(Reading time: 13 - 25 minutes)

21. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ல்யாணம் முடிந்து ஆயிற்று ஒரு வாரம்.. வீடு இயல்பு நிலைக்கு ஒருவாறாக திரும்பத் தொடங்கியது..அன்றிலிருந்து சாரதா பாட்டு கிளாஸும் எடுக்கத் தொடங்கி விட்டார். பைரவிக்கு அவள் வேலை கழுத்தை நெறித்தது.. அன்றைக்கு காலையில் எப்போதும் போல் கிளாஸுக்கு வந்து பாடி முடித்தவளுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது..

"ஹலோ..பைரவி ஹியர்"

"ம்ம்..ஆமாம்..",

vasantha bairavi

"சரி..சொல்லுங்க நான் உங்களை சந்திக்கனும்..எங்கே?.உங்க வீட்டுக்கே வரட்டுமா?"

"ஓ..அப்படியா ..சரியா ஐந்து மணிக்கு அங்கே வந்துடறேன், தாங்க்ஸ், பை", என்று சொல்லி லைனை கட் செய்தவளை, பார்த்த சாரதா

"யாரும்மா அது?", என்று ஆவலுடன் கேட்டாள்.

"என் மாமா மாமி, எங்கம்மாவோட அண்ணா..ரொம்ப வருஷமா காண்டாக்டே இல்லை..அன்னிக்கு அப்பா அவரை பத்தி சொன்னா. அவரோட ஓல்ட் அட்ரெஸ் வச்சு கண்டுபிடிச்சேன். ஊருக்கு போயிருந்தவர் நேத்திக்குத் தான் வந்தாராம். அதான் வரச் சொன்னார் . சாயங்காலம் அவரை போய் பார்க்கணும்."

"நல்லது..போய் பார்த்துட்டு வா.. உறவுகள் என்னிக்கும் விட்டு போயிடக் கூடாது.", என்று தம்பூரவை மூடி ஒர் ஒரத்தில் வைத்தாள்.

"எப்படியோ பைரவி நீங்க ரெண்டு பேரும் இந்தாத்துக்கு வந்ததுமே எனக்கு ஏதோ வெளிச்சம் வந்தாப்போலே இருக்கு.. நான் நினைச்சு கூட பார்க்கலை மஹதிக்கு இப்படி திடீர் திருப்பமா கல்யாணம் ஆகும்னு.. பைரவி நான் ஒன்னு கேட்டா சரியான பதில் சொல்லுவியா?", என்றாள் பீடிகையயோடு

"கேளுங்கோ மாமி",

"நீயும் அஜயும் வெறும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தானே.. நீ அவனை மனசுலே வேறே மாதிரி ஏதும் நினைச்சுண்டு இல்லையே?..ஏன் கேக்கறேன்னா.. நீங்க ரெண்டு பேரும் ஒரு வேளை  ஆசை பட்டு இருந்து அதை மஹதி பிரிச்சிட்டதா இருக்கக் கூடாது.."

"அதுக்கு இப்போ என்ன பண்ண முடியும் மாமி?.. அஜய்க்கு என்னை கல்யாணம் பண்ணிக் குடுக்கனும்னு எங்க அம்மா தான் நினைச்சா.. மத்தபடிக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப்  இருக்கு.. அவ்வளவுதான் ஒரே ஃபீல்டுலே இருக்கோம் மத்தபடிக்கு எனக்கு அவன் மேலே எந்த ஒரு வித சாஃப்ட் ஸ்பாட்டும் இல்லை..சோ.. நீங்க வீணா மனசை குழப்பிக்காதீங்க", என்று சாரதாவின் கைகளை பற்றி நம்பிக்கையாய் தட்டிக் கொடுத்தாள்.

"இப்போ தான் நிம்மதியாச்சு.. எனக்கு நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான்.. ஒருத்திகிட்டேந்து பிடுங்கி இன்னொருத்திக்கு குடுத்துட்ட மாதிரி இருக்கக் கூடாது.. அத்தை பொண்ணு..அத்தை கஷ்டப் படறாளேனேன்னு செஞ்சு இருக்கக் கூடாதுன்னு".

"மாமி கல்யாணம் பண்ணிக்கனும்னு அஜய் ஆன் தி ஸ்பாட்டுலே முடிவு பண்ணினான்..சோ அவன் ஆசை பட்டுதான் கேட்டிருக்கான்.. அவா ரெண்டு பேரும் நல்ல ஜோடி. நீங்க வீணா கவலை பட வேண்டாம். சரி மாமி நான் கிளம்பறேன்", என்று தன் அறைக்குச் சென்றாள்.

சந்த்தும் வேலைக்கு சென்றிருந்தான்.. மஹதியும் அஜய்யும் தேனிலவுக்கு போய்விட்டர்கள்.. வீடே வெறிசென்றுறிருந்தது.. அறையைவிட்டு போகும் பைரவியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாரதா.. 'நம் வாழ்வில் எத்தனை திருப்பங்கள்..எங்கிருந்தோ வந்தான் அஜய்..கடைசியில் என் அண்ணா பிள்ளை..என்ன எனக்குத்தான் அவனை இனம் காண முடியவில்லை. கடவுளே..இந்தப் பெண் பைரவி அவனை விரும்பியிருக்கக் கூடாது..ரெண்டு கண்ணில் எது வேணும் என்று கேட்டால் நான் எதை தேர்வு செய்ய முடியும்?, என்ன தான் நாங்கள் ஃப்ரெண்ட்ஸ் என்று அவள் சொல்லிவிட்டாலும் அவள் அம்மா கல்யாணம் வரை யோசித்திருக்கிறார் என்றாள்?',

‘பகவானே என் குழந்தைகள் எல்லோரும் சௌகர்யமாக நன்னா இருக்கணும்.. யாரும் யார் குடியையும் கெடுத்ததா பேர் வந்துடக் கூடாது.. இந்த அழகில் இத்தனை வருஷமா எனக்குள் புதைந்து வைத்திருக்கும் அந்த விஷயம் மட்டும் வெளியில் வந்தால்.. நினைக்கவே பயமாயிருக்கு.. எது எப்படியோ நிச்சயம் நான் யாருக்காகவும் விட்டுத் தர முடியாது’.. என்று தீர்மாணித்தபடியே உள்ளே சென்றாள் சாரதா.

மாலை ஐந்து மணியளவில் அந்த பெரிய ஹோட்டலை அடைந்த பைரவி..லாபியில் அவருக்காக காத்திருந்தாள்...விரைவிலேயே அவரும் வந்து விட்டார்....

அவர் தான் சிவராமன்..கமலாவின் சகோதரர்..பைரவியின் மாமா.. நன்றாக ஒடிசலாக உயரமாக தன் அன்னையின் ஜாடையுடன் வேகமாக வந்த அவரை கண்டவள்.. "மாமா..ஐ யாம் ஹியர்" என்று கைகளை அசைத்து கூப்பிட்டாள்.

அவளை பார்த்து கையசைத்தவர் வேகமாய் அவளருகே வந்தார்.. முகம் சந்தோஷத்தில் விகசிக்க தன் கைகளை அவள் பக்கம் நீட்டியவர், "ஹலோம்மா பைரவிதானே?..எப்படிம்மா இருக்கே?", என்று கேட்டபடி அவளருகில் அமர்ந்தவர்,

"வாம்மா உள்ளே போவோம்..அங்கே டேபிள் ரிசர்வ் செய்திருக்கிறேன்..", என்று அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

அவர்களுகென்று ரிசர்வ் செய்யப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்தவர்கள் ஒரு சில நிமிடங்கள் பேசிக் கொள்ளவில்லை..பின் மெல்ல அந்த மௌனத்தை கலைத்தாள் பைரவி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.