(Reading time: 13 - 25 minutes)

" ப்பவும் ஒரே மாதிரி யோசிக்க  மாட்டியா நீ ? என்னைய தலைமேல தூக்கி வெச்சுகுறதும் தூக்கி எரியறதும் தான் உன் வேலையா ? "

" எழில் !!"

" ..."

" எந்த நம்பிக்கை எழில் ? எந்த நம்பிக்கை என்னை உங்களோடு அனுப்பி வெச்சு இருக்கு ? எந்த நம்பிக்கை  உங்களோடு  நான் பாதுகாப்பாய் இருப்பேன்னு நம்புது ? அந்த நம்பிக்கைக்குன்னு ஒரு மரியாதையை தர வேணாமா ? என் அண்ணா , அண்ணி , அம்மா ,அப்பா   எல்லாரும் கொடுக்குற நம்பிக்கையை காபத்தானும்ன்னு நினைக்கிறது தப்பா ? என்னை மறந்துடுங்கன்னு சொன்னேன்னா ?  இந்த காதல் வேணாம்னு சொன்னேனா ? "

" அடிங் .... அப்படி சொல்லிடுவேனா ? "

" நீங்க ஒரு நல்ல நண்பன் எழில் ஆனா பொல்லாத காதலன் " என்றாள்  முகில்மதி .. அவள் விழிகளை உருட்டி சொன்ன விதத்தில் அந்த நேரத்திலும் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது .. எனினும் அதை காட்டிகொள்ளாமல் இருந்தான்  அன்பெழிலன் ..

" சரி உன் இஷ்டம் "

" நான் எதுக்கு இதை சொல்லுறேன்னா  .."

" அதான் சரின்னு சொல்லிட்டேன்ல ..விடு " என்று அமைதியானான் அன்பெழிலன் .. இருவருக்கும் இடையே  மௌனமென சுவர் கொஞ்சம் கொஞ்சமாய் எழுந்தது ..

" தேங்க்ஸ்  கதிர் " .. தனது வீடு வரை வந்திருந்த கதிரேசனுக்கு நன்றி கூறி இருந்தாள்  காவியதர்ஷினி . இருவரும் தத்தம் பைக்கில் பயணித்து வந்தாலும் , ஒரே வேகத்தில் வண்டியை செலுத்தி கொண்டே  அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருந்தனர் .. உண்மையில் , காவியாவின் அணுகுமுறையை கண்டு வியந்துதான் போனான் கதிர் .. தாமரையில் இலை மேல் நீர்போல இருந்தது அவர்களின் உரையாடல் ..அதே நேரம் அவனை புண்படுத்தவும் இல்லை அவள் .. அதே நேரம் , அவனின் குறையை குத்தி காட்டாமலும் இல்லை .. அவளது கேள்விகளுக்கும் பதிலுக்கும் எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி கொண்டுதான் இருந்தான் அவன் .

" எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் ?"

" சொன்னா என்ன ? அது நல்ல பழக்கம் தான் கதிர் "

" சரி தர்ஷினி .. நீ உள்ள போ ..நான் கெளம்பறேன் "

" வீடு வரைக்கும் வந்தவளுக்கு வீட்டுக்குள்ள போகத் தெரியாதா என்ன ? நான் பார்த்துக்குறேன் ..அர்த்த ராத்திரியில் பையனும் பொண்ணும்  சேர்ந்து நின்னா கூடத்தான் உங்க பொல்லாத சமுதாயம் சாடை பேச்சு பேசும் " என்று குத்தி காட்டினாள் ..

" டேய் கதிரேசா , உனக்கிது தேவையாடா" என்று தன்னைத்தானே நொந்து கொண்டவன் , பைக்கை எடுத்து கொண்டு நகரவும் அங்கு குணா வரவும் சரியாய் இருந்தது ..

" நிறைய புது உறவுகள் இருக்கு போலிருக்கு குட்டி "

" குட்டி கிட்டின்னு சொன்ன, பல்லு உடைஞ்சிரும் குணா உனக்கு "

" பாருடா .. கூட ஆளு இருக்குன்னு ஓவரா எகுருற நீ "

" இதபாரு என்ன இருந்தாலும் நீ என் அத்தை பையன் ..உன் அப்பா அம்மா மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு ..அதுனாலத்தான் உன்னை நான் போலிஸ் கிட்ட பிடிச்சு தராமல் இருக்கேன் ..ஏன் என்னை இப்படி நச்சரிக்கிற ?"

" அதைதான் அத்தை மகளே என்னையே கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லுறேன் ..அதுக்கு மட்டும் சரின்னு சொல்ல மாட்டுறியே "

" எனக்கு இஸ்டம் இல்லாததை செய்ய சொன்னா என்ன அர்த்தம் குணா ? ஏற்கனவே நான் தனிமரமாய் நொந்து போயி நிக்கிறேன் , ஏன் என்னை சாகடிக்கிற ? நானும் எங்கம்மா அப்பா கிட்ட போனாத்தான் என்னை விடுவியா நீ ? "

" என்னை விட்டுட்டு அந்த நோஞ்சானை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்கறியா  காவியா ? உன்னை அவ்வளவு சீக்கிரம் விடவே மாட்டேன் "

" அன்புக்காகவா என்னை விட மாட்டேன்னு சொல்லுற ? பணத்துக்காகத்தானே ! "

" நீ என்ன வேணும்னாலும் நினைச்சிக்க , இன்னும் பத்து நாளில் நீ இதுக்கு ஒத்துக்கணும் ..எங்கம்மா உன்னைய தேடி வரும்போது, நீயே சந்தோஷம்மா இதுக்கு சரி சொல்லுற ..அப்படி இல்ல உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் .. இதோ போனானே , அவன் பைக் ல இருந்து தடுக்கி விழுந்திட வாய்ப்பு இருக்கு "

" குணா !!!!!!!"

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ..என்கிட்ட  சத்தம் போட்டு பேசாத காவியா .. உனக்கு 10 நாள் டைம் இருக்கு .. " என்று அவள் கன்னத்தை  தட்டி விட்டு சென்றான் குணா ..தீ பட்டது போல இருந்தது அவளுக்கு ..அதைவிட பெரிய தீ அவள் மனதிற்குள் எரிந்தது ..குணா விஷயத்தில் அவள் ஓரளவிற்கு முடிவு எடுத்து தான் இருந்தாள்  .. அதை செயல்படுத்திவிட இந்த  10 நாட்கள் போதுமென்று தோன்றவும், தனது அலுவலகத்திற்கு 10 நாள் விடுமுறை விண்ணபித்து இமெயில் அனுப்புவிட்டு உறங்கினாள் ..

அவளின் திட்டம் தான் என்ன ? அடுத்த எபிசோட்ல தெரிஞ்சிப்போம் .

" நீ போய்தான் ஆகணுமா மது ? "

" ஆமாடி  நிலா செல்லம் "

" சும்மா கொஞ்சாதே .. அதான் கெளம்பி போறியே "

" ஏன்டீ நான் என்ன ஓரேடியாவா கெளம்பி போறேன் ? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.