(Reading time: 17 - 33 minutes)

07. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithai Manohari

ந்த ஃபைலை பார்க்க பார்க்க அவளை மீறி முதலில் நெஞ்சில் ஏறிய திண் என்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் மனம் உடல் தலை என எல்லாம் சூழ்ந்து சிறிது நேரம் எதை யோசிக்க வேண்டும் என்ன நினைக்க வேண்டும் என்பதே புரியாத ஒரு அதிர்ச்சி நிலையை கொண்டு வந்தது மனோஹரிக்குள்.

இது கற்பனையாக இருந்தால் கூட இப்படி அவன் பெயரை இன்னொரு பெண்ணோடு நினைத்துப் பார்க்கவே மனதிற்குள் ரத்தம் வடிவது போல் ஒரு உணர்வு. மனமெங்கும் வெறுமைச் சூன்யம்.

பின் மெல்ல தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் மனதில் ஆயிர எண்ண ஓட்டம். அவனை சந்தேகப் படக் கூட விரும்பாத மனோபாவம் ஒரு புறம். எதையும் நடுநிலையில் நின்று லாஜிகலி ஆராயும் அவள் குணம் இன்னொரு புறம்.

இப்பொழுது மித்ரன் அவனிருந்த அறைக் கதவை திறந்து கொண்டு வருவது தெரிகிறது. அவன் கண்கள் இவள் மீதே…..இவளைப் பார்க்கவும் அவன் முகத்தில் வரும் ஒரு எக்ஸ்ட்ரா உணர்வு…. அது என்ன நிம்மதியா? சந்தோஷமா…? அதைப் பார்க்கவும் அத்தனையும் தாண்டி… இவள் உள்ளம் துள்ளுவதை தவிர்க்க முடியவில்லை இவளுக்கு.

அவன் அருகில் வரும் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த கூட்டமும் இவள் கண்ணில் படுகிறது. இந்த டிவோர்ஸ் ஃபைலைப் பத்தி இப்ப பேச வேண்டாம்.

 இன்னைக்கு அவனுக்கு பெர்த்டே…. நாளைக்கு பேசிக்கிடலாம். எதுனாலும் ஒரு நாள்ள பெருசா மாறிடப் போறது இல்லை….அதோட எப்பவும் நம்ம உணர்வுகள் சம்பந்தபட்ட விஷயத்தை ஆன் த ஸ்பாட் பேசாம கொஞ்சம் தள்ளிப் போட்டு அந்த எமோஷன்ஸ் குறஞ்ச பிறகு பேசுறப்ப ஒரு நிதானம் இருக்கும்….புரிய வேண்டிய உண்மையும் புரியும்….. மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள் மனோ.

அதற்குள் இவளருகில் வந்திருந்தான் அவன். “சாரி ரொம்ப வெயிட் பண்ண விட்டுட்டேன்…” அவன் தான். மிதமான சத்தத்தில் உணர்ந்து சொல்கிறான் அவன். அவனுக்குப் பின்னால் இவர்களை கடந்து செல்வோர் முகம் இந்த இவனது வார்த்தைகளில் மாறும் பாவம் இவள் கண்ணில் படுகிறது.

அடுத்து கண்ணுக்குள் மறைந்திருந்த சிறு தவிப்போடு இவன் முகத்தைப் பார்க்கிறாள். இவள் பார்வையை நேராக தன் கண்ணில் சில நொடி தாங்கியவன், அவனைப் பார்க்க வந்த அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் இவர்கள் தவிர அங்கு நின்றிருந்த இவளது கேப் ட்ரைவரிடம்

“ ஜோசஃப் நான் சொல்றவரை இங்க யாரையும் அலவ் பண்ணாதீங்க” என்று இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்துவிட்டு இவளைப் பார்த்து “வா மனு” என்றபடி அங்கிருந்த ஒரு கேபினுக்குள் நுழைந்தான். பாதிக்கு மேல் கண்ணாடி தான் அதன் சுவர்கள்.

“இப்ப அந்த ஜோசஃப் என்ன நினைப்பார்னு உனக்கு டென்ஷன் ஆகாது தானே…” ஆக இவள் உணர்வுகள் அவனுக்கு அத்தனையும் புரிகிறதுதான்…..

“இன்னைக்கு என் பெர்த் டேன்னு நான் யார்ட்டயும் சொல்லலை மனு….. நான் இதை எதிர் பார்க்கவும் இல்லை….. இப்படில்லாம் வருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் உன்னை இங்க வரச் சொல்லிருக்க மாட்டேன்…. இந்த மந்த்ல ஸ்டாஃப்ஸ் யாருக்கெல்லாம் பெர்த்டே ன்னு லிஸ்ட் டிஸ்ப்ளே செய்வாங்கல்ல….. அதுல என்னையும் இன்க்ளூட் செய்திருக்காங்க போல…. அதப் பார்த்துட்டு இவங்கெல்லாம் வந்திருக்காங்க…..உனக்குத்தான் ஆட் ஆ ஃபீல் ஆகிற மாதிரி ஆகிட்டு…… ஐ’ம் சாரி….”

“இதுக்கு எதுக்கு சாரி…. ? நீங்க என்ன செய்வீங்க இதுல?”

“ஆக்சுவலி நான் செய்த ப்ளானே வேற…” அவன் கண்கள் இவளுடைய விழிகளில் ஒரு முறை புதைந்து எழுந்தது ஆழமாக….

அது என்னவாக இருக்கும் என்பது இவளுக்கும் புரிகிறதுதானே…. மீண்டுமாய் மழைச் சாரல் அவளுள்….. இடையே ஒரு நொடி கருமேகமாய் மன வானம் கடக்கிறது அந்த டைவர்ஸ் ஃபைல்….

அவள் பார்வை அவன் மீது பாய்ந்து பரவுகிறது…..

“இன்னைக்காவது காலைல சாப்டீங்களா?” இவள் தான்.

இவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் முகம் முழுவதும் இப்பொழுது ரசனை…. குறுக்கோடும் குறும்பு….சின்னதாய் வெளிப்படுத்தப்பட்ட பெரிதான பூரிப்பு…..ஒரு கர்வம்?

“ஃபியூ மினிட்ஸ் என் கூட வா மனு….” அவனைப் பின்பற்றி இவளும் எழுந்துவிட்டாள்.

முதலில் இந்த ஃப்ளோருக்கு வரவும் அவன் திறக்க சென்ற அந்த அறையின் வாசல் முன் நின்று, பூட்டியிருந்த அந்த அறையை அவன் திறக்க ஆரம்பித்தான். இவளுக்குள் இக பர நலம்….இன்னா துன்பம்….இடி முழக்கம்…..ஆனந்த அருவி அனைத்தும்….

அவனது நோக்கம் புரிகிறதுதானே…… ஆண்டவரே!!!!

கதவை திறந்தவன் இடக்காலால் அதன் டோர் ஸ்டாப்பை இறக்கி வைத்து கதவு அதாக மூடிடாதபடி நிறுத்தி வைத்தவன், இவள் மனதிற்குள்  கண்ணிய எல்லை கடக்க மாட்டேன் என காதல் எல்லை நிர்ணயித்தான்.

மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே போனாள். அது அத்தனை பெரிய அறையாக இருக்கும் என அவள் எதிர் பார்த்திருக்கவில்லை…. மினி பார்டி ஹாலாய் இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.