(Reading time: 7 - 14 minutes)

12. நேசம் நிறம் மாறுமா - தேவி

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா !  சூரிய சந்திர ரோ ? 

வட்டக் கரிய விழி, கண்ணம்மா ! வானக் கருமை கொல்லோ ? 

பட்டுக் கருநீலப் - புடவை பதித்த நல் வயிரம் 

நட்ட நடு நிசியில் - தெரியும் நட்சத் திரங்க ளடீ ! 

                                                                                                பாரதியார்

Nesam niram maaruma

தி தன் மனதினுள் மதியை தன் வினு, தன்னை அத்தனாக காணவில்லையா என்று புலம்பியது மதிக்கு கேட்கவில்லை. ஆனால் இன்றைய தினம் இருவரிடையேயான உணர்வுகளும் தங்கள் சிறுவயதை நோக்கி சென்றது.

ராகவன், வாசு தேவன், சுந்தரம் மூன்று பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். அவர்கள் முந்தைய தலைமுறையும் நெருங்கிய நட்பு என்றில்லா விட்டாலும் ஒவ்வொருவர் வீட்டு விசேஷங்களில் கட்டாயம் கலந்து கொள்ளும் அளவு நட்பே.

இளையவர்கள் மூவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தனர். ஒரே வயதும் கூட. அதனால் நல்ல நட்பே ஏற்படிருந்தது. இவர்களின் செல்வ நிலையும் ஒத்த நிலையே. வாசுதேவனும், சுந்தரமும் ஒரே பிள்ளைகள். ராகவனுக்கு ஒரு தங்கை பத்மா.

படிப்பு முடிந்தவுடன் சுந்தரம் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட, ராகவனும், வாசுதேவனும் கொஞ்ச நாட்கள் தங்கள் முந்தைய தலைமுறையினரின் விவசாயத்தை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். கொஞ்ச நாட்களில் இருவரும் தனியாக தொழில் தொடங்க ஆசைப்பட்டு சின்ன அளவில் தங்கள் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராகவனின் தங்கை பத்மா தன் பட்ட படிப்பை முடிக்காத்தால் முதலில் மகன் திருமணம் பார்க்க ஆசை பட்டு ஜானகியை மணமுடித்தனர். ஜானகியும் ஒரே பெண். இங்கு எல்லோரிடமும் ஒட்டிக் கொண்டாள். இவர்கள் திருமணம் முடிந்த அடுத்த வருடம் ஆதி பிறக்க, பேரனை பார்த்த சந்தோஷத்தில் ராகவனின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர்.

பெற்றோர் மறைவிற்கு பின் பத்மாவிற்கு எல்லாம் அண்ணனே. ராகவனும் அவள் பீல் செய்யக் கூடாது என்று சற்று அதிக செல்லம் கொடுத்தார். அவள் ஆதியிடமும் பாசம் மிகுந்தவள். ஆதி பிறந்து இரண்டாம் வருடம் சுந்தரத்திற்கு மீனாட்சியை வீட்டில் மணமுடித்தனர்.

மீனாட்சிக்கும் கூட பிறந்தவர் கிடையாது என்பதால் ஜானகியோடு அவள் மிகவும் ஒட்டிக் கொண்டாள். எல்லோரும் அருகிலே இருந்ததால் அடிக்கடி பார்த்து மகிழ்ந்தார்கள்.

இங்கு மீனாட்சிக்கு கல்யாணம் ஆகி வரும் போது ஆதி தான் குட்டி. அதனால் எல்லாருக்கும் ஆதி செல்லம். இதனால் அவ்வப்போது பத்மாவிற்கும் மீனாட்சிக்கும் ஆதியை கொஞ்சும் போட்டியில் சற்று கோபம் வந்து பத்மா ஏதாவது எடுத்தெறிந்து பேசுவாள். அதை யாரும் பெரிது படுத்த மாட்டார்கள்.

ரண்டு வருடங்களில் மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது. எல்லோரும் ஒரே ஊரில் இருந்ததால் மீனாட்சி ஹாஸ்பிடலில் இருக்கும் போதே ஜானகியும் ஆதியோடு வந்து விடவே, குழந்தை பிறந்தவுடன் அதை முதலில் கையில் வாங்கியது ஜானகிதான். ஜானகிதான் குழந்தையின் மதி முகத்தை பார்த்து ஆசையாக வெண்மதி என்று வைத்தாள்.

ஆதிக்கு முழுப் பெயர் சொல்ல வராமல், வெண்ணு, வேணு என்று தடுமாறி கடைசியில் வினு என்று கூப்பிட ஆரம்பிக்க, மற்றவர்களுக்கு மதி ஆனாள். பெண் குழந்தை ஆசையில் ஜானகிக்கு மதி மிகவும் செல்லம். அத்தோடு ஜானகிக்கும் மீனாட்சிக்கும் உள்ளூர இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யவும் ஆசை. ஆனால் வயது வரும்போது பார்துக் கொள்ளலாம் என்று வெளியில் சொல்லவில்லை.

சற்று நாட்களில் பத்மா மற்றும் வாசு ஒருவரை ஒருவர் விரும்புவதை அறிந்து அவர்கள் இருவர்க்கும் எல்லோரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். இவர்கள் திருமணம் முடிந்த பிறகு கொஞ்ச நாளில் ராகவனும், வாசுவும் தங்கள் தொழிலை விரிவுபடுத்த சென்னை செல்ல முடிவெடுத்தனர். அப்போது சுந்தரத்திற்கும் வட இந்தியாவிற்கு மாற்றல் வரவே எல்லோரும் இடம் பெயர்ந்தனர். அப்போது இவர்கள் மூவரும் தங்கள் சொத்துக்களில் கொஞ்சத்தை விற்று கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி விரிவு படுத்தினர்.

இன்னும் சொல்ல போனால் அதில் சுந்தரத்தின் பங்குதான் அதிகம். ஏனெனில் இவர்கள் இருவரும் தங்கள் ஊரில் உள்ள முக்கியமான பிரமுகர்கள். பரம்பரை பணக்காரர்கள். மேலும் அவர்கள் பங்காளிகள் உறவு முறைகளில் உள்ளவர்கள் சொத்து விற்பதை ஆட்சேபிக்கவே , இவர்களால் பெரும் பணம் முதலீடு செய்ய முடியவில்லை.  

ஆனால் சுந்தரதிற்கு அந்த மாதிரியான தொல்லை கிடையாது. அதனால் ஊரில் உள்ள வீட்டையும் தோப்பையும் தவிர மற்ற சொத்துக்களை விற்று கணிசமான அளவு முதலீடு செய்திருந்தார். அவர்கள் தொழிலும் நன்றாக வளர்ந்தது. குறுகிய காலத்திலேயே நல்ல பெயரையும் சம்பாதித்தனர்.

இவர்கள் ஊர் விட்டு சென்றாலும் வருட கோடை விடுமுறையில், ஊர் திருவிழாவும் சேர்ந்து வரும்போது தவறமால் பத்து பதினைந்து நாட்கள் தங்குவர். ஓரளவு பெரிய தலைமுறை இருந்தவரை பெண்கள் ஒரு மாதம் வரை கிராமத்தில் இருப்பார்கள். ஆண்கள் திருவிழாவை ஒட்டி ஒரு வாரம் பத்து நாட்கள் வரை வந்து விட்டு செல்வர்கள்.

அப்போதெல்லாம் ஆதியும், மதியும் தான் சிறியவர்கள் என்பதால், ஒன்றாக விளையடுவார்கள். வெளியில் சென்றாலும் ஒன்றாகவே சுற்றுவர். ஊருக்கு வரும் போது மூன்று குடும்பங்களும் ஒரு வாரம் வரை சென்னையிலும் சேர்ந்தே இருப்பார்கள்.

பத்மாவிற்கு ஆண்கள் மூவரையும் பிரிக்க முடியாது என்று தெரியும். ஆனால் பெண்களிடம் அவ்வப்போது ஏதாவது சொல்லி எரிச்சல் மூடிக் கொண்டிருப்பாள். இதை மீனாட்சியும், ஜானகியும் பெரிது படுத்தாமல் விட்டு விடுவார்கள்.

மதி பேச ஆரம்பித்த பின், ஆதியை அத்தான் என்று தான் அழைப்பாள். சூர்யா ஜானகிக்கும், வந்தனா பத்மாவுக்கும் பிறந்திருந்ததால், ஆதியும், மதியும் முழுக்க மீனாட்சியிடமே பெரும்பாலும் இருப்பார்கள். ஆதியை கவனிப்பது மீனாட்சியே. அதனால் ஆதி  அத்தை, அத்தை என்று மிகவும் ஒட்டுதலாக இருப்பான்.

இது பத்மாவிற்கு பிடிக்கவில்லை. சூர்யாவும், வந்தனாவும் தங்கள் அம்மாவை விட்டு நகர மாட்டார்கள் என்பதால் ஆதியும், மதியுமே விளையாடுவார்கள். கிராமத்திற்கு செல்லும் போதெல்லாம் தோப்பு பம்ப் செட்டில்  குளிப்பது, தோப்பு மரங்களில் ஊஞ்சலாடுவது, மூன்று ஆண்களுடன் வயலுக்கு செல்வது என்றே சுற்றுவார்கள்.

ந்தனாவும், சூர்யாவும் சற்று வளர்ந்தவுடன் நால்வருமாக விளையாட ஆரம்பித்தார்கள். என்றாலும் ஆதி எல்லாவற்றிலும் மதிக்கு விட்டு கொடுப்பான். சூர்யாவிற்கும் வந்தனாவிற்கும் ஒரே வயதானதால் சண்டைதான் வரும். அவர்களை விலக்கி விடுவதற்கே ஆதிக்கும், மதிக்கும் சரியாக இருக்கும்.

சூர்யாவிற்கு பிறகு மூன்று ஆண்டுகளில் அதிதி ஜானகிக்கும், வான்மதி மீனாட்சிக்கும் பிறந்தனர்.  சென்னையில் முதலில் அனாவசிய செலவுகளை தவிர்ப்பதற்காக வாசுவும், ராகவனும் ஒரே வீட்டில் வசித்தனர். அதனால் குழந்தைகள் வளர்ப்பில் அடிக்கடி பத்மாவின் தலையீடு இருக்கும். அதிதி பெரும்பாலும் வந்தனாவோடு இருப்பாள். அதிலும் சூர்யா வந்தனாவை வம்பிழுக்கும் போதெல்லாம் அதிதி அவளை சப்போர்ட் செய்வாள்.

ஆதி பெரியவன் என்பதால் இவர்கள் சண்டையில் தலையிட மாட்டான். மேலும் அவன் தன் படிப்பு, சில தனிபயிற்சி வகுப்புகள் என்று சற்று பிஸியாக இருப்பான். ஏற்கனவே சூர்யாவும், அதியும் வந்தனவோடுதான் வளர்ந்தனர். ஆதி மட்டுமே கொஞ்சம் தன் அம்மாவின் பேச்சை கேட்பான்.ஆனால் ஆதியை கொஞ்சம் கொஞ்சமாக பத்மா தன் கைக்குள் கொண்டு வந்து விட்டாள்.

இந்நிலையில் ஆதியின் பதிமூன்றாம் வயதில் எல்லோரும் கிராமத்திற்கு சென்ற போது , வழக்கம் போல் எல்லோரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். வந்தனா சேர்ந்தே வளர்வதால் ஆதி என்றுதான் அழைப்பாள். மதி வெளியூர் சென்று விட்டாலும் ஆதியை அத்தான் என்றுதான் அழைத்துக் கொண்டுதான் இருந்தாள். இதை மற்ற யாரும் இயல்பாக எடுத்துக் கொண்டாலும், பத்மாவினால் முடியவில்லை. ஒன்றும் சொல்ல முடியமால் இருந்தாள்

அப்போது மதி புதிதாக பரத நாட்டியம் கற்றுக் கொண்டிருந்ததால் அவளை எல்லோரும் ஆட சொன்னார்கள். ஆதியும் பாட்டுக் கற்றுக் கொண்டிருந்ததால் அவனை பாட சொல்லவே, அவன் பாரதியார் பாடல் பாடினான்.

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா !  சூரிய சந்திர ரோ ? 

வட்டக் கரிய விழி, கண்ணம்மா ! வானக் கருமை கொல்லோ ? 

பட்டுக் கருநீலப் - புடவை பதித்த நல் வயிரம் 

நட்ட நடு நிசியில் - தெரியும் நட்சத் திரங்க ளடீ ! 

சோலை மல ரொளியோ - உனது சுந்தரப் புன்னகை தான் ? 

நீலக் கடலலையே - உனது நெஞ்சி லலைக ளடி ! 

கோலக் குயி லோசை - உனது குரலி னிமை யடீ ! 

வாலைக் குமரி யடீ ! - கண்ணம்மா ! மருவக் காதல் கொண்டேன். 

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா ! சாத்திர மேதுக் கடீ ! 

ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா ! சாத்திர முண்டோ டீ ! 

மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்பு செய்வோம் ; 

காதிருப் பேனோ டீ - இது பார், கன்னத்து முத்த மொன்று ! 

இந்த பாடலுக்கு ஆதியின் குரலும், மதியின் முக பாவமும் அத்தனை அழகாக வர, எல்லோரும் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர். பாட்டின் வரியில் லயித்திருந்த ஆதி பாடிக் கொண்டே வந்தவன், கடைசி வரியில் மதியின் கன்னத்தை முத்தமிட, ஆதியின் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.