மாலை நேரத்தில் கீழே கீதாவும் ராஜ்குமாரும் கிருஷ்ணாவை வைத்து கொஞ்சி கொண்டிருந்தனர். அதை குழலீ மூன்றாவது மாடியிலிருந்து சாய்ந்தவாறு நின்று பார்த்திருந்தாள். அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து சற்றே பக்கவாட்டில் பார்த்தாள். பிரபு நின்றிருந்தான்.
கிருஷ்ணாவை தத்து எடுக்கறதா இருந்தியா?
ஆமாம்..
ஏன் என்கிட்ட முன்னமே சொல்லலை?
எங்க என்னை சொல்லவிட்டீங்க? முதல்ல என் விருப்பத்தை கேட்டீங்களா?
கீழே தங்கள் மகன் சிரித்து விளையாடி கொண்டிருந்தான். அதை ரசித்தவாறு அருகில் நின்றிருக்கும் மனைவியை பார்த்தான்.
'என் விருப்பத்தை கேட்டீங்களா?' என்றவள் கேள்வியை யோசித்தான். அவள் விருப்பம்!!!
வெள்ளை பின்னனியில் நீல நிறப்பூக்கள் பிரின்ட் செய்யப்பட்ட அதே காட்டன் புடவை... மேட்சிங்க் வளையல்... கழுத்தில் புது மஞ்சள் கயிறு தாலி... நெற்றி வகுட்டில் குங்குமம்… அவ்வளவு நீள தலைமுடியில் மல்லிகை சரங்கள். எளிமையான ஆனால் அவனை வசீகரித்த தோற்றம்...சிரிக்கும் போது அவனை எதுவோ ஒன்று ஈர்த்தது.
அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் சற்றே திரும்பிப்பார்த்தாள். பிரபு அங்கு இல்லை.
திரும்பவும் கீழே அவர்கள் பேச்சை கவனிக்க தொடங்கினாள். மிகவும் அருகில் நெருக்கமாக யாரோ நிற்பத்தை உணர்ந்து திரும்ப நினைக்கும் போது... குழலீயின் இடது தோள்மீது தன் தாடையை பதித்து அவள் கன்னத்தோடு கன்னம் வைத்தவாறு பின்னால் இருந்து அணைத்தவாறு கைக்கோர்த்து கீழே அவர்களை கவனிக்க தொடங்கினான் அவள் கணவன் பிரபு.
பிரபுவின் எதிர்ப்பாரா அணைப்பில் தன்னை மெய் மறந்து நின்றிருந்தாள். சட்டேன அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டான் அவள் கணவன்.
சி...வா....' என்று அவள் தடுமாற...
சம அழகா இருக்கடீ இன்னைக்கு!
…………
ஏய்....நகராத... அப்படியே இரு..
…………
கொல்லாதடீ சக்தி!' என்றான்.
சக்தி என்ற அழைப்பில் தன்னிலைக்கு வந்து அவள் விலக நினைக்க அவளை கைப்பிடித்து நிறுத்தினான் பிரபு.
பிரபு! விடுங்க கையை!' என்று உதர அவன் பிடி இன்னும் இறுகியது.
இப்போ என்ன வேணும் உங்களுக்கு?
சொன்னா தருவீயா?
சீசீ..இவ்வளவு தானா நீங்க?
அவள் உதாசீனத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஓங்கி ஒரு அரை வைத்தான் அவள் கன்னத்தில்!
இவர்களிடம் கிருஷ்ணாவை கொடுக்க வந்த மாலதி பிரபு அரைந்ததை பார்த்துவிட்டார். கண்களில் நீர்வழிய மகனை முறைத்துக்கொண்டு நிற்க்கும் மறுமகளை பார்த்தார். மகனையும் ஒரு பார்வை பார்த்தவர்…
திரும்புகையில் ... 'டேய்.. சிவா...குழலீ இங்க இருக்கறவரை...குழலீ இங்க என் மறுமகளாய் இருந்தா மட்டும் தான் இந்த கிருஷ்ணா பையன் இங்க இருக்க முடியும்!'
கணவன் மனைவி இருவரும் அப்படி உறைந்து நின்றுவிட்டனர்!
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.