(Reading time: 33 - 66 minutes)

ண்டிப்பா சார்….உங்களல்லாம் ரொம்ப டென்ஷனாக்கி இருப்போம்….தயவு செய்து அதெல்லாம் மன்னிச்சுருங்க….அவள ப்ளெஸ் பண்னுங்க…. அவ  லைஃப் நல்லா இருக்கனும்….” எப்படியாவது மகள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமே என்ற தவிப்பு.

“சுகா ஒரு குழந்த….அவ நல்லாத்தான் இருப்பா….மத்த எதையும் நான் மனசுல வச்சுகிடலை மிசர்ஸ். அனவரதன்.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு வாண்டு இவர்களிடமாக ஓடி வருகிறது. 4 அல்லது 5 வயது இருக்கலாம். அரையடி நீளத்தில் காலடி அகலத்தில் ஒரு சிறு அட்டை அதை ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டு ஓடுகிறது.

அதில் ஒரு புறம்

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

மறுபுறம்

நானே வழியும் சத்யமும் ஜீவனுமாயிருக்கிறேன்.

என்று பிரிண்டாகி இருந்த வேத வார்த்தைகள்.

திருப்பிப் பார்த்து படித்துக் கொண்ட இருவர் மனதிலும் நிம்மதி அலைகள்.

அதன் பின்பு தன் மகனை சந்திக்கும் போது திரியேகன் சொல்லிவிட்டார். “சுகா விஷயத்துல நீ சொல்றபடி செய்டா…..எல்லாம் சரியாத்தான் வரும்” அவருக்கு அப்படி தோன்றிவிட்டது.

அங்கு சுகவிதா வீட்டிலோ புஷ்பம்

“உனக்காக ப்ரேயர் பண்ணிட்டு இருக்கப்பவும் இந்த வார்த்தைதான் கிடச்சுது….வெளிய வரவும் ஒரு குட்டி இதையே கொடுத்துட்டுப் போகுது….மனச போட்டுக் குழப்பிக்காத எல்லாம் நல்லாத்தான் நடக்கும்” என்றார்.  ஆனால் அப்படி என்னது நல்லதாக நடந்துவிடப் போகிறது என்றுதான் அவருக்கு தெரியவில்லை.

சுகவிதாவுக்கோ என்னது நல்லதாக நடக்கும் என்று கூட புரிந்துவிட்டது.

‘கண்டிப்பா ஜீவன் வந்துடுவான்’

FB வழியா ஜீவன் மெசேஜ் செய்தால் அரண் அதைப் பார்த்திடுவானே….அதான் ஜீவன் FB ல எதுவும் சொல்லலை. பட் வந்துடுவான்.

க வந்தது திருமண நாள்.

ஐ பி எல் காரணமாக ப்ரபாத் திருமணத்திற்கு வரமுடியாமல் போனதில் அனவரதனுக்கு நிம்மதியே. மகள் முகம் ஒன்றும் பூரிப்பாய் இல்லை. இதில் இவன் வேறு வந்து என்ன குழப்பி வைப்பானோ?

சுகவிதா  எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. இயல்பாய் இருக்க முயன்றாள். காரணம் ஆழ மனதில்  ஆலிவ் இலையுடன் ஒரு புறா. ஜீவா எதாவது செய்வான். ஆனால் அவன் என்ன செய்யப் போகிறான் எனதான் தெரியவில்லை…. என்ற நினைவு

அதோடு அரணைப் பொறுத்தவரை இவளை ஜீவாவிடமிருந்து நிரந்தரமாக பிரித்து இவளுக்கு பிடிக்காத திருமணத்திற்குள் தள்ளியாகிவிட்டது என மெகா மகிழ்ச்சியாக இருப்பான். அதோடு இன்று மேட்ச் வேறு. இவள் தோக்ற அன்னைக்கு கண்டிப்பா தான் ஜெயிக்கனும்னு விளையாடிட்டு இருப்பான். இப்படித்தான் நினைத்து வைத்திருந்தாள் அவள். அதற்கு மேலாக அவனைக் கண்டு கொள்ளவில்லை சுகவி.

அவள் மனம் முழுவதும் அவன் என்ன செய்யப் போறான்? என்ற வகையில் ஜீவாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

திருமணத்திற்காய் தயாராகி கிளம்பும் போது கையில் பாய்ஷன் எடுக்கவில்லை அவள், மாறாக பாஸ்போர்ட். ஜீவா வந்து இவளை கூப்பிட்டு போனபின்பு அங்கு தேவைப்படும் எதையும் வாங்கிக் கொள்ள இவளால் முடியும். பாஸ்போர்ட் வாங்குவது கஷ்டம். அத்தனை அளவு ஜீவாவின் வருகை மீது நம்பிக்கை வந்திருந்தது அவளுக்கு.

இதோ வீட்டை விட்டு காரிலேறி கிளம்பியாகிவிட்டது. வெட்டிங் வென்யூவைப் பார்த்து முன்னேற முன்னேற சுகவிதாவின் மனமும் விழியும் வெளியே தேடின ஜீவனை. அவன் என்ன செய்யப் போறான்?

இதில் ஒரு ட்ராஃபிக் ஜாம். அதில் கார் நிறுத்தப்பட, ட்ரைவர் நெத்தியில் பிஸ்டல் அமர, அரண்!!!! அரண்டு போனாள் இவள். இந்த நொடிவரை அவன் ஞாபகமே இல்லை. இந்த அளவுக்கு அவன் இறங்குவான் என்றும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. என்ன செய்யப் போகிறான்? என்னத்தை செய்தாலும் அதற்கு பின்விளைவு அவனுக்கும் சாதாரணமாக இருக்கப் போவதில்லையே!!!

காரில் வைத்து  அதை அவனிடம் கத்தினாள். “பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு ஒரு செலிப்டிரிய கிட்நாப் செய்துறுக்க…..யாரும் உன்னை சும்மா விடப் போறதில்லை…”

இவள் வார்த்தைகளை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் பாக்கெட்டிலிருந்த கயிற்றை எடுத்து முரட்டுத்தனமாய் இவள் கைகளை இழுத்து பின்னால் கட்டினான் அரண்.

பாய்ஷன எங்க ஒளிச்சு வச்சிருக்காளோ? அதை சாப்டுட்டா?’ அதை தடுக்க செய்த செயல்தான் அது. ஆனால் அந்த ஆக்க்ஷன் ஒன்றும் சுகவிக்கு ஃபீல் குட் ஃபேக்டர் இல்லையே. அதோடு இப்பொழுது அவளுக்கு பயம் வேறுவிதமாய் திரும்புகிறது…. இவன் எதுக்கும் துணிஞ்சு வந்திருக்கான்…… என்ன வேணாலும் செய்வான்.

“ என்னை கொல்ல வேணாலும் செய்துக்கோ அரண் ப்ளீஸ் வேற எதுவும் செய்துடாத…..” முதன் முறையாக அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் அவள்.

இதற்குள் கார் நிற்க ட்ரைவர் இருக்கையில் இருந்தவன் இறங்கிக் கொண்டான். அரண் கையில் கார்  ஃபாஸ்டஸ்ட் பறவை அவதாரம்.

“ஏன்டா நீ என்ன டெஃப் அண்ட் டம்பா? நான் பாட்டு கத்திகிட்டு இருக்கேன்…”

இப்பொழுது இவளை ரியர் வியூவில் பார்த்தான் அரண்.

“இப்ப என்ன? உன்னை கிட்நாப் பண்ணதுக்கு என்னை யாரும் சும்மா விடமாட்டாங்க….அதான… அப்ப ஸ்ட்ரெய்ட்டா அந்த பெலிக்‌ஸ்ட்ட போய் ட்ராப்  பண்றேன்…. கல்யாணம் பண்ணிட்டு….” அதற்குமேல் சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை என்பதால் நிறுத்தினான்..

“போடா அருவாமண, அரகிறுக்கு எனக்காக  ஜீவா வருவாங்க……..” இதற்குள் ஒரு நொடி கார்  நின்று கிளம்பியது. அவன் செயல்தான். அவளை திரும்பிப் பார்த்து ஒரு ராசனையான புன்னகை அவனிடம்.

அருவாமணையை அவள் இன்னும் விடவில்லை போலயே அதற்கான அரணது எக்‌ஸ்ப்ரெஷன் தான் அது. இன்னும் அந்த குழந்தைகால சண்டையை பிடித்து வைத்துக் கொண்டு…இவனை குழந்தை மனோபாவத்துடன் மட்டும் தான் இன்னும் பார்க்கிறாள் போலும்…. இவன் நினைவு இப்படியாய் இருக்க

அவளுக்கோ உள்ளுக்குள் குளிர். இப்படி முழுங்குவது போல் பார்த்தால்? இவனும் இவளும் மட்டுமாக தனியாய்……..எங்கேயோ வந்திருந்தார்கள்… வயலும் வாழைமரமுமாய்…… சென்னைதானா இது?

இவளை இவன் என்ன செய்தாலும் இவனால் தப்பிக்க முடியாது தான். ஆனால் அதெல்லாம் செய்து முடித்தபின்பு தானே அவனுக்கு ப்ரச்சனை….ஆனால் இப்பொழுது இவள் கதை???

“அரண் ப்ளீஸ் அரண்….என்னை விட்று அரண்……ஒன்னும் செய்துடாத அரண்….” அவள் பயமும் கெஞ்சலும் பார்க்க கஷ்டமாக இருக்கிறது அவனுக்கு…. ஆனால் உணர்ந்து பதில் சொன்னால் அவளுக்கு புரியுமா?

அவள் பார்க்க தன் தலையில் அடித்துக் கொண்டான். “இப்பதான் குட்டிப்பாப்பானு நினச்சேன் அதுக்குள்ள”

முகம் சுருங்க என்ன சொல்ல வருகிறான் என அழாத குறையாக கவனித்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் நீ என்ன அருவாமணைனு சொன்னது ஞாபகம் இருக்கா சுகவி….?” ரசித்து கேட்டான் அவன். டைவர்ஷன்.

முறைத்தாள் பெண். ‘ரொம்ப அவசியமான ஆராய்ச்சி…..அதுக்குத்தான நீ என்னை அடிக்க வந்த…..? கன்னம் தப்பிச்சது பால்பாக்கெட் செய்த பாவம்…..ஆமா அவன் கன்னத்துல தான் அன்னைக்கு இறங்கிச்சு இடி….’ அவள் மனமும் டைவர்ட் ஆகிறதுதான். பால்ய நினைவுகளின் பலம் அது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.