(Reading time: 9 - 18 minutes)

03. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

மூன்று மாதங்கள் போன விதம் ஆதர்ஷ், ப்ரயு இருவருக்கும் தெரியவில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் மாமியார் மெச்சும் மருமகள் என்றில்லா விட்டாலும், குறை சொல்ல முடியாத படி இருவரின் நடவடிக்கைகளும் இருந்தன..

ஆதர்ஷின் அம்மா அனாவசியமாக பிரத்யுவின் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை .

பிரத்யுஷாவும் தன் மாமியாரிடம் எந்தெந்த விஷயங்களில் அவருடைய உதவியோ, ஆலோசனையோ தேவையோ கேட்டு செய்ய வேண்டியதை செய்தாள்.

திருமணத்திற்கு பின் முதல் மாதம் சம்பளம் வந்தது. அது பேங்கில் கிரெடிட் ஆவதால், அன்று மாலை வந்தவுடன் தன் மாமியாரிடம்,

“அத்தை.. இன்று எனக்கு சம்பளம் பாங்கில் போட்டு விட்டார்கள். நாளை வரும்போது நான் எடுத்து வருகிறேன்” என்றாள்.

“சந்தோஷம்... நீ ஆதியிடம் கேட்டு என்ன செய்ய வேண்டுமோ செய்..” என்றார்.

“சரி அத்தை.”

ன்று இரவு, வழக்கம் போல் ஆதி தன் மனைவியிடம் பேச சேட்டில் வந்தான்.

“ஹாய்.. டார்லிங்.. இன்னிக்கு எப்படி போச்சு ?”

“வழக்கம் போல் தான்.. அப்புறம் இன்னிக்கு எனக்கு பே டே. சாலரி க்ரெடிட் ஆயிடுச்சு .

“வெல். அப்போ ட்ரீட் .. எங்கே ?”

அவள் சேட் ஸ்மைலி யில் உள்ள கேக், கோக் பிச்சர் எல்லாம் அனுப்பி விட்டாள்.

“ஹே.. இது ..  கள்ளாட்டம்.. ட்ரீட் கேட்டா ஸ்மைலி அனுப்புற?”

“அப்புறம் நார்வேக்கு கேக் அனுப்பினா.. அதுலே ஊசிப்போன நூட்லஸ் தான் வரும்” நு சிரிச்சாள். அவனும் சிரித்தான்.

“சரி .. என்னோட சாலரி க்கு எதுவும் பிளான் வச்சிருக்கீங்களா? நான் என்ன பண்ணனும்?”

“ஏன்? வீட்டு செலவுக்கு என்னோட அக்கௌண்டில் இருந்து அம்மா அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பிட்டேனே.”

“நீங்க வித்யா கல்யாணம், இந்த வீடு லோன் இதுக்கு எதுவும் கட்டனுமா? இதையும் நாம யூஸ் பண்ணிக்கலாமே ..

“இல்ல மா. அது வேண்டாம். என்னோட சாலரி லே ஏற்கனவே இதெல்லாம் ..ஈ.எம்.ஐ. யா போட்டுட்டேன்... நம்ம வீட்டு செலவும் இதுல சேர்ந்துரும்.. சோ உன்னோட சாலரி நீயே மானேஜ் பண்ணிக்கோ ...”

“நீங்க அந்த லோன்லாம் சரி பண்ண தானே இந்த அப்ரோட் ஆப்ஷன் ஏத்துக்க காரணம். அதான் இந்த பணமும் சேர்த்தா சீக்கிரம் லோன் கட்டிட்டு , இந்தியா திரும்பிரலாமே... “

“ஹே.. அது ஒரு காரணம் தான்.. நான் அங்கே இருந்தாலும் இத சீக்கிரம் முடிச்சிடலாம்.. ஆனால் இந்த ஆப்பர்சுனிட்டி என்னோட கேரியர்க்கும் சவால். அதுதான் ஒத்துகிட்டேன். இது ஒரு 6 மாசம் முன்னாலே பேசின விஷயம். ஆனால் வித்யா கல்யாணம் எதிர்பாராத ஒன்று. நல்ல இடம் வரும்போது எனக்கு தள்ளிபோட மனசில்லாம அவ கல்யாணம் பேசி முடிச்சிட்டோம்.

அதுலேர்ந்து ஒரு மாசத்துக்குள்ளே இந்த வேலை வரவும், அம்மாவை தனியா விட முடியாமல் நம்ம கல்யாணம் முடிஞ்சுது. அதுக்கு முன்னாடியே நான் இந்த லோன் விஷயம் எல்லாம் பிளான் பண்ணி முடிச்சுட்டேன். சோ .. உன் சம்பளத்த அப்படியே வச்சுக்கோ. இதுக்கு முன்னாடி உன் சம்பளத்த என்ன பண்ணுவ?”

“அப்பா அத சேவிங்க்ஸ் போட்டு வச்சுக்கோன்னு சொல்வார். ஆனால் நான் சண்டை போட்டு அவருக்கு பாதி சம்பளம் கொடுப்பேன்.. அப்புறம் ரெண்டு வருஷம் என் படிப்புக்கு வாங்கின லோன் அடைச்ட்டு, இப்போ தங்கச்சிங்க ரெண்டு பேர்லயும் கொஞ்சம் போட்டு வச்சுருக்கேன். “

“இப்போவும் நீ அதே கண்டினியு பண்ணு, எனக்கும் தெரியும். ஒரு பொண்ணு கல்யாணம்னா எவ்வளவு செலவு ஆகும்னு. அதோட உன் தங்கச்சிங்க பேர்லே போட்ட பணத்தையும் போட்டு வா.. அவங்க எதிர்காலத்திற்கு யூஸ் பண்ணிக்கலாம். “

“thank you .. நானும் அதுதான் நினைச்சேன். ஆனால் உங்ககிட்ட கேட்டு அவங்களுக்கும் கொடுக்கலாம்னு.”

“சரி ... இவ்ளோ நேரமா சீரியஸ் மேட்டர் பேசிட்டு இருக்கோமே.. கொஞ்சம் கூலா ஏதாவது பேசலாமா?”

“என்ன பேசணுமாம்?”

“நீ என்னை ஆதர்ஷ், ஆதி ஏதாவது பேர் சொல்லி கூப்பிடலாம்லே.. மொட்டையா ஹாய்னு மட்டும் சொல்றியே?”

“உங்ககிட்ட தானே பேசுறேன்.. அதுக்கு ஏன் பேர் சொல்லணும்.? அதுவும் வீடியோ சேட் லே.. பேசுறதுக்கு “ என்றபடி அவனுக்கு அழகு காண்பித்தாள்..

“அந்த .. அழகு காண்பிக்கற உதட்ட அப்படியே ...”ன்னு ..முடிக்காமல் விட்டான். இதற்கு மேல் ஆதியின் பேச்சுக்கள் கொஞ்சம் அந்தரங்கமாக இருக்கவும், சமாளிக்க முடியாமல்,

“ஒ.கே.. நான் கட் பண்றேன்... குட் நைட் ..” என்றாள்

“அதானே.. கொஞ்சம் பேசிட்டா உடனே கட் பண்ணிடுவியே. சரி .. சரி .. குட் நைட்.. & நைட் கனவுலே நான் சொன்னதெல்லாம் நடக்கட்டும்” என்று வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.