(Reading time: 12 - 24 minutes)

04. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

டுத்த ஒரு வாரம், நேரம் இறக்கை கட்டி பறந்தது பைரவிக்கு.

காலை ஐந்திலிருந்து இரண்டு மணி நேரம் விடாமல் சங்கீத சாதகம் செய்வது, பின்னர் ஒன்பது மணிக்கு தனது மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்திற்கு சென்று தன் வேலையை தொடர்வது, அங்கிருந்து மாலை ஐந்து மணியளவில் நேராக தனது சங்கீத குரு வேதா மாமி வீட்டிற்கு சென்று மீண்டும் சங்கீத பிராக்டீஸ் செய்வது, இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு மீண்டும் திரும்புவது என்று அவளது நேரம் சீராக ஓடிக் கொண்டிருந்தது.

போன வீக் என்டில் அஜய்யுடன் வெளியே சென்றதுதான், அதன் பின்னர் இரண்டு முறை போனில் பேசியதுடன் சரி.

vasantha bairavi

அஜய்யுமே, 'மேடம் பிஸி' என்று கிண்டலடித்து விட்டு, தன் ஆராய்ச்சியில் மூழ்கி விட்டான்.. அஜய் எப்பொழுதுமே அடுத்தவர்களுக்காக பார்ப்பவன். தன்னால் யாருக்கும் எந்த விதத்திலும், தொந்தரவு வராமல் பார்த்து கொள்பவன். பைரவி சங்கீத விழாவிற்காக பிஸிசாக இருப்பதை பார்த்தவன், அவளுக்கு எந்த விதத்திலும் டிஸ்டர்ப் செய்யாமலே இருந்தான்..

இதோ அவளது இசை நிகழ்ச்சியும் ஒருவாறாக நல்லபடியாக முடிய, அவளது குரு வேதா மாமியின் மூலம் பல இந்திய கர்னாடக பாடகர்களின் அறிமுகம் கிடைத்ததில் பைரவி மகிழ்ச்சியாகவே இருந்தாள். கச்சேரியை ஒரு வழியாக முடித்தவள், தன் பெற்றோர்களுடன் அஜய்யின் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அன்று அஜய், பைரவியின் இசை விழாவிற்கு, அவளது பெற்றோர்களை தனது காரிலேயே அழைத்து வந்திருந்தான். நிகழ்ச்சி முடிந்து ஒரு வழியாக எல்லோருடனும் சற்று நேரம் கலந்துரையாடி விட்டு, அமெரிக்க தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரவு சிற்றுண்டி வகைகளை ஒரு பிடி பிடித்து திருப்தியாக, அங்கிருந்து கிளம்பினர்.

அஜய் காரை ஓட்ட, அவனருகில் பைரவி அமர்ந்திருக்க, கமலாவும், விஸ்வநாதனும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அன்றைய விழாவை பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரம் கழித்து, டாக்டர் விஸ்வநாதன், அஜய்யிடம் அவனது கான்சர் ரிசர்ச் ப்ராஜக்ட் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். அஜய் பைரவியின் தந்தையிடம், உற்சாகமாக பேசிக் கொண்டே வந்தான்.

மருத்துவ ஆராய்ச்சி பற்றி பேசிக் கொண்டே வந்தவர்கள், கமலா திடீரென்று, "இப்பொழுதெல்லாம் மருத்துவ துறையில் என்னென்னவோ புதுமை செய்கிறார்கள்.. எங்கள் காலத்தில் கான்சர் என்றால் எதோ ஒரு கொடிய உயிர் கொல்லும் வியாதி என்ற ரீதியில் தான் இருந்தது.. இப்பொழுது பார், இதையெல்லாம் முதலிலேயே கண்டு பிடித்து, அதற்குரிய வகையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், குணமாகி உயிர் பிழைக்க வழி இருக்கிறது என்கிறார்கள்" என்று பொதுப்படையாக சொல்ல,

"எஸ் ஆன்ட்டி, நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு சதவீதம் சரியே..கான்சர் என்று இல்லை, எந்த நோயாய் இருந்தாலுமே அதை தீர்ப்பதற்கு எத்தனையோ வித சிகிச்சை முறைகள் வந்து விட்டன..வெறும் ஆங்கிலமுறை மருத்துவத்தோடு, ஹோமியோ, ஆயுர்வேதம், சித்தா என்று விதவிதமான மருத்துவ முறைகள் போட்டி போடுகின்றன" என்ற அஜய்யை,

"நீ சொல்லுவது சரிதான் அஜய்.. எங்க காலத்தில் மருத்துவ படிப்பு என்பது எதோ ஒரு பெரிய விஷயம் மாதிரி இருந்தது.. ஆனால் இப்பொழுது பார், ஆங்காங்கே மருத்துவம் படிக்க கல்லூரிகள், விதவிதமான மருத்துவ முறைகள், ஒன்று இல்லையென்றால், இன்னொரு வகையான மருத்துவ படிப்பு என்று வந்து விட்டதில் டாக்டர் தொழில் என்பது சர்வ சாதாரண விஷயமாய் போய்விட்டது".

"இது ஒரு வகையில், மருத்துவ தொழிலை ஊக்குவித்தாலும், எத்தனை பேர் இதில் உண்மையாக படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இதுவும் ஒரு வகை தொழில், நோயாளியை பார்த்தால், நமக்கு கை மேல் பணம் என்ற ரீதியில் உலகம் போய் கொண்டிருக்கிறது.. நம் கையில் இருப்பது ஒரு உயிர் என்று யாருமே நினைப்பதில்லை..வரவர, காசிருந்தால் எந்த நோயையும் கூட குணப்படுத்தி விடலாம் என்ற ரீதியில் உலகம் போய் கொண்டிருக்கிறது" என்றார் விஸ்வநாதன்.

"அப்படி ஒரேடியாக சொல்லிவிட முடியாது அங்கிள்.. மொத்த மருத்துவ உலகமே பணத்தை சுற்றி இயங்குவதாக பொதுப்படையாக சொல்ல முடியாது.. இங்கேயும் எத்தனையோ பேர் சேவை மனப்பான்மையோடு இருக்கிறார்கள்.. நீங்கள் இந்த பீல்டில் இருப்பதால் உங்களுக்கும் தெரியுமே, எத்தனையோ, இலவச முகாம்கள், பவுன்டேஷன்கள் என்று உலகம் முழுவதும் பரவி தான் வருகிறது. இன்னொன்று, மருத்துவ துறையில் முன்னேற்றம் வர வர, அதற்கேற்ப விதவிதமான நோய்களும் பெருகிதான் வருகின்றன.. சமீப காலமாக பார்த்தால், கான்சர் நோயில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட, எய்ட்ஸ் நோய் தாக்கத்தில் இறப்பவர்கள் அதிகமாகி வருகின்றனர்.. காசிருந்தாலும், உரிய முறையில் சிகிச்சை அளித்தால் தான் எந்த நோயையும் குணப்படுத்த முடியம்" என்றான் அஜய்.

"அஜய் நீ சொல்லுவது சரிப்பா.. மருத்துவர்கள் பெருகி விட்டாலும், எல்லாராலும் எல்லாவித சிகிச்சையும் கொடுக்க முடிவதில்லை.. ஒவ்வொரு துறைக்கு ஏற்றவாறே மருத்துவர்களும் சிறப்பு பயிற்சி எடுக்க வேண்டியிருக்கு..பணம் கொழிக்கும் என்று தப்பான வைத்தியம் பார்த்தால் அந்த மருத்துவன் கதி அதோகதிதான்.. இப்பொழுதெல்லாம், மக்களுக்கும் நல்ல விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது..அதுவும் நம்ம மாதிரி அமெரிக்காவில் தொழில் செய்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியிருக்கிறது" என்றாள் பைரவி.

"எப்படியோம்மா, நீங்கள் இருவருமே இந்த தலை முறையினர்.. பணம் மட்டுமே பிரதானம் என்று இல்லாமல், முடிந்தவரை கொஞ்சம் சேவை மனப்பான்மையோடு இருக்க பாருங்கள்.. அது தான் எங்களை போன்ற மூத்த மருத்துவர்கள் உங்களை கேட்டு கொள்வது" என்றார் விஸ்வனாதன்.

"நீங்கள் சொல்லுவது சரி தான் அங்கிள்.. நானுமே அதை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன்..கடந்த ஏழு வருடங்களாக வேண்டிய பணம் சம்பாத்தித்து விட்டேன்.. இந்த கான்சர் ரிசர்ச் ப்ராஜெக்ட்டிலும், பணம் வரத்தான் செய்கிறது. நான் கொஞ்ச காலம் இந்தியாவிற்கு செல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்" என்ற அஜய்யை,

ஆச்சர்யமாக பார்த்தனர், விஸ்வனாதனும், கமலாவும். பைரவிக்கு, இந்த விஷயம் முன்பே தெரியுமாதலால், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், காரை லாவகமாக ஓட்டும் அஜய்யே பார்த்து கொண்டிருந்தாள்.

முதலில் சுதாரித்த விஸ்வனாதன், "என்ன அஜய்.. என்ன திடீரென்று? அதுவும் இந்தியா?..இங்கே உன்னுடைய ப்ராஜெக்ட் நன்றாக போய் கொண்டிருக்கிறதே?.. அதோடு உன் ப்ராக்டீஸ் வேறு இருக்கிறதே?"

"என் பிராஜெக்ட் முடிவடையும் நிலையில் இருக்கிறது அங்கிள்.. கொஞ்சம் காலம் எனக்கு இந்தியா போகனும்.. உங்களுக்கு தான் தெரியுமே, என் தந்தை என் தாயாரை மணப்பதற்கு முன் இந்திய பிரஜை என்று.. பெற்றவர்களை உதறிவிட்டு, பொறுப்பை தட்டி கழித்து அமெரிக்க பெண்ணை மணந்து அவர் மூலம் அமெரிக்க குடிமகன் ஆனவர்.. என் அன்னையோடு ஒழுங்காக வாழ்ந்தாரா, அதுவும் இல்லை.. அவருக்கு துரோகம் செய்து, விவாகரத்து வாங்கி கொண்டார்.. இருவருமே வேறு துணையை தேடி கொண்டனர். கான்சர் நோய் தாக்கி என் அன்னை இறந்தவுடன், அமெரிக்கரான என் அம்மா என் மீது எழுதி வைத்திருந்த பணத்திற்காக என்னுடன் உறவை புதுப்பித்தார்.. இந்திய தகப்பனை தான் அவருமே கார்டியனாக போட்டிருந்தார்.. பத்து வயது சிறுவன் நான்..வேறு என்ன செய்திருக்க முடியும்?.. என்னுடன் இருந்த கொஞ்சம் காலம் என்னுடன் பாசமாகவே தான் இருந்தார்.. ஒரு கார் விபத்தில் தன் இந்திய மனைவியுடன் சிக்கியவர், சாகும் முன்பு தன் இந்திய குடும்பத்தவரிடம் என்னை தொடர்பு கொள்ள சொன்னவர், அவர்கள் மன்னித்தால் தான் அவர் ஆத்மா சாந்தியடையுமாம்.. தன் குடும்பத்தவர் பற்றி டயரியில் எழுதி வைத்திருகிறார்.. என்னமோ வேண்டாத சென்டிமென்ட்.. இத்தனை வருடங்களாக அதை பற்றி நான் சிந்திக்கவில்லை. இப்போ நானுமே கொஞ்சம் நாட்கள் இந்தியாவிற்கு சென்று அங்கே என்னால் முடிந்த இலவச சேவை செய்ய விரும்புகிறேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.