(Reading time: 12 - 24 minutes)

ழகாய் பல ராகங்களின் கலவையாய் ராகமாலிகாவில் அமைந்திருந்த நம் முண்டாசுக் கவி பாரதியின் பாடலை தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள். திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே நுழைந்த பைரவியை கூட கவனிக்கவில்லை..

பைரவியும் பாடலை உடன் பாடத்தொடங்கிய பின் தான் கவனித்தவள், மெல்லிய சிறு புன்முறுவலுடன் அவளையும் பாட சொல்லி ஊக்கியவள், இருவருமாக அந்த பாடலை பாடி முடிந்த பின் மீண்டும் பெரிதாய் முறுவலித்தாள் சாரதா.

"குரல் நன்னா இழையறது.... ரொம்ப நாளைக்கப்புறம் இந்த மாதிரி குரலை கேக்கறேன்..", என்றாள் சாரதா..

"போங்கோ மாமி.. சும்மா சொல்லாதேள்.. உங்களுக்கு எத்தனை சிஷ்யா இருக்கா.. அவா எல்லாரையும் விடவா நான் நன்னா பாடறேன்?."

"சர்வ நிச்சயமாடி பொண்ணே... குரல்ல ஏதோ தேனை தடவிண்டு பாடறா மாதிரி ஒரு இனிமை.. போன ஜென்மாவிலே நீ அந்த ஈஸ்வரனுக்கு தேனாபிஷேகமா செஞ்சிருக்கனும்" என்றவர்,

"நிறைய பேருக்கு வராது இந்த மாதிரி குரல்.. ஒன்னு கொஞ்சம் காத்திரமா நன்னா கம்பீரமா இருக்கும் இல்லேன்னா ரொம்ப ஸ்வீட்டா.. மெல்லிசைக்கு ஏத்தா மாதிரி இருக்கும்.. ரெண்டும் கலந்து சரியா நேர்த்தியா இப்படி அமையறது விசேஷம்.. அந்த வகையிலே நீ குடுத்து வச்சிருக்கே.. சரிம்மா வா உள்ளே போய் காபி சாப்பிடலாம்", என்று கூப்பிட்டவளை வாசல் திண்ணையிலேயே உட்கார வைத்தாள் பைரவி.

"எனக்கு காஃபி வேண்டாம் மாமி.. இப்போ தான் நல்லா சாப்பிடுட்டு வந்தேன்.. கொஞ்சம் இங்கே உக்காந்துண்டு பேசலாம் போலே இருக்கு", என்றவளை சில நொடிகள் பார்த்தபடி இருந்த சாரதா,

"என்னம்மா போன காரியம் என்னாச்சு.. உன்னோட மாமாவை பார்க்கப் போனியே.. பார்த்தாயா?..எல்லாரும் சௌக்கியமா?"

"ம்ம்..ரொம்ப வருஷத்துக்கப்புறம் காண்டாக்ட் பண்ணினார்.. சொல்லப்போனா என்னை ரெண்டு மூணு நாள் குழந்தையா அவர் பாத்திருக்கார்.. அதுக்கப்புறம் இப்போ தான் மீட் பண்ணறோம்..."

"நிச்சயம் சில விஷயங்கள் நடக்கறப்போதான் இந்த உலகம் ரொம்ப சின்னதுன்னு தெரியறது.. எப்படியோ  விதி கொண்டு சேர்க்கும் .. நாம் வேண்டாம்னு போனாலும் கூட விதி இருந்தா மறுபடியும் சந்திக்க வெச்சுடும்.. இப்போ அஜையை நான் பார்த்தது கூட அப்பிடித்தான்.. நம்பவே முடியலை.. என் அண்ணா பையனே எனக்கு மாப்பிள்ளையா வந்தான்னு.. எவ்வளவு வருஷம் போன பின்னாடி அண்ணா போனது கூட தெரியலை.. ஆனா பந்தம் தொடரனும்னு இருக்கு இவன் வழியா.."

"ஆமாம் மாமி.. நம்ப முடியாத சில விஷயங்கள் இன்னமும் நடந்துண்டு தான் இருக்கு இந்த உலகத்துலே.. அஜய் ரொம்ப நல்ல பைய்யன் மாமி.. அவன் கல்யாணம் பண்ணிண்டு செட்டிலாவான்னு நாங்க யாரும் கனவுலே கூட நினைச்சது இல்லை.. மஹதி தான் அவனுக்கு ஏத்த சரியான ஜோடி....ரெண்டு பேரும் அன்னிக்கு எவ்வளவு சந்தோஷமா ஊட்டிக்கு போனா பார்த்தேளா?.."

"ஆமாம் பைரவி.. அவன் ரொம்ப நல்ல பைய்யன்.. நல்ல மனசு அவனுக்கு.. எல்லா சொத்தையும் இங்கே இருக்கற மூணு பேருக்குமே எழுதி கொடுத்துட்டான்.. தனக்கு அங்கே வேண சொத்து இருக்கு அதுவே அவனுக்கும் மஹதிக்கும் ஏழு தலைமுறைக்கு போறும்னு சொல்லிட்டான்.. மனசு வேணும்.. சிலர் எவ்வளவு பணம் இருந்தாலும் திரும்பவும் சேர்த்து பூட்டி வெக்கனும்னு நினைப்பா.. இவன் தனக்கு பாத்யதை பட்டதை கூட குடுத்துட்டான்.. பகவான் அவாளை எந்த குறையும் இல்லாம சந்தோஷமா வெக்கனும்.. நீ இல்லாட்டி அவன் எனக்கு கிடைச்சுருப்பானா? தாங்க்ஸ் உனக்கு தான் சொல்லனும் முதலில், இதுக்கு நான் என்ன ப்ரதி உபகாரம் செய்யப் போறேனோ?.", தழுதழுத்த சாரதாவை பார்த்தவள்,

"தாங்க்ஸ் என்ன மாமி.. நமக்குள்ளே.. உபகாரத்துக்கு ப்ரதி உபகாரம் செய்யவும் சில சந்தர்ப்பம் வரலாம் .. அப்போ இந்த ப்ரதி உபகாரத்தை பண்ணிடுங்கோ.. என்ன நான் சொல்லறது சரிதானே?

"நீ சொன்னா சரியாத்தாண்டி இருக்கும்....அது சரி .. என்னமோ ரிபோர்ட்ஸெல்லாம் வாங்கனும்னு அன்னிக்கு மஹதி கிட்டே பேசிண்டு இருந்தியே எல்லாம் கிடைச்சுதா?.. கல்யாண கலாட்டாவுலே மறந்துட்டேன்.."

"எல்லாம் கிடைச்சுது மாமி.. எனக்கு வேண்டிய பதிலும் கிடைச்சுது..", என்று எங்கேயோ பார்த்தவளை விசித்திரமாய் பார்த்த சாரதா.

"என்னம்மா உனக்கு என்ன ஆச்சு.. ஏதாவது பிரச்சனையா?.. எனக்கு அப்பப்போ தோனிண்டே இருக்கு நீ இந்த ரிசர்ச்சுக்கு மாத்திரம் இங்கே வரலைன்னு.. இதையும் மீறி ஏதோ ஒன்னு உன்னை இங்கே இழுத்துண்டு வந்திருக்கு சரிதானே.. அங்கே ஏதாவது பிரச்சனையா?.. நீ யாரையாவது காதலிக்கறயா??"

"மாமி ஆனாலும் உங்களுக்கு அசாத்திய கற்பனைதான்.. லவ்வெல்லாம் அங்கே ஒன்னும் இல்லை.. இங்கே தான் புதுசா ஒருத்தர் ப்ரொபோஸ் பண்ணியிருக்கார்.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.."

"யாரு உன்னை இன்னிக்கு காரிலே விட்டுட்டு போனாரே அவரா?.. "

"மாமி நீங்க கவனிக்கலைன்னு நினைச்சேன்.. ஆனா பார்த்திருக்கேளே?.."

"லேசா கவனிச்சேன்.. ஆள் நன்னா இருக்கார்.. யாராம்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.