(Reading time: 46 - 92 minutes)

ள்ளிரவை தொட போகும் அந்த நேரத்தில் அனைவரும் அவரவர் நினைவுகளில் மூழ்கியிருக்க. நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டிருந்தனர் ஆதியும் மதுவும்.

"இது எல்லாம் நீங்க சொல்லி தான் எனக்கு தெரியனும்னு இல்ல, அன்னைக்கே பிரகாஷ் என்கிட்டே சொல்லிட்டான்" என மது தன் கோப பார்வையால் ஆதியை குதி கொன்றுகொண்டே பேச துவங்கினாள்.

"ராமன் என்ன தான் சீதையை விரும்பினாலும், ஊருக்கு அவளை நல்லவளா காட்டணும்னு செஞ்சாலும் அவளை நெருப்பில் இறங்க சொன்னது தப்பு தான், அவமேல இருந்த அடிப்படை நம்பிக்கை இலந்துட்டருன்னு தான் நம்ம பேசறோம் அதா விட கேவலமா இருக்கு நீங்க பண்ணி இருக்கிறது. அந்த பிரகாஷ் எப்போ என்ன பொண்ணு கேட்டு வந்தானோ அப்பவே அவன் கிட்ட நான் ஆதியை விரும்பினேன் இன்னமும் விரும்பறேன்னு அவனை தனிய கூட்டிட்டு போய் சொல்லிட்டேன்"

"வாட்?!", அதிர்ச்சியும் சந்தோசமுமாய் அவன் கேட்க, அதை சட்டை செய்யாமல் அவள் தொடர்ந்தாள்.

"அதுக்கு அவன் இப்போ இல்லைனாலும் எப்பாவது உனக்கு என்மேல அன்பு வந்த அதுவே போதும் மதுன்னு சொன்னான், ஆனா நீங்க? ச்ச உங்கள விட அவன் மேல்"

"இவ்வளவு சொன்னனே அன்னைக்கு அவன் மேல நீ சாஞ்சிட்டு இருந்தியே அது எப்படி ஏன்னு கேட்டியா? இல்லை அவன் தான் சொன்னான?" ஆதி கத்தவும், ஆமா தானே அவன் சொல்லவில்லையே என்ற மனதை அடக்கி,

"ச்சை அதானே அந்த சந்தேகம் எனக் போகும் இன்னும் அதுலயே தான நிப்பிங்க" என ஏளனமாக கேட்டாள்.

"ஐயோ மிதா உன்மேல என்னைக்கும் நான் சந்தேகமே படல உன்மேல வெச்சிருந்த அளவு கடந்த காதல் டி அதுனால வந்த கோபம், உன்மேல இல்லடி அவன் மேல, எப்படி டி சொல்வேன்.. ஆங் அன்னைக்கு ஸ்வேதா கைல மோதிரம் போடும் போது நான் பார்த்தேன் உன் கண்ணுல ஆனா சூழ்நிலை அதுனால நீ அமைதியா போயிட்ட, இல்லன்னா?"

"...."

"மிதா ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடி" என அவன் மதுவை கட்டி கொள்ள நெருங்கி வர, அவனை உதறி தள்ளினாள்.

அதற்கு மேலும் அவளது உதாசீனத்தை தாங்க முடியாமல் அவளை வெறித்து பார்த்தவன் ரகுவிற்கு அழைத்தான்,

"ஹலோ ரகு"

"ஹலோ ஆதி?"

"ஆமா உன் ப்ரெண்ட் தனியா ரோட்ல நிக்குற வந்து கூட்டிட்டு போ"

"நீயே கூட்டிட்டு வா"

"அவ என்கூட வர மாட்டாளாம், நான் கொடுமைகாரன், சந்தேக பேர்வழி நீயே வந்து கூட்டிட்டு போ" என்றவன் தொடர்பை துண்டித்து அவளை பாராமல் எதிர்புறம் திரும்பி கொண்டான்.

இதனை நாளாய் அவள் எதற்காக தவம் இருந்தாலோ எதை நினைத்து கலங்கினாலோ கனவுகளில் யாருடன் சஞ்சரித்தாலோ.. அது அவன் அவள் காதல் "ம்ம்" என்றால் கைகளுக்குள் அடைக்கலம் புகும் தூரத்தில். ஆனால் அவள் பட்ட வலி வேதனை. தன்மானம்?! காதலிற்கு அடிப்படையான நம்பிக்கை?!

கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை வீம்பாய் உள்ளிழுத்து கொண்டு நினைவுகளில் உழன்றாள். முடியை அழுந்த கோதியவாறு எங்கோ வெறிதிருந்தான் ஆதி. ரகுவின் கார் ஹாரன் கேட்ட உடன் மின்னல் வேகத்தில் காருக்குள் ஏறி அமர்ந்து கண்மூடி கொண்டாள்.

ரகு அவளை புரியாமல் பார்த்து விட்டு,

"ஆதி நீங்க வரலையா?" என வினவ,

"நான் வரேன் நீங்க போங்க" என்றான்.

"போறதே உங்க வீட்டுக்கு தானே கார் எடுத்துட்டு வாங்க" எனவும்.

மின்னல் வேகத்தில் மதுவின் பார்வையும் ஆதியின் பார்வையும் ரகு மீது படிந்தது. முகம் மலர்ந்து சிரித்தான் அவன்.

புரிந்து கொண்ட ஆதி காரை எடுத்து கொண்ட விரைய, பின் தொடர்ந்தான் ரகு. மதுவின் மனது மெல்ல உறுதி பெற்றது.

காரை போர்டிகோவில் நிறுத்தும் போதே, ஆரா தன்யா திவாக்கர் ஸ்ரீகாந்த் நால்வரும் வாசலை பார்த்து கொண்டு காத்திருப்பது தெரிந்தது.ஒரு பக்கம் ரகு தந்த குறிப்பினால் மகிழ்ச்சி என்றாலும் ஏதோ ஒரு பயமும் தயக்கமும் சூழ்ந்து கொண்டது ஆதியை. மதுவிடம் பேசி விட்டு அவனே அனைவரிடமும் பேச காத்திருந்தான் தான். ஆனால்..?!

மணி ஒன்றை நெருங்கியிருந்தது.. ப்ரிஷனும் ஆரத்ரிகாவும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்க பெரியவர் அனைவரும் உறக்கத்தை தொலைத்து தீர்வு காண காத்திருந்தனர்.

ஆதி உள்ளே நுழையும் சமயம் ரகுவின் காரும் வந்து நின்றது.ரகு இறங்கி மதுவையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றான். தயங்கி தயங்கி வந்தவளின் கைகளை தன் கைகளுடன் இறுக்கமாக கோர்த்து கொண்டு நம்பிக்கை அளிக்கும் வகையில் புன்னகைதான்.

ஆதி ஒரு வித சங்கடத்துடன் உள்ளே நுழைய மகேஷ் அவனை கட்டி தழுவி

"ஏன் டா எங்க கிட்ட சொல்லல, ஆராதனா கிட்ட கூட சொல்லலையாமே?"

"அப்பா"

"இந்த அப்பா உனக்கு அவ்வளவு வேண்டாதவன போய்டேன்ல"

"ச்ச ச்ச என்ன அப்பா இது..  நான் தான் சாரி கேட்கணும் ப்பா எனக்கும் மாதுக்கும் நடுவுல இருந்த ப்ரிச்சனை ல உங்க கிட்ட சொல்ல முடியாம போய்டுச்சு"

"மது கிட்ட நாங்க எல்லாம் பேசறோம் பா", என மூர்த்தி முன் வரவும்,

"அவளுக்கு தான் என்னை பிடிக்கலையே மாமா"

"அப்படி என்னை தாண்டா நடந்துச்சு. சொல்லி தொலையேன்" என ஆரா அதட்டி கேட்கவும், மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் அதை சொல்லி முடித்தான் ஆதி. ரகுவை தவிர அனைவருக்குமே ஆதியின் மேலும் பிரகாஷின் மேலும் கோபம் வந்தது. இருந்தாலும் ஆதி அவன் நிலையை விளக்க கோபம் முழுதும் பிரகாஷின் மீதே திரும்பியது.

மது யாருடனும் எதையும் பேசாமல் ரகுவின் கையை பற்றிய வண்ணம் அமர்ந்திருக்க, கவகயுடன் அவளை பார்த்தனர் அனைவரும்.ரஞ்ஜனி மக்டுவின் அருகில் அமர்ந்து,

"அம்மாடி அவன் தான் இவ்வளவு சொல்றானே அம்மா அவனை மன்னிச்சுரும்மா" என கூறவும் உடைந்து அழுதாள் மது.

"எப்படி ஆன்ட்டி முடியும், நாளைக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இந்த மாத்ரி சாதாரணமான விஷயம் நடந்து அப்பவ்வும் இவர் இப்படி கோபமோ சந்தேகமோ பட்ட நான் என்ன பண்ணுவேன்.. ஒரு வார்த்தை என்கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்காம என்ன பிரிஞ்சு போனவர் தானே, இந்த ஒரு வருஷம் எப்படி எல்லாம் தவிச்சு போயிருப்பேன் என்ன காரணம்னு புரியாம

அன்னைக்கு அந்த பிரகாஷ் சொல்ற வரைக்கும் கூட ஏதோ நானே ஒரு காரணத யுகிச்சுகிட்டு இருந்தேன்.. அவன் சொன்னப்போ கூட இது காரனம இருக்க கூடாதேன்னு நினைச்சேன் இன்னைக்கும் இவரும் அதையே சொல்றாரு இன்னமும் அன்னைக்கு என்ன நடந்தது என்ன எதுன்னு எனக்கு முழுசா தெரியல.. காதலுக்கு அடிப்படையே நம்பிக்கை தான் அந்த நம்பிக்கை என்கிட்ட காதலை சொல்ற வரைக்கும் கூட இவருக்கு இல்லாம போய்டுச்சே" என அரற்றி அழுதவளை சமாதானம் செய்ய தான் யாராலும் முடியவில்லை.

ஆதி எதையோ சொல்ல முனைய ஆராதனா அவன் கன்னத்தில் அரைந்திருந்தாள்.

"எவ்வளவு திமிரு டா உனக்கு இந்த பொண்ண பத்தி நன் கேட்டப்போ எல்லாம் என்ன என்ன பேச்சு எல்லாம் நீ பேசுன? ஒரு தடவையாவுது அவ கிட்ட பேச ட்ரை பண்ணாம நீ பாட்டுக்கு அமெரிக்கா போய்ட்ட, இப்போ அவளுக்கு என்ன பதில் சொல்லுவா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.