(Reading time: 26 - 52 minutes)

12. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

த்தனை பரபரப்பாய் ஒரு பயணம். காரிலிருந்து இறங்கி நடந்தும் இருக்கிறாள். புடவை இடுப்பில் நிற்பதே பெரிய காரியமாய் தோன்றும் இந்நிலையில் அங்கு சொருகி வைத்த பாஃஸ்போர்ட் கதை என்னாச்சோ? அதைத்தான் சுகவிதா செக் செய்ய ட்ரை பண்ணி இடுப்பை தொட்டுப் பார்த்ததே.

ஆனால் விஷத்தை கேட்டுப் பார்த்து போராடிவிட்டு ஒரு வழியாய் சமாதானமாகி திரும்பிப் போய்க் கொண்டிருந்த அரணுக்கு அவள் செயல் சூசைட் அட்டெம்ட் என்ற ரேஞ்சிற்கு புரிந்துவிட, அதை தடுக்க என அவளை இப்படி பின்னிருந்து  பிடித்து, திமிறிய அவளை தடுத்து அவள் ஒளித்து வைத்திருக்கும் பாய்ஷனை பிடுங்க என அவள் தொட்ட இடத்தில் கை வைத்தான்.

அந்த நொடி அவன் மனதில் சுகவி பெண்ணென்றோ அது அவளது இடை என்றோ எதுவும் மனதில் இல்லை….சேவ் ஹெர் தான் இருந்த ஒரே நினைவு.

Nanaikindrathu nathiyin karaiஆனால் சுகவிதாவுக்கோ அது தப்பாக புரிந்து வைத்தது. மயங்கி விழுந்தாள். அரணுக்கு முதலில் வந்த உணர்வு கோபம்.

அவள் ஒன்றும் ஒரு வீக் பாடி சோப்ளாங்கி கிடையாது. ஃபிட் அன்ட் ஹெல்தி ஸ்போர்ட்ஸ் பெர்சன். அவள் இவன் செயலை புரிந்து கொண்ட விதத்திற்கு நின்று போராடி இருக்க வேண்டாமா? தன்னை காப்பாற்ற இவனை அடித்து துவைத்திருக்க வேண்டாமா? இப்படி மயங்கி விழுந்து வைத்தால் என்ன அர்த்தமாம்?

அவளை அள்ளி எடுத்து அருகிலிருந்த படுக்கையில் போட்டு, மறக்காமல் அவள் இடுப்பில் இருந்ததை உருவிக் கொண்டான். பார்த்தால் அது பாஸ்போர்ட். மனம் இலகுவாவதுடன் உருகியும் தான் போகிறது.

ஜீவா வந்துவிடுவான் என எத்தனை நம்பிக்கை இருந்தால் அவள் பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பாள்? ஜீவாவாக இவனை எத்தனையாய் காதலிக்கிறாள்? அதோடு சூசைட் என இவன் பயந்து நோகவும் தேவையில்லை…

இந்த நேரம் அரணிற்கு அழைப்பு. ப்ரபாத் தான்.

“மாப்ள….உடனே கிளம்பி வீட்டுக்கு வா…..சுகா அப்பா வந்துட்டு போயாச்சு….” 

“சே….வழக்கமா இவ மயக்கத்துல இருக்றது நல்லதுன்னே நினைக்க வேண்டி இருக்கு….” அவளை அள்ளி போட்டுக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் போனான் அரண்.

கிட்ட தட்ட அந்த வீட்டின் மெகா காம்பவ்ண்ட் வாலை தாண்டி கார் நுழையும் போதுதான் சுகவிதாவிற்கு அரைகுறையாய் விழிப்பு வந்தது. அரண் அவளை கடத்தி வந்தது ஸ்லோமோஷனில் உறைக்க,

 அதற்குள் காரை கொண்டு  நிறுத்திவிட்டான் தன் வீட்டு போர்டிகோவில் அவன். இப்பொழுது அவளால் மீண்டுமாய் பயப்படத்தான் முடிகிறது. இந்த பெரிய வீட்டிலிருந்து இவள் எப்படி தப்பிக்க? காரை திறந்து அவள் இறங்கி ஓட மயக்கத்திலிருந்து முழுதாய் வெளிவரா உடல் தள்ளாட,

‘கீழ விழுந்து வைக்கப் போறா இவ’ என்றபடி பதறிப் போய்  அரண் அவளை அள்ளி எடுத்தபடிதான் தன் வீட்டிற்குள் நுழைந்தான். எதையும் முழு அளவாய் திங் செய்ய முடியாத அரை மயக்க நிலையில் இருந்த  சுகவி இம்முறை தப்பிக்க வழியே இல்லை என்ற பய உணர்வோடு முழு மயக்கத்திற்குப் போனாள்.

 கையில் அவளை அள்ளி சுமந்தபடி வீட்டிற்குள் நுழைய அவனுக்கும் ஒன்றும் ஆனந்தமாகவெல்லாம் இல்லை.  இந்த வீட்டிற்கு  எப்படி அழைத்து வந்திருக்கவேண்டும் அவளை? இப்பொழுது இப்படி ஒரு நிலையில் பார்த்தால் அப்பாவுக்கு எப்படி இருக்கும்? இவனும் அப்பாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்?

இவன் சங்கடம் உணர்ந்தோ இல்லை இவர்கள் பேசிப் புரிந்து கொள்ள தனிமை வேண்டும் என உணர்ந்தோ இல்லை எப்படியும் இன்று மகனுடன் சண்டை போடுவாள் வருங்கால மருமகள், பின்னாளில் அதன் நிமித்தம் அவரைப் பார்க்க தர்மசங்கடப் படுவாள் என நினைத்தோ அவர் அங்கு இல்லை இப்பொழுது.

மாடியிலிருந்த ஒரு அறையில் அவளை போய் கிடத்தி மயக்கம் தெளிவிக்கவென முகத்தில் தண்ணீரை தெளித்துவிட்டு, அவள் புருவங்கள் சுழிக்க கண் திறக்கவும், எழுந்து அறையை விட்டு வெளியே வந்து வாசலருகில் இருந்த ச்சேரில் உட்கார்ந்து கொண்டான் அரண்..

இவன் முகம் பார்க்கவும் காட்டு கத்தல் கத்தி தன் எனெர்ஜியை தொலைப்பாள்…அதை கொஞ்ச நேரம் கழிச்சு ஸ்டார்ட் செய்யட்டுமே…

சில நொடிகள் சென்றிருக்கும் படார் என இட கை புஜத்தில் அடியும் அதோடு வலியும்…

ஸ்ஸ்ஸ்…..வலித்த கையை வலக்கையால் பிடித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான் கையில் கிடைத்த இவனது பேட்டுடன் அவதாரமாய் அவள்.

“பரவாயில்ல….இப்பயாவது ரேப் பண்ண வர்றவன்ட்ட சண்டை போடனும்னு தெரிஞ்சிருக்கே…. ஆனா ஒன்னு அடிக்றப்ப இப்டி கைல அடிச்சு வேஸ்ட்…..தலைல போடனும்...”

ஆக்சுவலி அடித்து துவைக்கும் ஐடியாவில் வந்தாள் தான் சுகவிதா….. ஆனால் முதல் அடி முடிவில் அவன் இவளைப் பார்த்த விதத்தில் மனம் மக்கர் செய்கிறது என்றால் இந்த டயாலாக்கிற்கு பின் என்ன செய்யவென புரியவில்லை.

அதே நேரம் சுகவிதா என்ற ஒரு அதட்டலுடன் உள்ளே வருகிறான் ப்ரபாத். அவள் அரணை அடிப்பதை பார்த்ததின் பின்விளைவு அது. இந்த சுகவிதாவுக்காக எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறான் அரண் என ப்ரபாத்திற்கு தெரியுமே….

மேட்ச் என்டில் இப்படி செருமனி அட்டென் செய்யாமல் வெளியே வந்ததற்கே அவனுக்கு பெனால்டி உண்டு. அடுத்து அப்படி வந்து அவன் செய்து வச்சிருக்கும் வேலைக்கு கிரிகெட் போர்ட் ஆக்க்ஷன் எடுக்கப் போவதாக இன்சைட் நியூஸ்…. அதோடு போலீஸ் ஆக்க்ஷன் வேறு இருக்கிறது….

மீடியா….விமன் லிப்….இப்பவே அவனை கிழித்து சபித்துக் கொண்டிருக்கிறது….

அதைவிட வர்ற வழியில் ஒரு கூட்டம் அவன் உருவபொம்மையை செருப்பால் அடித்து தீ வைத்தது இவன் பார்வையில் விழ……அதை தாண்டி வருவதற்குள் உயிர் கொதித்துப் போய் இவன்…

எல்லாம் இந்த சுகா பிடிவாதத்தால வந்த வினைதான….. இவளை நோக்கி தட தடவென வந்தான் ப்ரபாத்.

 ஞாபகம் தெரிந்து ப்ரபாத் அவளை முழுப் பெயர் சொல்லி கூப்பிட்டது இல்லை. இன்று அத்தனை கோபமா? அதுவும் அரணுக்காக….. அரண் முன்னாலயே…..அதுவும் அவன் இவளை இப்டி கிட்நாப் பண்ணிட்டு வந்து அடச்சு வச்சிருக்கும் போது……உலகமே இவளை கைவிட்டது போல் ஓர் வலி…..கண்ணில் அதுவாக சுட சுட நீர் உற்பத்தி….

ஆனாலும் அம்மாவின் கையில் அடிவாங்கும் குழந்தை அழுதபடி அம்மாவின் காலையே ஓடிச் சென்று கட்டுவது போல்….. கையிலிருந்த பேட்டை தூக்கிப் போட்டுவிட்டு ப்ரபாத்தை நோக்கி ஓடியவள் அவன் கை மணிக் கட்டைப் போய் பிடித்தாள்.

“எதுக்கு என்னை திட்ற…?” கண்கள் குளமாகி இருக்க ப்ரபாத்தைப் பார்த்து கேட்டாள்.

சிறு வயதில் எதற்காவது பயந்துவிட்டாள் எனில் இப்படித்தான் போய் அவன் மணிக்கட்டை பிடிப்பது அவள் வழக்கம்.

வளர்ந்த பின் சுத்தமாய் இல்லாது போன விஷயம்…..இன்று வருகிறது.

மத்த நேரமாய் இருந்தால் நிச்சயமாய் உருகிப் போயிருப்பான் அண்ணன்காரன்.

இன்று கோபம் இறங்க மறுக்கிறது.

“அவன் என்ட்ட தப்பா…..” அவள் குற்றப் பத்திரிக்கை ஆரம்பிக்க

 “அவன் உன்னை ஒன்னும் செய்திருக்க மாட்டான்…..” அறைந்தார் போல் வெட்டினான் ப்ரபாத்.

அவ்வளவுதான் கொதித்துப் போனாள் இவள்.

ஆக அரணுக்கு எதிராக என்றால் இவள் சொல்வதை இந்த விஷயத்தில் கூட நம்பமாட்டானா இவன்….? ஈகோ எக்குதப்பாய் ப்ரவோக் ஆகி எகிறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.