(Reading time: 46 - 92 minutes)

நீண்ட நாட்களுக்கு பின் அவனை பார்த்தால் உள்ளம் பொங்க, அவன் பின்னே சென்றவள் அவன் ஒரு பார்ட்டி ஹாலிற்குள் செல்வதை கண்டு அந்த ஹாலின் ஜன்னல் வழியே பார்க்க அங்கே மதுமிதா நின்றிருந்தாள்.

யாரை தன் வாழ்வில் மாறாக வேண்டுமென்று தினம் தினம் போதியிடம் தஞ்சம் அடைகிராளோ அவள். அவசரமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவள் நேரே கார் பார்கிங் சென்று காரினுள் தன்னை அடைத்து கொண்டு அழுதாள்.

கைகள் நடுக்கம் எடுக்க உடல் தளர அவசரமாய் தன் கைபையை திறந்தவள் அதில் இருந்து போதை மருந்தை ஊசியில் ஏற்றி நரம்பை தேடி உடலில் செலுத்தியவள் அதன் வீரியம் தந்த மயக்கத்தில் உளற தொடங்கியிருந்தாள்.

மதுவிடம் பேசி விட்டு காரை எடுக்க வந்த பிரகாஷ் கேட்ட முனகல் சத்தம் சஞ்சனவுடையது தான். அவளை அந்நிலையில் பார்த்தவன்,

"நீயா?!" என அதிர்ச்சி அடைந்து, பின் அவளை மருத்தவரிடம் அழைத்து சென்று இந்த சில மாதங்களாக அவளை கவுன்சிலிங் அழைத்து சென்று என அவளுடனே அதிக நேரம் செலவிடுகிறான்.

து அவனிடம் தனியே பேசும் போது சொன்ன விஷயங்களும் அவன் மனதை குழப்பி கொண்டே இருந்தது. இருந்தாலும் ஆதிக்கு கல்யணம் முடிவானதில்கொஞ்சம் திருப்தி அடைந்தவன்.மதுவிற்கும் அவனுக்கும் வீட்டளவில் நடந்த நிச்சயத்திற்கு ஆதி வரவும் அவன் முகமே மது மேலான் ஆவான் காதலை காட்டவும் ரகுவின் எதிர்ப்பும் என சஞ்சனாவின் பால் அவன் மனம் சரியாய் தொடங்கியது.

அவன் அருகாமைக்கு அவள் ஏங்குவதும், அவன் உடன் இருக்கும் நேரங்களில் அனைத்தையும் மறந்து அவனை பற்றி மட்டுமே சிந்திப்பதும் ஐந்து வருடங்களாக தன்னை காதலித்து தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தன்னை எந்த சூழ்நிலையிலும் அணுகாமல் தன்னையே அழிக்க தயாராக ஒருத்தி இருக்கையில் வேறென்ன வேண்டும் ஒரு ஆணிற்கு. மது மேல் காதல் என அவனே நினைத்து கொண்டிருந்த மாயை அகல மனதினுள் அழகாக குடி புகுந்தாள் சஞ்சனா. அப்படி அவளுடன் தனித்து இருந்த போது தான் பார்த்து விட்டு போயிருந்தான் ஆதி. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என எண்ணி கொண்டான் பிரகாஷ்.

"அம்மாடி" என்ற மௌலீஸ்வரின் அழைப்பில், கடந்து காலத்து கசப்பான நினைவுகளில் தொடங்கி காதல் வரைக்கும் சொல்லி முடித்திருந்த சஞ்சனாவும் பிரகாஷும் நிகழ்காலத்திற்கு வந்தனர்.

"என்னை மன்னிச்சுரும்மா, இந்த அப்பன் உனக்கு பணம் காசுன்னு எல்லாம் கொடுத்தேன் எல்லாமே கேட்காமலே வாங்கி கொடுத்தேன் என் பொண்ணு ராஜகுமாரின்னு கொண்டாடினேன் ஆனா நீ சந்தோசமா இருக்கியா உனக்கு என்ன வேணும்னு கேட்டு பக்கத்துல இருந்து பார்க்காம போயிட்டேனே ம்மா"

"ஸ்ஸ் டாடி ப்ளீஸ் அழாதிங்க, நீங்க தான் எப்பவும் எனக்கு பெஸ்ட் டாட்.. அம்மா இல்லாம என்ன நல்ல பொண்ண வளர்த்து இந்த அளவுக்கு வசதியா வெச்சு இருக்கிங்களே அப்பா, நீங்க இல்லன்னா இன்னும் வீனா போயிருப்பேன் காதல் விஷயம் எல்லாம் உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கதுல சாரி ப்பா நான் தான் அப்பா தப்பு பண்ணிட்டேன்"

தோளில் சாய்ந்து விசும்பிய மகளின் முடியை கோதியவாறு அவர் பிரகாஷை பார்க்க, அவனும் அவரின் பக்கத்தில் அமர்ந்து மற்றொரு தோளில் சாய்ந்து கொண்டான். மகிழ்ச்சி பெருக்கில் அவர்கள் மௌனமாய் அந்த நொடியை அனுபவிக்க.

வெளியில் கத்தி கொண்டிருந்த  சித்ராவின் மனது இப்போது பெருமையும் சந்தோசமும் ஒன்று சேர நிறைந்திருந்தது. இதை விட நல்ல பெண்ணை எங்கு தேடினாலும் தன் மகனிற்கு தேடி தர இயலுமா என்று அவர் மனம் எழுப்பிய கேள்விக்கு மறுப்பாக தலை அசைந்தது.

எழுந்து சென்று சஞ்சனவை எழுப்பி இருக்க தழுவி அவள் உச்சி முகர்ந்து முத்தமிட்டார். நாதன் மௌலீஸ்வரின் கை பற்றி அழுத்தி கொடுத்தார்.

"நம்ம காலைலேயே சென்னை போகணும் அங்கிள்.. மது கிட்ட அவங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசனும்"

"சரிங்க மாப்பிளை இப்போ தூங்குங்க காலைல எல்லரும சேர்ந்து போகலாம்"

"சரிங்க மாமா"

"நீங்களும் தூங்குங்க சம்பந்தி"

"சரிங்க"

அனைவரும் செல்ல ஒரு தலை அசைவுடன் பிரகாஷ் சஞ்சனாவிடம் விடை பெற்றான். ஒரு மணி நேரத்தில் தன் வாழ்வில் நடந்த மாற்றத்தை நினைத்து நினைத்து பூரித்து போனாள் சஞ்சனா.

அதே ஒரு மணி நேரத்தில் ரகுவின் வீட்டிலும் ஆதியின் வீட்டிலும் நடந்த உரையாடல்களின் முடிவில் பெரும் நிசப்தம் நிலவியிருந்தது.

குவின் வீட்டில்...

ரகுவும் தன்யாவும் அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்ல மேகாவும் இடையிடையில் தனக்கு தெரிந்தவற்றை சொல்லி கொண்டிருந்தாள். மூர்த்தி லலிதா திவாக்கர் மூவரும் அதிர்ச்சி கோவம் ஆச்சரியம் என ஒவ்வொரு உணர்ச்சியை காட்டியபடி மெளனமாக அவர்கள் கூறுவதை கேட்டு கொண்டிருந்தன. ஒரு மணி நேரமாய் அவர்களின் மனதை கரைத்து விடும் முயற்சியில் ரகுவும் தன்யாவும் போராடி கொண்டிருந்தனர்.

"மாமா ப்ளீஸ் மாமா நம்ம அம்முகாக மட்டும் யோசிங்க அந்த பிரகாஷ் அவன் நல்லவன் இல்ல மாமா" , ரகு.

"அப்போ என் பொண்ணு மேல சந்தேக பட்ட அந்த ஆதி மட்டும் நல்லவனா ரகு?"

"ஐயோ மாமா அது சூழ்நிலை மாமா, ப்ளீஸ் புரிஞ்சுகோங்க நம்ம அம்மு சந்தோசமா இருப்ப மாமா"

"என் பொண்ண எல்லாரும் இப்படி பண்ணி வைச்சுருக்கீங்களே" லலிதா அழுவதை தொடர,

"ல..லலி..தா" என கற்பகம் முதன் முறையை அவரை ஆறுதல் படுத்த முயன்றார்.

"அம்ம்ம்மாஆஆ.." என ரகு ஓடி சென்று கற்பகத்தை கட்டி கொள்ள, லலிதாவும் அவர் அருகில் விரைந்தார்.

"அண்ணி அண்ணி" என்றவருக்கு அதற்கு மேல் பேச்சு வராமல் போக,

"ம..மது அவளு..க்காக யோசி ல...லிதா"

"சரிங்க அண்ணி, நீங்க சொல்லி எதாவது கேட்காம இருந்துருப்பேனா?" என அவர் கற்பகத்தை கட்டி கொண்டு கதறவும், தன்யா, மேகா, மூர்த்தி,திவாக்கர் நால்வரும் மெய்மறந்து அவர்களையே பார்த்த படி இருந்தனர்.

ஒரு வழியாக அனைவரும் பேசி  திவாக்கரை சமாதானம் செய்து ஆதியின் பெற்றோரிடம் பேசலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

தியின் வீட்டில்...

ஆராதனா ஸ்ரீகாந்தை சொல்ல வைக்க, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பொறுமையாக கேட்க தொடங்கிய மகேஷும் ரஞ்சனியும் அவர்கள் கூறவதை நம்ப இயலாமல் கேட்டு கொண்டிருந்தனர்.கோபத்திற்கு மாறாக மகனை நினைத்தும் தன் ஒன்று விட்ட அண்ணனையும் ஸ்வேதாவையும் நினைத்து தான் கவலை கொண்டார் ரஞ்ஜனி. ஆனால் மகேஷிற்கு குழப்பம் தான் ஆதியின் நிலை குறித்த வருத்தம். எப்போதுமே ஒரு தோழனை போல் நெருங்கி தான் அவனிடம் பழகினார் அவர்.

ஆனால் வேலைக்கென்று பெங்களுரு சென்றுவிட்ட பின் ஆதிக்கும் மகேஷிற்கும் இடையில் இருந்த இடைவெளி அதிகமானதற்கு எவரை குற்றம் சொல்ல.மகன் அமெரிக்கா போனதே ஒரு சிறு நெருடல் தான் மகேஷிற்கு இருந்தாலும் அவர் அதை கேட்க முயலவில்லை.

"இப்போ என்ன பண்றதுங்க மாப்பிள்ளை"

"அதை நான் சொல்றேன் சம்மந்தி"

"அடடா வாங்க வாங்க இந்த நேரத்துல"

"ஒரு வேலைய காலிலேயே வந்தது தான், சரி சோளி முடிஞ்சுது ஊருக்கு போகலாமுன்ன தம்பி போன் போட்டு ஏதோ பேசணும்னு வர சொன்னாப்ல" என்றபடி வந்து அமர்ந்தார் ஸ்ரீகாந்தின் அப்பா தமிழ்மணி.

"அப்பா அது..." என தொடங்கி அனைத்தையும் ஸ்ரீ சொல்லி முடிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.