(Reading time: 15 - 30 minutes)

" து , லேட்டாச்சு .. வா .. இல்லன்னா பாலுக்கு பதிலா உன் தங்கச்சி என்னை காய்ச்சி எடுத்திருவா " என்று அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு நடந்தாள்   தேன்நிலா ..

நம் வீடு ..!

வாசலில் கார் வேண்டாம்

நம் நெருக்கத்தை கூட்டிட பைக் போதும் !

பளிங்கு கற்களில் எழும்பிய கட்டடம் வேண்டாம்

உன் பாசம் நிறைந்த சுவர்கள்  போதும் !

வாசலில் பூச்செடிகள் வேண்டாம்

உன் பெயரோடு என் பெயர் இணைந்த பெயர்பலகை போதும் !

அகன்ற வாசற்கதவு வேண்டாம்

உன்னை உரசி நுழைய வாய்ப்பு கொடுக்கும் வாசல் போதும் !

ஆடம்பர வரவேற்பறை வேண்டாம்..!

நான் எங்கு நின்றாலும் , உன்னால் பார்க்க முடிகின்ற வசதி போதும் !

ஓசைகளை தடுக்கும் சுவர்கள் வேண்டாம் !

எங்கு இருப்பினும் உன் குரல் எனக்கு கேட்டிட வேண்டும் !

நவீனரக நாற்காலிகள் வேண்டாம்

நமது செல்லச் சண்டைகளை சந்திக்கும் ஊஞ்சல் போதும் !

கடற்கரை அருகில் வேண்டாம்

உன் தோளில்  சாய்ந்து நிலவை ரசித்திட மொட்டை மாடி போதும் ..!

சொகுசான மாளிகை வேண்டாம்

உன் சொந்ததை எடுத்து கூறிடும் மனையே போதும் ..

சங்கமித்ராவின் இனிய கனவு நனவாகியது போலவே இருந்தது அந்த வீடு .. மிக குறுகிய காலத்தில் ஷக்தி, சங்கமித்ரா , இருவரும்  அந்த வீட்டில் குடியேறி இருந்தனர்.. இன்றுத்தான் இருவரும் வீட்டில் பாய் காய்ச்சிட நல்ல நாள் என்று தேன்நிலாவே பார்த்து கூற , நம் கதிர் காவியா , எழில் முகில்மதியோடு  தேன்நிலா  மதியழகனுக்காக காத்திருந்தனர் அனைவரும் ..

" மது "

" சொல்லு குட்டிமா "

" அது வந்து "

" தெரியும் தெரியும் ஐ லவ் யூ டூ "

" டேய் ஓவரா பண்ணாத .. நான் அதையா சொல்ல வந்தேன் ? "

" ஹா ஹா ... எப்பவும் நீ அது வந்துன்னு சொன்னா இப்படி தானே சொல்லுவ ? அதான் கேட்டேன் டா .. சரி சொல்லு "

" பாட்டி நம்ம கல்யாண விஷயமா பேசினாங்க "

" எப்போ உனக்குஐ லவ் யூ சொன்னேனோ அப்போவே கல்யாணம் ஆகின மாதிரி தானே ? உன் அம்மா அப்பா எனக்கு அத்தை மாமா .. என் அம்மா அப்பா உனக்கு அத்தை மாமான்னு ஆகியாச்சு .. எத்தனை தடவை இவங்க எல்லாம் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க " என்று இயல்பாய் கேட்டான் மதியழகன் ..

அவன் சொன்ன வார்த்தைகள் மேலோட்டமாய் கேட்க இனிமையாய் இருந்தாலும் , அவன் உளமார பேசுகிறான் என்பதை அவளால் உணர முடிந்தது .. அவளை விட யாரால் அவனை உணர்ந்து கொள்ள முடியும் .. என்று என் காதலை சொன்னேனோ அன்றே நீ எனதாகிவிட்டாய் என்று அழகாய்கூறி இருந்தான் ..

" நிஜமாகவே இவனது மதி அழகாய்த்தான்  சிந்திக்கிறது .. " சிலாகித்து கொண்டாள்  தேன்நிலா ..

" சொல்ல வந்ததையே சொல்ல விடாம பண்ணிட்ட நீ " என்றாள்  காதலுடன் ..

" அடடே அது தப்பாச்சே .. என் டார்லிங் எதுவா இருந்தாலும் மனசு விட்டு சொன்னாதானே எனக்கு சந்தோசம் ? சொல்லு என்ன விஷயம் ?"

" கொஞ்சம் நாள் போகட்டும் மது .. இப்போவே கல்யாணம் வேணாமே "

" .."

" என்ன அவசரம் ? உனக்கு நான்தான் எனக்கு நீதான் ..அதுவே எல்லாருக்கும் தெரியும் .. கல்யாணம் பண்ணா , நான்  இப்போ பண்ணுற பொறுப்பை குறைச்சிட்டு மிசர்ஸ் மதுவா உன்னோட இருக்கணும்னு ஆசைபடுறேன் .. அதே நேரம் என் கனவுகளுக்கு நான் உயிர் கொடுக்கணும் இல்லையா ?"

" கண்டிப்பா குட்டிமா .. "

" இப்போ இருக்குற நம்ம வாழ்வியலின் காரணமா ஒரு குழந்தையின் கருவறை வளர்ச்சியிலேயே நிறைய மாற்றங்கள் இருக்கு மது .. ஐ கி யூவுக்கும் ,  ப்ரெக்னன்சிகும் கூட நிறைய  தொடர்புகள் இருக்கு .. நான் அதை பத்தி தான்  பார்ட் டைம்மா ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன் .. ஒரு கைன்னியா இருந்து நான் என்னால எதை செய்ய முடியுமோ அதை கண்டிப்பா செய்யணும்னு தோணுது .. எனக்கு காதல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இந்த  கனவும் முக்கியம் .. "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.