(Reading time: 30 - 60 minutes)

ஜோனத் மேல் ஏற்கனவே இருக்கும் அந்த ஏதோ ஒன்று இன்னும் அதிகமாய்….அவனுடைய கோபத்திலிருந்து எல்லாவற்றையும் பிடிக்கிறது…..அரணை காலரைப் பிடித்து அவன் கத்திய காட்சியும்….ஹயாவை மடியில் வைத்து பால் புகட்ட முனைந்த காட்சியும்….அவனை இன்னுமாய் ரசிக்கத் தோன்றுகிறது….. ஹி டிபென்ட்ஸ் ஹிஸ் பீபுள் இவள மாதிரியே என்ற ஒரு தாட் வேறு…. ஆனால் எதோ ஒரு ஓரத்தில் நிச்சயமாய் ஓர் ஆழ அடி முடியற்ற பயம்ம்ம்ம்ம்…… அந்த பன்னீர் செல்வம் என்னல்லாம் சொல்லி இவ அம்மாவ ஏமாத்தினானோ? இது மாதிரிதான் இருந்திருக்குமோ அந்த கதை

“சின்ன வயசில இருந்து ப்ரபு சுகவி ரிலேஷன்ஷிப்பை பார்த்து வளர்ந்தவன் நான்…. எனக்கு சிம்பிலிங்கும் கிடையாதா….எப்டியோ மனசுல ப்ரபுவோட வைஃப்தான் என் சிஸ்னு ஒரு தாட் செட்டாயிட்டு…..”

விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் சங்கல்யா. அவளுக்குள் ஒரு ஆசிட் புரிதல்… அரண்ட்ட ஜோனத் எதையும் மறச்சிருக்க மாட்டான்…..இப்போ இவ இங்க எதுக்கு வந்திருக்கான்னு கூட அரணுக்கு தெரியும்….. அப்டின்னா?

“திடீர்னு இப்ப இந்த ஏஜ்ல மீட் பண்ணிட்டு சுகவியும் ப்ரபுவும் பழகிற மாதிரிலாம் நாம பழக முடியாதுதான்…..பட் என் மனசுல உனக்கு என்ன ப்ளேஸ்னு சொல்லி வைக்கிறேன்….” அரண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மொபைல் சிணுங்குகிறது.

இணைப்பை ஏற்றான்…

“ஹேய்…வாட்….????!!!!!.….இப்பவே வர்றேன்….டேக் கேர் ஆஃப் ஹெர்….” அவன் ஃபோன் பேசிய விதத்திலேயே விஷயம் விபரீதம் எனப் புரிய

“அன்பரசி ஆன்டிக்கு…ப்ரபு அம்மாவுக்கு ஷெஸ்ட் பெய்னாம்….ஹஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காங்க.... “ அரணின் விளக்கத்தில் நடுங்கிப் போனாள் சங்கல்யா.

“ஐயோ…அண்ணா எனக்கு பயமா இருக்கே…இப்பவே கொண்டு போய் விடுங்களேன்….நான் யார்ட்டயும் எதுவும் பேச மாட்டேன்….எதையும் லீக் அவ்ட் செய்ய மாட்டேன்….போகாதன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்….” கெஞ்சினாள் இவள்.

எப்பவும் இவளுக்கு அன்பரசி அம்மாவை ரொம்பவேப் பிடிக்கும்…. இப்ப அது ஜோனத்தோட அம்மான்றப்ப……அதுவும் அவன் ஊர்ல வேற இல்லன்றப்ப…. அரண் இவளை ஒரு பார்வை பார்த்தான்.

“நீ வராமலா லியா?” அவன் கேட்ட விதமே தன் கேள்வி தப்போ என இவளை நினைக்க வைக்க அவசர அவசரமாக தேவை என்று நினைப்பவைகளை எடுத்துக் கொண்டு அரணுடன் இவள் கார் ஏறிய நேரம் அவனுக்கு அடுத்த அழைப்பு…. அவர்களது சிமெண்ட் ஃபேக்டரியிலிருந்து

“சார் நம்ம ஃபேக்டரில பாம் ப்ளாஸ்ட்…..அப்பா உள்ள இருக்காங்க…..அ…….அவங்கள பத்தி எந்த நியூஸும் இல்லை…. “

அடுத்த ஐந்தாம் நிமிடம் அரண் ஃபாக்டரியைப் பார்த்தும் சங்கல்யா ஹாஸ்பிட்டலைப் பார்த்தும் பறந்து கொண்டிருந்தனர்…..இரண்டு பேர் மனநிலையும் எப்படி இருந்தது என சொல்லத் தேவையில்லை…..

You might also like - Ullamellam alli thelithen.. A sweet romantic story 

ட்டென அழுவதெல்லாம் சங்கல்யாவின் அகராதியில் கிடையாது. ஆனால் இப்பொழுது அவள் அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்…..அது யாருக்காக எதற்காக என்ற வரையறை அவளுக்கே புரியவில்லை….. ஆனால் ஹாஸ்பிட்டல் போனதும் சூழலை அவள் கையில் எடுக்க வேண்டிய நிலை…. அன்பரசிக்கு ஹார்ட் அட்டாக். அதுவும் செகண்ட் ஒன்.

அன்பரசியின் அடுத்த வீட்டிலிருந்தவர்கள்தான் அவரை அட்மிட் செய்திருந்தனர். ஆக ஒவ்வொன்றிற்கும் அவள் தான் ஓடிக்கொண்டிருந்தாள்….பில் பேமண்ட்….மெடிசின் வாங்குறது…..அதற்குள் அவளது அக்கவ்ண்டிற்கு அரண் அத்தனை பெரிய தொகை RTGS செய்திருந்தான். அரண் இவ்ளவு நேரம் சொன்னதொன்றும் கதை கிடையாது….அது அவனோட வே ஆஃப் லைஃப்.

இவளுக்குப் போல் அல்ல. அரணுக்கு அவன் அப்பா ஆணிவேர். அந்த அப்பாவுக்கு இந்த நிலை எனும் போதும் அன்பரசியை மட்டுமின்றி இவளையும் யோசித்து…நம்பி…..லட்சக்கணக்கில் மனி ட்ரான்ஸ்ஃபர் செய்ததோடு, கூட யாரையாவது அனுப்பி வைத்தால் இவளை கண்காணிக்க என இவளுக்கு தோன்றும் என நினைத்து அதையும் தவிர்த்து…. அன்பரசிக்காகவும் திரியேகனுக்காகவும் சங்கல்யா உள்ளம் பதறிக் கொண்டிருந்தாலும் அரணின் இன்டென்ஷனை நோட் செய்யவும் தவறவில்லை…. அதே நேரம் ஜோனத்தை நினைத்து உருகுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. அவன் தன் அம்மாவைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்ற அந்த கோலம்……

“என்னத்தான் உனக்குப் பிடிக்காது …என் அம்மாவையாவது பார்த்துக்கோ” சொல்லிட்டுப் போனானே….கடைசில இப்டியா இவ அவன் அம்மாவைப் பார்த்துக் கொள்ளவேண்டும்….?

Page 6

ஆக மீண்டும் அரண் அழைத்து “அப்பாக்கு ஒன்னுமில்ல லியா…ஹீ இஸ் சேஃப் “ என்று சொல்லும் போது அவனிடம் அழுதுவிட்டாள் இவள்.

“ யாரையாவது இங்க துணைக்கு அனுப்புங்கண்ணா…..என்னை மானிடர் பண்றீங்கன்னுலாம் நினைக்க மாட்டேன்….தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்குது”

“அங்கதான்மா வந்துட்டு இருக்கோம்…” சொன்ன அரண் அடுத்த பத்தாவது நிமிடம் சுகவிதா ஹயா உட்பட திரியேகனுடன் குடும்பமாக வந்து நின்றான். அதற்கு பிறகு இவளுக்கிருந்த ஒரே வேலை கவலையுடன் காத்திருப்பதுதான்.

அன்பரசிக்கு முதலில் ஆஞ்சியோப்ளாஸ்டி என்றனர்…. அதற்கு செல்லும் போதுதான் முதல் தடவையாக இரண்டு நிமிடம் இவள் கண்ணில் அவரைக் காண்பித்தார்கள்.

“ப்ரபு கொஞ்சம் அம்மாகோண்டு…நீ என்னப் பார்த்துகிட்ட மாதிரி அவன பார்த்துக்கணும் என்னமா” என்றார் அவர்.

இவள் அழுகையுடன் தலையாட்டி வைத்தாலும் அடிவயிற்றில் அமில புளிக் கரைசல். அடுத்து ஓபன் ஹார்ட் சர்ஜரி நாளை என்ற தகவல்.

வெகு நாளைக்குப் பிறகு அழுது ஜெபித்தாள் இவள். “கடவுளே இன்னொரு தடவை நான் திரும்பிப் பார்க்க மாட்டேன்….நோ பேக் ஸ்லைடிங்……ஐ’ல் வாக் இன் யுவர் வேஸ்….என் தப்புகளை தாண்டி என் சத்தத்தை கேளுங்க”

இரவில் யார் எவ்வளவு சொல்லியும் ஹாஸ்பிட்டலை விட்டு இவள் அசைய மறுக்க இறுதியில் இவளும் அரணும் வெயிட்டர்ஸ் லாஞ்சில்….

மறுநாள் அரண் இவளிடமாக “ப்ரபு உன்ட்ட பேசனுமாம் லியா…அவன் லண்டன் ரீச் ஆகிட்டான்” என மொபைலை நீட்டிய போதுதான் இருந்த அனைத்தையும் தாண்டி ஜோனத்தை ஃபேஸ் பண்ண வேண்டிய கதையே சங்கல்யாவுக்கு ஞாபகம் வருகிறது.

எச்சில் விழுங்கி, எகிறும் இதய துடிப்புடன்தான் வாங்கினாள்.

“தேங்க்ஸ் “ ஜோனத் ஆரம்பித்த விதம்…. அழுகையாய் மாறாத அழுத்தமான ஆண்குரல்…. அதில் தெரிந்த ஒரு மரத்தன்மை…… இவளுக்கு அடி வயிற்றிலிருந்து கழுத்தை வந்து பிடித்தது ஒரு உணர்வு.

“அ..” பேச நினைக்கும் எதுவும் வாயில் வரவில்லை இவளுக்கு…..

“அம்மாவ இவ்ளவு நேரம் பார்த்துகிட்டதுக்கு தேங்க்ஸ்…..அனவரதன் அங்கிள்ட்ட என்ன ரிப்போர்ட் கொடுக்கனும்னாலும் இப்பவே கொடுத்துட்டு நீ கிளம்பு….”

“ஜோ…ஜோனத்த்த்…” அதிர்ச்சியா வலியா பயமா எல்லாமுமேவா….அத்தனையும் அடித்து துவைக்கிறது இவளை…

“அம்மா…” என்றாள். இவள் கண்ணில் கர கரவென இறங்குகிறது கண்ணீர்…..

“அதான் அரண் இருக்கான்ல பார்த்துப்பான்….நீ போகலாம்…..எந்த கம்பெல்ஷனும் இல்ல….. அனவரதன் அங்கிளோ வல்லராஜனோ உன்னை எதுவும் செய்யாம பார்த்துகிறது என் பொறுப்பு….”

“அ….அதுக்கில்ல ஜோனத்…”

“போன்னு சொல்றேன்ல……” கர்ஜித்தான் அவன். “நான் வர்றப்ப நீ அங்க இருக்க கூடாது….” அவன் உறுமலில் இவள் கையிலிருந்த மொபைல் துள்ளி கீழே விழுந்தது. இவளுக்கு தூக்கிவாரிப் போட்டது காரணம்.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.