(Reading time: 11 - 21 minutes)

05. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

விதாவின் கையை பிடித்தவாறு பார்க்கினுள் நுழைந்த வசந்த் சுற்றும் முற்றும் பார்த்தான்.. மூலையில் சற்று ஒதுக்குபுறமாய் போட்டிருந்த சிமென்ட் பென்ச்சில் அமர்ந்து கவிதாவையும் உட்கார சொன்னான்.

சலித்தபடியே அவனருகில் உட்கார்ந்த கவிதா, "வசந்த் சுத்த போர் நீங்க.. எப்பவும் இப்படி தான் வான்னு சொல்ல வேண்டியது.. நான் கஷ்டப்பட்டு ஆஃபிஸில் பர்மிஷன் போடுட்டு வந்தா லேட் பண்ண வேண்டியது.. போதாததுக்கு எப்பவும் இதே பார்க் தான்.. இல்லேன்னா அதிக செலவே இல்லாமல் பீச்.. இருக்கவே இருக்கு சுண்டல் பாக்கெட் பத்து ரூபாய்க்கு.. மாறவே மாட்டீங்களா?", என்று அலுத்து கொண்டாள்.

"ஹேய்.. உனக்கே தெரியும் நான் எவ்வளவு ஹார்ட் வொர்க் செஞ்சி படிச்சிண்டு இருக்கேன்னு.. இப்படி புரிஞ்சிக்காம சின்ன குழந்தையாட்டம் பேசற?."

vasantha bairavi

"சொல்ல மாட்டீங்க நாலு வருஷமா லவ் பண்ணரோம்னு தான் பேரு.. இதே பார்க் அதே பீச் அதே சுண்டல்.. வெறுத்து போச்சு எனக்கு.. அவனவன் லவ் பண்ணா காதலியை கூட்டிட்டு ஜம்முன்னு ஊர் சுத்தி காட்டறான்.. கிஃப்ட் அது இதுன்னு ஜாலியா இருக்காங்க.. நீங்க என்னடான்னா?.. பழம் பஞ்சாங்கம் மாதிரி படிக்கனும் செமினார்னு எப்பவும் ஒரே படிப்பு .."

"இப்ப என்ன சொல்ல வரே கவி?"

"பின்ன என்ன.. உங்களுக்கு அப்புறம் படிப்பை முடிச்ச நான் பேங்க்கில் உத்யோகம் தேடி கொண்டு செட்டிலாகி விட்டேன்.. ஆனா நீங்க நாலு வருஷமா ஐ.ஏ.எஸ். எழுதரேன்னு சொல்லிகிட்டு சுத்தி வறீங்க.. எதுக்கும் இன்னமும் உங்க அக்கா கையையும், அம்மாப்பாவையும் எதிர் பார்த்துண்டு இருக்கற நிலைமை.. எனக்கு எரிச்சல் வராதா? சொல்லுங்க?.. நான் கை நிறைய சம்பாதிக்கறேன்..என்னையும் செலவு பண்ணவிட உங்க ஈகோ இடம் கொடுக்க மாட்டேங்கறது.. ஒரே கடுப்பா இருக்கு மனுஷிக்கு.."

"நீ என்னை இன்னமும் புரிஞ்சிக்கலைன்னு எனக்கு தோனறது கவி.. இல்லாட்டி இப்படி பேசுவியா?, என்று வருத்தப்பட்டான் வசந்த்.

"ஆமாம் வசந்த்.. எனக்கும் அப்படி தான் தோனறது.. நான் அவசரப்பட்டுட்டேனோன்னு.. என்னோட அண்ணா அன்னிக்கே சொன்னார்.. பையனுக்கு பொறுப்பு கொஞ்சம் கம்மியோன்னு..உங்களைப் பத்தி மேலோட்டமா சொன்னதுக்கே இப்படி சொன்னான்..இன்னமும் நேர்ல பார்த்தா அவ்வளவுதான்..".

அவ்வளவுதான் வந்ததே ஆத்திரம் வசந்துக்கு.."ம்ம்..உன் அண்ணன் வேற என்ன சொன்னான்?..அவனுக்கு உடம்பு முழுக்க பணத் திமிர்..அவன் பிசினஸ் நல்லா போறதில்லே?.. ஏன் பேசமாட்டான்?.. அவ்வளவு பொறுப்பு இருக்கறவன் ஏன் தங்கையை இப்படி வேலைக்கு அனுப்பறான்?..அனுப்பாத ஆத்துலே வச்சிண்டு இருந்தா தங்கையும் காதல் ஊதல்னு சுத்த மாட்டா இல்லையா?", என்று எரிந்து விழுந்தான்.

"சீ, அசிங்கமா பேசாதீங்க.. என்ன ஒரு நல்ல புத்தி உங்களுக்கு.. உங்களை யாராவது ஏதாவது சொன்னா அவாளையே குறை சொல்ல வெக்கமா இல்ல?" என்று படபடத்தவளை பார்த்தவன்

"ஆமாம் வெக்கமா தான் இருக்கு..இப்படி எல்லார்கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியிருக்கேன்னு..ஏதோ நான் பாட்டுக்கு என் படிப்பு ப்ரிபரேஷன்னு இருந்தவனை காதல் கத்திரிக்காய்னு உசுப்பேத்திவிட்டுட்டு..இப்போ குறை வேற சொல்லற?..என்ன சம்பாதிக்கற திமிரா?..இதெல்லாம் எங்கிட்ட வேணாம்..சொல்லிட்டேன்..எனக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகும் செட்டிலாகன்னு தெரியது..நான் ஐ.ஏ.எஸ். கனவுலே இருக்கேன்னு தெரிஞ்சுதானே நீ காதலிக்கறதா ப்ரொபோஸ் செஞ்ச?..அப்ப என்ன புத்திய புல் மேய விட்டிருந்தயா?..என்னமோ உங்க கனவுக்கு நான் தடையா இருக்க மாட்டேன் அப்படி இப்படின்னு டயலாக் அடிச்சே..கொள்ளுன்னா வாய திறக்கும் குதிரை கடிவாளத்துக்கு மூடறாப்போல பேசறே.."

"அதான் சொல்லறேன்..தப்பு பண்ணிட்டேன்னு..நான் கூட ஏதோ நீங்க ஒரு உயர்ந்த லட்சியக் கனவுலே இருக்கீங்க..அது கை கூட உழைக்கறீங்கன்னு நினைச்சேன்..இப்போதானே தெரியறது..இதெல்லாம் மத்தவங்க பணத்துலே குளிர் காயற வேலைன்னு.."

அவள் முடிக்குமுன் முகம் சிவக்க கோபத்துடன் எழுந்தவனுக்கு அவளை அப்படியே ஒரு தள்ளு தள்ள வேண்டும் என்று ஆத்திரம் கிளம்பியது..ஆனால் அவன் வளர்ப்பு முறை அதை செய்ய விடாமல் அவனை தடுத்தது..என்ன இருந்தாலும் ஒரு சின்னப் பெண்..அதுவும் தன்னை விரும்புவதாக தானாகவே நம்மிடம் கூறியவள்..அவளைப் போய் அவமதிக்கலாமா?..அவளுக்கும் என்ன பிரச்சனையோ? என்று நினைத்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

அதற்குள் கண்கள் கலங்க,"ம்ம்.. அடிக்கனும்னு தோனறதா உங்களுக்கு.. கல்யாணத்துக்கு முன்னாலேயே இந்த மாதிரி இருக்கீங்க.. அப்புறம் எப்படி மாறுவீங்களோ?"

"சே.. மனுஷனுக்கு நிம்மதியே இல்லைடா சாமி.. இப்போ என்னாச்சுன்னு அழற?.. இதுக்கு தான் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது..சொல்லு.. என்ன தான் பிரச்சனை உனக்கு?", என்று நயமாக மீண்டும் ஆரம்பித்தான் வசந்த்.

"இங்க பாருங்க எனக்கு இன்னிக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும்..நேத்திக்கு எங்க அம்மா யாரோ ஒரு பணக்கார பசையுள்ள டாக்டர் ஜாதகத்தை கொண்டு வந்துருக்கா.. அப்பாவும் இன்சிஸ்ட் செய்யறா அந்த வரன் நன்னா சேந்துருக்குன்னு.. அண்ணாவும் அதுக்கு சப்போர்ட்.. அண்ணாக்கு லேசா தெரியும் நான் யாரையோ லவ் பண்ணறதை.. ஆனாலும் அவன் சொல்லறான் இன்னமும் எத்தனை நாள் இப்படி காத்துண்டு இருக்கப் போறேன்னு.. எல்லாத்துக்கும் ஒரு டைம் லிமிட் இருக்கு..இப்பவே இருபத்தினாலு வயசாச்சு.. இன்னமும் எவ்வளவு டிலே பண்ணறது?ன்னு கேக்கறா எல்லாரும்..எனக்காக என் அண்ணாவும் கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ணரான்.."

"அவ்வளவு அவசரம்னா அண்ணாக்கு மொதல்ல செய்ய சொல்லறது தானே..எப்படியும் நமக்கு இன்னமும் ரெண்டு மூணு வருஷமாகும் கல்யாணத்துக்கு..உனக்குத் தெரியுமே.. இன்னமும் என் அக்காக்கே கல்யாணம் ஆகலைன்னு..பாவம் அப்பா அம்மா ரொம்ப தேடறா.. சோ.. அவளுக்கு பண்ணாம என்னால பண்ணிக்க முடியாது.. மத்தபடி நான் பாஸ் பண்ணி வேலைக்கு சேர்ந்துட்டா நிச்சயம் அவளுக்கு விடிஞ்சிடும்.."

"நன்னா பிளான் பண்ணறீங்க.. இதுலே நல்ல தெளிவு தான்.. நல்ல சுயநலம்டா சாமி.. உங்க அக்கா செட்டில் ஆகனும், நீங்க செட்டில் ஆகனும்..அப்புறம் நீங்க கல்யாணம் எப்போ பண்ணிபீங்க.. நேரே அறுபதாம் கல்யாணமா?, சூப்பர் பிளான்", என்று கிண்டலடித்தாள் கவிதா.

"அப்படி சொல்லாதே கவிதா.. உங்கண்ணா நினைக்கிறான் இல்லை முதலில் வீட்டு பொண்ணுக்கு பண்ணிட்டு தான் தனக்குன்னு.. நானும் அதைதானே செய்யனும்? என்ன எங்க போறாத காலம் எதுவும் ஃபிக்ஸ் ஆகலை.."

"ஓ..ஃபிக்ஸ் ஆயிட்டா அடுத்த முகூர்த்தத்துலேயே நம்ம கல்யாணம் வெச்சுக்கலாமா?.. எப்படி வசதி சொல்லுங்கோ.. நான் வேணா என் அண்ணாகிட்ட சொல்லி மாப்பிள்ளை தேடி தரச் சொல்லறேன்.."

"நீ நிஜமா சொல்லறயா வினையா சொல்லறயான்னு எனக்கு தெரியலை.. ஆனாலும்.. சில பிரச்சனைகள் எங்களுக்கு இருக்கு.. எந்த மாப்பிள்ளை வந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும் பணம் புரட்டி கல்யாணம் செய்ய.. அப்படி இருக்கும் போது உடனே நமக்கு கல்யாணம்னு என்னாலே நினைச்சு பார்க்க கூட முடியாது..", என்று கூறிவிட்டு எங்கோ இலக்கின்றி வெறிக்க தொடங்கினான்.

"இங்கே பாருங்க வசந்த்.. நீங்க என்னோட ஆங்கிளேந்தும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. எங்கப்பா அம்மாவுக்கோ அண்ணாவுக்கோ நான் லவ் பண்ணரதுல எந்த பிரச்சனையும் இருக்கப் போறது இல்லை.. அவாளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை வேணும்.. அது எனக்கு பிடிச்சா மாதிரி இருந்தா டபுள் ஓ.கே ..அதனாலே தான் நான் உங்களைப்பத்தி சொன்னா உடனே கல்யாணம்னு ஆரம்பிச்சுடுவா..அதனாலே தான் நான் இன்னமும் கிளியரா யார் கிட்டயும் சொல்லலே...சொன்னால் கூட மறுப்பேதும் சொல்ல மாட்டா..இப்போ அண்ணாவுக்கும் இருபத்தி ஒன்பது வயசு முடிஞ்சாச்சு.. அவனும் எனக்காக இன்னமும் எவ்வளவு நாள் காத்திருப்பான்.. அதனால் தான் அண்ணா உங்களிடம் பேசச் சொன்னான்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.