(Reading time: 17 - 33 minutes)

வெள்ளை அறை….அதில் ஆங்காங்கு அழகாய் நீல மின் விளக்குகள் சுவரில் சிந்தி சிதறிய ஒரு வித மென் ப்ளூ ஷேடை கொடுக்க….. ரூஃபின் நடு பகுதியில் அந்தரத்தில் ஏராள லாவண்டர் மற்றும் பிங்க் நிற ஹீலியம் பலூன்ஸ்…..

தரையில் எதிரில் இரு மூன்றடி அலங்கார தூண்கள் அதின் மீது அருவியாய்  அமர்ந்திருந்த ஒரு கூட்ட லாவென்டர் ரோஜாக்கள்….. நேர்ப் பார்வையில் கண்ணில் பட்ட சுவரில்

சிரித்து….சிணுங்கி…..சின்னதாய் புன்னகைத்து…..விழி சிவந்து…..கோபம் கொண்டு….முகம் சுண்டி…. உதடு சுழித்து…..எதையோ தீவிரமாய் விளக்கி…..ஒற்றை விரல் ஆட்டி பத்திரம் காட்டி….இரு விரலால் நாடி தாங்கி யோசித்து…..முன்னோக்கி….முகம் திருப்பி….சிறிதாய் குனிந்து….கண்ணாடி முன் தனியாய் பேசி… வெவ்வேறு முக பாவங்களில்……வித வித கோணங்களில்….. இவள்!!! இவள்!!! இவள்!!!

அனைத்தும் ஆஃபீஸில் வைத்து இவளறியாமல் இவளை எடுக்கப்பட்ட  ஃபோட்டோஸ்…… எத்தனை கவனித்திருக்கிறான் இவளை…..!!! உன் முன்னால வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போனது இதுக்குத்தான் போல…..

தரையில் பரப்ப பட்டிருந்த பிங்க் ரோஜா இதழ்களில் லாவென்டர் ரோஜாக்கள் ‘வில் யூ மேரி மீ?’ என்றன.

அழகாய் இருக்கிறதா இல்லையா சூழல் என்றெல்லாம் யோசிக்க தோன்றவில்லை அவளுக்கு….. அங்கிருந்த அனைத்தும் பிடித்தம்…….

மிக அருகில் அவன் நிற்கிறான் என உணர்கிறாள் தான்…. அது ஏன் என்று தெரியவில்லை….? அவன் இல்லாத நேரத்தில் பாதுகாப்பில்லாத தனிமை உணர்வெல்லாம் ஏதுமில்லை…..ஆனால் அவன் அருகில் வர அதுவாக இவள் உள்ளே பரவும் ஒரு பாதுகாப்பு உணர்வும்….நாம் என்ற நிலையும்…..

அவன் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என புரிகிறதுதான் இவளுக்கு….. ஆனாலும் திரும்பிப் பார்க்க பெண்மைக்குள் தயக்கம்…

“மனு…”

“ம்”

“கொஞ்சம் இல்ல ரொம்பவே ஷாட் பீரியட்ல தான் கேட்கிறேன்….. இப்ப கூட உன் ஃபேஸ் பார்த்துட்டு இன்னைக்கு இத பேச வேண்டாம்னு தான் நினச்சேன்…. ஆனா நம்ம மேரேஜ் அஃபிஷியலி அனவ்ன்ஸ் ஆகலைனா என் கூட உன்னை யார் பார்த்தாலும் உனக்கு ரொம்ப அன்கம்பர்டபிளா ஃபீல் ஆகுதுன்னு தெரியுது…. ”

உண்மைதான் அவனோட ஃபியான்சி அல்லது வைஃப் என்ற நிலையில் இன்னைக்கு நடந்த செலிப்ரேஷன்ல இவள் நின்றிருந்தால் மற்றவர்கள் பார்வையும் பழக்கமும் இப்படி இருந்திருக்காது….அதோடு அது எப்படி இருந்தாலும் அதை எதிர் கொள்ளும் ஒரு மன நிலையும் இவளுக்கும் இருந்திருக்கும் தான்….

“இன்னைக்கு செலிப்ரேஷன்ல உன்ட்ட நான் நேரடியா கேட்காம, எப்படி சொல்லன்னு தான் அமைதியா இருக்க வேண்டியதாகிட்டு….”

“ம்..”

“உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு மூடிக்கனும் போல இருக்குது மனு…..வில் யூ மேரி மீ?”

சட்டென திரும்பிப் பார்த்தாள் அவள். முழு முகமும் குறும்பு… “அதுக்கு உங்க கண்ணு குறஞ்சது அஞ்சே முக்கால் அடியாவது வளரனுமே….”

கீழ் உதடை சின்னதே சின்னதாய் கடித்து அவன் சிரித்தபடி இவளை ரசித்து நின்ற கோலம்…

“ இது ரொம்பவும் ஒன்சைடட் டீலா இருக்குதே….” இவள் தான்.

“கண்ணுக்குள்ள இருக்கனும்னா என் மொத்த வெய்ட்டையும் நீங்க தான் சுமக்கனும்….நீங்க பார்க்கிற எதையும் என்ட்ட மறைக்க முடியாம திண்டாடனும்…” கிண்டல் தொனியில் சிரித்தபடி சொல்லிக் கொண்டே வந்தவள்

“இன் ஷார்ட்…என்னோட மொத்த பொறுப்பையும் நீங்க எடுத்துகிறேன்றீங்க…..நமக்கிடையில எந்த திரையும் பிரிவும் ரகசியமும் இருக்காதுங்கீங்க….” அவள் குரல் தொனி மாறிக் கொண்டு வந்தது. இது என் தேவை என்பது போன்ற ஒரு தொனி..

“அதோட எந்த ப்ரச்சனைனாலும் என்னை தாண்டி தான் உன்னை தொடனும்னும் சொல்றேன்…..” அவளதை விட இவன் குரலில் இன்னுமாய் சீரியஸ்நெஸ். நான் எதையும் லைட்டா சொல்லலை…..நீ சொல்றதை தான் நானும் மீன் பண்றேன் என்பது போல்…

“என் லைஃப்ல நீங்க கேட்கிற அத்தனையும் உங்க லைஃப்ல எனக்கும் தருவீங்கன்னா……” மனோஹரியின் மொழியில் அவன் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

“நான் இதுவரையும் யாரையும் விரும்புனது கிடையாது மித்ரன், விளையாட்டுக்கு கூட என் பேரை யாரோட சேர்த்தும் கிண்டல் பண்ண விடமாட்டேன்….எனக்கு அது பிடிக்காது….ஏன்னா எனக்கே எனக்குன்னு மேரேஜ்ல வர்ற என்னோடவங்க எனக்கு ரொம்ப முக்கியம்….நான் சாகுற வரைக்கும் அவங்க தான் என் உலகமா இருப்பாங்க….. எனக்கு ஃபேமிலின்றது ரொம்பவும் முக்கியமான விஷயம்….” அவன் கண்களைப் பார்த்தாள் இவள். நீ இதோட ஆழத்தைப் புரிந்து கொள் என்ற ஒரு தவிப்பு இருந்தது அவள் குரலில்…

“எனக்கு ஒரு பெர்த், ஒரு டெத், அது மாதிரி ஒரு மேரெஜ்தான் இருக்கனும்….” அவள் தொடர…..இப்பொழுது அவள் தலையைப் பார்த்து கை நீட்டியவன் பின் தொடாமலே கையை இழுத்துக் கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.