(Reading time: 11 - 21 minutes)

மெல்ல நிமிர்ந்து அமர்ந்த விஷ்ணு, தன் கண்களில் ஓடும் கண்ணீரை மெல்லத் துடைத்தான். அவன் மனம் மீண்டும் அவனிடம் கேள்வி கேட்டது “அனு இல்லை என்று ஆகிவிட்டது. பிறகு 90 நாட்கள் உனக்கு இங்கே என்ன வேலை. சட்டு புட்டுனு மேல போனாலாவது அடுத்து என்ன தண்டனை என்று எமனிடம் பேசி ஒரு முடிவிற்கு வரலாம்”.

 அனு இல்லாமல் வாழ்வதை விடச் சாவதே மேல் என்ற முடிவிற்கு வந்தான். எப்படிச் சாவது?. வாழ்வதற்குத்தான் ஒரு வழியும் இல்லை. சாவதற்கு ஆயிரம் வலி இருக்கு. போன தடவ காரில் அடிப் பட்டுதானே செத்தோம் அதையே டீரை பண்ணலாம் என்று தன் எதிரில் இருந்த சாலையை பார்த்தான் விஷ்ணு. 

குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் ஒடிக் கொண்டிருந்தது. சட்டென எழுந்து சென்று ரோட்டில் நின்றான் விஷ்ணு. எதிரில் ஒரு சிகப்பு கலர் கார் ஒன்று வேகமாக வருவதைப் பார்த்து இன்றோடு தன் கதை முடியப் போகிறது என்று தன் கண்களை ஆனந்தமாக மூடினான் விஷ்ணு.

உலகமே ஒரு நொடி “அல்ட்ரா ஸ்லோ மோஸனில் (ultra slow motionil)” நகர ஆரம்பித்தது

தை தன் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சித்ர குப்தர் “பிரபு” என்று பின்னால் திரும்பி எமனைப் பார்க்க, பரபரப்பாகத் தான் விளையாடிக் கொண்டிருந்த “ டெம்பல் ரன்(temple run)” கேம்மை பாஸ் செய்தார் எமன். “ச்ச ஒரு கேம்மை முழுசா விளையாட விடுகிறார்களா?” என்று கூறிக் கொண்டே குப்தரை பார்த்துவிட்டு இருவருமாய் டிவி ஸ்க்ரீனை பார்த்தனர். விஷ்ணுவை இடிக்க அந்த கார் வந்து கொண்டிருந்ததை பார்த்து தன் கையை சொடிக்கிவிட்டு மீண்டும் தன் கேம்மை ஸ்டார்ட் செய்து விளையாடத் தொடங்கினார் எமன்.

விஷ்ணுவை நோக்கி வேகமாக வந்த அந்த கார் டக்கென்று பிரேக் பிடித்து விஷ்ணுவை உரசிக் கொண்டு நின்றது.

“டேய் சாவு கிராக்கி, நீ சாவ என் வண்டிதான் கிடச்சிதா” வேகமாக வந்து பிரேக் அடித்த கடுப்பில் விஷ்ணுவை அழகிய சென்னை தமிழில் திட்ட தொடங்கினார் கார் டிரைவர்.

சத்தம் கேட்டு கண்களைத் திறந்து பார்த்தான் விஷ்ணு. தான் உயிரோடு இருப்பதை அறிந்து. “இன்னும் நான் சாகலையா?” மெல்லிய கூறலில் கேட்டான் விஷ்ணு.

அவன் கேட்டது டிரைவர் காதில் விழவில்லை. “ ஓரமா போய் நில்லுடா, செத்துத் தொலைய போற” திட்டிவிட்டு காரை கிளப்பினார் டிரைவர்.

“சாகுரதுக்கு தானே இங்க நிக்குறோம்” தனக்குள் கூறிக் கொண்டு, சாக முடியவில்லையே என்ற கவலையோடு மீண்டும் பஸ் ஸ்டாப் பெஞ்சில் அமர்ந்தான் விஷ்ணு. சுற்றும் முற்றும் பார்த்ததில் அனைவரும் அவனையே பார்க்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது.

அப்போது அவனுக்குள் ஒரு கூறல் “உன்னை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடுவேனா?”. யார் பேசியது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அருகில் யாரும் இல்லை. “ஒரு வேளை இது எமனோட வேளையா இருக்குமே?. எமன் சார் இந்தத் தடவை நான் சாகுரத உங்களால் தடுக்க முடியாது.” என்று நினைத்துக் கொண்டு வேகமாய் சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

கண் முன் தெரியாத அளவிற்கு வேகமாகவும், வளைத்து வளைத்தும் ஓட்டினான்.

தே சமயம் எம லோகத்தில் எமன் “டெம்பல் ரன்” கேம்மை வண்டி ஓட்டுவது போல் வளைத்து வளைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.     

இங்கு விஷ்ணுவைத் எந்த வண்டியும் இடிக்காமல் அங்கும் இங்குமாய் வளைந்து சென்றது. வாகனங்களின் டிரைவர்கள் விஷ்ணுவைத் திட்டுவது அவன் காதில் விழாமல் இல்லை இருந்தாலும் செத்தே தீருவது என்ற முடிவோடு ஓட்டினான். சிறிது நேரம் ஓட்டியவனுக்குப் புரிய ஆரம்பித்தது இதில் எமனின் சூழ்ச்சி ஏதோ இருக்கிறது என்று.

பைக்கை ஓரமாக நிறுத்தினான்.  ரோட்டின் சிறிது துரத்தில் ஒரு பெரிய சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது “எமன் சார் ஓடுர வண்டியைத்தானே என் மேலே மோதாமல் உங்களால் செய்ய முடியும். இப்போ பாருங்க எப்படி வந்து உங்களைச் சந்திக்கிறேன்” என்று தன் மனதில் கூறிக் கொண்டு தன் பைக்கை கிளப்பினான். தன் முழு பலத்தையும் காட்டி வேகத்தைக் கூட்டி நின்றிருந்த லாரியை நோக்கிச் சென்றான்.

லாரி அருகில் நெருங்க நெருங்க அவனுக்கு ஒரு வித பயம் அதிகம் ஆனது. பயத்தில் பைக்கை நிறுத்திவிடுவோமோ என்று எண்ணி தன் கண்களை இருக்கமாக மூடிக் கொண்டு பைக்கை வேகமாகச் செலுத்தினான்.

அதி வேகமாகச் சென்ற அந்த பைக் லாரியை நெருங்க நெருங்கத் தானாகவே வேகம் குறைய ஆரம்பித்தது. என்ன நடக்கிறது என்று தன்  கண்களைத் திறந்தான் விஷ்ணு. பைக்கின் வேகம் படி படியாகக் குறைந்து  லாரியை முட்டி நின்றது. அப்போதுதான் விஷ்ணு கவனித்தான் வண்டியில் பெட்ரோல் காலி என்பதை.

தே சமயம் எமன் கையில் இருந்த டேப்ளட்டில் “ஹை-ஸ்கோர் (high score)” என்று காட்டியது. எமன் உடனே சித்ர குப்தரை பார்த்து “பாரும் குப்தரே நான் உங்களைத் தோற்கடித்துவிட்டேன்” என்று பூலோகத்தில் நடப்பதற்கும் தனக்கும் எந்தச் சமந்தமும் இல்லை என்பதைப் போல கூறினார்.

தனக்கு மிக அருகில் நின்றிருந்த லாரியை பார்த்தான் விஷ்ணு. அதில் திருஷ்டிக்காக மாட்டப் பட்டிருந்த உருவம் அவனைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது.

“அப்போ நீங்க என்னைச் சாக விடமாட்டிங்க?. அனுவும் எனக்கு இல்லை, சரி சாகலாம் என்றால் அதற்கும் விட மாட்டேங்கிறிங்க நான் என்ன தான் செய்றது” ஆகாயத்தை பார்த்துப் புலம்பினான் விஷ்ணு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.