(Reading time: 13 - 25 minutes)

26. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

" நீ இவ்வளவு சுயநலமாய் பேசுவன்னு  நான் நினைக்கவே இல்ல சங்கு " என்ற தேன்நிலாவை கேள்வியுடன் பார்த்தாள்  சங்கமித்ரா .. அதற்குள் அங்கு வந்த ஷக்தி

" அஹெம் .. ரெண்டு பொண்ணுங்க ஒன்னு கூடிட்டா பேச்சுக்கு பஞ்சம் இருக்காதே ...சீக்கிரம் வாங்க " என்று அழைத்தான் . அவன் சீண்டல் பேச்சில் மித்ரா செல்லமாய் முறைக்க

" உன் புருஷனுக்கு வாய பார்த்தியா ? " என்றாள்  நிலா ..

Ithanai naalai engirunthai

" ஏய் , கொஞ்சமாச்சும் என் மாமாவுக்கு மரியாதை கொடு டீ "

" அட என்ன மிது நீ ? உன் ப்ரண்டு  மதி அண்ணாவுக்கே மரியாதை தர மாட்டாங்க ..இதில் எனக்கு எங்கிருந்து கிடைக்கும் " என்று கேட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினான் ஷக்தி ..

" அம்மா தாயே .. உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்னை மாட்டி விடாதே " என்று கை கூப்பினாள் சங்கமித்ரா .. "பொழைச்சு  போ " என்பது போல நிலா , கை காட்ட , அப்படியே ஓடி இருந்தாள்  அவளும். நல்ல நேரத்தில் பால் காய்ச்சி  இறைவனை வேண்டி கொண்டனர் அனைவரும் .. அதன்பின் , காவியா , கதிரின் கைவண்ணத்தில் தயாராகிய விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டு அமர்ந்திருந்தனர் அனைவரும் ..

" நீ எப்போம்மா கிளம்பனும் ? " என்று அக்கறையாய் பேச்சை தொடங்கினான் மதியழகன் முகில்மதியிடம் ..

" இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் இருந்துட்டு அப்பறமா போவேன் அண்ணா "

" காலேஜ் இருக்குல மதி ?" - ஷக்தி

" ம்ம்ம் ஆமா அண்ணா , ஆனா ரொம்ப முக்கியமான க்ளாஸ்  ஒன்னும் இல்ல .. அடுத்த வாரமே போய்க்கலாம் "

" ஹும்கும் .. உன் அண்ணி முடிச்ச வேலையை நீ தொடங்கி வைக்கிறியா ?" என்று கேலியாய் கேட்டான் ஷக்தி .. ஆம் , அவனிடம் பேசுவதற்காக எத்தனை நாட்கள் வகுப்பை கட் அடித்து இருக்கிறாள் சங்கமித்ரா .. அதை அவன் கோடிட்டு காட்டவும் " வெவ்வேவ்வேவ்வே " என்று ஒழுங்கு காட்டினாள்  மித்ரா ..

" அப்படி எல்லாம் இல்ல அண்ணா " என்ற இளையவளுக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை ..

" நீ இன்னைக்கே கிளம்பு  மதி .. வீட்டுல அம்மா அப்பா அத்தை மாமாவுக்கு ரொம்ப கவலையா இருக்கும் .. கதிரும் வேலைக்கு போயிட்டான் ..நானும் கடையை பார்த்துக்கணும் ..அடிக்கடி நாங்க வர முடியாது இல்லையா .. சோ நீதான் பார்த்துக்கணும் " என்றான் ஷக்தி .. எப்போதுமே மௌனமாய் அனைத்தையும் கண்காணித்து  எதுவும் சொல்லாமல் இருப்பவன் , இன்று மனதில் தோன்றியதை சொல்லவும் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்று கொண்டாள்  முகில்மதி .. இப்போது மதியழகனின் பார்வை அன்பெழிலனின்  மீது பதிந்தது .. என்னத்தான் முகத்தில் எதையும் காட்டி கொள்ளாமல் இருக்க அவன் முயன்றாலுமே, அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரியத்தான் செய்தது ..

" அப்போ நானே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் " என்று மதியழகன் கூறவும் , இடையில் குறுக்கிட்டான் எழில்..

" எதுக்கு அண்ணா , ஆல்ரெடி உங்களுக்கு நிறைய வேலை வெச்சிட்டோம் .. நானும் வீட்டுக்கு போயாகனும் .. அப்பாவும் அம்மாவும் போன்  பண்ணாங்க .. நானே முகில்மதியை அழைச்சிட்டு போறேன் " என்றான் ..

" ஓகே ஓகே கடமை கண்ணியம்னு பேசினது எல்லாம் போதும் .. அதான் எல்லாரும் அவங்கவங்க வேலைய பார்க்க போக போறோமே , இன்னைக்கு ஒரு நாள் தான் ப்ரீ .. வெளில எங்கயாவது போலாமா ?" என்றாள்  தேன்நிலா ..

" படம் பார்க்க போகலாம் , பீச் போகலாம்  " என்று ஒவ்வொருவரும் ஆர்பரிக்க , இறுதியாய் படம் பார்த்துவிட்டு எழில் மற்றும்  முகில்மதியை வழியனுப்பிவிட முடிவெடுத்தனர் அனைவரும் .. இனி வரும் நாட்களும் இப்படி இனிதாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் நிறைந்திருக்க , உற்சாகமாகவே கழிந்தது அன்றைய தினம் ..

காரில் ,

" முகிலா "

" .."

" முகிலா "

" ஆ... ஆங் ??? "

" என்ன யோசனையில் இருக்க நீ ?

" நம்ம பத்தி தான் "

" ஏன் "

" நாம கொஞ்ச நாள் பேசிக்க வேணாம் எழில் "

" இப்போ என்ன தினமும் ஆ பேசிட்டு இருக்கோம் ?"

" இல்லன்னு சொல்லுங்க பார்ப்போம் "

சொல்ல முடியாதுதான் ! இந்த இரண்டு மாதங்களாய், ஷக்தி மித்ராவுக்காக உதவிகள் செய்கிறோம் என்ற பெயரில் முகில்மதி - அன்பெழிலனின்  சந்திப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது என்பதுதான் உண்மை.. அதனால் இருவருக்குமே மகிழ்ச்சி  தான் .. அதனால் தான் அதனை தடுக்கும் எண்ணம் கூட இல்லாமல் இருந்தனர் .. ஆனால், இப்போ சிந்தித்து பார்க்கையில் ஏதோ ஒன்று அவளை நெருஞ்சி முள்ளாய்  குத்தியது ..

" ஆமா , அதிகம் பார்க்குறோம்  பேசுறோம்தான் .. அதுனால என்ன ? இப்போ கல்யாணமா பண்ணிகிட்டோம் .. "

".."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.