(Reading time: 13 - 25 minutes)

" ப்படி போறதுன்னா கூட பரவாயில்லை "

" அடிப்பாவி , ஒரு ஹீரோயினா , நீ இந்த இடத்துல என்ன சொல்லி இருக்கணும் ? ஏன்டா அபசகுணமா  பேசுறன்னு என் வாய்மேல கை வெச்சு இருக்கணும் ..நானும் உடனே உன் கைல முத்தம் வைப்பேன் "

" யோவ் ... போதும் போதும் ..அந்த சீன் எல்லாம் இங்க கிடையாது .. நீ எங்க வேணும்னாலும் ஓடி போ ..சிங்கப்பூர்  போ , மலேசியா போ இல்ல மார்ஸ்சுக்கே ஓடிப்போ ..போகும்போது என்னையும் கூட்டிட்டு போ "

" ஓஹோ அப்போ மார்ஸ்ல மூன் டாக்டர் வேலை பார்ப்பியா ?"

" அதே அதே " தலையாட்டி சிரித்தவளை  ரசனையுடன் பார்த்தான் மதியழகன் .. காதலும் காதல் தந்த மகிழ்வும் அவள் முகத்தை இன்னமும் பிரகாசமாய் காட்டியது ..

" என்னடா மார்க் போடுறியா ?" என்று கண் சிமிட்டினாள்  நிலா ..

" ஹும்கும் ..எங்க ஆளு எப்பவுமே நூத்துக்கு முன்னூறு மார்க் வாங்கிடுவா "

" வரவர மதுக்கு மதிகெட்டு போச்சு ..கணக்கு கூட தப்பா சொல்லுறான் "

" உன்னை கணக்கு பண்ண ஆரம்பிச்சதுல இருந்தே நான் இப்படித்தானே இருக்கேன் "

" ஹா ஹா ...சரி என்ன விஷயமா சிங்கபூர் விஜயம் ?"

" எல்லாம் நம்ம ஸ்பார்க் எப் எம் பத்திதான் .. ஒரு ஆர்வத்தில் ஆரம்பிச்சது தான் இது ..ஆனாலும் கிடைச்ச வாய்ப்பை சரியா யுஸ்  பண்ணனும்ல .. ரேடியோன்னா  வெறும் என்டர்டைன்மன்  மட்டும் இல்ல .. அதுக்கும் மேல ஏதாச்சும் பண்ணும் .."

" சரி ப்ளான் என்னன்னு சொல்லு "

" இது ஒரு COLLABORATION  மாதிரி .. சிங்கப்பூர்  தனியார் வானொலி நிலையத்துக்கும் நம்ம ஸ்பார்க் எப் எம் கும் ..அதாவது , இப்போ நம்ம நாட்டுல படிச்சு முடிச்ச பசங்க எல்லாம் டக்குனு வெளிநாட்டுல வேலையை தேடி  செட்டல் ஆகிடுறாங்க .. அப்படி அவங்க எந்தெந்த நாட்டுல செட்டல் ஆகுறாங்கன்னு  இருக்குற லிஸ்ட்ல, சிங்கபூரும் அடங்கும் .. இந்த collaboration  மூலமாய் அங்கு வேலை செய்யுற நம்ம நாட்டு பசங்க கூட பேசுறதுக்கும் அவங்களுடைய வேலை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்   ஒரு programme  பண்ண போறோம் "

" ஆ interesting இருக்கே "

" ம்ம்ம்ம் program அதைவிட interesting aa இருக்கும் .. அங்க இருக்குற வாழ்க்கை முறை , அணுகுமுறைல ஆரம்பிச்சு , வேலை வாய்ப்பு வரைக்கும் எல்லாமே இங்க இருக்குறவங்களுக்கு தெரியவரும் .. வெளிநாட்டுல வேலை செய்றவங்களுடைய  சொகுசான முகம்தானே நமக்கு தெரியும் ..அவங்களோட இன்னொரு முகம் தெரியாது ! அவங்க படுற கஷ்டம் நமக்கு தெரியாது ..அதை பத்தி பேசவும் இது ஒரு  வாய்ப்பு "

" ஆனா , இண்டெர்னட்  இப்போ நல்லா வளர்ந்துருச்சே மது .. நாம நினைச்சா உட்கார்ந்த இடத்துல இருந்தே  எல்லா நாட்டு ரேடியோவும் கேட்கலாம் .. "

" கேட்கலாம் ஆனா பேச முடியுமா ? கசப்பு தெரியாமல் இருக்க  மருந்துல இனிப்பு சேர்க்குற  மாதிரி , என்னத்தான் பேசுறது முக்கியமான விஷயமா இருந்தாலும் இந்த program ல சில என்டர்டேயின்மண்  விஷயமும் இருக்கு .. வெளிநாட்டுல இருக்கும் அண்ணனுக்கோ , ப்ரண்டுக்கோ  பெர்த்டே  சர்ப்ரைஸ் கொடுக்குறது , பிரான்க்  கால்ஸ் பண்ணி விளையாடுறது ..இப்படி லோக்கல்ல என்ன பண்ணுறாங்களோ  அதை இதுலயும் பண்ணுவோம் "

" செலவு எகுரும் "

" கண்டிப்பா ..அது ஒத்துக்குறேன் ..ஆனா ஒரு நிம்மதி  கிடைக்கும் .. ஆரம்பத்துல தான் சிரமமா இருக்கும் ..அப்பறமா விளம்பரமும் , பிரபலமான பெயரும் சேர்ந்ததும்  நிச்சயம் இதை சேர வேண்டிய இடத்துல சேர்க்கும் ..ஸ்பார்க் எப் எம்  பொறுத்த வரை நான் லாபத்தை முன்வெச்சு எதுவும் செய்யல .. "

" சூப்பர்  ஐடியா .. ! இந்த விஷயம் மட்டும் சங்குக்கு தெரிஞ்சா , ஏன் அண்ணா இதெல்லாம் நாலு வருசம் முன்னாடி பண்ணா , நான் துபாய் ல இருந்த ஷக்திகிட்ட பேசிருப்பேன்லன்னு சொல்லுவா " என்று சிரித்தாள் தேன்நிலா .. அவள் பேச்சை கேட்டு கற்பனை செய்தவனுக்கு சிரிப்புத்தான் வந்தது .. நிலா , மது இருவரும் நினைத்ததாலோ என்னவோ  புரை ஏறியது மித்ராவிற்கு .. வாங்க அங்க போவோம் ..

" ரும எரும பார்த்து சாப்பிடு " என்று மனைவியின் தலையை தட்டி கொண்டே தோசை வார்த்தான் ஷக்தி .. அவன் திட்டியதிலா அல்லது அவன் காட்டும் அக்கறையிலா என்று தெரியாமல் அவள் விழிகள் கலங்கியது .. இரண்டுமே இல்லை என்பதுபோல " ஸ்ஸ்ஸ்  ஆ" என்று அவள் அலறவும்

" என் மூஞ்சிய பார்க்காமல் , தட்டுல இருக்குற மிளகாயை தள்ளி வை " என்றான் ஷக்தி சிரிப்பை அடக்கி கொண்டு ..

" எனக்கு பசின்னு உனக்கு எப்படி தெரியும் மாமா "

" .."

" கேட்குறேன்ல சொல்லேன்டா "

" மனுஷன் தூங்க போகும்போது , நீ குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருந்த , ஹோட்டலயும் நீ நல்லா சாப்பிடாததை கவனிச்சேன் ..அதான் " என்றான் .. மேலும்

" வர வர நீ ரொம்ப கேள்வி கேட்குற " என்றான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.