ஒத்துக் கொள்.” என்றார்.

ராகவன் தன் மனைவியை பார்த்தவர், அவர் முகத்திலும் சம்மதம் தெரியவே சரி என்று ஒத்துக் கொண்டார்.

சூர்யா “அண்ணா ... தேங்க்ஸ் அ லாட் “ என்று ஆதியை கட்டி முத்தமிட, ஆதி “டேய்.. விடுடா.. “ என்று அலற, எல்லோரும் சிரித்தனர்.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:903}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.