(Reading time: 9 - 18 minutes)

வளிடம் பேசிவிட்டு, தன் மகனுக்கு அழைத்து அவன் போன் வர காத்திருந்தார்... அவன் அழைக்கவும்,

“ஆதி.. “ என்றார்.

“என்னம்மா .. இந்த நேரத்தில் பண்ணிருக்கீங்க... நல்லாருக்கீங்க ல்ல ..” என்று கேட்டான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன் பா.. ஒரு சந்தோஷமான விஷயம்.. அதுதான் உனக்கு உடனே சொல்லணும்னு கூப்பிட்டேன்..”

“சொல்லுங்கம்மா”

“நீ மாமாவாக போறப்பா ,..”

“ஒஹ். .சந்தோஷம் அம்மா.. நான் உடனே மாப்பிள்ளைக் கிட்டயும், வித்யா கிட்டயும் பேசறேன்..” என்றவன்... மேலும் தன் அன்னையிடம் பேசி விட்டு வைத்தான்.

உடனே தங்கைக்கும், அவள் கணவருக்கும் அழைத்து பேசி விட்டு வைத்தவன்.. பிரயுவின் நினைவு வரவே ... அவளுக்கு கால் பண்ணினான்..

ஹே.. ப்ரயு ... “ என்றவன்,

“ஹே.. சர்ப்ரைஸ்... இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க.. ஒஹ்.. கண்டுபுடிச்சிட்டேன்.. அத்தை போன் பண்ணாங்களா? வித்யாவிற்கு கன்பார்ம் பண்ணிட்டாங்களா?” என்று கேட்டாள்..

“கொஞ்சம் மூச்சு விட்டு பேசு செல்லம்.. எஸ்.. அம்மா போன் பண்ணாங்க ...நீ சொல்லவே இல்லே ...”

“அத்தை .. நேத்து சொன்னங்க.. சரி கன்பார்ம் ஆகட்டும்னு வெயிட் பண்ணேன்..”

“ரொம்ப ஹாப்பியா ... இருக்கு .. நான் மாமா ஆகிட்டேன்.. வித்யா , மாப்பிள்ளை கிட்டயும் பேசிட்டேன் .... உன்கிட்டயும் பேசணும் போலே இருந்தது .. சரி டா.. நான் வைக்கிறேன்.. ஹ்ம்ம்... நைட் பேசலாம்” என்று வைத்தான்.

பிரத்யுஷா போனை வைத்ததும் பிரியா அவளிடம் வந்து , “ஹே.. என்ன அதிசயமா இந்த டைம் உனக்கு கால் வந்திருக்கு?”

“என் நாத்தனார் கன்சீவ் ஆயிருக்கா.. அத்தை போன் பண்ணி சொல்லிருக்காங்க.. அதான் அவங்க கிட்ட பேசிட்டு, அப்படியே என்கிட்டயும் பேசினாரு”

“ஓகே.. ஆனால் இங்கேர்ந்து அவங்க வெளிநாட்டுலே இருக்குற பையனுக்கு பேசிருக்காங்க... உன்கிட்ட இன்னும் சொல்லலே போலே ?”

“இதுலே என்னடி. ..? எனக்குதான் இன்னிக்கு செக்கப் போறங்கனு தெரியுமேன்னு நினசிருப்பாங்க?”

“அது சரிதான்.. உன் கிட்டயும் சொல்லிருக்கலாமே...”

பிரத்யாவிற்கு கொஞ்சம் வருத்தம் தான்.. நேற்று தான் வித்யா சொல்லலே... இன்னிக்காவது அவள் போன் பண்ணிருக்கலாமே ? என்று.. ஆனால் அதை பெரிது படுத்தாமல், அன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன் அவளிடம் பேசினாள். அவள் ஹெல்த் பார்த்துக் கொள்ள சொன்னாள்.. ஆனால் வித்யா பட்டும் படாமலும் பேசியது போல் இருந்தது.

ன்று இரவு ஆதியிடம் பேசும்போது “என்னடா .. முகம் டல் அடிக்குது” என்றான்.

அவனை ஆச்சர்யமாக பார்த்தவாறே “உங்களுக்கு எப்படி தெரியுது?.. எனக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியலேயே?”

“நீ என்னிடம் பேசிக் கொண்டிருந்தாலும் .. உள்ளுக்குள் ஏதோ யோசித்து கொண்டிருப்பது ..  உன் பேச்சில் தெரியுது ? அதான் கேட்டேன்...”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பா.. வித்யாவிடம் இன்று மாலை பேசினேன் .. ஏதோ கொஞ்சம் டல்லா பேசின மாதிரி இருந்தது ... அதான் எதுவும் பிரச்சினயோன்னு நினைச்சேன். அத்தை கிட்டேயும் கேட்டேன் .. அவங்க ஒருவேளை வாமிட் எடுத்து டயர்ட் ஆகியிருப்பன்னாங்க... அது மனசுக்குள்ளே ஓட்டிட்டு இருந்தது.”

“ஹே.. நீ கவலைபடாதே .... நான் பேசும் போது சந்தோஷமா பேசினாளே ... அம்மா சொன்னதுதான் இருக்கும்..” என்றவன் சில ஜோக்ஸ் சொல்லி அவளை சிரிக்க வைத்தான்..

அந்த வார விடுமுறையில் வித்யாவை நேரில் சென்று பார்த்து வர எண்ணி, அவளும் , மாமியாருமாக சென்றார்கள்.

அவள் இருவரையும் வரவேற்றாலும் , அவள் முகத்தில் மலர்ச்சியில்லை ... எல்லோரும் இருக்கும் போது எப்படி கேட்பது என்று இருவரும் தயங்கினார்கள்.

ஆனால் சற்று நேரத்தில் வித்யா அத்தையே பேச்சுவாக்கில் என்ன பிரச்சினை என்று சொல்லி விட்டார்கள்...

அந்த விஷயம் ... கொஞ்சம் கொஞ்சமாக பிரத்யாவின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது...

தொடரும்

Episode # 02

Episode # 04

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.