(Reading time: 13 - 25 minutes)

" ஹா ஹா ..அதெல்லாம் உன்னை பேச வைக்கத்தான் என் மக்கு மங்குனி மாமா " என்று மனதிற்குள் பேசியவள் , அவன் தன்னை ஆராயும் பார்வையுடன் பார்க்கவும் தோசையே கண்ணென இருப்பது போல பாவ்லா காட்டினாள் ..

" மாமா "

" ம்ம்ம்"

" எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு "

" சரி "

" என்ன சரி ? ஏன்னு  கேளு "

" கேட்கலன்னா விட்ருவியா  ?"

" விடமாட்டேன் தான் ..அதுக்காக கேட்க மாட்டியா ?"

" கேட்கலன்னா சொல்ல மாட்டியா ?"

" சரி சரி சொல்லுறேன் "

 " அது " என்று தல அஜித் போல கூறியவனை " ஹும்கும் " என்று நொடித்து கொண்டு பேச தொடங்கினாள் ..

" நான் என்  லைப் ல பாசம் வெச்சது , காதலிச்சது ஆசைப்பட்டது ..எல்லாமே நீதான் .. நீதான் என் உலகம்னு இருந்தேன் .. நாம சேருவோமா இல்லையான்னு எனக்கு தெரியாது ஆனா என்னுடைய ஒவ்வொரு கற்பனையிலும் நீதான் என் பக்கத்துல இருப்ப தெரியுமா ?"

" ஆஹான் "

" ம்ம்ம் ஹான் ஜீ .. ஒரு பாட்டு கேட்டா , கதை படிச்சா , போட்டோஸ் பார்த்தா , நீ என் பக்கத்துல இருந்தா எப்படி இருக்கும்னு தான் என் மூளை யோசிக்கும் "

" பாருடா"

" இன்னைக்கு அந்த கனவெல்லாம் நிஜமாய் ஆகி போச்சு ..வாழ்ந்து முடிச்ச மாதிரி இருக்கு " என்றாள்  அவள் .. அவள் கடைசி வார்த்தையில் ஷக்தியின்  முகம் இறுகியது .. இருந்தாலும் " சின்ன பொண்ணு தானே " என்று சமாதானப்படுத்தி கொண்டு  அவள் பேசுவதை கேட்டான் ..

" ஒவ்வொரு நாள் கடந்து போகும்போதும் , நீ எப்போடா என்னோடு இருப்பன்னு யோசிச்சே முன்னேறி போனேன் .. ஆனா இபோ நிகழ்காலமே போதும்னு இருக்கு " என்றவளை  உற்று நோக்கினான் ஷக்தி ..

" இதான் ...இதுக்கு தான் நான் உனக்கு இவ்வளவு லேட்டா கிடைச்சேன் " என்றான் அவன் ..

" என்னடா ?"

" ஆமா , இப்போ கல்யாணம் பண்ணதுக்கே  கிழவி மாதிரி பேசுற நீ .. ஒரு நாலு வருஷம் முன்னாடியே உன்னை கல்யாணம் பண்ணிருந்தா , கழுதை காலேஜ் கூட போயிருக்க மாட்ட நீ "

" ச்சி  போ "

" விளையாட்டுக்கு சொல்லுறேன்னு நினைக்காதே ..எனக்கு என்னமோ உன் சிந்தனை தடம் மாறி போற மாதிரி இருக்கு .. லைப் ல எப்பவும் ஒரு கோல்  இருக்கணும் மிது ..இலக்கு இருந்தால்தான் ஓட முடியும் .. "

" எனக்கு ஓட எல்லாம் வேணாம் .. நீ சுடர தோசைய சாப்டுகிட்டே இருந்தா போதும் " என்றாள்  அவள் உல்லாசமாய் .. அவளின் உற்சாகத்தை குறைக்க மனமில்லாமல் அவனும் தனது பேச்சினை நிறுத்தி கொண்டான் .. பிற்காலத்தில் அவன் சொன்ன அறிவுரை அவளுக்கு தேவைப்படும் , அந்த நேரம் , அவன் அவளது முகத்தை கூட பார்க்காமல் ஒதுங்கி போயிருப்பான் என்று சொல்லி இருந்தால் யாருமே நம்பி  இருக்க மாட்டார்கள் ..ஆனா அதான் நடந்தது ..அதுவும் பத்தே நாளில் !

என்னவனே ,

இதென்ன கோபம்

எய்தவளை  நொந்த நீ புத்திசாலி

ஆனால் எங்கே நான் செலுத்திய அம்பு ?

கண்டுபிடித்து தந்துவிடு

என்ன பிழை கண்டுவிட்டாய் என

தண்டனையை  அளிக்கிறாய் ?

என்ன குறையை  கேட்டு நீ

என் கெஞ்சலை கேளாமல் ஓடுகிறாய்

எத்தனை நாள் தொடரும்

இந்த போராட்டம் ?

உன்னை எண்ணி தவிக்க விடுவதிலும்

தான் உனக்கென்ன கொண்டாட்டம் ?

இருள் வந்தால் ஒளி  தேடுவேன் என்றெண்ணி

இருளில் தள்ளியவனே

ஒளியும் நீயே என்று புரிந்துகொள்

வெகுவிரையில் !

தீயில் குளிர்க்காய கற்றுத் தருவதற்காய்

அனலில் நிற்க வைத்தவனே

எரிவது  உடல் அல்ல ,

உன் நேசத்திற்காக ஏங்கும்  நெஞ்சம் என்பதை புரிந்துகொள்

-கண்ணீருடன் சங்கமித்ரா ஷக்தி ..

நம்ம மிது ஏன் அழறா ? அடுத்த எபிசொட்ல தெரிஞ்சிப்போம்

தொடரும்

Episode # 25

Episode # 27

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.