(Reading time: 11 - 21 minutes)

"ங்கண்ணன் என்ன பேசச் சொன்னான்.. இப்படி கூப்பிட்டு சண்டை போடவா சொல்லி அனுப்பிச்சான்?.. "என்று கேட்டவனை முறைத்தவள்..

"போதும் எதுக்கெடுத்தாலும் அவசரப் படக் கூடாது.. அவன் சொல்லறதுலேயும் ஒரு பாயின்ட் இருக்கு.. நீங்க தான் மேனேஜ்மென்ட்ல படிக்கறேளே.. வின் வின் சிச்சுவேஷன் தான்.. எங்காத்துலேயும் சீக்கிரம் மேளச் சத்தம் கேக்கனும் அப்படியே உங்காத்து பணப் பிரச்சனையும் தீரணும்னா ஒரே வழி.. நீங்க உடனடியா என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கோ.. அப்புறம்.. உங்க பிரச்சனை யெல்லாம் எங்காத்து பிரச்சனையாயிடும்.. மஹதி அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தவுடன் என் அண்ணாவே பணம் தருவான் அவ கல்யாணத்தை நடத்த.. நீங்க எங்காத்துக்கு வந்துட்டா எங்கண்ணாவே ஏதாவது ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு தருவான்.."

"ஏய் போதும் நிறுத்து.. நான் தெரியாமதான் கேக்கறேன்.. நீங்கள்ளாம் இவ்வளவு சுயநலவாதிகளா?.. ஒரு மனுஷனுக்கு தன் மானம் இருக்கனும்.. என் காரியத்தை சாதிக்க என் வாழ்க்கையை புங்காத்துலே அடகு வைக்க முடியாது.. அது நீ எவ்வளவு பணம் குடுத்தா கூட திரும்ப மீட்க முடியாது.. இப்படி என்னை உங்களுக்கு விக்கறதுக்கு எப்படி எங்காத்துலே ஒத்துப்பா?.. அதை கூட யோசிக்க மாட்டேளா நீங்கள்ளாம்?", என்று பொறிந்து தள்ளியவனை பரிதாபமாய் பார்த்தாள் கவிதா..

"இதிலென்ன தப்பு இருக்கு.. வசதியா வாழ ஒரு வழி கிடைக்கும் போது அதை பிடிச்சிக்கறது தான் புத்திசாலித்தனம்.. எங்காத்துலே மாப்பிள்ளையா வந்தா உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு வேலையும் தயார்.. அப்படியே நீங்க ஆசைப்படும் போது உங்க பரிட்சையும் எழுதலாம்.. இதை புரிஞ்சிக்காம பேசறேளே?.. மேலும் என் இன்னமும் கூட ஒரு சிக்கல் இருக்கு.. இந்த வரன் எங்கம்மாவோட தெரிஞ்சவாளோட பையன் தான் இந்த டாக்டர்.. அவா ரொம்ப இண்ட்ரஸ்டடா இருக்கா .. சோ.. இனி.. நீங்க தான் ஒரு முடிவுக்கு வரணும்", என்று பந்தை அவன் பக்கமே உருட்டி விட்டாள்.

சட்டென்று எழுந்து வெளியே நடக்கத்தொடங்கினான் வசந்த்.. மனம் கொந்தளித்தது.. 'சே.. இவ்வளவு கேவலமா என் நிலை.. வீட்டிலே ஒரு மாதிரி அவமானம்னா வெளிலே அதை விட.. இவள் என்னில் பாதியாய் இருந்து ஊக்கமளிப்பாள் என்று பார்த்தாள் உயிரை அல்லவா எடுக்கிறாள்..நான் எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன்..வீட்டின் ஒரே பிள்ளை ஆனால்..யாருக்கும் அந்த நினைப்பு கொஞ்சமும் இருக்கும் போல் இல்லை.. பாவம் மஹதியும் அம்மாவும் தான் எனக்காக யோசிப்பார்கள்.. இப்போ இந்த விஷயம் தெரிந்தாள் அவ்வளவு தான்.. அப்பா ராமா மூர்த்தி நரசிம்ம மூர்த்தியாய் ஆகிவிடுவார்.. ஆண்டவா.. இந்த முறையவது நான் பாஸ் செய்ய வேண்டும்?? என்று மனதுள் பொருமியபடி கவிதாவின் பக்கம் திரும்பாமல் நடந்தான்.

கூடவே ஓட்டமும் நடையுமாய் வந்த கவிதா, "என்ன ஒன்னும் சொல்லாமல் போகிறீர்கள்?, என் அண்ணா கேட்டால் என்ன சொல்லுவது.. நாம் திரும்ப எப்ப மீட் செய்யலாம்?", என்று கேள்விகளை அடுக்கினாள்.

பெருமூச்செடுத்து தன்னை சமனப் படுத்தி கொண்டவன், "கவி..இப்போ என்னால் எதுவும் பேச முடியலை..என் மனம் கொஞ்சம் சரியானதும் நான் உன்னிடம் பேசுகிறேன்.. அதுவரை என்னை நீ தொந்தரவு செய்யாதே..", என்று கூறி விட்டு விடுவிடு வென்று போய் விட்டான்.

கால் போன போக்கிலே நடந்தவனுக்கு வழியெங்கும் ஒரே சிந்தனை.."நாளை?.. அடுத்தது என்ன?" இது இரண்டு தான் அவனுக்கு தலை போகிற பிரச்சனையாயிருந்தது.. என்னதான் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டாலும் கவிதா சொல்வதிலும் ஓர் நியாயம் இருக்கத்தான் இருக்க செய்கிறது.. அவளுக்கும் இருபத்தி நாலு முடிந்துவிட்டது.. இப்போது செய்யாமல் எப்போ செய்வார்கள்.. நம் வீட்டில் தான் மஹதிக்கு தாமதமாகி கொண்டிருக்கிறது.. ஆனால் அதுவும் நமக்கு நிச்சயம் காரணம் தெரியும்.. ஒன்று கூடினால் மற்றொன்று இடிக்கிறது.. இல்லாமை எவ்வளவு பெரிய கொடுமை.. அதை விட இயலாமை ரொம்ப மோசம்.. இல்லாமையும் இயலாமையும் போட்டி போட்டு கொண்டு டான்ஸ் ஆடுகிறது நம்ம வீட்டில்..', என்று நினைத்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தவன் துரைசாமி சப்வே தாண்டி கால் போன போக்கில் வெஸ்ட் மாம்பலம் வந்து விட்டதை உணர்ந்தான்.

இது தான் போலும் பழக்கம் என்பது.. மனம் எதையோ சிந்தித்தாலும் உடல் அதன் பழக்க தோஷத்தில் சரியான பாதையில் செவது எவ்வளவு விசித்திரம்..' என்று நினைத்தவன் நன்றாய் இருட்டிவிட்டதை பார்த்தான்.. மதியம் மூன்று மணியிலிருந்து அவளுடன் தர்க்கம் செய்ததில்.. நேரம் போனதே தெரியவில்லை என்று நினைத்தவனுக்குள் மீண்டும் அதே கேள்வி.. அடுத்தது என்ன?..

'எல்லாம் நன்றாய் தான் போகிறது ஆனாலும் வெற்றி கிட்டவில்லை.. நிச்சயமாய் ஏதோ ஒரு இடத்தில் நான் தப்பு செய்கிறேன்.. இதெற்கென்றே சில சிறப்பு வகுப்புகள் இருக்கு.. ஆனால் அதில் சேர்ந்து மேலும் மெருகேற்றிக் கொள்ள நம்மிடம் வசதி இல்லை.. அப்பா இன்னிக்கு சொன்னா மாதிரி இந்த ஐ.ஏ.எஸ் கனவை மறந்துவிட்டு வேலை தேட ஆரம்பிக்கலாமா? என்று நினைத்தவனுக்கு..

'தனக்கு என்ன வேலை கிடைக்கும் என்பதே பெரிய கேள்வி.. படிப்போ எம்.ஏ. ஹிஸ்டரி அண்ட் பொலிடிகல் சயன்ஸ்.. இதுக்கு என்ன வேலை கிடைக்கும்.. ஆண்டவா.. திரும்பவும் நிச்சயம் ஒரு கவர்ன்மென்ட் வேலைக்கு தான் போக வேண்டி இருக்கும்.. டி.என்.பி.எஸ். ஸி வழியா கூட ஐ.ஏ.எஸ். போகலாம்.. ஆனா.. இதெல்லாம் நடக்கும்னு எந்த ஒரு நிச்சயமும் இல்லை..'

'பாவம் அம்மா தொண்டை வரள பாட்டு எடுத்து உருகறா.. மஹதியோ கல்யாண ஆசைகளை மூட்டை கட்டி வெச்சுட்டு வீட்டுக்கு பொதி மாடு மாதிரி பாரம் சுமக்கறா.. அப்பாவுக்கும் பணம் அதிகம் கிடையாது..இந்த நிலையில் நம்மால் ஆன உதவியா நம்ம செலவை நாமளே பார்த்து ஏதாவது பார்ட்-டைம் உத்யோகம் தேடிக்க வேண்டியாது தான்.. மீதி நேரத்துலே எக்ஸாமுக்கு ப்ரிபேர் பண்ணனும்.. பார்க்கலாம்.. கடவுள் ஒரு வழி வச்சிருப்பார் நமக்கும்.. அன்னிக்கு குமார் ஏதோ வேலை இருக்குன்னு சொன்னான்.. மொதல்ல நாளைக்கு அவனை பார்க்கணும்.. விஷயம் தெரிஞ்சுண்டு சூட் ஆச்சுன்னா பார்க்கலாம், எப்படி எது ஆனாலும் வீட்டோட மாப்பிள்ளையா போவது என்பது நோ சான்ஸ்.', என்று நினைத்தபடி அவர்கள் வீட்டுக்கு அருகில் நெருங்கினான்.

தொடரும்

Episode 04

Episode 06

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.