(Reading time: 26 - 52 minutes)

வன்தான் ஆயிரம் சொல்லி ஆறுதல் செய்தான்….. அதில்   “ உனக்கே தெரியும் உன் அப்பா உன்ட்ட பேசுற அளவுக்கு உன் அம்மாட்ட பேச மாட்டாங்கன்னு….இனிமே அவங்க ரெண்டு பேருக்குள்ள உள்ள ரிலேஷன்ஷிப் ரெக்கவராகும்னு நினைச்சுப் பாரு சுகா…” என்ற பாய்ண்ட் கொஞ்சம் திருப்தியை தந்தது நிஜம்.

ஆனாலும் “எனக்கு அம்மாட்ட பேசனும்….”  என்ற போது கண்ணில் திரும்பவும் நீர்.

அதிசயமாய் ப்ரபாத்தின் அழைப்பை ஏற்றார் புஷ்பம். பொண்ணு மனசு அம்மாவுக்கு புரியுமே….

“ சுகி பொண்ணுங்க யாரும் இல்லாத வீட்டுக்கு கல்யாணாமாகி போற….அங்க போய் அடுத்தவங்க உன்னைப் பார்த்துகிடனும்னு நினைக்காம நீ தான் அதை உன் வீடா நினச்சு எல்லாத்தையும் பார்த்துகிடனும்…… இத்தன கஷ்டபட்டு நடக்குது இந்த மேரேஜ்….அதுக்கு ப்ரயோஜனமே நீ அங்க போய் சந்தோஷமா இருக்ரதுலதான் இருக்குது……அழுதுகிட்டு அழ வச்சுகிட்டு இருக்க கூடாது…..உங்கப்பா பார்த்திருந்த மாப்ளையவிட அரண் தம்பி மாப்ளையா வரதுல எனக்கு ஆயிரம் மடங்கு அதிக சந்தோஷம் தான்….ஆனா எல்லாம் மறந்து நாங்க வந்து சேர கொஞ்சம் டைம் வேணும்…..வருஷம் போக குழந்தைங்கன்னு வரவும் எல்லாம் சரியாகிடும்…அதனால எதையும் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இருக்கனும்…”

“அரணதான் உங்களுக்கு பிடிச்சிருக்குல்லமா நீங்களாவது வரலாம்ல…” கெஞ்சினாள்.

“உங்கப்பா ஈகோக்கு உன் லைஃபை பலிகொடுக்க கூடாதுன்னு நான் நினைக்க காரணம் உன் மேரேஜ் லைஃப் என்னை பொறுத்த வரைக்கும் அவ்ளவு முக்கியம்…அப்டித்தானே என் மேரேஜ் லைஃபும் எனக்கு….. உன்னை உன் அரண்ட்ட கொடுத்தாச்சு….இங்க அப்பாக்கு யார் இருக்கா? நான் தானே….அதனால அப்பா சேர்ந்துக்க வரைக்கும் அவரைவிட்டுட்டு அவருக்கு தெரிஞ்சோ தெரியாமலோ உன்ட்ட உறவு கொண்டாட எனக்கு முடியாது. அப்பாக்கு நமக்குன்னு யாரும் இல்லைனு தோணிடும்…. ”

அதன் பிறகு சுகவிதா நோ டர்நிங் பேக். சந்தோஷமாகவே இருந்தாள்.

திருமணவிழா ஆரம்பிக்கவே வெரி லேட். ஆக எல்லாம் முடிந்து அரணுடன் அவன் அறைக்குள் நுழையும் போது ரொம்பவுமே பின்னிரவாகி இருந்தது. சுகவி காதலை பகிர்ந்து கொண்டபின் அதாவது அரண்தான் ஜீவா என ஒத்துக் கொண்ட பின் அவர்களுக்கு கிடைக்கும் முதல் தனிமை. அவளிடம் பேச, தன்னவளை சீண்ட ஆயிரம் இருக்கிறதுதான் அவனிடம்….

ஆனாலும் சூழ்நிலையின் ப்ரமாண்டம்… உண்மையின் ப்ரமிப்பு….நேற்றுவரை இருவர் உறவு நிலைக்கும் இன்றைய நிஜத்திற்கும்….. நாள் முழுவதும் நடந்துவிட்ட மெகா டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸுக்கும்…. அவனுக்கு அவள் அவனவளாய் அருகில் இருக்கிறாள் என்பதே அதி அதிசயமாய்…. அவளை பார்வையால் பருகிக் கொண்டிருந்தான் அவன்…

சுகவிக்கோ அவனை எத்தனை பாடுபடுத்திவிட்டு அதைப் பற்றி ஒரு வார்த்தைப் பேசாமல் ஒன் ஷாட்டில் அவனை கல்யாணம் செய்து கொண்டு….கோடிமடங்கு காதலும்….குறைவில்லாத குற்ற குறுப்புமாய் அவள் நிலை….

“ அரண்….”

அவளது அழைப்பிலேயே அவள் மனம் எங்கிருக்கிறது என புரிந்துவிட்டது அவனுக்கு…. இன்று ப்ரஸ் மீட் சென்ற போது அரண் என அழைத்தாள் தான்…அது அரணும் ஜீவாவும் ஒன்று என நான் புரிந்து கொண்டேன் என்பதின் வெளிப்பாடு….ஆனால் இது வேறு…

 “சொல்லு விதுக்குட்டி…”  அவன் மனதில் அவள் மீது எந்த நெருடலும் இல்லை என காண்பித்தாக வேண்டும் அவனுக்கு.

“நீங்க தரேன்னு சொன்னத எனக்கு தரலை…” அவனுக்கு வெகு அருகில் சென்று அவன் முகம் பார்த்து நின்றாள். பரிதாபமாய் ஒரு லுக்.

“என்னது விதுமா?” நிஜமாகவே இப்பொழுது அவன் குழம்பிப் போனான்….

“அன்னைக்கு பீச்ல வச்சு மிரட்னதுக்கு……” அரணுக்கு விஷயம் புரிந்து அதன் தொடர்ச்சியாய் அவன் ப்ரபாத்துடன் பேசிய சிக்‌ஸர் வரை நியாபகம்….

“வாய்ல ரெண்டு போடுவேன்னு சொன்னீங்க”

கண்களை மூடி தன் நாடியை உயர்த்தி

“ரெண்டு போடுங்க ஜீவா அப்பவாவது நிம்மதியா இருக்கும்…” அசையாமல் அவன் முன் அவள்.

செல்லமாய் விளையாட்டாய் ரெண்டு தட்டு தட்டலாம் எனதான் முதலில் அவன் நினைத்தது.

ஆனால் தலையிலிருந்து வழியும் மல்லிகை சரங்களும், நீண்டு ஆடிய ஜிமிக்கிகளும், செழுமையுற்றிருக்கும் கன்னங்களும்,  சிற்சில சலனத்துடன் மூடியிருக்கும் சிப்பி இமைகளும் சீராக சிவந்திருக்கும் அவள் சின்ன உதடுகளும்…..கல்யாணமாகியிருந்த சில மணி நேரங்களும்… கணவனாய் அதில் கவனம் செல்லவும் கதை மாறிப் போனது….

இதழால் தொடங்கி…. அரணாய் அவளை சூழ்ந்து…..அவன் ஜீவன் அவள் என்றாக்கி……. தம்பதி படலம்.

பின்னும் திறந்த மனதுடன் விடிய விடிய விளையாட்டாய் தொடங்கிய சண்டை முதல் சமீபத்திய அனைத்தும் வரை அவரவர் உணர்வை சொல்லி, அடுத்தவர் வார்த்தையை அப்படியே ஏற்று……

றுநாள் ஏர்போர்ட்டில் தம்பதிகளுடன் வந்து ஜாய்ன் செய்தது ப்ரபாத். கொல்கதா போகத்தான். இருவரையும் இப்படி பார்க்க அவனுக்கு படு திருப்தியாய் பரிபூரணமாய் ஒரு உணர்வு. அத்தனை பூரிப்பு இருவரிடமும்….இருவரும் கோர்த்த கையை ஒரு நொடி கூட விடவில்லை. 

நேற்று அவள் அழுத நேரம் ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் ப்ரபாத்திற்கு உள்ளுக்குள் படு டென்ஷன். இந்த விஷயத்துல பொண்ணுங்க சைகாலஜி அவனுக்கு என்ன தெரியும்…

.எப்டி கல்யாணம் நடந்தாலும் முத நாள் அம்மா வீட்டை விட்டுட்டு வர எல்லா பொண்ணுங்களும் அழுவாங்க….. மறுநாள் அதே அம்மா வீட்டுக்கு மறுவீடு வந்துட்டு கிளம்பிறப்பவே அந்த அழுகை காணமபோயிருக்கும்னு…..

 அரண் அவள பார்த்துப்பான்…..எண்ணம் வருகிறது நிறைவாய்….ஆனால் இந்த சில்வண்டு சுகா அரணை படுத்தாம இருக்கனுமே…

“என்னடா எல்லா சண்டையும் முடிச்சு சமாதானமாகியாச்சு போல…. அந்த சிக்‌ஸர் விஷயத்தெல்லாம் செட்டில் பண்ணியாச்சா? “ ப்ரபாத்திற்கு சுகவிதாவின் இந்த மிரட்டி காரியம் சாதிக்க முயலும் முறை சுத்தமாக பிடிக்கவில்லை. அது இனியும் தொடரக் கூடாது. ஆகவே அரணிடம் அதைப் பற்றி அவளிடம் “ஸ்ட்ராங்கா சொல்லி வச்சுடு மாப்ள” என சொல்லியிருந்தான் நேற்றே. அதைத்தான் அவன் கேட்டான்.

அரணுக்கு ப்ரபாத்தின் கேள்வி புரிந்தாலும் கூட முந்தய இரவு நினைவில் குறும்புடன் கண்கள் அதுவாக மனைவியைப் பார்க்க, சுகவிதாவிற்கோ வெட்கத்தை முந்தி புரை ஏறுகிறது.

“என்னடா செட்டில் செய்தியா இல்லையா…ஆரம்பத்துல இருந்து….” ப்ரபாத் சொல்லிக் கொண்டு போக ஓங்கி வைத்தாள் ஒன்று சுகவிதா.

ப்ரபாத்திற்கு என்னவென்று புரியவில்லை எனினும்…..அவன் நினைப்பது போல் விஷயமில்லை என புரிய….

“நேரம்……எனக்கு தெரியாம இந்த சில்வண்டு கூடெல்லாம் நீ டீம் போட்டு சீக்ரெட் மெய்ன்டன் செய்ற….” ப்ரபாத் புலம்ப

“மாப்ள உனக்கும் மேரேஜாகட்டும் சீக்ரெட் டீம், சிக்‌ஸர் எல்லாம் கிடச்சிடும்….” அரண் ஆறுதல் சொன்னான்,

“சின்னப்பையன்ட்ட போய் என்ன பேசிட்டு இருக்கீங்க….” விஷமமாய் சுகவிதா அரணை அதட்ட ப்ரபாத் காதில் லிட்ரலி புகை.

இந்த சுண்டெலிலாம் என்னப் பார்த்து இப்டி சொல்ற அளவு ஆகிட்டே….

 “சீக்ரமா நானும் என் சிக்‌ஸரை கண்டு பிடிக்கேன்.” வாய்விட்டு சொல்லி வைத்தான்.

இதுதான் அவன் பின்னாளில் சங்கல்யாவுக்கு சிக்‌ஸர் என பெயர் வைக்க காரணமோ என்னவோ….

அரண் நடந்தைவைகளை நினைத்துப் பார்த்து அதில் சொல்ல வேண்டியவைகளை, சொல்ல முடிந்தவைகளை மாத்திரமாக சொல்லிக் கொண்டு வந்தான் சங்கல்யாவிடம். நிச்சயமாக இது சென்சார்ட் டாபிக்.

 ஆக திருமணமான ஆரம்பத்தில் எல்லாம் நால்லாத்தான் போச்சுது.  அந்த ஐ பி எல் சீசன் முடியும் வரையும் சுப காலம். அடுத்து வந்ததது ப்ரச்சனை பூதம்.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.