(Reading time: 30 - 60 minutes)

ய் வெளிய வா நீ..” உதைத்தவன் சொன்னதெல்லாம் இவள் காதில் கேட்கவில்லை.

உதைத்துவிட்டு ஏதோ உளறுகிறான். கூடவே ஒரு கோஷ்டி.

“ஜீவா இங்க யாரோ ட்ரங்கட்ஸ் காரை அடிக்காங்க….எனக்கு பயமா இருக்கு…”

சொன்னவள் சட்டென காரை கிளப்பி யூ டர்ன் அடித்து பீச்சை விட்டு வெளியே போகும் சாலையில் பறந்தாள்…. நிச்சயம் அந்த கேங்க் இதை எதிர் பார்க்கவில்லை…..அதுகளும் தங்கள் காரில் ஏறி இவள் செய்ததை செய்தது….இவளை துரத்தியது……. சுகவிதாவைப் பிடித்திருந்தது பயம்…. பின்னால் துரத்துகிறவர்களைப் பார்த்துக் கொண்டே கிளைச்சாலையிலிருந்து முன்னாலிருந்து ஈசிஆர் ரோட்டில் சென்று ஏறினாள் சுகவிதா 180Km/hrs ஸ்பீடில்…நோ ஹார்ன்….நோ இன்டிகேட்டர்….டென்ஷன் காரணம்.

அதே நேரம் சீறிப் பாய்ந்து கிளைச்சாலைக்குள் திரும்பியது அந்த மெகா சைஸ் எஸ் யூ வி. படு ஸ்பீட். ஹார்ன் இன்டிகேட்டர் எல்லாம் உண்டுதான். ஆனால் சுகவிதா கவனிக்கவே இல்லை. சிறு அவகாசம் கூட கொடுக்காமல் சென்று நேருக்கு நேராய் அதனுடன் ஒரு டஅஷ்…..மோதல். அடுத்து நடந்தது என்னவென்று சுகவிதாவுக்கு தெரியாது…. உபயம் பின் மண்டையில் விழுந்த அடி. ஆனால் அரணுக்கோ ஒன்றை நினைத்து முடிக்கும் வரைக்கும் சுயநினைவு இருந்தது…

‘கடவுளே விதுவும் என் பால்குட்டியும்…..” ஆம் பயந்து ஓடிவந்த சுகவிதாவின் காரும் அவளுக்காய் பாய்ந்து வந்த அரணின் காரும் தான் நேருக்கு நேராய் மோதி இருந்தது. இதில் அரண் காருக்கு பின்னால் வந்த ட்ரக் வேறு அவன்காரை பின்புறமாய் பதம் பார்த்தது.

ஹாஸ்பிடல்

“எங்களால செய்ய முடிஞ்ச எல்லாத்தையும் செய்தாச்சு சார்….உங்க சன் இப்ப கோமால இருக்கார்….அதுல இருந்து அவர் இன்னும் ஒன் அவர்லயும் வெளிய வந்துடலாம்…இல்ல ஒன் வீக்கும் ஆகலாம்…… சில நேரம் ஒன் இயரும் கூட ….” அரணின் நிலையை திரியேகனிடம் விளக்கிக் கொண்டிருந்தனர் டாக்டர்ஸ்.

வெளியே தொலைகாட்சி அலறிக் கொண்டிருக்கிறது.

“கேப்டன் அரண் விபத்து செய்தியை கேட்டு இளைஞர் இருவர் தற்கொலை முயற்சி. அதில் ஒருவர் நிலை கவலைக்கிடம்….”

இது ஒன்னு…..ஒரு நேரம் செருப்பு மாலை போடும் ஃபேன்ஸ் கூட்டம்…மறு நேரம் சாகவும் தயாராயிருக்கும்…. திரியேகனுக்கு இதுவரை மகன் தான் வாழ்வே….. இருபத்தி ஐந்து வயதில் இல்லாமல் போகவா இத்தனையும்…. ??? கூடவே சாக துடிக்கும் இவன் வயதொத்தவர்களின் மூடத்தனம்….அதனால் இவரைப் போலவே தவிக்கும் அவர்களின் பெற்றோரின் நிலை….

‘என் பையனால நாலு பேர் வாழ்ந்தாங்கன்னு இருக்கனும்…..இப்டி செத்தாங்கன்னு இருக்க கூடாது….எப்படியும் ஹாஸ்பிடலில் செய்வதற்கு இனி ஒன்றுமில்லையாம்…..’ ஆக டாக்டர்ஸ் சொல்லியபடி மகனை தகுந்த ஏற்பாடுகளுடன் மூன்றாம் நாள் அதற்கென ப்ரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறைக்கு அதாவது தன் வீட்டிற்கு ஷிஃப்ட் செய்தார் திரியேகன்.

ஹாஸ்பிட்டலிலிருந்து மீடியாவிற்கு ஒரே ஒரு தகவல். அரண் இஸ் டிஸ்சார்ஜ்ட்.

You might also like - Rose and Thorn... Free English romantic story 

ங்கு சுகவிதாவும் இன்னும் ஆபத்தை தாண்டி இருக்கவில்லை. அனவரதனோ பீச்சுக்கு போன மகளை கோபத்துல தன் காரை வச்சு அடிச்சுட்டான் அந்த அரண்ங்கிற மிருகம்…என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். அரண் இஸ் டிஸ்சார்ஜ்ட் என்ற நியூஸ் காரணம். இவரிடம் பேசவும் சுகவிதாவைப் பார்க்கவும் முனைந்த திரியேகனை வாய் திறக்கவிடாமல் வாய்க்கு வந்தபடி கத்தினார்.

திரியேகன் ஏற்கனவே மனதிற்குள் செத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த நேரம் அனவரதனிடம் போராடி மீடியாவுக்கு இன்னும் இரை போட விருப்பமும் இல்லை….தெம்பும் இல்லை…. ஆக தன் மருமகள் மற்றும் பேத்தியைப் பத்தி மருத்துவர்களிடம் விசாரித்துக் கொண்டாரே தவிர திரும்பவுமாக அனவரதனிடம் போய் நிற்கவில்லை. அதோடு மகனை விட்டு அங்கிங்கு நகர மனம் மறுகுகிறதே…. எல்லோருக்கும் இருந்த ஒரே ஆறுதல் பிறந்து ஒரு வாரமே ஆகி இருந்த ஹயாவுக்கு இந்த விபத்தில் ஒரு சிறு கீறல் கூட கிடையாது என்பதுதான்.

சுகவிதா மயக்கத்தில் கடத்திய முதல் 5 நாட்களும் சரி, அதன் பின் மயக்கம் தெளிந்து அம்னீஷியாவில் அழுத நாட்களிலும் சரி புஷ்பம் பாடு படு மோசம். பிறந்து ஏழு நாளான பேத்தியைப் பார்ப்பாரா…..மகளையா? இதில் ரகசியமாய் அவர் எப்படி எப்போது போய் மாப்பிள்ளையை பத்தி விசாரிக்க… இந்த சூழலில் அரணின் மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆன செய்தியைக் கேட்டு அவருக்கு முதலில் படு நிம்மதி. ஆனால் நாட்கள் போகப் போக மனதிற்குள் மாப்பிள்ள ஏன் மகளை பார்க்க வரலை…? என்ற கேள்வி.

மாமனாரப் பத்தி இவ்ளவு நாள்ள தெரியாதாமா….? அவர் எதாவது பேசுவாருன்னு இந்த நிலையில இருக்ற சுகிய பார்க்க வரலைனா என்ன அர்த்தம்? அதுவும் தன் சொந்த பிள்ளைய கூட தேடலைனா என்ன விஷயம்? என குறுகுறுக்க ஆரம்பித்தது. அரணை நேரில் பார்த்தால் சுகவிதா நிலையில் முன்னேற்றம் இருக்கும் என நம்பிய அந்த தாயுள்ளத்திற்கு இது படு கஷ்டமாக ஏமாற்றமாக இருந்தது.

6 மாதம் என்பது வார்த்தை கணக்கில் பார்த்தால் வெறும் இரண்டு வார்த்தை. ஆனால் புஷ்பாவின் சூழலில் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் அதன் நீளம் எத்தனை என…..நாள் போகப் போக அரண் மீது அவருக்கு நம்பிக்கை அடி வாங்க தொடங்கியது….. உள்ளூரில் இருந்து கொண்டு…ஓய்வு என லீவிலும் இருந்து கொண்டு 6 மாசமாய் வரவில்லை எனில் அவர் என்ன நினைக்க?

“ அழகான பொண்னு வேணும்னு மகனுக்கு பொண்ணு தேடிகிட்டு இருக்கானாம் அவன் அப்பன்…..இப்பதான் டிவோர்ஸ் வாங்குறது ஈசியாச்சே ” வெறுத்துப் போயிருந்த அனவரதன் அவ்வப்பொழுது இப்படிக் கத்த ஒரு கட்டத்தில் அதுதான் உண்மையோ என புஷ்பத்திற்குமே தோன்றிவிட்டது….

அம்னீஷியா பேஷண்ட் யாருக்கு வேணும் என்று நினைக்கிறானோ அரண்? இல்லை கணவர் சொல்வது போல் பழி வாங்க மட்டுமே மகளை திருமணம் செய்தானோ….ஆம்ப்ள பசங்களப் பத்தி எனக்கு என்ன தெரியும்….? அவசரப் பட்டு நானும் சுகியும் ஏமாந்துட்டமோ? உடல்நிலை காரணமாக மெலிந்தது சுகவிதா மட்டுமல்ல அவளை மனதில் சுமந்த அவளது அன்னையும் தான்…..கரைந்தார்.

ப்ரபாத்திற்கு அரணைப் பற்றி புஷ்பம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் தெரியாது. ஆனால் நண்பன் நிலையை அவனாக போய் புஷ்பத்திடம் சொல்ல விருப்பமில்லை அவனுக்கு. இருக்கும் வேதனையில் இன்னுமாய் ஏறும் ஹோப்லெஸ்நெஸ் என எண்ணினான் அவன். அதே நேரம் அனவரதன் ப்ரபாத்தை நடை ஏத்தவும் தயாராயில்லை. அவரை மீறி புஷ்பமும் ப்ரபாத்தை கூப்பிட்டு எதுவும் கேட்கவில்லை…

சுகவிக்கு அம்னீஷியா

ஆக ஆறுமாதம் கழித்து அரணுக்கு நினைவு திரும்பிய போது சுகவியை ரீச் செய்ய உதவிக்கு அவள் வீட்டின் உள்ளே யாரும் இல்லை அவனுக்கு.

6 மாதத்திற்கு பிறகு ஒரு நாள் கண் திறந்து பார்த்த போது எது என்னவென்றே முதலில் புரியவில்லை அரணுக்கு.

மெல்ல மெல்ல விஷயம் புரியும் போதே முதலில் மனதில் வருவது விதுவும் அவனது பால்குட்டியும் தான். அவசரப் பட்டுவிட்டான். விதுவை எந்த காரணத்திற்காகவும் அவளது அம்மா வீட்டில் தனியாக விட்டிறுக்க கூடாது…..இவன் தப்புதான் எல்லாம் இவன் தப்புத்தான்….

எதிரிலிருந்த அப்பாவின் கண்ணீரைப் பார்க்கவும் தான் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதே உறைக்கிறது அவனுக்கு… விதுவையும் பால்குட்டியையும் பார்க்க மனம் தவிக்கிறது. அவளுக்கு அம்னீசியா என்றவுடன் அரண்டு போனான். யார் இவனது விதுவை இவனுக்கு தரப் போகிறார்களாம்? ஆக சூழ்நிலையை விசாரித்து, அவனுக்கு எழுந்து நடமாட முடிந்தவுடன் விதுவையும் அவன் வாரிசையும் வாரிக் கொண்டு வந்துவிட்டான். அவனுக்கு விபரம் தெரிந்து அப்பா ப்ரபு யாரிடமும் சொல்லாமல் அவன் செய்த ஒரே காரியம் இதுதான். அவன் ஹெல்த் கண்டிஷனை காரணமாய் சொல்லி காத்திருக்க சொல்வார்கள் என்ற மனநிலை காரணம்.

“சுகவியும் ஹயா செல்லமும் கைல வந்த பிறகுதான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருக்குது…..ஆனா அவளுக்கு இன்னும் அம்னீஷியா சரி ஆகலை இல்லையா….எங்களோட பழைய சண்டை மட்டும் தான் நியாபகம் வருதாம்….அதான் அப்ப நீ பார்க்றப்ப அவ அப்டி ரியாக்ட் செய்துட்டு இருந்தா….ஆனா இப்ப வி ஆர் ஃபைன்…”

அரண் சொல்லிக் கொண்டு போக அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் சங்கல்யா. அந்த அமைதி எல்லாம் வெளிப் பார்வைக்குத்தான். உள்ளுக்குள் ஆயிரம் அலை பிறழ்வு…. நிச்சயமாய் இந்த மூவரின் உறவுநிலையும் அவளுக்கு பிடித்திருக்கிறது. என்ன ஒரு லைஃப் அவங்களது என்றுதான் நினைக்க தோன்றுகிறது…. அரண் மேல் ஆழ்ந்த மரியாதையும் அவனிடம் ஒரு இனம் புரியாத பாதுகாப்பு உணர்வும் வருகிறது என்றால்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.