(Reading time: 33 - 66 minutes)

ட கட வென ஏதேதோ புரிகின்றது……

ஆக அரணிடம் ஜீவா தன்னை விட்டுக் கொடுக்க காரணம் இது தானா? சமீப காலமாக அரண் இவளிடம் சாஃப்டாக நடந்து கொள்வது போல் நடிப்பதன் நோக்கம் இதுதானா?  Are இல் அவன் பார்த்த கரிசனைப் பார்வைகள்…. அந்த லாக் ஹவிஸ் இன்சிடென்ட்…. உதவும் நோக்கம் போல் ஓடி வந்த ஸ்விம்மிங் பூல் சினாரியோ…..ஒவ்வொரு முறையும் அவன் நல்லவன் போலவும் இவள்தான் சரியில்லை என்பது போலவும் உணரவைத்தானே…..

“அந்த அரண் பையனும் ப்ரபா மாதிரி நல்ல பையனாத்தான் தெரியுது…..  நீயும் உங்கப்பாவும் தான் சும்மா சும்மா அந்த பையன்ட்ட கொம்பு சீவி சண்டித்தனம் பண்றது…. அவங்க பரம்பர பணக்காரங்கன்னு உங்கப்பாவுக்கு ஒரு இன்ஃபிரியாரிடி காம்ளெக்‌ஸ்….. வசதியானவங்கனாலே கெட்டவங்கதான்னு ஒரு வன்மம்…… டு த பாய்ண்ட் சொல்லனும்னா….உங்கப்பாவுக்கு அவங்க வீடைப் பார்த்து ஜெலஸ்…அதை உன் தலைல நல்லா ஏத்தி வச்சுருக்கார்….. “ அம்மா இப்படி கமெண்ட் சொல்லும் படி நடந்து கொண்டானே….எல்லாம் இதுக்காகத்தானா……

இவளை காதலிப்பது போல் அரண் இவளது ஜீவாவை நம்ப வைத்திருக்கிறான்.

 ஜீவா மன்யத் விஷயத்தில் இந்த அரணிடம் உதவி கேட்டதும், அரண் மன்யத்தை மிரட்டி துரத்திவிட்டு அதற்கு ப்ரதியுபகாரமாக ஜீவாவை இவளிடமிருந்து விலக சொல்லி கேட்டிருக்கிறான். அதுவும் தான் சுகவிதாவை காதலிப்பதாக சொல்லி… இல்லையெனில் ஜீவா இவளை விட்டுக் கொடுப்பதாவது…..

ஜீவா ஃபினான்ஷியலி இந்த அரணைவிட கீழான ஸ்டேடஸில் இருப்பான்…….ஒருவேளை ரொம்பவும் கீழாக இருப்பானோ? இந்த அரணின் டிரைவர் அப்படி ஏதாவதாக இருந்தால் அரணது காரைக் கூட கொண்டு வந்திருக்கலாம்…. இருக்கும்….அதனால் தான் ஜீவாவால் தன்னை தன் காதலை இவளிடம் தைரியமாக வெளிப் படுத்த முடியவில்லையாக இருக்கும்…… பாணக்கார அரண், அதுவும் இவள் ப்ரச்சனைகள் சூழ்நிலைகளுக்கு தீர்வு கொண்டுவர முடிகின்ற அரண் அவள நான் லவ் பண்றேன்னு சொன்னதும் ஜீவா விலகிட்டான்…..

இப்படித்தான் நம்பினாள் சுகவிதா.

ஒரு ட்ராமா செய்து தான் சுகவிய லவ் பண்றதா நம்ப வச்சு, ஜீவாவை விலக்கிவிட்டது போல் இந்த அரண் வேற ஏதோ டிராமா பண்ணி ப்ரபாத்தையும் நம்ப வச்சுருக்கான்......இதெல்லாம் அவன் இவளை கஷ்ட படுத்தனும்னே செய்றான்…சாடிஸ்ட்……ஜீவாவ விலக்கியாச்சு……இனி இவ வேற வழி இல்லாம அந்த பெலிக்‌ஸ கல்யாணம் செய்துடுவானு நினைக்கானோ?……இப்ப ப்ரபாத் வழியா போடுற ட்ராமா….ப்ரபாத் கூட இவளுக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்றதுக்கா…..? ஒரு வேளை இவ ஏமாந்து போய் அரணைக் கல்யாணம் செய்துட்டா….அவ கரியரை காலி பண்ணி துவச்சு தூக்கி போட்றுவானோ?

இருந்த அந்த சில நிமிட அவகாசத்தில் அதற்குமேல் சுகவிதா ப்ரபாத்தை பேசவே விடவில்லை. “நீ அரணை நம்பாத…உன்னை ட்ராமா பண்ணி அவன் ஏமாத்றான்….நம்ம பிரிக்க பார்க்றான்…என் லைஃபை நாசம் பண்ண ப்ளான் பண்றான்… தயவு செய்து எப்டியாவது ஜீவாவை கண்டு பிடி ப்ரபாத்…..” இந்த அர்த்தத்தில் அவளறிந்த அனைத்து வகையிலும் பதற்றமும் அழுகையும் தவிப்புமாய் சொல்லிக் கொண்டே இருந்தாளே தவிர, வாயை மூடிக் காதை திறக்க அவள் தயாராகவே இல்லை.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அரண் இடையிட்டான் தான்….

“விதுமா…ப்ளீஸ் முதல்ல அழுகைய நிறுத்து…”

ஜீவாவின் குரலை நேரில் கேட்டிருக்கிறாள் சுகவி. அதுவும் சில நொடிப் பொழுதுகள். ஃபோனில் இல்லவே இல்லை. ஆனால் இந்த விது வில் அவள் உள்ளம் துள்ள முதலில் ஜீவா என அதை தன் குரலில் காண்பித்தாள் தான்.

ஆனால் அடுத்து அரண் அதற்கு பதில் சொல்லும் முன்பாக கூட அவள் அந்த மாயையிலிருந்து விடுபட்டுவிட்டாள். ப்ரபாத்துடன் ஜீவா வந்திருந்தால் இந்த பால்பாக்கெட் ஏன் அரண் தான் ஜீவன் என உளறிக் கொண்டிருக்கப் போகிறான்? ஆக அரண் ஜீவா போல் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறான்…அண்ட் திஸ் விது இஸ் ஃப்ரெம் அரண் த ஆக்டர்.

கத்த முடிந்த அளவு கத்தி கொதித்துக் கொண்டு வருவதையெல்லாம் அவன் மீது கொட்டி தீர்க்க வேண்டும் போல் வருகிறதுதான். ஆனால் அப்பா காதில் விழுந்தால் ஜீவாவை கண்டு பிடிக்க இருக்கும் கதவும் கூட அல்லவா அடைந்து போகும்.

ஆக “ப்ரபா நான் உயிரோட வேணும்னு நினச்சன்னா எனக்கு ஜீவாவ கொண்டு வர வழியப் பாரு….நான் செத்தாலும் சாவனே தவிர  உன் சாடிஸ்ட் ஃப்ரெண்டோட ப்ளாட்டுக்கு  பலியாக மாட்டேன்….”  இணைப்பை துண்டித்து விட்டாள் சுகவி.

அடுத்து அவசரமாக ஜீவாவை FB ல்  தேடினாள். அதே நேரம் அரணும் FB இல் தான் லாகின் செய்தான்.

அதிலிருந்து வாய்ஸ் கால் அவளுக்கு.

இணைப்பை ஏற்றவள் கதறும் சத்தம் வாய் வழியே வெளியேறி அப்பா காதில் விழுந்து விடக் கூடாது என தன் ஒரு கையால் வாயை இறுக்கி மூடிக் கொள்ள அவள் விம்மும் சத்தத்தில் செத்துப் பிழைத்தான் கேட்டிருந்தவன் சில நூறு முறை.

“விதுமா….ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா கேளேன்……ப்ளீஸ்டா….ப்ளீஸ்பா…” அரண் இதுவரை யாரிடமும் எதற்காகவும் கெஞ்சாத அளவில் கெஞ்ச

அவன் குரல்தான் அடையாளம் தெரிகிறதே சுகவிக்கு…..இனி என்ன இருக்கிறதாம்…..??

“என் ஜீவாவ என்ட்ட இருந்து பிடிங்கிட்டதாவோ……. அவங்கள ரீச் பண்ண முடியாம எல்லா வழியையும் அடைச்சுட்டதாவோ கனவு காண்காத….. அவங்கட்ட பாஸ்வேர்டை வாங்கிட்டா…..நீ அவங்களாக முடியுமாடா…..ஐ நோ கவ் டூ ரீச் ஹிம்….அவங்களும் அவ்ளவு ஈசியா என்னை விட்டு கொடுத்றமாட்டாங்க…..கண்டிப்பா உன்ட ஏமாந்து போக மாட்டாங்க….” அரணிடம் ஏன் அழ வேண்டும்? அவனிடம் சவால்விட்டுவிட்டு இணைப்பை துண்டித்தாள்.

அரணுக்கும் ப்ரபாத்துக்கும் என்ன செய்யவென்றே தெரியவில்லை. ஒரு வார்த்தை இவனை காதலிப்பதாக சுகவி ஒத்துக் கொண்டால் போதும்…அரண் அவளை எப்படியும் உள்ளிருந்து வெளியே கொண்டு வந்துவிடுவான் தான். இப்படி முடியில்லாத மொட்டைப் பிடிவாதம் பிடிப்பவளை என்ன செய்வதாம்?

அடுத்து ப்ரபாத் அரணின் எந்த அழைப்புகளையும் அவள் ஏற்கவே இல்லை. இப்பொழுது என்ன செய்யவாம்??? அரணுக்கு இல்லை சுகவி என விட்டுத்தான் ஆக வேண்டும்…..விருப்பம் இல்லாதவளை வேறு என்ன செய்யவாம்? ஆனால் அப்படி விட்டுவிடவும் முடியவில்லை. காதல் அரண் புறம் ஒருதலையாக இருந்தால் அப்படித்தான் முடிவு எடுத்திருப்பார்கள் நண்பர்கள். அதுதான் நியாயமும் கூட.

ஆனால் இந்த சுகவியோ FBல் விடாது பெய்யும் அடை மழைபோல் அழுகையும் கெஞ்சலும் மிரட்டலுமாக ஜீவாவுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள். எப்படியும் அவனுக்கும் தானே அந்த அக்கவ்ண்ட் டீடெய்ல் தெரியும் ஒரு முறையாவது பார்ப்பான் தானே……

ஆக இப்பொழுது டெக்‌ஸ்ட் மெசேஜிலும் அரண் சுகவிதாவுக்கு அனைத்தையும் விளக்கிப் பார்த்தான் தான்….அது ஒன்றைத்தானே அவள் படிக்கவாவது செய்கின்றாள்?

ஆனால் அதையெல்லாம் சுகவிதா ஏற்றுக்கொண்டால் கதை என்னாவதாம்? சுகவிதா எல்லாவற்றையும் படித்தாள்தான். கவன கவனமாக படித்தாள்தான். சாரிமா நான் அரணை நம்பி ஏமாந்துட்டேன்…..நான் வந்து உன்னை நேர்ல பார்க்றேன் என்ற வகையாக ஜீவா எதாவது சொல்லிவிட மாட்டானா என்ற ஒரே நோக்கத்திற்காக……

ப்ளீஸ் ஜீவா புரிஞ்சுகோங்க ஜீவா…..அரணோட பணம் அந்தஸ்து அப்பியரென்ஸ் எதுவும் எனக்கு பிடிக்காது…ஐ ஹேட் ஹிம்…..எனக்கு உங்களை மட்டும்தான் பிடிக்கும்….தயவு செய்து வந்துடுங்க…… இந்த  டெக்‌ஸ்ட்டை மட்டும் ஆயிரமாயிரம் முறை அனுப்பிக் கொண்டிருந்தாள் சுகவிதா.

ஒவ்வொரு நாளும் நேர் கண்ட நரகமென கொடுமையாக கழிந்தது ஒரு மூன்று நாட்கள் இந்த மூவருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.