(Reading time: 26 - 52 minutes)

“…வன் என்ட்ட மிஸ்பிகேவ் செய்தான்னு நான் சொல்றேன்” புயலை ப்ரசவிக்க இருக்கும் வானம் போல் நின்றிருந்தாள் அவள்.

“இங்க பாரு…” அவள் கைகளை அவன் முன் நீட்டினாள். அரண் அவளை பிடித்த போது அவள் திமிறியதில் திருமணத்திற்காய் அணிந்திருந்த பரு நகைகளில் ஏதோ அவள் கைகளில் ஆங்காங்கு கிழித்திருந்தது. நகக் கீறல்கள் என்று சொன்னால் நம்பலாம் எனும் படியாய்….

எந்த சூழலிலும் அரணை சந்தேகப் பட்டிருக்க மாட்டான் ப்ரபாத்…..மற்ற நேரமாய் இருந்தால் என்னதுடா இது…? என கேசுவலாக விளக்கம் கேட்டிருப்பான் சுகாவுக்காக…..ஆனால் இன்றைய கோப கொந்தளிப்பில் அவன் அதை கூட செய்ய தயாராக இல்லை.

“அவன் எப்பவும் தப்பே செய்ய மாட்டான்…..எப்பவும் எதுனாலும் தப்பா செய்றது நீ தான்….” ப்ரபாத்தின் இந்த வார்த்தைகள் சுகவிதாவுக்கு என்னதாய் இருக்கும் என அரணுக்கு புரியும் தானே..

“ப்ரபு…”  என்றபடி அவன் எழுந்து வரும் முன்

“சோ நீ என்ன நம்பலை…...அப்போ எனக்கு யாருமே இல்லை…. “ சொல்லியபடி வேக வேகமாக படிகளை நோக்கி ஓடினாள் பெண்.

“டேய் அழுதுட்டே போறாடா….கூப்டுடா மாப்ள….” வேற யாரு அரண் தான்.

“யாரு….? அவ?....உன்னத்தான் அழ வைப்பா….போட்டும் போ”

“ப்ச்…என்ன ப்ரபு நீ, இந்த நேரத்துல போய் சின்ன பிள்ள மாதிரி பிடிவாதம் பிடிச்சுட்டு…. போய் அவட்ட பேசுடா….”

“ஆனா ஒன்னுடா நீ சொன்னதுல ஒன்னு சரி…..அவ உன்ன மண்டைல போட்றுக்கனும் பேட்டால…..உனக்கு தெளிஞ்சிருக்கும்…..” சொல்லிவிட்டுப் பார்த்தால் அங்கே திரும்பவுமாக வந்து நின்றாள் சுகவிதா….

இப்படியே ஓடிப் போனா வெளிய போறது எப்படியாம்…..? ஆக ஐடியாவுடன் திரும்பி வந்திருந்தாள் அவள். சோ இப்டில்லாம் இந்த அரண் நடிச்சா இந்த பால் பாக்கட் ஏமாறாம என்ன செய்யுமாம்…? ஆனாலும் இந்த அரண் எனக்கு ரெக்கமென்ட் செய்ற அளவுக்கு ஆகிப் போச்சு என்ன? நடந்த பேச்சை கேட்டவள் இப்படியாக நினைத்து இன்னுமாய் முறுக்கிய படி  ப்ரபாத் கையிலிருந்த அவன் கார் சாவியை உரிமையாய் வெடுக் என பிடுங்கிக் கொண்டு விரைப்பாய் இறங்கிப் போனாள்.

ப்ரபாத் இருக்கும் போது அவளை யாரும் இழுத்துப் பிடித்தெல்லாம் அடைத்து வைக்க முடியாது என்பது அவளுக்கு தெரியாதா என்ன?

தன் நெத்தியில் இடக் கையால் அடித்து கொண்ட அரண் முகத்தில் அத்தனையையும் மீறி ரசனையும் புன்னகையும்…

வேக வேகமாக படி இறங்கி வந்தாள் சுகவிதா. ப்ரபாத் பேசியதில் அவளுக்கு படு வருத்தம் தான்…. ஆனால் அவனோடு உறவை முறிப்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காரியம்…..இந்த அளவுக்கு இந்த அரண் இவனை ப்ரெய்ன் வாஷ் செய்திருக்கான் நினைத்தபடியே அந்த வீட்டின் ஹாலில் இறங்கினாள்.

ங்கு டி.வி ஓடிக் கொண்டிருந்தது. நியூஸ்… பார்த்துக் கொண்டிருந்தது….. திரியேகன். இவள் மனதில் ஏதோ பெரிதாய் விழுந்து அடைத்தது. தன் அப்பா இருக்க வீட்டுக்கா ஒருத்தன் இவள கிட் நாப் செய்துட்டு வந்தான்? ஏன்?

அவள் பார்வை அதுவாக டி.வி க்கு செல்ல…..சற்று முன் ப்ரபாத்தை கொதிக்க வைத்த விஷயங்கள் காட்சியாய் ஓடிக் கொண்டு இருந்தது. உருவ பொம்மை எரிப்பு… அதோடு அரணுக்கு கிரிக்கெட் போர்ட் அறிவித்திருக்கும் பெனால்டி, இவள் விஷயமாக வாரியம் செய்யப் போகும் விசாரணை, சீப் மினிஸ்டரின் ‘விசாரித்து சுகவிதாவுக்கான நியாயம் வழங்கப் படும்’ என்ற பேட்டி… போலிஸ் ஆக்க்ஷன்ஸ்….விமன் லிப்…இப்படி எல்லாம்

 இத்தனை உயரம் ஸ்போர்ட்ஸில் வருவதுக்கு அரண் எத்தனை பாடு அனுபவித்திருப்பான் என்பது இவளுக்கு புரியுமே….. அதை ஒரு நாளில் பலி இடுவது என்றால்….??? இவளுக்கே பதறுகிறது……. பார்த்துக் கொண்டிருக்கும் திரியேகனுக்கு எப்படி இருக்கும்?

இந்த அரண் ஏன் இதைச் செய்தான்…? எதுக்காக தன்னைத் தானே சிலுவையில அடிச்சுகிட்டான்…..?  இப்ப இவ்ளவு ஈசியா இவளை வெளிய போகவும் விடுறான்….?

 கைகாலில் முழு உடலில் உள்ளூர உதறல்…. போய் ப்ரபாத்தின் காரை திறந்து ஸ்டார்ட் செய்தாள். இவளை கிட்நாப் பண்ணி  வச்சுருக்கிற வீட்டுக்குள்ள ப்ரபாத்த விடுறதுன்னா? அரணோட இன்டென்ஷன் என்ன?

அவளுக்குள் அவளுக்கே புரியாத ஒருவகை கூச்சல் அண்ட்  க்ரீப்பி ஃபீலிங் உள்ளுணர்வில்…..  இப்போ இவ வெளிய போறது அரண பொறுத்தவரை சாவு மணி….இவ்ளவு ஈசியா இவளை வெளிய  விட ஏன் அவன் இவளை கிட்நாப்  செய்தான்….?

வீட்டை விட்டு இப்ப வெளிய போய்ட்டா ஒரு நாளும் அந்த  காரணம் இவளுக்கு தெரியாமலே போனாலும் போய்டலாம்….. முழு மனதாய் வெளியே போக முடியவில்லை…

ப்ரபாத் இருக்ற வீட்ல இவள ஹார்ம் பண்ண ஒருத்தராலும் முடியாது. சோ துணிந்து மீண்டுமாய் உள்ளே வந்தாள்.

திரியேகன் இன்னும் அங்கு தான் இருந்தார். தலையை குனிந்த படி மாடிக்கு படியேறினாள்.

இவள் பாய்ஷன் சாப்டுறக் கூடாது என கைகளை கட்டிய அரண் இவள் மனதில்…..

“பாய்ஷன குடுத்துடு நானும் நிம்மதியா இருப்பேன்….நீயும் ஃப்ரீ ஆகிடலாம்…….” அவன் சொன்னானே… அடுத்தும் அதை கேட்டு எத்தனை வாதம். பழி வாங்குறதுக்கு காப்பாத்தனுமா?

தப்பு செய்துட்டு தப்பிக்க நினைக்றவன் பப்ளிக்காவா கடத்துவான்? இந்த கேள்விக்கும் இன்னும் பதில் இல்லை என்பதும் நியாபகம் வருகிறது.

 “இது உன்னை இந்த வெட்டிங் களேபரத்துல இருந்து காப்பாத்த மட்டும் தான் சுகவி…. பாய்ஷன் சாப்டுவேன்னு வேற ரொம்ப பயம் காட்டிட்ட….” சொன்னானே…..இப்பவும் வெட்டிங் பயம் இனி இல்லைனதும் இவ இஷ்டத்துக்கு வெளிய போக விடுறான் தானே……அப்டினா இதுக்காகவா இந்த அரண் தன் தலைல தானே மண்ணள்ளிப் போட்டுகிட்டான்…???

அரண் இருந்த இடத்திற்கு பக்கத்தில் போகும் போதே அவன் பேசுவது காதுக்கு விழுகிறது தான். அங்கேயே நின்று கொண்டாள்.

“ப்ரபு சொன்னா கேளு….தயவு செய்து போ…..”

“ வாய மூடுறா நீ…”

“டேய் அவ போலீஸ் ஸ்டேஷன்ல போய் தனியா நிப்பாடா…. கண்டிப்பா இப்போதைக்கு அனவரதன் அங்கிள் கூடயும் போக மாட்டா… ஏற்கனவே கொஞ்சம் விவரம் பத்தாது….பானிக் ஆவாடா….”

“அதுக்காக உனக்கு கடைசி ஆணியையும் அவ ஒழுங்கா அடிச்சாளான்னு பார்க்க நான் போகனுமா….?” அரணைப் பார்த்து சீறிய ப்ரபாத்

“ அவ போய் இவன் மேல கம்ப்ளெய்ன்ட் கொடுப்பாளாம்…அதுக்கு துணைக்கு நான் போகனுமாம்… “  கடித்து துப்பினான்.

“அவ்ளவு அக்கறை இருக்றவன் நீயே கூட போயேன்….” எரிந்து விழுந்தான்.

“கண்டிப்பா போவேன்டா…. அது உனக்கும் தெரியும்… ஆனா அவ ஒத்துக்கனுமே என் கூட வர?”

அவ்வளவுதான் அரணின் ஷர்ட் காலரைப் போய்ப்  பிடித்தான் ப்ரபாத்.

“ஏன்டா எவ்ளவு கஷ்டப்பட்டு எத்தனை பாடுபட்டு கட்டின கரியர்டா இது….அங்க எல்லோரும் தெருல போட்டு எரிச்சுகிட்டு இருக்கான்….” கொதித்தான் ப்ரபாத்.

“அவள மால்ல வச்சு செக்யூரிட்டி இருக்றப்பவே கிட்நாப் பண்ண ஆள் இருக்குன்னா… இப்ப தனியா நிக்றப்ப எவன் என்ன செய்வானோ?” அமைதியாய் சொன்னான் அரண். ப்ரபாத்தின் அங்குசம் எது என இவனுக்கு தெரியாதாமா?

அவ்வளவு தான். தன் தலையைப் பிடித்துக் கொண்டான் ப்ரபாத். “ போறேன்…போய் தொலையுறேன்…. வேறவழி….அவ உனக்கு ஆணி அடிக்கா…நீ எனக்கு அடி…. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.