(Reading time: 10 - 20 minutes)

 

தெரியும் சார். தூக்கு தண்டனை கூட கிடைக்கலாம். அதைப்பத்தி கவலை இல்ல. இவ்ளோ கொடூரமான கொலை பண்ணினவங்கள அதே மாதிரி பலி வாங்கனும்னு நெனச்சேன். பண்ணிட்டேன்" என்று சொல்லி புன்னகைத்தான்.

“சரி..அங்க உக்காரு..கொஞ்சம் பார்மாலிட்டி எல்லாம் முடிக்கணும்" என்று அருகிலிருந்த பெஞ்சைக் கை காட்டினார்.

“ஒகே சார்" என்று சொல்லி எழுந்து போய் உட்கார்ந்தான்.  இன்ஸ்பெக்டரிடம் சொல்லாத மீதிக் கதையை அவன் மனம் அசை போடத் தொடங்கியது.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

அதில் அஞ்சலி,அரவிந்தின் இறப்பிற்குப் பின் அவர்களின் காதல் விவகாரம் அவளின் பெற்றோருக்குத் தெரிந்தததும், அவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய அவர்கள் வேண்டிகொண்டது,அதற்கு ஆகாஷும் ஒத்துக்கொண்டது, இறுதிச்சடங்கு அன்று அஞ்சலிக்கு அனிதா என்றொரு இரட்டைச் சகோதரி இருப்பது, அவளும் அஞ்சலியைப் போலவே இருப்பது, இறந்து நாட்களுக்குப் பிறகு அவள் இவனை சந்தித்து அஞ்சலியின் செல்போனிலிருந்த வீடியோவைக் காட்டியது, அதன் பின் இருவரும் அந்த ஐவரைப் பழி வாங்கத் திட்டமிட்டது, இவர்களின் உருவ ஒற்றுமை அதற்கு மிக பலமாய் இருந்தது, ஒரு இடத்தில் இல்லாமலே அங்கே இருப்பதை போலக் காட்ட உதவும் ஹோலோக்ராம் டெக்னாலஜியைப் பயன்படுத்தி அவர்களை மிரளவைத்தது, போலீசில் மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்ய வேண்டடுமென முடிவெடுத்தது, ஆனால் கடைசியில் அப்படித் தப்பிக்க வாய்ப்பில்லாததால் அவளை மட்டுமாவது காப்பாற்றிவிட முடிவெடுத்து இவனே வந்து சரணடைந்தது என பல காட்சிகள் அதில் தோன்றின.

நிஜ வாழ்க்கை சினிமா போல அல்ல ஐந்து கொலைகளைச் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ள. எப்படியும் போலிஸ் விசாரிக்கத் தொடங்கியதும், எங்கேயாவது ஓரிடத்தில் ஒரு தடையத்தை வைத்து தன்னைக் கண்டுபிடித்து விடக்கூடும். அதற்கு முன் தானாக முன்வந்து சரணடைந்தது விட்டால், அதிகமாக அவர்கள் துருவி விசாரிக்கப் போவதில்லை,அனிதாவும் மாட்டிக்கொள்ளப் போவதில்லை என்றொரு நப்பாசையில் வந்துவிட்டான். என்ன ஆனாலும் அவளைக் காப்பாற்றி விட வேண்டுமென தனக்குள் ஒரு உறுதி எடுத்துகொண்டான். கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தினான். ஏதோ ஒரு இனம்புரியாத மெல்லிய மகிழ்ச்சி மனதில் பரவத்தொடங்கியது.

முற்றும் …

Episode # 05

{kunena_discuss:911}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.