(Reading time: 10 - 20 minutes)

ஸாரி அரவிந்த். மன்னிக்கக் கூடிய அளவுக்கு நீங்க செஞ்சது சின்ன விஷயம் இல்ல. நானும் மன்னிக்கிற அளவுக்கு பெரிய மனசுக்காரன் எல்லாம் இல்ல" என்றபடியே அவன் தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனைத் திறந்து அந்த கார் மேல் ஊற்றத் தொடங்கினான்.

“ஹேய் என்ன பண்ணுற? வேண்டாம்.. ப்ளீஸ்..அய்யோ..” கதறினான் முகுந்த்.  அவன் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. கேனிலிருந்த பெட்ரோலை பரவலாக ஊற்றி முடித்து விட்டான்.

“பை முகுந்த், பை நித்யா. உங்களுக்கு தெரியாத ஒரு சஸ்பென்ஸ் ஒன்னு இருக்கு. அதை சொல்லனும்னு எனக்கும் ஆசை தான். ஆனா தமிழ் படங்கள்ல வர்ற மாத்ரி லூசு வில்லன் நானில்ல. கடைசி நிமிசத்துல பெரிய டையலாக் ஒன்னு பேசி, அதா முடிக்குறதுக்கு முன்னாடி யாராவது வந்து உங்களைக் காப்பாத்தி... தேவையா?.. Wish you a happy journey to eternity” சொல்லிமுடித்துவிட்டு சிகரெட் லைட்டரைக் கொளுத்தினான்.

“இவ்ளோ பக்கத்துல நின்னா நானும் செத்துப்போயிடுவேனே" என்றபடியே சுற்றிலும் பார்த்தான். ஒரு கயிறு கிடந்தது.  கிட்டத்தட்டஐந்தடி நீளம் இருந்தது.

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

அதன் ஒரு முனையை காரில் கட்டினான். இன்னொரு முனையை தன் லைட்டரால் கொளுத்தினான். பட்டென பற்றிக்கொண்டது.

“ஒகே.. இன்னொரு ஒரு நிமிஷத்துல நெருப்பு காருக்கு வந்துடும். நான் இப்ப ஓட ஆரம்பிச்சா தான், தப்பிக்க முடியும். பத்திரமா போயிட்டு வாங்க" என்று சொன்னவன் டாட்டா காட்டியபடியே ஓட ஆரம்பித்தான்.

இருநூறடிகள் ஓடியிருப்பான். காது சவ்வைக் கிழிக்கும் ஒலியுடன் கார் வெடித்து சிதறியது. நெருப்பு பிழம்பு ஐம்பதடி உயரத்திற்கு எழும்பியது. தூரத்திலிருந்து கண்குளிர ரசித்தான்.  சில நிமிடங்களில் சாலையில் சென்ற பல வாகனங்கள் அங்கே நின்றன. அதிலிருந்து இறங்கியவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். சிலர் கீழே இறங்கி வந்து காரின் அருகே சென்று பார்த்தனர். அங்கே கார் சாம்பலாகியிருந்தது. அதில் இருவரின் உடல்கள் கரிக்கட்டைகளாய் கிடந்தன.

போலிஸ் இன்ஸ்பெக்டர் உறைந்துபோய் உட்கார்திருந்தார்.

“அஞ்சு கொலையும் நீ தான் பண்ணினியா?”

“ஆமா சார்"

“சரி..விவரமா சொல்லு. நான் எழுதிக்கிறேன்'', ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டார்.

“என் பேர் ஆகாஷ். என்னோட ட்வின் ப்ரதர் அரவிந்த். அப்பா அம்மா இப்போ இல்ல. நாங்க ரெண்டு பேர் தான் இருக்கோம். ..இருந்தோம். சென்னைல வேற வேற கம்பெனில வேலை செய்றோம். அவனும் அஞ்சலினு ஒரு பொன்னும் ரொம்ப நாளா லவ் பண்ணிட்டு இருந்தாங்க. கல்யாணம் பண்ணிகிறதா இருந்தாங்க. அப்போ தான் ஒரு வீக்கெண்ட்ல அஞ்சலிய பாக்க போலாம்னு என்னையும் ஊட்டிக்கு கூட்டிட்டுப் போனான். நான் அங்கே ஊர் சுத்தப் போயிட்டேன். அவன் அஞ்சலிய மீட் பண்ணப் போனான். அன்னைக்கு நைட் ரொம்ப நேரமா அவன் வரவே இல்ல. போனும் ரீச் ஆகல. அப்புறம் தான் போலிஸ் போன் பண்ணினாங்க. ரெண்டு பேரும் செத்துட்டாங்க, மலைல இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்ட மாதிரி தெரியுதுனு சொன்னாங்க. பதறிப்போய் ஸ்பாட்டுக்குப் போனேன். உருண்டு புரண்டு அழுது முடிச்சேன். அப்புறம் அவ்ளோ தான். எல்லாம் முடிஞ்சுது. அவன் தற்கொலை பண்ணிக்க வாய்ப்பே இல்லனாலும், நம்பிட்டேன். ஒருவேளை உணர்ச்சிவசப்பட்டு பண்ணிட்டானோனு நம்பிட்டேன். அப்புறம் அங்கேயே கொஞ்ச நாள் சுத்திட்டு இருந்தேன். ஒரு நாள் அந்த இடத்துல ஒரு பாறை மேல உட்கார்ந்து வேடிக்கை பாத்துட்டு இருந்தபோது, அங்க பாறைக்கு கீழ ஒரு செல்போன் கிடந்துது. அது ரொம்ப ஸ்க்ராட்ச் ஆகியிருந்தது. ஏதோ உறுத்துச்சு. உடனே வீட்டுக்கு எடுத்துட்டு வந்து,அதுல இருக்குற மெமரி கார்ட எடுத்து கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்தேன். அப்போ தான் தெரிஞ்சுது அது அஞ்சலியோட போன். அங்க தான் இதெல்லாம் தொடங்கிச்சு"

“என்ன இருந்துது அதுல?”

“நிறைய போட்டோ,வீடியோ எல்லாம் இருந்துது. அதுல கடைசியா ரெகார்ட் ஆகியிருந்த கிளிப் பார்த்தேன். நீங்களும் பாருங்களேன்" தன் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்தான். சிலநொடிகளில் ஒரு வீடியோவை ஓடவிட்டு இன்ஸ்பெக்டர் கையில் கொடுத்தான்.

வீடியோ ஓடியது.

“ஹேய்..இது வீடியோ மோட்ல இருக்கு.வீடியோ ரெகார்ட் ஆகுது பார். போட்டோ கூட எடுக்கத் தெரில. என்ன சாப்ட்வேர் எஞ்சினியரோ போ" என்று சொல்லியபடியே அஞ்சலி தன் விரலை ஸ்க்ரீனை நோக்கிக் கொண்டுவருகிறாள். அடுத்த நொடி ஸ்க்ரீன் இருண்டு போகிறது. ஒரு பலத்த மோதல் சத்தம் மட்டும் பதிவாகிறது. பின்னர் எங்கயோ சென்று விழுந்தபின், ரெகார்டிங்கை தொடர்கிறது. ஒரு கார் நிற்கிறது. ஐந்து பேர் இறங்கி என்னெனவோ பேசிக்கொள்கிறார்கள். கடைசியாக இருவரையும் தூக்கி எரிகிறார்கள். அவர்களின் கார் எண்,அவர்கள் பேசியதிலிருந்து அவர்களின் பெயர்கள் என போதுமான தகவல்கள் எல்லாமே அதிலேயே பதிந்திருந்தன. முழு வீடியோவையும் பார்த்து மிரட்சியோடு ஆகாஷைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

“வீடியோ இன்னும் பெருசு சார். அதுக்கப்புறம் சார்ஜ் தீர வரைக்கும் ரெக்கார்ட் பண்ணிருக்கு அந்த போன்ல, நான் தான் எடிட் பண்ணிட்டேன்"

“நீ இத எங்ககிட்ட கொண்டுவந்திருக்கலாமே? இப்போ..உனக்கு என்ன ஆகும்னு தெரியுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.