(Reading time: 46 - 92 minutes)

"சொல்லு மச்சான்"

"ரமேஷ் அவன் தான் அந்த பொண்ண லவ் பண்றான் டா, என் மது கண்டிப்பா லவ் பண்ணல டா. எப்படியவுது அவன ஸ்டாப் பண்ணனும் டா"

"ம்ம்ம் அப்போ ஒன்னு பண்ணு மச்சான் உனக்கு நன் வேற டேபிள் புக் பண்றேன் டா மதுவ கூப்டுட்டு வா, அவனுக்கு முன்னாடி நீ உன் லவ்வ சொல்லிடு"

"சரி டா மாமா, இப்போ வைக்கிறேன்"

"பார்த்துக்கோ டா, தங்கச்சி உனக்கு தான் மச்சான்"

"தேங்க்ஸ் டா, பை"

"பை"

தெளிவுடன் வெள்ளிகிழமையை எதிர்நோக்கி காத்திருந்தான் பிராகாஷ்.

இதை எதையுமே அறியாத மது ஆதிக்காக தன் கை பட ஒரு அழகிய வாழ்த்து மடலை செய்திருந்தாள். அவனுக்காகவே கவிதை எழுதி அதை நேர்த்தியாக அலங்கரித்து, அவள் காதலை சொல்லும் அந்த நிமிடத்திற்காக ஒவ்வொரு நொடியையும் நகர்த்தி கொண்டிருந்தாள்.

பெண்களுக்கே உரித்தான தனி உணர்வுகளுடன் கனவுகளில் திலது கொண்டிருந்தாள். ஏதோ ஒரு உள்ளுணர்வில் வெள்ளிகிழமை தன் காதலை சொல்ல முடிவெடுத்து ஆதியுடன் பேச தயாரானாள்

வியாழக்கிழமை இரவு மூவருக்கும் அவஸ்தையான நீண்டதொரு இரவாய் அமைந்தது.

ஆதி ஆராதனாவிடம் தன் காதலை பற்றி மேலோட்டமாய் கூறி விட்டு படுக்க சென்றிருந்தான். பிரகாஷ் சித்ராவிடம் தன் மனதில் இருப்பதையும் அதை மறுநாளே மதுவிடம் சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து வருவாதாயும் சொல்லி இருந்தான்.

ஆனால் மது தன் காதலை முதன் முதலில் ஆதியிடம் தான் சொல்ல வேண்டுமென ஆவலாக காத்திருந்தாள்.விடிய விடிய விழித்து இருந்தவள் ரகுவின் அழைப்பு வந்தவுடன் தன்னிலை உணர்ந்து வெட்கமடைந்தாள்.

"ஹலோ அம்மு"

"ஹலோ"

"என்னடி தூங்காம இருக்க?"

"இல்ல டா அது அப்படியே டைம் தெரியாம.."

"ஹே என்னடி விஷயம்?"

"ம்ம்ம்.. விஷயம் இருக்கு ஆனா இப்போ சொல்ல மாட்டேன்"

"ஏனாம்?"

"அது அப்புடி தான்.. டேய் கண்ணா.."

"என்னடா மா?"

"எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுடா"

"ம்ம்ம்ம் என் அம்மு குட்டி என்ன எல்லாம் நினைக்கிறாளோ அதெல்லாம் அவ மனசு படியே நடக்கணும்.. ஆல் தி வெரி பெஸ்ட் கண்ணம்மா"

"ம்ம்ம் சூப்பர் டா பிசாசே, சந்தோசமா இருக்கேன்"

"என்னனு சொல்லு டி நாயே"

"மாட்டேன் நைட் கால் பண்ணி சொல்றேன் இப்போ கொஞ்ச நேரமாவுது தூங்க போறேன் நீ காலேஜ் கிளம்பு போ பை"

"ராட்சசி ராட்சசி போடி"

"போடா புளி மூட்டை.. பை"

"ஹஹ குட்டச்சி பை டி"

அவ்வளவு நேரமும் ஏக்கம் எதிர்பார்ப்பு என பரிதவித்த மனது ரகுவின் வாழ்த்தை கேட்ட பின்  அமைதியாக உறங்கியது. என்னவென்று கேட்காமல் எதையும் எதிர்பார்க்காமல் அவள் சந்தோசத்தை மட்டுமாய் யாசிக்கும் நண்பன். ரகு அவளுக்கு கிடைத்த வரம்.!!

புத்துணர்ச்சியுடன் எழுந்தவள் ஆதியிடம் இருந்து தன்னை சந்திக்குமாறு வந்த குறுஞ்செய்தியில் முகம் மலர்ந்து போனாள். ஆதியும் அவளுக்கு தகவல் அனுப்பி விட்டு அன்று அலுவலகத்திற்கு முன்னதாகவே சென்று விட்டான்.

மது வந்த பிறகு வேளைக்கு நடுவில் அவளை பார்பதும் அவள் பார்க்கையில் பார்க்காமல் இருப்பதுமாய் பார்வயலையே கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தான்.

பிரகாஷ் தான் அன்று மதியம் வரையிலும் அலுவலகத்திற்கு வர முடியாமல் போயிற்று.ஊட்டியில் நாதன் வாங்கியிருந்த ஒரு பங்களாவின் பத்திரங்கள் சரி பார்க்கவென வக்கீலிடம் செல்ல வேண்டியதாய் போயிற்று.மதியம் அவன் வந்த போதும் மதுவை சுலபமாய் காண முடியவில்லை.

அவனுக்கு அப்படி இப்படி என போக்கு காட்டி நான்கு மணியளவில் தரிசனம் தந்தாள் அவன் தேவதை,

"ஹாய் மது"

"ஹலோ"

"என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல?"

"அதெல்லாம் இல்லையே"

"ம்ம் இன்னைக்கு ஈவனிங் ப்ரீயா நீங்க?"

"இன்னைக்கா? ஏன் பிரகாஷ்?"

"சும்மா ஒரு பங்கசன் வீட்டுல அதான்"

'சாரி இன்னைக்கு கொஞ்சம் வெளில போகணும், நான் வரேன்"

"ஒ இன்னொரு நாள் போய்க்கலாமே?"

"இல்ல கொஞ்சம் இம்பார்டன்ட் வொர்க்"

"ம்ம்ம் கிளம்பிடீங்க போல?"

"ஆமாம்" ஆதியிடம் இருந்து 'நீ முதலில் போ' என வந்த குறுஞ்செய்தியை படித்தவள் அவசரமாய் கிளம்பி கொண்டிருந்தாள்.

"ஐ சி, ஓகே.நான் வேணும்னா உங்கள டிராப் பண்ணவா?"

"இல்லை பரவாயில்லை நான் வரேன்"

எந்த விஷயத்தை தடுக்கவென அவன் மதுவிடம் பேச நினைத்தானோ அதை நிறைவேற்ற அவள் கிளம்புகையில் காதலுடன் சேர்ந்து கோபமும் மூளையை மழுங்கடித்தது. ஆதி எங்கே என தேடியவன் அவன் மேனஜெருடன் இருப்பதை அறிந்து கொண்டு நண்பனின் ஹோட்டலுக்கு விரைந்தான்.

மது ஆட்டோ பிடித்து ஹோட்டலை அடையும் போது பிரகாஷ் நண்பனின் அறையில் திட்டம் வகுத்து கொண்டிருந்தான்.

"ச்சை என்ன டா இது. இவ இப்படி அவன பார்க்க கிளம்பி வந்துருக்கா?"

"மச்சான் அவசர பாடத டா"

"எப்படி டா முடியும்?"

"சரி ஆதி எங்கே?"

"அவன் மீடிங்க்ல இருக்கான்"

"ம்ம்ம் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு ஆனா அதை நீ எப்படி எடுத்துக்குவனு தெரியல டா"

"என்ன டா?"

"உனக்கு வேண்டியது மது ஆதியை மீட் பண்ண கூடாது அது தானே?"

"ஆமாம் டா அதை தான இவ்ளோ நேரம் சொல்றேன்"

"கோப படாத மச்சான் நான் அதை பண்றேன்"

"என்னடா பண்ண போற?"

"வெயிட் அண்ட் சி"

"டேய் சொல்லுடா"

"அடடா இரு மச்சான்.. ஒரு 5 மினிட்ஸ் ல வரேன்"

"என்னமோ பண்ணி தொலை" இயலாமையால் ஏற்பட்ட கோபத்தில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் ஆதி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.