(Reading time: 11 - 21 minutes)

ருகில் நடந்து சென்ற ஒருவர் “யார் பெத்த பிள்ளையே, இப்படி தனியா நின்னு பேசிட்டு இருக்கு” என்று கூறிக் கொண்டே சென்றார்.

தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்தான் விஷ்ணு.

“இன்னும் 90 நாட்கள் இங்கே நமக்கு என்ன வேளை. முன்பாவது அனுவை துரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம், இனி அதற்கும் வழியில்லை. திவயா வேறு, என்னைப் பார்த்தாலே போலீஸ், அது இதுனு பயம் காட்டுரா. ச்ச இப்படி ஆகிவிட்டதே நம் நிலமை” என்று விஷ்ணு யோசித்துக் கொண்டிருக்கும் போதே,ஆபிஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனுவிற்கு புரை ஏரியது.

க்கத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த மற்றொரு தோழி தண்ணீரை கொடுத்துவிட்டு “உன்னை ரொம்ப புடிச்சவங்க தான் நினைக்கிறங்க  போல” என்றாள்.

அதற்குள் அருகில் இருந்த மற்றொரு தோழி கூறினாள் “எல்லாம் மாப்பிளை சாராத்தான் இருக்கும். மூன்று மாதத்தில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு வேற யாரு நினைக்க போற” கிண்டலாகப் பதில் கூறினாள்.

அனுவிற்கு காலையில் பார்த்த விஷ்ணுவின் சோகமான முகம்தான் ஞாபகம் வந்தது. அவனின் நினைவு வரச் சட்டென்று அனுவின் முகம் வாடியது.

“அவ வருங்கால கனவரை பத்தி பேசாதிங்க டீ, அனு எப்படி ஃபிள் பன்றா பாரு” அனுவின் நிலமை தெரியாமல் அவள் தோழிகள் அவளை ஓட்டி எடுத்தார்கள். இவை அனைத்தையும் கேட்டுக்  கொண்டு எதுவும் பேசாமல் அனுவின் முகத்தைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா. அவளுக்கு அனுவின் முக வாட்டத்திற்கான காரணம் தெரியும்.

தன்னை பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூட கவனிக்காமல் விஷ்ணுவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் அனு.

ங்கு விஷ்ணுவின் நிலைமையும் அதுதான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு முடிவிற்கு வந்தான்.

கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தான் மணி மதியம் 2.30. சட்டென்று எழுந்து அனு வீட்டின் அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

அங்கே சென்று அனுவின் வரவுக்காகக் காத்திருந்தான். அப்படி இப்படி என்று மணி 5 ஆனது.

திவ்யா தன் தந்தையுடன் வெளியே சொல்ல வேண்டும் என்று ஆபிஸில் பர்மிஸன் போட்டுவிட்டு சீக்கிரமே சென்றுவிட்டாள். அனு மட்டும் தான் ஆபிஸ் பஸ்சில் இருந்து இறங்கினாள்.

விஷ்ணுவை அந்த பஸ் ஸ்டாப்பில் பார்த்ததும் அவளுக்குள் ஒரு சிரு உதறல். இனி இவன் எந்தத் தொல்லையும் செய்யமாட்டான் என்றுதானே திவ்யா காலையில் கூறினாள். இங்கே பார்த்தாள் மீண்டும் இவன் நிற்கிறான். உதவிக்கு திவ்யா கூட இல்லையே. என்ன செய்வது. இவன் எதுவும் பிரச்சனை செய்தால் கத்தி ஊரைக் கூட்டிவிட வேண்டியதுதான், என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டு வேகமாக விஷ்ணுவைக் கவனிக்காதது போல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அனு.

அனுவை மட்டும் தனியே பார்த்த விஷ்ணுவிற்குக் கொஞ்சம் தைரியமாக இருந்தது. இப்போதே சொல்லி விட வேண்டும் என்று “அனு ஒரு நிமிஷம் நான் உங்களிடம் ஒன்னு கேட்கனும்” என்றான்.

அவ்வளவுதான் இவனுக்கு மரியாதை, பாவம் என்று பார்த்தால் ரொம்ப ஓவராதான் பன்றான். இப்போது தவறாக எதுவும் பேசினால் இவன் இன்றைக்கு காலி என்று மனதில் நினைத்துக் கொண்டு, வேகமாகவும் கோபத்தோடும் திரும்பி “என்ன மிஸ்டர் “ என்றாள்.

விஷ்ணு தான் கூறவந்ததைக்  கூற வாயெடுத்தான்…………

தொடரும் . . .

Episode # 08

Episode # 10

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.