(Reading time: 30 - 60 minutes)

ந்த சூழலில் அவர்களது பாமிலி ப்ளானிங் ப்ரோசீரை தாண்டி அன்எக்‌ஸ்பெக்டட் ப்ரெக்னன்சி. அரண்டு போனாள் சுகவிதா. அரண் இவள் அவனை ஏமாற்றி கருதரித்ததாய் நினைத்துவிட்டால்?

“நிஜமா எப்டி ஆச்சுன்னே தெரியலை ஜீவா…..நான் உங்களை ஏமாத்தலைபா…..ப்ரெக்னென்சி பாஸிடிவ் வந்திருக்கு ” அழுது கொண்டே இப்படித்தான் ஃபோனில் அவனுக்கு அந்த செய்தியை அறிவித்தாள்.

“லூசு….உன்ன நம்பாம நான் யார நம்ப?” என்றவன் அடுத்த சில மணி நேரத்தில் அவளுடன் இருந்தான். அவளோடு இருக்க ஸ்பெஷல் பெர்மிஷனில் வந்திருந்தான். குழந்தை அப்பொழுதைக்கு வேண்டாம் என நினைத்தான் தான் ஆனால் வந்து உதித்த பின் அது அவனுக்கும் உயிரல்லவா? அதோடு இந்த நேரத்தில போய் இவன் விது அழுதுட்டு வேற இருக்கா.

எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு சந்தோஷமாக மனைவியை வைத்துக் கொள்ள முனைந்தான் அரண். கர்பகாலத்தில் மனைவியை தாங்க கணவனின் மனம் பாய்ந்தோடுவது இயல்புதான். பெரியவர்கள் துணை வேறு இல்லாத நிலை. அதோடு அவள் மனதில் ஒரு மூலையில் கூட இது இவனுக்கு விருப்பமில்லாத குழந்தை என்றோ…இல்லை அவளை இவன் நம்பவில்லை என்றோ நினைவு வந்து விடக் கூடாது என்ற அஅடட் பர்டன் வேறு அரண் மனதில்.

அவளுக்கு நோ சொல்லும் பழக்கத்தை மொத்தமாக கைவிட்டான் அவன். அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்தான். அதுவரை டைட் ஃபிட்னெஸ் ரெஜிமில் வளர்ந்தவள் தான் சுகவிதா…ஆனால் இந்த நாற்பத்து நாலு மணி நேரமும் இருக்கும் நவ்சியா…ஆம் அப்படித்தான் நாளே நீண்டு போனதாய் பட்டது இடைவிடாத வாமிட்டிங் சென்சேஷனில்….அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வாக்கிங் போக கூட முடியவில்லை. எல்லா நேரமும் பூனைக்குட்டிப் போல் அரண் கைக்குள் சுருண்டு கொண்டால் நன்றாக இருக்கும் போல் இருந்தது அவளுக்கு. அவன் வீட்டில் இருந்தாலும் இல்லையெனினும் படுக்கை அறையே அவளது பெர்மனட் ப்ளேஸ் என்பதுபோல் ஆனது.

அடுத்த ப்ரச்சனை அவளுக்கு வாமிடிங் சென்சேஷன் வயிற்றைப் பிரட்டி எடுத்தாலும்….வாமிட் என்று ஒன்று ஆகவே இல்லை….அந்த நேரத்தில் அது நல்ல விஷயமாக பட்டாலும் வெயிட் கெய்ன் டாப் கியரில் எகிறியது… ஆம் ஏனோ அந்த தாங்க முடியாத நவ்சியா பால்போல் எதாவது குடித்தாலோ அல்லது புளி குழம்பில் சாதம் சாப்பிட்டாலோ சில நிமிடங்கள் அடங்குவது போல் ஒரு உணர்வு….ஆக பசிக்கிறதோ இல்லையோ எதையாவது குடித்துக் கொண்டோ அல்லது சாப்பிட்டுக் கொண்டோ அவள். வாமிட் வேறு இல்லை…ஒரே படுக்கை…பின் வெயிட் ஏறாமல் என்ன செய்யுமாம்?

அவ்வப் பொழுது அவளுக்கு அட்வைஸ் செய்தாலும்…..கூட இருக்கும் போது கெஞ்சி கொஞ்சி அவளை வாக்கிங் கூட்டிப் போனாலும் அரணும் அவளை எதற்காகவும் கட்டாயப் படுத்தவில்லை. முன்பு சொன்ன காரணம் உபயம்.

You might also like - Enna thavam seithu vitten... A family drama

டுத்த துன்பமாக சுகவிதா தன் அம்மாவுக்காக ஏங்க தொடங்கினாள். சமையல் செய்தாலே அம்மாவை அத்தனையாய் மிஸ் செய்தவள் இப்பொழுது அம்மாவாகப் போகும் போது எத்தனையாய் ஏங்குவாள்??  8 மாதத்தில் 28 கிலோ எடை கூடி இருந்தாள் சுகவிதா. நார்மல் டெலிவரிக்கு வாய்ப்புகள் குறைவு என்றனர் கைனகாலஜிஸ்ட். 22 வயதில் அவள் உயரத்திற்கு இப்படி ஒரு நிலை என்பது நிச்சயம் டூ மச் தான். சுகவிதா மனதளவில் இதில் ரொம்பவும் தளர்ந்து போனாள்.

“சிசேரியன்ல நான் செத்துப் போய்ட்டா என் அம்மாவ பார்க்காமலே போய்ருவேன்ல….”

“அப்டி எதாவது ஆச்சுதுன்னா குட்டி ஹயாவோ ஹயனோ, பாப்பாவ அம்மாட்ட கொடுத்துட்டு நீங்க வேற மேரேஜ் செய்துகோங்க ஜீவா”

“அம்மாவுக்கு நான் தான் இல்லை….என் குழந்தையாவது இருக்கட்டும்….நீங்களும் உங்க அப்பா மாதிரி தனியா ஆகிட்டீங்கன்னு ஆகிட கூடாது….”

அவ்வப் பொழுது அவள் இந்த ரேஞ்சில் பேச நிச்சயமாக இதை தாங்கும் சக்தி அரணுக்கும் இல்லை….அவன் அம்மா இல்லாமல் வளர்ந்தவன் இல்லையா…..ஆணி வேர் வரை ஆடிப் போனான். எப்படியும் தன் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் அதுதான் அவளுக்கு பாதுகாப்பு என்று கூட தோன்றிவிட்டது அவனுக்கு.

“விதான்னா லைஃப்னு அர்த்தம்….அதான் ஜீவானு எனக்கு நிக் நேம் வச்சுகிட்டேன்….இப்போ நீங்க ஜீவா நான் விது…அதனால நம்ம குழந்தைக்கும் லைஃப்னு தான் நேம் வைக்கனும்…சோ கேர்ளோ பாயோ ஜீவாதான் நேம்” என்றவள் ஒரு வழியாய் அதே அர்த்தம் வரும் ஹயா அல்லது ஹயனுக்கு மாறி இருந்தாள்.

“லைஃப்ல இருந்து லைஃப் தான் வரும்…”

என சொல்லிக் கொண்டிருந்தவள் இப்படி லைஃப் முடியப் போகுதே என பயப்பட…. அவள் சதோஷமாக தைரியமாக ப்ரசவத்தை ஃபேஸ் செய்ய அவளுடைய அம்மாவுடன் இருப்பது அவசியம் என உணர தொடங்கினான் கணவன். ஆக சுகவிதா அவள் அம்மாவை சந்திக்க ஏற்பாடு செய்தான். வேற எங்க வழக்கம் போல சர்ச் தான். ஆனால் சன்டேயில் இல்லாமல் ஒரு வியாழக் கிழமை ஃபாஸ்டிங் ப்ரேயரில். ஆக கூட்டம் இல்லை. அதோடு புஷ்பமும் மகளைப் பார்த்தவுடன் முன்பு பழக மாட்டேன் என சொல்லி இருந்தது போல் முகத்தை திருப்பிக் கொண்டு போகவில்லை….

அவரும்தான் மகளை எத்தனை காலம் கழித்துப் பார்க்கிறார்? அதுவும் அவளின் கர்பகாலத்தின் எட்டாம் மாத கோலம்… கட்டி அழுது, ஆசையை முத்தமாய் இட்டு….என எல்லாம் இருந்தாலும் வீட்டிற்கு வா என ஒரு வார்த்தை சொல்லவிலை அம்மா…..அவரால் எப்படி சொல்ல முடியும்??? அம்மாவைப் பார்த்துவிட்டு சந்தோஷமாகத்தான் திரும்பி வந்தாள் சுகவிதா….காரில் ஏறியதும் அரணுக்கு அத்தனை முத்தங்கள் அவளிடமிருந்து…..ஆனால்….எத்தனை நாளைக்கு போதும் இந்த ஒற்றை சந்திப்பு….

திரும்பவும் அவள் பழைய பாய்ண்டிற்கே போக….. இப்பொழுது அவளது பிபி வேறு தாறு மாறு. அதற்காக அவள் ஹாஸ்பிட்டலைஸ்டாக என்ன செய்தாவது சுகவியை அவள் அம்மாவிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்ற நிலைக்குப் போனான் அரண். ஆக ப்ரபாத்தும் அரணும் ப்ரபாத்தின் அம்மா அன்பரசியிடம் போய் நின்றனர். எப்படியோ முயன்று அவர் விஷயத்தை சுகவிதாவின் அம்மா புஷ்பத்திடம் சொல்லிவிட்டார்.

“புஷ்பமோ எது எப்டினாலும் மாப்ள மேல இருக்ற கோபத்துல சுகி அப்பா சுகிய இங்க சேர்க்க மாட்டார்….” என அழுதார்.

“அந்த அரண விட்டுட்டு வந்தாதான் அவளுக்கு விடிவுகாலம்னு சொல்லிட்டு இருக்றவர்ட்ட என்ன பேசனு சொல்லுங்க….” அது அவரது அடுத்த கேள்வி.

ஆக அடுத்த முறை சுகவி அம்மாவிற்காக அழுத போது தாங்க முடியாமல் அவளைப் போய் அவள் வீட்டு வாசலில் இறக்கி விட்டுவிட்டு வந்துவிட்டான் அரண்.

“என்னைப் பத்தி அவங்க என்ன கேட்டாலும் பேசுனாலும் வாய திறக்காத…. டெலிவரிக்கு லேபர் ரூம்ல உன் கூட நான் இருப்பேன்….டெலிவரி முடியவும் உன்ன நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறேன்டா…. இப்ப போய் உன் அம்மா கூட சந்தோஷமா இருந்துட்டு வா விதுமா….” என எல்லாவற்றையும் விளக்கமாக அவளிடம் சொல்லி அவளும் சம்மதித்த பிறகே…..

ரணின்றி அழுது வடியும் முகத்தோடு குட்டி யானை போல் வந்து நின்ற மகளை பார்த்ததும் இன்ஸ்டென்டாக ஏற்றுக் கொண்டார் அனவரதன். அவரும் தானே மகளுக்காக ஏங்கிப் போயிருந்தார். தடுத்தது அந்த திரியேகன் மகன் உனக்கு என்னவிட முக்கியமா என்ற ஈகோ தானே…? இப்பதான் அந்த தடிப்பயல் நிஜ நிறம் மகளுக்கு தெரிஞ்சுட்டே…..

ஆம் அப்படித்தான் அனவரதன் நினைத்துக் கொண்டார். மகளை மயக்கி ஏமாத்தி கல்யாணம் செய்து அவ டென்னிஸ் கரியரை காலி செய்துட்டு, திரும்ப டென்னிஸே விளையாட முடியாதபடி அவ ஃபிட்னஸையும் டேமேஜ் செய்துட்டு கர்பமாக்கி வீட்டு வாசல்ல வந்து வீசிட்டுப் போய்ட்டான் அந்த அரண்.

அவர் இப்படித்தான் இந்த செயலை புரிந்து கொண்டார். மனதிற்குள் அரணை நினைத்து இதற்குமாய் சேர்த்து கொதித்தும் கொண்டார். ஆனால் மகளிடம் எதையும் அவளை காயபடுத்தும் வண்ணம் அவர் பேசவில்லை….. பிள்ளைப்பாசம் அவருக்கும் உண்டுதானே….அதோடு எத்தனைதான் விரும்பாத கல்யாணமாயிருந்தாலும் பிறக்கப் போவது இவர் மகளின் குழந்தையல்லாவா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.