(Reading time: 12 - 24 minutes)

22. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்தவன் பைரவி ஏறுவதற்காக கதவை திறந்து வைத்து "அட் யுவர் சர்வீஸ் மேடம்", என்று கைகளை மடக்கி சல்யூட் அடித்தான்.

பின் காரை சுற்றி வந்து இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தவனை ஒன்றும் சொல்லாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பைரவி.

"வெஸ்ட் மாம்பலம் போகனும்.. தெரியும் இல்லையா?"

vasantha bairavi

"தெரிஞ்சிண்டா போச்சு.. நோ பிராப்ளம்", என்றான் ஆனந்த்.

"ஏன் ஆனந்த் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி டிரமாடிக்கா பிஹேவ் பண்ணறீங்க?.. சோ ஃபன்னி... நேச்சுரலா இருக்க மாட்டேன்னு இருக்கேள்... கொஞ்சம் பயமா இருக்கு இங்க பேசறதுக்கே.."

"ஹேய்.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. சும்மா ஃபன் தான்.. மத்தபடிக்கு.. நீ என்னை ஹோல்டுல போட்டதை கூட நான் ஈசியா தான் எடுத்துண்டேன்.. நீயே சொல்லு ரிஜெக்டட் நீ சொல்லிட்டே.. நான் உக்காந்துண்டு அழுதனா?..இல்லையே.. மூடை லேசாக்கறதுக்காக கேஷுவலா இருக்கப் பார்க்கறேன்..அது தப்பாம்மா?", என்றான் பரிதாபமாக.

"ம்ம்.. அது தப்பில்லை.. ஆனா என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்க வேண்டாம்.. டிஸ்டர்பிங்கா இருக்கு.. ஆனந்த் நான் மனசளவுலே இன்னும் கல்யாணம்ங்கிற விஷயத்துக்கு தயாரா இல்லை.. எனக்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் இருக்கு.. அதை முடிச்சுட்டு பின்னாலே தான் நான் யோசிக்க முடியும் என்னை பத்தி.."

"உனக்கு பரவாயில்லைன்னா எங்கிட்ட ஷேர் பண்ணிக்க முடியும்னா என்ன பிரச்சனைன்னு சொல்லு.. என்னாலே முடிஞ்ச உதவியை நான் செய்யறதுக்குத் தயாரா இருக்கேன்... உன்னை பார்க்கப் பார்க்க பேசப் பேச நிச்சயம் எனக்கு என் மனசு வேற யார் மேலயும் போகாதுன்னு தோனறது.. காத்திருக்கப் போறேன்.. பார்க்கலாம்.. இப்போ சொல்லு என்ன பிரச்சனை உனக்கு.. என்னை உன் ஃப்ரெண்டா நினைச்சு சொல்ல முடியும்னா சொல்லு.. என்னை உன் பிரண்டாக் கூடவா நினைக்கக் கூடாது??"

ஏதோ ஒரு வித உணர்விற்கு தள்ளப்படுவது போல் உணர்ந்தாள்.. ஏதோ மீள முடியாப் பள்ளத்திற்குள் தான் விழுவது போல தோன்றியது பைரவிக்கு.. மனம் சஞ்சலமாக இருந்தது.. 'என்ன இவன் திரும்பவும் காத்திருக்கிறேன் கன்சிடர் பண்ணுன்னு படுத்தறான்.. இவனை முகத்தில் அடித்தாற்போல சொல்லவும் மனசு வரலை.. காதலிக்கிறேன்.. கல்யாணம் பண்ணலாம்ங்கறான்.. அப்புறம் பிரண்டுங்கறான்.. ஏதோ ஒரு சின்ன நூலிழை தடுப்பது போல் இருக்கு.. இவனை எனக்கு பிடிச்சிருக்கா?.. அதான் இப்படி இவன் உளருவதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறேனா? என் மனசு எனக்கே புரியலை.. நான் ஒரு டாக்டர்,, எனக்கென்று சில கடமைகள் இருக்கு', என்று நினைத்தபடி

"ஆனந்த் நான் இங்கே ஒரு முக்கியமான விஷயத்துக்காக இந்தியாவுக்கு இப்போ வந்திருக்கிறேன்.. அதில் நிறைய பேர் சம்பந்தப்பட்டிருக்கா.. அவாளுக்கே இன்னமும் நான் விஷயத்தை சொல்வதா வேண்டாமான்னு ஒரு குழப்பத்தில் இருக்கேன்... இதிலே மத்தவா சம்பந்தப்பட்ட விஷயத்தை அவாளோட சம்மதம் இல்லாமல் உங்க கிட்ட நான் என்னதான் ஃப்ரெண்டுன்னு நினைச்சாக்கூட ஷேர் பண்ணிக்க முடியாது...", என்று ஒரு தேவையில்லா குற்ற உணர்ச்சியுடன் பேசினாள் பைரவி.

"பைரவி.. நீ என்னை ஃப்ரெண்டுன்னு சொன்னதே போதும் எனக்கு.. நீ உன்னை வருத்திக்காதே.. எந்த சூழ்னிலையிலும் உனக்கு ஆதரவு தர நான் இருக்கேன்.. இதை மட்டும் ஞாபகம் வச்சிக்கோ.. என் கிட்ட நீயா எப்ப உனக்கு தோனறதோ அப்போ பேசினா போதும்.. நான் உனக்காக காத்துண்டு இருப்பேன்.. நீ வேற விதமா முடிவு பண்ணாக் கூட ஒன்னும் சொல்ல மாட்டேன்.. என்னோட ஃபீலிங்க்ஸ் எனக்கு முக்கியம்.. என்னோட இந்த உணர்வை முதல் காதலா ஈர்ப்பான்னு சொல்லத் தெரியலை.. ஆனா அதை பொக்கிஷமா என் மனசுலே வைத்து கொள்வேன்...", என்று மெல்ல அவள் கைகளை பிடித்து அழுத்தினான்.

கைகள் நடுங்கியது பைரவிக்கு.. அவன் தொடுகை அவளுக்குள் ஏதோ செய்தது.. ஆனாலும் மெல்ல சுதாரித்துக் கொண்டு தன் கரங்களை அவன் கரத்திலிருந்து உருவியவள்..

"சாரி.. நீங்க ரொம்ப வேகமா இருக்கீங்க டூ ஃபாஸ்ட் .. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் யோசிக்க.. சரி சரி.. இதோ அந்த ரெண்டாவது திருப்பத்தில் கடைசி வீடு", என்று வீட்டை அடையாளம் காட்டினாள்.

காரை வீட்டருகில் நிறுத்தியவன், "இன்னமும் நான் அதையேதான் சொல்லுவேன்.. நான் காத்திருக்கிறேன்....சரிம்மா.பை", என்று சொல்லி வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினான் ஏதோ இன்னமும் அவள் முகத்தை பார்த்தால் அதீத உணர்ச்சி வசப்பட்டுவிடுவோமோ என்ற பயத்துடன்.

பதட்டத்துடன் வேறு பக்கம் பார்க்கத் தொடங்கியவனின் முகத்தை ஒரு கணம் பரிதாபத்துடன் பார்த்தவளுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது.. ‘இவனை சாதாரணமாக நினைக்க முடியாது.. நிச்சயம் எனக்கு இவன் மேலொரு சிறு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.. இதுதான் கதைகளில் வரும் காதலா.. புரியவில்லை..பொறுப்போம்’, என்று காரை விட்டு இறங்கியவள் "பை", என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை அவனை பார்த்துவிட்டு வீடு நோக்கி நடந்தாள்.

வாசல் பக்கத்தில் கேட்டின் அருகில் இருந்த வளைவின் மேல் படர்ந்திருந்த நித்யமல்லிப் பூக்களை பறித்தவாறு பாடிக் கொண்டிருந்தாள் சாரதா.

"கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -

அடி தங்கமே தங்கம்

கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்;

எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்,

ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்

காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;

அந்நிய மன்னர்மக்கள் பூமியிலுண்டாம் என்னும்

அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.