(Reading time: 15 - 30 minutes)

" புரியுது நிலா .. படிச்சோம் .. படிச்சதுக்காக வேலை செஞ்சோம்ன்னு இருக்காமல் , படிச்ச அறிவை வாழ்வியலில் பயன்படுத்தணும், பயன்படுத்தி மத்தவங்களுக்கு நல்வழி காட்டணும்னு நினைக்கிறது ரொம்ப பெரிய விஷயம் .. அதை நீ நிறுத்த கூடாது .. நானும் என்னால் முடிஞ்சா உதவியை உனக்கு செய்வேன் .. நீ கவலையே படாதே .. "

" ம்ம்ம்ம் ..ஆனா பாட்டி ஆசைபடுறாங்க "

" அவங்களை நான் பேசிக்கிறேன் .. நீ ஏன் கவலை படுற ?"

" மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையாய்  சண்டை போடாதே டா "

" அடியே , என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்காம்..நாங்க எல்லாம் ரொமாண்டிக் ஹீரோ ஆகி பல மாசம் ஆச்சு " என்று கண் சிமிட்டினான் அவன் ..

 " ஆமா ஆமா .. ரெண்டு பேருக்கு நடுவில யாரோ உட்கார போற மாதிரி நீ தள்ளி உட்கார்ந்து இருக்கும்போதே தெரியும் நீ  காதல் மன்னன்னு " என்று வாரினாள்  நிலா ..

" ஏதோ சின்ன பொண்ணு காரோட்டும்போது டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன் பாரு .. என்னைத்தான் சொல்லணும் " என்றவன் அவளை நெருங்கி அமர

" ஹ்ம்ம் நிலா , இப்படி கேட்டு வாங்க வேண்டியதா இருக்கே உன் நிலைமை " என்று நிலா தனக்குள் சொல்வதுபோல புலம்ப , அதன்பின் அவள் கேட்காமலேயே அவளது குறைகளை  தீர்த்து வைத்தான் மதியழகன் ..

" ஹே மாமா "

" என்ன டீ "

" உன்கிட்ட ஒரு வாரமாய் ஒரு விஷயம் கேட்கனும்னு நினைச்சேன் "

" பாருடா .. ஒருவாரமாய் உன் ஓட்டை வாய் சும்மா இருந்துச்சா ?"

" டேய் "

" ஹா ஹா சொல்லு "

" என் இமெயில் பாஸ்வர்ட் உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும் "

" சரி அதுக்கு ?"

" அப்பறம் ஏன் எல்லாருகிட்டயும் அப்படி சொன்ன நீ ?"

" நீதானே எல்லா டிடைல்ஸ்உம எனக்கு இமெயில் பண்ணி அனுப்பின ?"

" ஆமா , உன்கிட்ட சொல்லாமல் இருக்க முடியலன்னு , நீ இங்க வந்தபிறகு தவறுதலா அனுப்புற மாதிரி அனுப்பி வெச்சேன் .. ஆனா நீ என்னை கேள்வி கேட்கவே இல்ல .. சோ நீ என் இமெயில் பார்க்கலையோன்னு நினைச்சேன் "

" அதெல்லாம் எப்பவோ  பார்த்துட்டேன் .. அது மட்டுமா பண்ண நீ "

" வேறென்ன பண்ணேன் "

" தூக்க கலக்கத்துல எல்லாத்தையும் உளறிட்ட நீ !"

" என்ன ஷக்தி சொல்லுற ?"

" உண்மைதான் .. இதை நான் வெளில சொன்னா என்ன ஆகிருக்கும் "

" அய்யோ எல்லாரும் ரவுண்டு கட்டி இருப்பாங்க .."

" ம்ம்ம் அதான் சொல்லல "

" ஹ்ம்ம்ம்ம் "

" என்னடி யோசிக்கிற "

" இல்ல , அப்பப்போ  நீ சைலண்டா என்னை இம்ப்ரஸ் பண்ணிடுற மாமா "

" ஹா ஹா அதென்ன அப்பப்போ ? அப்போ எப்பவுமே இல்லையா ?"

" ஏன் உனக்கு தெரியாதா ?"

" தெரிஞ்சா நீ சொல்ல கூடாதா ?"

" சொல்லலன்னா  உனக்கு புரியாதா ?"

" புரிஞ்சா புரிய வைக்க மாட்டியா "

" புரிய வைக்கலன்னா விட மாட்டியா ?"

இப்படியாய் இருவரும் பேசிக்கொண்டே போக , நிலாவின் கார் வரும் சத்தம் கேட்டது ..

நிலா மதியழகன் இருவரின் ஜோடி பொருத்தத்தை மனதிற்குள் ரசித்து நின்றனர் அனைவரும் ..

" வாங்க அண்ணா " என்றவாறே கதிரும் சக்தியும் மதியுடன் முன்னே நடக்க அவர்களை பார்த்து நிறைவாய் புன்னகைத்தாள்  சங்கமித்ரா ..

" எல்லாம் நல்லபடியா முடிஞ்சது தேனு .. லைப்ல நான் மறுபடியும் இவ்வளவு சந்தோஷமாய் இருப்பேன்னு எல்லாம் நினைக்கவே இல்ல .. வாழ்க்கையை மொத்தமாய் வாழ்ந்து முடிச்ச மாதிரி திருப்தியா இருக்கு .. என் ஷக்தி , என் கூடவே இருக்கான் .. அதுவும் அவனுக்கு புடிச்ச எதிர்காலத்தோடு .. " என்றாள்  கண்கலங்கிட ..

" நீ இவ்வளவு சுயநலமாய் பேசுவன்னு நான் நினைக்கவே இல்லை சங்கு " என்றாள்  நிலா .. அவள் குரலில் ஒரு தீவிரம் இருந்தது ..அதை உணர்ந்து துணுக்குற்று தோழியை அவள் பார்க்க , என்ன ஆச்சுன்னு அடுத்த எபிசோட்ல சொல்றேன் ;)

தொடரும்

Episode # 24

Episode # 26

{kunena_discuss:777}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.