(Reading time: 5 - 10 minutes)

04. நீங்களும் துப்பறியலாம் - தேன்மொழி

ஹாய் மக்களே! இது ஒரு திடீர் மினி-துப்பறியும் தொடர்!

வெளியாகும் ஒவ்வொரு சின்னஞ்சிறு கதையிலும் இன்ஸ்பெக்டர் குற்றவாளி என ஒருவரை கண்டுபிடிப்பார். அது சரியா, சரியென்றால் எப்படி கண்டுபிடித்தார் என்று நீங்கள் தான் துப்பறிந்து சொல்ல வேண்டும். தவறாக இருந்தால் உங்கள் கண்ணுக்கு குற்றவாளியாக யார் தெரிகிறார் என்றும் சொல்லலாம்.

சரியாக சொல்பவர்களுக்கு கை தட்டல் உண்டு.

அடுத்த வியாழன், பதிலை நான் பதிவு செய்வேன்.

என்ன துப்பறிய நீங்க தயாரா??? வாங்க வாங்க...

ஆள் மாறாட்டமா???

ங்கே பாருங்க நாளைக்கு சித்தப்பாவை பார்க்க போகணும்...”

Detective

இன்ஸ்பெக்டர் தேன் அலுப்புடன் மனைவி சத்யாவை பார்த்தான்.

“இல்...”

“இல்லைன்னா சொல்ல வரீங்க???????????????????”

“இல்லை சத்யா போகலாம்”

“எனக்கு தெரியும் ஒரே நாள் லீவ் அன்னைக்கும் தொல்லை செய்றேன்னு நினைக்குறீங்க. என்ன செய்ய அம்மா கட்டாயம் போய் பார்க்க சொன்னாங்க. சித்தப்பாவும் சித்தியும் நிறைய வருஷத்துக்கு முன் பிரிஞ்சிட்டாங்க. இப்போ அவர் மகள்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு வந்திருக்கா. சித்தியோட போட்டோ எல்லாம் வச்சிருக்காளாம். ஆனாலும் அம்மாக்கு ஏனோ அந்த பொண்ணு மேல சந்தேகம்.”

“உங்க அம்மாக்கு யார் மேல தான் சந்தேகம் இல்லை, என்னை கூட தான் அவங்களுக்கு பிடிக்காது”

‘தைரியமாக’ மனைவிக்கு கேட்காத வண்ணம் முணுமுணுத்தான் தேன்.

“என்ன உங்களுக்குள்ளே பேசிக்குறீங்க? அம்மாக்கும் உங்களுக்கும் சரி பட்டு வராதுன்னு எனக்கும் தெரியும். ஆனால் யோசிங்க இன்ஸ்பெக்டர் சார். அம்மா ஏன் என்கிட்டே வேலை மெனக்கெட்டு இந்த பொண்ணு கதை எல்லாம் சொல்றாங்க? நீங்க ஒரு விசிட்லேயே உண்மையை கண்டுபிடிச்சுருவீங்கன்ற நம்பிக்கையில தானே சொல்றாங்க. ஹ்ம்ம், பேசாமலே மாமியார் மெச்சும் மருமகன்ற பட்டம் பெற்றவர் நீங்க மட்டும் தான்”

அதற்கு மேல் தேன் புலம்பவும் இல்லை வர மாட்டேன் என்று சொல்லவும் இல்லை.

த்யாவின் சித்தப்பா கமலேஷ் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸை அவர்கள் அடைந்த போது, கமலேஷ் டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரையும் சந்தோஷமாக வரவேற்று உபசரித்தார்.

“சத்யா நீ இன்னும் ஐஷுவை பார்க்கலியே? கிரிக்கெட் பார்க்க போர் அடிக்குதுன்னு மாடிக்கு போனாள், கூப்பிடுறேன்” என்றவர், சொன்னது போல் ஐஷு என்று அவர் அழைத்த ஐஸ்வர்யாவை அழைத்தார்.

ஐஸ்வர்யா ஒல்லியாக உயரமாக இருந்தாள். சித்தப்பாவும் உயரம் தான் என மனதினுள் அவளை எடை போட்ட சத்யா, தோற்றத்தை கொண்டு எதுவும் கணிக்க முடியாமல் குழம்பினாள்.

திரும்பி கணவனை பார்த்தாள். அவனின் கூர்மையான விழிகள் ஐஸ்வர்யாவை எடை போடுவதை கண்டாள். இனி அவன் சரியாக கண்டுபிடித்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

தேன், மெல்ல கமலேஷிடம் பேச்சை துவங்கினான்.

“இவ்வளவு வருஷம் கழிச்சு உங்க பொண்ணை பார்த்தது பெரிய சர்ப்ரைஸா இருந்திருக்குமே?”

“ஆமாம்ப்பா. ஆச்சர்யம் அதிர்ச்சி எல்லாமே இருந்தது. ஆனால் ஒரே நாளிலேயே ஐஷுவுக்கும் எனக்கும் நடுவே இருக்க ஒற்றுமை புரிஞ்சு போச்சு. என்னை போலவே இவளுக்கும் ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். கரண்ட் அபேர்ஸ்ல பயங்கர இன்ட்ரஸ்ட், என்னை போலவே இவ இடது கை பழக்கமுள்ளவள்.”

“ஓ குட்”

தேன், அடுத்து ஐஸ்வர்யாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

“நீங்க வளர்ந்தது எல்லாமே பிரம்மனுர் தானா?”

“ஆமாம் பதினேழு வருஷம் அங்கே இருந்தேன். அப்புறம் மதுரையில எபிஎ காலேஜ்ல படிச்சேன். இரண்டு வருஷமா மதுரையிலேயே வேலைக்கு போனேன். என் அப்பா இறந்துட்டார்னு நினைச்சிட்டு இருந்தேன், அம்மா ஆறு மாசம் முன்னே இறக்கும் போது தான் அப்பாவை பத்தி சொன்னாங்க. அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு அப்பாவை தேடி கண்டுபிடிச்சேன்.”

“நீங்களும் எபிஎ ல படிச்சீங்களா? நானும் அங்கே பிஜி செய்தேன். மேத்ஸ் டிபார்ட்மென்ட்”

“நீங்களும் எபிஎ ஸ்டுடன்ட்டா? எந்த இயர் நீங்க?”

“2005”

“ஓ, நீங்க எனக்கு ரொம்ப சீனியர் நான் 2013 ல படிச்சு முடிச்சேன்”

“காலேஜ்ல ரமணின்னு.....”

“மேத்ஸ் டிபார்ட்மென்ட் professor ரமணி சாரை தானே சொல்றீங்க? ரொம்ப நல்ல சார், எனக்கும் அலைட் எடுத்தார்”

“நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆ.....”

டிவியில் திடீரென சத்தம் கேட்டது.

“விக்கட் போயிடுச்சு. மேட்ச் காலையில இருந்தே இன்ட்ரஸ்ட்டா போகுது. இனிமேலாவது இந்தியா இவங்களை ரெஸ்ட்ரிக்ட் செய்றாங்களா பார்ப்போம். இது அஸ்வினோட 200த் விக்கட்”

“அப்படியா? இவ்வளவு சீக்கிரம் அவ்வளவு விக்கட் எடுத்துட்டாரே!” – தேன்

“ஆமாம் ஆனால் இவரை விட சீக்கிரம் இதை செஞ்சவங்களும் இருக்காங்க..” என தொடங்கி கமலேஷ் சொன்னது போல் தான் விளையாட்டில் புலி என்பதை புள்ளி விபரங்கள் அள்ளி வழங்கி நிரூபித்தாள் ஐஸ்வர்யா.

கிரிக்கெட் என்றில்லாமல் கமலேஷை போலவே டென்னிஸ், புட்பால் என அந்த விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பவள் என்பதால் அதை பற்றியும் நிறைய பேசினாள்.

அங்கே நடந்த உரையாடலை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் சத்யா.

அவளை பொறுத்தவரை தேன் ஒரு நடமாடும் செய்தி களஞ்சியம். ஐஸ்வர்யா அவனுக்கு ஈடுக்கொடுப்பவளாக இருந்தாள்.

பேசி பேசி நேரம் செல்ல தேன் – சத்யா தம்பதி விடை பெற்று கிளம்பினார்கள்.

வெளியில் வந்த உடன் தேன் மொபைலை கையில் எடுக்க, சத்யா,

“நான் கூட அம்மா சொன்னதை வச்சு இந்த பொண்ணு கெட்டவளோன்னு நினைச்சேன். அப்படியே சித்தப்பா போலவே இருக்கா. சந்தேகமே இல்லை” என்று சொல்லிக் கொண்டிருக்க,

தேன் அவளை பார்த்தபடி,

“அபினவ், ஒரு ஆல் மாறாட்ட கேஸ் வந்திருக்கு. இப்போ இவங்க நம்ம ஜுரிஸ்டிக்ஷன்ல இருக்காங்க. நாம ஹாண்டில் செய்வோம். நான் சொல்றதை நோட் செய்துக்கோங்க. ஆல் மாறாட்டம் செய்ற பொண்ணு பேரு ஐஸ்வர்யான்னு சொல்றா....”

தேன் பேசிக் கொண்டே போக, சத்யா ‘பே’ என விழித்தாள்.

ன்ஸ்பெக்டர் தேன் நினைப்பது சரியா? தவறா? ஏன் சரி இல்லை ஏன் தவறு???

கொஞ்சம் ட்ரிக்கி க்ளூ கொடுத்திருக்கேன், இன்டைரக்ட்டுன்னும் சொல்லலாம். யாராவது கண்டுபிடிக்குறீங்களா பார்ப்போம். எப்படியும் நான் கொடுக்காத க்ளூ வைத்தே உண்மையை நிறைய பேர் கண்டுப்பிடிச்சுடுவிங்க tongue-out 

சித்ரா ஸ்டைல் பதில்களும் வெல்கம் wink

[பதில் தெரிஞ்சுக்க இந்த லின்க்கை க்ளிக் செய்ங்க http://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5802-neengalum-thupariyalam-04#comment-46675 ]

Episode # 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.