(Reading time: 22 - 44 minutes)

ன்யாவின் கைகளில் இருந்த தனது செயினை அவளிடமிருந்து ருணதி விலக்க போராட, கன்யாவின் பிடியோ இறுகியிருந்தது…

“விடுங்க… விடுங்க…” என்று ருணதி சொல்ல…

“கன்யா… என் பொறுமையை சோதிக்காத… கையை எடு... விடு…”  என்று மகத் அவள் முன் வந்து நிற்க…

“நீ சொல்லி நான் என்ன கேட்பது..” என்ற பாவனையுடன் அவள் பிடியை தளர்த்தாமல் இருந்தாள்…

“விடுன்னு சொல்லுறேன்ல…” என்றபடி மகத் அந்த செயின் மேல் கைவைக்க போக

“ஓ… என்ன ஒரு நடிப்புடா... எப்படியும் இதை இவ கழுத்துல இருந்து கழட்டிட்டு நீ வேற தாலி கட்டணும் அப்படிங்கிற முடிவுல தான இருக்குற… சே…” என்றபடி அவள் ருணதியின் செயினை விடுவித்துவிட்டு,

“இத்தனை நாள் இதோ இதை நான் மதிக்கலை… எனக்கு இது தேவையும் இல்ல அப்படிங்கிற முடிவுல தான் நான் இருந்தேன்… ஆனா உங்க திட்டம் எல்லாம் தெரிஞ்ச பின்னாடி எனக்கு இருக்குற ஒரே பிடிப்பு இந்த தாலி தான்…” என்றபடி தனது கழுத்தினில் கிடந்த தாலியினைப் பிடித்துக்கொண்டவள்,

“எனக்கு உங்கூட வாழணும்… சாகணும்… அப்படிங்கிற எந்த ஆசையும் இல்லை… எனக்கு உன் நிம்மதியை கெடுக்கணும்… அது மட்டுமே என் லட்சியம்… இத்தனை நாள் இந்த தாலியை வலியோட சுமந்தேன்… இனி உன்னை கட்டிப்போடுற ஆயுதமா இதை நான் பயன்படுத்திப்பேன்…”

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

“அது மட்டும் இல்லாம, இந்த தாலி என் கழுத்துல இருக்குற வரை… நீ வேறோருத்தியை கல்யாணம் பண்ணிக்க முடியாது… நீ நிம்மதியா வாழ முடியாம போறதுக்கு இந்த தாலி ஒரு தடைன்னா அதை நான் சந்தோஷமா ஏத்துப்பேன்… இது எனக்கு இருக்குற துருப்புச்சீட்டு… பார்க்குறேன்… எப்படி நீ இதோ இவளையோ, இல்ல வேற யாரையோ உன் வாழ்க்கையில கொண்டு வரேன்னு…” என மகத் முன்னாடி கோபமாய் அவள் பேச

“உன்னால முடிஞ்சத நீ செய்… சொல்லிட்டல்ல… கிளம்பு… எல்லாம் கேட்டுச்சு… நீ போகலாம்…” என்றான் அவன் அலட்சியத்துடன்…

“பார்த்தீங்கல்ல… உங்க அசிஸ்டெண்ட் லட்சணத்த… நான் உயிரோட இருக்கும்போதே இன்னொரு கல்யாணம் இவனுக்கு பண்ணி வைக்க எல்லாரும் சேர்ந்து சதி செய்யுறாங்க… இவன் சம்மதம் இல்லாமலா இது அத்தனையும் நடக்குது?...” என அவள் குருமூர்த்தியைப் பார்த்துக்கொண்டே பேசினாள்…

“இது இவங்க மட்டும் செய்யுற பிளானா?... இல்ல நீங்களும் இதற்கு உடந்தையா?... எங்கிட்ட இருந்து உங்க அருமை அசிஸ்டெண்டை காப்பாத்துறதுக்கு நீங்களும் முடிவு பண்ணிருக்கீங்க போல எனக்கு தெரியாம?...” என அவள் குருமூர்த்தியிடம் நக்கலாக கேட்க…

“இல்ல கன்யா… நீ தப்பா புரிஞ்சிட்டிருக்க….” என குருமூர்த்தி விளக்கம் கொடுக்க முனைய…

“இப்பதான் எல்லாமே எனக்கு சரியா புரியுது… எப்பவும் பாரீன் போகிறவர், இந்த தடவை மட்டும் இங்க ஏன் இத்தனை நாள் இருக்கணும்?... இத்தனை நாள் இந்த ஆசிரமத்துல யாரையும் வேலைக்கு சேர்க்காம இருக்குற பட்சத்துல இதோ இந்த ருணதியை மட்டும் ஏன் வேலைக்கு சேர்க்கணும்?... அவளுக்கு டிரைவர் வேலை எல்லாம் ஏன் இந்த அசிஸ்டெண்ட் பார்க்கணும்?... எப்பவும் எங்கிட்ட பேசாம இருக்குற நீங்க, இதோ இந்த காவேரி எல்லாரும் இப்போ திட்டுறதுக்காக ஏன் எங்கிட்ட பேசணும்?... இந்த அசிஸ்டெண்ட் ஏன் இந்த ஆசிரமே கதின்னு இப்போ கொஞ்ச நாளா இங்க கிடக்கணும்?...” என மாறி மாறி கேள்வி எழுப்பியவள்,

“எல்லாமே இந்த ருணதியை இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தானா?... இதுக்கு என்னைப் பெத்த நீங்களும் உடந்தை அப்படித்தான மிஸ்டர் குருமூர்த்தி அவர்களே…” என அவள் ஆங்காரமாய் கேட்க

“இல்லம்மா… கன்யா… அப்பா உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன்… அப்படி இருக்கும்போது உன் புருஷனுக்கு எப்படிம்மா நான் இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பேன்…” – குருமூர்த்தி…

“ஏன்னா உங்களுக்கு என்னை விட இவன் தான முக்கியம்… இவன் தான உங்களுக்கு மானசீக வாரிசு…”

“நீ என் பொண்ணுடா… நான் பெத்த பொண்ணு…”

“சொல்லாதீங்க… அப்படி தயவுசெய்து சொல்லாதீங்க… அந்த நினைப்பு உங்களுக்கு இருந்துச்சுன்னா அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம இவனை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்களா?...” என அவள் வலியுடன் கூற,

“எல்லாமே உன் நல்லதுக்குத்தானம்மா அப்பா செஞ்சேன்…” என்றார் அவரும் கண்ணீருடன்…

“நல்லது… எது நல்லது… எனக்கு இவனைப் பிடிக்கலைன்னு நான் சொல்லியும் அதைக் கொஞ்சம் கூட காதுல வாங்காம என் வாழ்க்கையில இவனை கொண்டு வந்தீங்களே அதுதான் நல்லதா?...”

“உனக்கு பிடிச்சது தான் உன் வாழ்க்கையை பாழாக்கிட்டேம்மா….” என அவர் அழுதுவிட,

அவளுக்கு சுர்ரென்ற வலி உண்டானது…

“அப்பா….” என அவள் கத்தினாள்…

“என்ன சொன்ன… என்ன சொன்ன நீ… அப்பாவா?... அது உனக்கு இன்னைக்குத்தான் தெரியுதாடீ பாவி… சண்டாளி… அவனை இத்தனை நாள் இந்த வார்த்தை சொல்லாம கொன்னு கொன்னு புதைச்சியேடீ பாவி… இன்னைக்குத்தான் உனக்கு அவன் அப்பாவா தெரியுறானா?... அப்போ இத்தனை நாள் விரோதியா தெரிஞ்சானாடீ?...” என காவேரி அவளை கேள்வியால் அடிக்க..

அவள் மௌனம் சாதித்தாள்…

“வேண்டாம்… என் பொண்ணை யாரும் திட்ட வேண்டாம்… இது என் பொண்ணுக்கும் எனக்கும் நடக்குற பிரச்சினை… நான் பார்த்துக்கறேன்… தேவை இல்லாம யாரும் உள்ள வர வேண்டாம்…” என குருமூர்த்தி பட்டென்று முகம் திருப்பி சொல்லிவிட

காவேரியோ, குருமூர்த்தியை அதிர்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“கேட்டீயாடீ… உன் காதால கேட்டீயா… அவன் என்ன சொன்னான்னு கேட்டீயா?... அவன் உனக்கு தகப்பனா மட்டுமாடீ இருந்தான்?... உனக்கு அம்மாவா, ஃப்ரெண்டா எல்லாமாவும் அவன் இருந்தானே… அவனுக்கு நீ செஞ்சது என்னடீ?... என்ன?... இத்தனை நடந்தும் அவன் உன்னை மகள்ன்னு சொல்லுறான்… அதுதான்டீ பெத்த பாசம்… இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது?...” என அவர் விரக்தியாக சொல்ல

“என் பொண்ணை யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்… விலகுங்க… என் பொண்ணை பார்த்துக்க எனக்கு தெரியும்…” என்றார் குருமூர்த்தி அழுத்தத்துடன்…

“ஓஹோ… உன் பொண்ணா… அப்போ உன் பொண்ணு உன்னை மட்டும் திட்டணும்… பேசணும்… எங்களை எல்லாம் பேசக்கூடாது… திட்டக்கூடாது… முக்கியமா என் ராஜாவை தரக்குறைவா அவ பேசக்கூடாது… அதை முதலில் உன் பொண்ணுக்கு சொல்லிவை…”

“மகத்தை அவ பேசுறதுக்கு நானே அனுமதிச்சது கிடையாது… அதனால யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்…”

“போதும்… நிறுத்துறீங்களா?... என்னால இந்த டிராமா எல்லாம் பார்க்க முடியலை… வெறுப்பா இருக்கு… என்ன எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சுன்னு ஆக்டிங்க் பண்ணுறீங்களா எல்லாரும்… நல்லா கேட்டுக்கோங்க… விருப்பப்பட்டு இந்த வாழ்க்கையை நான் தேடிக்கலை… இப்பவும் இந்த வாழ்க்கையை வாழ நான் விரும்பலை… ஆனா இதோ இங்க நிக்கிறானே இந்த மாச சம்பளக்காரன் இவன் காலம் பூரா என் டார்ச்சரை அனுபவிக்கணும்… அதிலிருந்து இவன் விலக நான் அனுமதிக்கமாட்டேன்… பார்க்குறேன் இவன் எப்படி நான் இருக்கும்போதே இன்னொரு கல்யாணம் பண்ணுறான்னு….” என்றாள் கன்யா குரூரமாக…

“ஏண்டீ முடியாது… உங்க கல்யாணத்தை யாரும் சட்டப்படி ரிஜிஸ்டர் பண்ணலை… அதனால அவனுக்கு நான் தாராளமா இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பேன்…” என்றார் காவேரி உறுதியாக…

“மதர்… அவ தான் எதோ சின்னப்பிள்ளைத்தனமா பேசிட்டிருக்கான்னா, நீங்களும் ஏன்... விடுங்க… ப்ளீஸ்… அமைதியா இருங்க… நான் சொல்லுறதை கேளுங்க…” என மகத் கெஞ்ச…

“நீ சும்மா இரு மகத்… இவளை இப்படி பேச விட்டு வேடிக்கைப் பார்க்க இவ அப்பாவால முடியலாம்…. என்னால முடியாது…” என்றார் அவர்…

“உன்னால முடியாது தான்… இந்த தாலி என் கழுத்தில இருக்குற வரை உங்க யாராலயும் என்னை எதுவும் செய்ய முடியாது… சட்டம் பத்தி பேசுறீயா எங்கிட்ட?... அதே சட்டம் தான் முதல் மனைவி உயிரோட இருக்கும்போதே இரண்டாவது கல்யாணம் பண்ணுறதை தப்புன்னு சொல்லுது… அதை நீ தெரிஞ்சிக்கோ முதலில்…”

“ஓ… என்னால எதுவும் செய்ய முடியாது அப்படித்தானே?... சரி…” என்ற காவேரி கன்யாவில் அருகில் வந்தார்…

“அன்னைக்கு நான் செஞ்ச தப்பை இன்னைக்கு நானே சரி பண்ணிடுறேன்…” என்றார் அவளின் கண்களைப் பார்த்துக்கொண்டே…

“இல்ல வேண்டாம்…” என கலங்கியவாறு குருமூர்த்தி காவேரியின் அருகில் செல்ல முனைய…

அதற்குள் அனைத்தும் நடந்துமுடிந்துவிட்டது…

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தவராய் நிற்க,

“என்ன காரியம் மதர் செஞ்சுட்டீங்க…” என்றபடி மகத் கண்களை மூட…

ருணதி ஸ்தம்பித்து நிற்க…

குருமூர்த்தியோ அப்படியே தரையில் தொய்ந்து அமர்ந்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.