(Reading time: 17 - 33 minutes)

தெல்லாம் வெறும் வார்த்தையில் நான் செய்து தாரேன்னு சொல்றதுல எந்த மீனிங்கும் இல்லை மனு….பட் ஐ’ல் ஆல்வேஸ் ட்ரை டு லிவ் அப் டு யுவர் எக்‌ஸ்பெக்டேஷன்……” அவள் வார்த்தைகளின் ஆழமும் அழுத்தமும் உணர்ந்துதான் சொன்னான் அவன்.

“அப்படின்னா எங்க வீட்ல வந்து வெட்டிங் பத்தி பேசி முடிக்கிறதை விட்டுட்டு இங்க என்ன செய்துகிட்டு இருக்கீங்களாம்….?” சொல்லியபடி சட்டென திரும்பி ஓடியவள் இடக்கைப் பிடிபட்டது அவளைப் பிடிக்க முயன்ற அவனிடம்….அவன் இழுத்த விதத்தில் அவன் முகத்திற்கு நேராக அவள் முகம்

“ஸ்ஸ்….. விடுங்க மித்ரன்….”

“ம்….பொண்ணு ப்ரபோசலை அக்ரி செய்ததும் பையனும் பொண்ணுமா சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் பாக்கி இருக்கே?” அவனது குறும்புப் பார்வை இப்பொழுது அவள் இதழ்களில்….

அவள் முகத்தில் ஒரு வித மிரட்சி அண்ட் ஆங்கர்…

“சும்மா மிரட்டாதீங்க…. ஐ நோ யுவர் லிமிட்…தலைய தொட கை நீட்டிட்டு தொடாம எடுத்துகிட்ட சத்புத்திரர்…..”  அப்டின்னு இப்ப நீ பதில் சொல்லிருக்கனும்…… கிண்டலாய் சொன்ன மித்ரன்

“இங்க இந்த பழக்கம் இல்லைனாலும் எனக்கு இது உனக்கு கொடுக்கனும் போல இருந்துது…இதைத்தான் சொன்னேன்..” நான்கு  டைமன்ட்ஸ் பதித்த ஒரு டைமண்ட் ஷேப் மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்தான்.

மீண்டுமாய் தன் அறைக்குள் வந்து அமரும் போது மனோஹரியின் மனம்  நாளை மித்ரனிடம் என்ன பேச வேண்டும் என்பதையே மறுபடி மறுபடி பட்டியலிட்டது. மதியம் லன்ச் டைமில் அகதனிடமிருந்து இவளுக்கு கால்.

“என்ன நீ ? கடலை போடுறதுன்னா தியா நம்பர்லயே டைரக்டா கூப்டலாம்….நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்….” இவள் தான்.

“ஏய் வாண்டு அதுக்கில்ல…..  அப்பா காலையிலே அவங்க வீட்ல பேசிட்டாங்க….. என்னை அவ அண்ணனுக்கு ஏற்கனவே தெரியும்ன்றதால  கலந்து பேசிட்டு சொல்றோம்னு சொன்னவங்க இப்பவே பேசிட்டாங்க….. பொண்னு பார்க்க வர சொல்லிருக்காங்க….”

“ஆஹான்…..காலைல பேசி இதுக்குள்ளயும் அவங்க வீட்ல ஓகே சொல்லனும்னா இந்த அமுக்குனி தியா இங்க என் பக்கத்துல இருந்துகிட்டு தானே அவங்க வீட்ல கேட்டப்ப சைலன்டா ஆமன்னு சொல்லிருப்பா….? என்ட்ட ஒரு வார்த்தை சொல்லலைடா……நாத்தனாரா சொல்றேன்…இதுக்கு நீ அவளை கொஞ்சமாவது பே பண்ண வைக்கனும் ஆமா….”

“ஹேய்….அவளுக்கு இன்னும் இந்த விஷயமே தெரியாது…..”

“பின்னே?”

“அவ படு ஃபாஸ்ட்…..நாம நம்ம வீட்ல சொல்றதுக்கு முன்னமே அவ அவங்க அண்ணன்ட்ட சொல்லி வச்சிருக்கா…… அவளுக்கு வீட்ல அலையன்ஸ் பார்க்கனும்னு சொன்னதுமே அவங்க அண்ணன்ட்ட சொல்லிட்டாளாம்……உனக்கு தெரியும்ல என் சீனியர் அகதன்னு ஒருத்தங்க… அவங்க மேல எனக்கு இஷ்டம் இருக்குதுன்னு…. அதான் அவங்க அண்ணன் என்னை அடிக்கடி மீட் பண்ணதும் பேசிக்கிட்டதும் போல…..”

“டேய் அண்ணா…..இதெல்லாம் கேட்டுட்டும் சும்மாவா இருக்க நீ?”

“ஹி ஹி…சும்மா இல்ல சந்தோஷமா இருக்கேன்….”

“அழகு…. வடியுது….”

“சரி விடு விடு …இருக்குது வடியுது…..இல்லாத உனக்கு கஷ்டமாதான் இருக்கும்….”

“ஆமா ரொம்ப கஷ்டமா இருக்குது அதனால தியாட்ட இன்னைக்கு சாயந்திரம் இதைப் பத்தி மனசுவிட்டு பேசப் போறேன்….அதனால நான் வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகும்….”

“ஹேய் சும்மா பேச்சுக்கு சொன்னா…..உடனே இப்டித்தான் குண்டு போடுறதா…. நீ அழகு பேரழகு போதுமா….?”

“அப்டி வா வழிக்கு…. இப்ப என்ன விஷயம் அதை சொல்லு”

“தியா அண்ணாக்கு ட்ரான்ஸ்ஃபர் போல நெக்‌ஸ்ட் மந்த் மதுரைல ஜாய்ன் பண்ணனுமாம்…. அவங்க வீட்ல அதுக்குள்ள மேரேஜ் வைக்கலாம்னு யோசிக்காங்க…… அவ அண்ணன் இங்க இருந்தா தான் வெட்டிங் ஏற்பாடுல்லாம் செய்ய சரியா இருக்கும்னு சொல்றாங்க….அதனால இன்னைக்கே பொண்ணு பார்க்க போய்ட்டா…… வெட்டிங்க்கு கொஞ்சாமாவது டைம் கிடைக்கும்ல….”

“வாவ்…..கலக்குடா நீ…. உன் காட்டுல இடி இல்லா கண மழை போல….சரி என்ன அவளை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைக்கனுமா….? அதான் அவளே அடிச்சு பிடிச்சு ஓடிடுவாளே….”

“அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அவட்ட அவ அண்ணன் சொல்லலை…..நீ வீட்டுக்கு வரவும் தான நாம கிளம்பி போவோம்…அதுக்குள்ள அவ வீட்டுக்கு போய்டுவாள்லன்னு நினைக்காங்க…. நீ எப்டியாவது அவளை விஷயத்தை சொல்லாம சீக்கிரம் அனுப்பி வையேன்….அப்டியே நீயும் சீக்கிரம் வந்துட்டா….நாம சீக்கிரம் அவங்க வீட்டுக்கு போய்டலாம்…”

“ஹவ் ஸ்மார்ட்…!!! ஆனா இதெல்லாம் சரியா வராது…. இன்னைக்கு உன் மாப்ளயோட பெர்த் டே ஈவ்னிங் வெளிய கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்காங்க”

“பெர்த் டேவா…. இப்ப சொல்ற….சரி போய்ட்டு வா….ஆனா இருட்றதுக்கு முன்னால வீட்டுக்கு வந்துடு….”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.