(Reading time: 13 - 25 minutes)

"ம்ம்..இதான் மாமா..இதுக்குத்தான் நான் வந்தேன்..உங்களோட ஒத்துழைப்பு நிச்சயம் எனக்கு தேவை....பக்கபலமா நீங்க இருந்தா  நிச்சயம் என் வாழ் நாள் முழுமைக்கும் உங்களுக்கு நான் நன்றி சொல்லுவேன்..எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியலை..அதான் உங்க கிட்ட சஜெஷன் கேட்க நினைத்தேன்..அப்படியே நீங்களும் அதிதியும் கோ ஆபரேட் பண்ணனும், ஒரு சான்ஸ் இருக்குமான்னு பார்க்கப் போறேன்..இந்த காரியம் உங்களாலேயே முடிஞ்சிட்டா..வேறே குழப்பம் கிடையாது..ஆனா வேறு விதம்னா நான் அந்த காரியத்தை செஞ்சிதான் ஆகனும்.ரெண்டு மாசமாயிடுத்து..இதுக்கு மேலே நான் தாமதிக்க முடியாது...."

"அய்யோ பகவானே குருவி தலையிலே பனங்காயை வச்ச மாதிரி..உனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பா?..நாளைக்கே நீ என்ன கேக்கறயோ அதை செய்யறேன்..நான் எப்படியும் இன்னும் ஒரு வாரத்துலே யு.எஸ். போகத்தான் போறேன்..உன்னோட அப்பா அம்மாவை பார்க்கறேன்...ஆனா என்னோட பொண்ணை நாளைக்கே அங்கே போகச் சொல்லறேன்", என்று வாக்களித்தார்.

"ரொம்ப தாங்க்ஸ் மாமா...எனக்கு நல்லபடியா எல்லாம் முடியனும்.. அதுக்காக தான் இத்தனை பிரயத்தனமும். இதுலே பல நல்லவா அஃபெக்ட் ஆகக் கூடாத்துன்னு தான் யாருக்கும் விஷயத்தை சொல்லலை. வீண் குழப்பம் வேண்டாம்..நீங்களும் யார்கிட்டயும் நான் சொன்னதை சொல்லாதீங்கோ".

"நிச்சயமா..கவலைப்படாதேம்மா..என் தங்கை பாக்கியசாலி..இப்படி ஒரு பொண்ணு கிடைக்கறதுக்கு குடுத்து வச்சிருக்கா", என்றவர் சில நிமிஷங்கள் பொதுப்படையாய் பேசிவிட்டு..சரிம்மா அப்புறம் பார்க்கலாம் நான் ஃபோன் பண்ணறேன் உனக்கு" என்று கூறி விடை பெற்றார்.

மெல்ல அங்கிருந்து வெளியே வந்த பைரவி தன்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

அங்கே ஆனந்த் நின்று கொண்டிருந்தான்.

"ஹாய் பைரவி.. ஹவ் ஆர் யூ?.. என்ன இந்தப் பக்கம்?", என்று கண்களில் சற்று அதிகப்படி ஆர்வத்துடன் கேட்டவனை யோசனையாய் பார்த்தவள்,

"ஹாய் ஆனந்த்.. என்னோட ரிலேடிவ் ஒருத்தரை பார்க்க வந்தேன்.. வேலை முடிந்தது அதான் வீட்டுக்கு கிளம்பிப் போலாம்னு ..", என்று இழுத்தாள்.

"யார் அதோ போறாரே அந்த சொட்டை தலை அங்கிளா?, என்று கேட்டவனை முறைத்தவள்,

"ஏன் உங்க வீட்டுலே யாருக்கும் சொட்டை கிடையாதோ?.. உங்கப்பாக்கே நல்லா கிரவுண்ட் வாங்கியிருந்துதே தலை?..",என்று கவுண்டர் கொடுத்தாள்.

"கூல் ஹனி.. தெரியாம சொல்லிட்டேன்.. சரி இப்போ ஏதாவது உனக்கு அர்ஜெண்ட் வேலை இல்லைன்னா உன்னோட நான் கொஞ்சம் பேசலாமா?..

'இதென்ன இவனுக்கு எங்கிட்ட என்ன இருக்கு பேச?' என்று யோசித்தவாறு ஒன்றும் பேசாமல் நின்றிருந்தாள்..

டக்கென்று,

"கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா?,"

என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு பாடியவனை பார்த்தவளுக்கு முகம் சிவக்கத் துவங்கியது..

"ப்ளீஸ்", என்று கெஞ்சுதலாக கேட்டவனை பார்த்தவளுக்கு ஏனோ கோபம் வரவில்லை.. மாறுதலாக 'நல்லா ஃப்ளர்ட் பண்ணறான்.. பார்ப்போம் எவ்வளவு தூரம் போறான்னு', என்று நினைத்தவள்,

"ம்ம் சரி.. அது என்ன ராகம்னு சொல்லுங்கோ.. தென் .. கரெக்டா சொன்னா.. உங்கக் கூட பேசறேன்..", என்றாள்

"என்னம்மா.. இப்படி குண்டை போடறே.. ஏதோ.. சும்மா பாடப் போனா ராகம் கேக்கறயே.. நம்ம ஞானம் ஒன்லி சினிமா பாட்டை கேட்டு ரசிக்கறது தான்...அதுக்கு மேலே தெரியாதே.. ப்ளீஸ்.. இனிமேல் பாடவே மாட்டேன்.. கொஞ்சம் கன்சிடர் பண்ணு", என்று பொய்யாய் முகத்தை வருத்தம் போல் காட்டி கொண்டான்.

"சரி போனா போறது.. வாங்கோ.. இந்த ஒருமுறை எக்ஸ்கியூஸ் பண்ணறேன்.. எங்கே உட்காரலாம்.. இப்போ தான் நான் உள்ளேர்ந்து வந்தேன்.", என்றவளை பார்த்து,

"வா இங்க இந்த லான் நன்னாயிருக்கும்.. போய் அங்கே உட்காரலாம்", என்று அழைத்துச் சென்றான்.

புல்தரையில் போடப்பட்டிருந்த மேசை நாற்காலியில் குடையின் கீழ் அமர்ந்தார்கள்.. வந்த பேரரிடம் ஃப்ரூட் ஜூஸ் சொல்லிவிட்டு அவளிடன் திரும்பினான் ஆனந்த்.

"சொல்லுங்க ஆனந்த் உங்களுக்கு என்ன பேசனும் என் கிட்ட.. டு யு ரிக்வயர் எனி ஹெல்ப்.. ஃபீல் ஃப்ரீ.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?"

"ம்ம்.. நீ இப்படி சொன்னவுடனேயே கேட்கனும்னு தோணறது எனக்கு.. யெஸ்.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறயா?.. வில் யு மாரி மீ?"

"வாட் கம் அகைன்", என்று நம்ப இயலாமல் மீண்டும் கேட்டவளை பார்த்து சிரித்தவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.